Add1
logo
இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்! || கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல் || பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு || சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை || அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி || எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்! || கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம் || தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி! - புகழேந்தி பேட்டி || கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு || மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்) || ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்! || பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 26, செப்டம்பர் 2017 (2:40 IST)
மாற்றம் செய்த நாள் :26, செப்டம்பர் 2017 (12:7 IST)தேவை என்றால் இன்னொரு சர்ஜிகல் ஸ்டிரைக் நடக்கும் - ராணுவ தளபதி

எல்லைக்கோட்டிற்கு அருகாமையில் இருக்கும் தீவிரவாத முகாம்களிலிருந்து நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்திய ராணுவம் தீவிரவாதிகளை “வரவேற்று” வரிசையாக அவர்களை சவக்குழிக்குள் அனுப்ப தயாராகவுள்ளது என்று ராவத் கூறினார்.

“தேவை என்றால் எங்களது செய்தியின்படி நடந்து கொள்வோம்” என்றார் ராவத்.“இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்” (சிறிதும் அச்சமற்ற இந்தியர்கள்) எனும் தலைப்பிலான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் லந்துகொண்ட இந்திய இராணுவத்தளபதி பிபின் ராவத், ‘பாகிஸ்தான் இராணுவத்துடன் உரையாடல் நடத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் தான் உதவியது. அவர்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவேளை அவர்களுக்குப் புரியவில்லை என்றால், தேவைப்பட்டால் இன்னொரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தவும் நாம் தயாராக இருக்கிறோம். இந்த முறை தாக்குதல் வேறு வடிவத்தில் வித்தியாசமானதாக இருக்கும். இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் மாதிரியான தாக்குதல்களை மேற்கொள்ளும் அளவிற்கு வலிமையான நாடு. தேசபாதுகாப்பிற்கு இதுமாதிரியான தாக்குதல்கள் தேவையானவையாக இருக்கின்றன’ என அவர் தெரிவித்துள்ளார்.

 கடந்த ஆண்டு செப்டம்பர் 28-29 தேதிகளின் நள்ளிரவில் இந்திய ராணுவம் எல்லை தாண்டி சென்று சில தீவிரவாத முகாம்களை அழித்தது. தீவிரவாதிகளின் தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து எல்லைத்தாண்டிய தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள்  கொல்லப்பட்டனர் எனும் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :