Add1
logo
தஷ்வந்துக்கு 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்: செங்கல்பட்டு மகிளிர் நீதிமன்றம் உத்தரவு || மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் || ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஜெ.தீபா ஆஜர் || கடலூர் என்.எல்.சியில் பணியில் உயிரிழந்த தொழிலாளி : உறவினர்கள் போராட்டம் || ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? பேராசிரியர் ராஜநாயகம் சர்வே முடிவுகள்! || காவல் ஆய்வாளர் பெரியபாண்டி வாரிசுதாரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்துக்கு ராஜஸ்தான் அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: ஜவாஹிருல்லா || திருப்பதிக்கு திடீரென கிளம்பிய தினகரன்! || ஆர்.கே.நகரில் டெபாசிட்டே காலி எனப் புரிந்த பின்தான், முதல்வர் குமரிக்கே சென்றார்: வேல்முருகன் || நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஊழல்கள்: ராமதாஸ் || குட்கா ஊழலில் உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி: திருநாவுக்கரசர் கண்டனம் || வங்கியில் டெபாசிட் செய்தோருக்குத் தண்டனையா? மக்கள் விரோத மசோதாவைக் கைவிட வேண்டும்: கி.வீரமணி || பெரம்பலூரில் பாஜக - விசிக மோதல்! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 25, செப்டம்பர் 2017 (13:30 IST)
மாற்றம் செய்த நாள் :25, செப்டம்பர் 2017 (13:30 IST)


புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை! : முலாயம் சிங் யாதவ்

இன்று புதிய கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார் முலாயம் சிங் யாதவ்.

அப்போது பேசிய அவர், ‘இப்போதைக்கு புதிய கட்சி தொடங்கும் எண்ணமில்லை. என் மகன் என்கிற பட்சத்தில் எனது ஆசீர்வாதங்கள் எப்போதும் அகிலேஷ் யாதவிற்கு உண்டு. ஆனால், அவரது முடிவுகளில் எனக்கு உடன்பாடு இல்லை’ என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், ‘பனாரஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. தட்டிக்கேட்டால் மாணவிகளின் மீது தாக்குதல்களை ஏவிவிடுகிறது யோகி அரசு. யோகியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி. 

மோடி தான் கூறிய வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை. அவரது ஆட்சியில் விலையேற்றத்தால் மக்கள் பெரிதும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். வான்முட்டும் அளவிற்கு பெட்ரோலின் விலையானது உயர்ந்துள்ளது’ என குற்றம்சாட்டியுள்ளார்.

லோக் தளம் கட்சியின் தலைவர் சுனில் சிங், ‘வரும் திங்கள்கிழமை லோஹியாவில் செய்தியாளர்களைச் சந்திக்க இருக்கிறார் முலாயம் சிங். அந்த சந்திப்பில் லோக் தளம் கட்சியோடு இணைந்து தனது புதிய கட்சி குறித்த தகவலை வெளியிடுவார்’ என தெரிவித்திருந்தார். இந்நிலையில், முலாயம் சிங் புதிய கட்சி தொடங்கும் எண்ணமில்லை என தெரிவித்திருக்கிறார்.

- ச.ப.மதிவாணன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :