Add1
logo
சாலையோர மரத்தில் கார் மோதியதில் 7 பேர் பலி || நீட் தேர்வு நடத்த மத்திய அரசுக்கோ, மருத்துவக் கவுன்சிலுக்கோ சட்டப்படி அதிகாரமில்லை: கி.வீரமணி || மெர்சல்..இளைஞர்கள் மோதல் -4 பேர் காயம் || வரி மறுப்பு சத்யாகிரகப் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு || வௌவால்கள் வாழ்வதற்காக தீபாவளியை கை விட்ட கிராம மக்கள்! || கமல் கருத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை: தமிழிசை || நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடவேண்டாம் - ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் || ராணுவ வீரர்களுக்கு சாட்டிலைட் அழைப்பு கட்டணம் குறைப்பு || கடவுளின் தேசத்தில் தீபாவளி.. || முதல்வரை மிரட்டுவதா? தமிழக பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்! || நான் விரும்பி வெடிக்கும் வெடி... நாஞ்சில் சம்பத் தீபாவளி சிறப்புப் பேட்டி! || அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி! || தீபாவளியையொட்டி தியேட்டர்களில் 5 காட்சிகள் அனுமதி ||
தமிழகம்
சாலையோர மரத்தில் கார் மோதியதில் 7 பேர் பலி
 ................................................................
நீட் தேர்வு நடத்த மத்திய அரசுக்கோ, மருத்துவக் கவுன்சிலுக்கோ சட்டப்படி அதிகாரமில்லை: கி.வீரமணி
 ................................................................
மெர்சல்..இளைஞர்கள் மோதல் -4 பேர் காயம்
 ................................................................
வரி மறுப்பு சத்யாகிரகப் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு
 ................................................................
முதல்வரை மிரட்டுவதா? தமிழக பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்!
 ................................................................
தீபாவளியையொட்டி தியேட்டர்களில் 5 காட்சிகள் அனுமதி
 ................................................................
தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் அரசுக்கு 5 கோடி வருமானம்
 ................................................................
தீபாவளிக்கு வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்
 ................................................................
சேலம் அருகே மதுபான லாரி கவிழ்ந்து விபத்து
 ................................................................
மருத்துவம், கல்விக்கு 2 லட்சம் கலைஞர் வழங்கினார்
 ................................................................
நீதிபதி வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளிபொருட்கள் கொள்ளை
 ................................................................
தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை: 7.03 லட்சம் பறிமுதல்
 ................................................................
உடன்பாட்டின்படி பணம் தர மறுக்கும் தனியார் சர்க்கரை ஆலைகளை கண்டித்து கருப்புக் கொடி
 ................................................................
கேரள முதல்வர் பினராயி விஜயனை மிரட்டுவதா? பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராசனுக்கு CPIM கண்டனம்
 ................................................................
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
 ................................................................
முதல்வரிடம் நன்றி கூறிய விஜய்
 ................................................................
நடிகை பாவனாவின் திருமணம் தேதி மாற்றம்
 ................................................................
மதுரையில் ரவுடி வெட்டிக்கொலை
 ................................................................
சஞ்சீவிராய பெருமாள் கோவில் சுற்றுச் சுவரை சுற்றத்தடை
 ................................................................
தீபாவளிக் கூட்டத்தை தினறடிக்கும் மணல் லாரிகள் : போதையில் தாறுமாறான வேகம்
 ................................................................
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை பணத்தை தராததை கண்டித்து விவசாயிகள் கருப்பு கொடி!
 ................................................................
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான்
 ................................................................
வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்!
 ................................................................
அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்!
 ................................................................
தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 24, செப்டம்பர் 2017 (23:6 IST)
மாற்றம் செய்த நாள் :25, செப்டம்பர் 2017 (16:48 IST)


தூத்துக்குடி அருகே 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரியவகை நீர்பாசன அடைவுத் தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு



தூத்துகுடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள முறம்பன் என்னும் கிராமத்தில் ஏரிக்கு தானம் கொடுத்த அடைவுத்தூண் கல்வெட்டு, பேராசிரியை மற்றும் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் பிரியா கிருஷ்ணன், மற்றும் தொல்லியல் ஆர்வலர் வினோத் ஆகியோர் மேற்கொண்ட களஆய்வின் போது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து, அதனை ஆய்வு செய்த தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் பிரியா கிருஷ்ணன் கூறியதாவது, ’முறம்பன் பகுதியை சேர்ந்த ’தர்மத்தாய் ஊருணி’ என்று அழைக்கப்படும் ஏரிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வின் போது, லிங்கம் வடிவில் நான்கு தூண்கள் கண்டறியப்பட்டன. அந்த தூண்கள் சற்று வித்தியாசமான தோற்றத்துடன் லிங்க வடிவில் காணப்பட்டது. அதில் ஒரு தூண் நிலத்தில் ஊன்றப்பட்டும், மற்ற மூன்று தூண்கள் சிதைந்தும் உடைந்தும், கீழே விழுந்திருந்த நிலையிலும் காணப்பட்டன. அங்கு சிவன் கோவில் இருந்தற்கான அடையாளங்களும் இருந்தன. இப்போதும் சிறியதாய் சிவன் சன்னதி ஒன்றும் உள்ளது. ஆனால் தூணின் கீழ்பகுதியில் காணப்பட்ட கல்வெட்டைப் பார்த்த போதுதான் இந்த தூண் ஏரிக்கு தானமாக வழங்கப்பட்ட ஒரு நடுகல் கல்வெட்டாக கூட இருக்கலாம் என்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நான்கு தூண்களில் ஒரு தூணின் தலைப்பகுதியில் ’மாலை வரி’ என அழைக்கப்படும் சிற்ப வேலைபாடும் செய்யப்பட்டிருந்தது. அதன் கீழ் பகுதியில் இரு புறமும் கல்வெட்டு எழுதப்பட்டிருந்தது.மற்ற மூன்றுதூண்களில் ஒரு புறம் மட்டும் கல்வெட்டு எழுதப்பட்டிருந்தது.

ஆய்வின் சிறப்புச் செய்தியாக இன்று ’முறம்பன்’ என்று அழைக்கப் படுகிற இந்த ஊர் சோழர்காலத்தில் ’நுரம்பன்’ என அழைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. அதே போல் இதனருகே ’பன்னூர்’ என்ற ஓர் ஊர் இருந்ததாகவும் தெரிகிறது. சோழர் காலத்துக்கு உரியதாக கருதப்படும் இந்த கல்வெட்டு, கி பி 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, அல்லது 14 நூற்றாண்டின் முற்பகுதியாக இருக்கலாம். இந்த அடைவுத் தூணின் கல்வெட்டு படி,



1.ஸ்வஸ்திஸ்ரீ
2.நுரம்பனூ
3.ர்ருகு நாலா
4.ம் அடைவு பி
5.டாரன் கம்பன்
6.னான சோழகுல
7.சுந்தர மூவேந்த
8.வேளான் தன்ம{ம்}



1.ஸ்வஸ்திஸ்ரீ
2.த் தம்ம{ம்} அர
3.ங்கன் சேர
4.ளன்
{சேரளன் - சோளன்}



1.ஸ்வஸ்திஸ்ரீ
2.பன்னூ{ர்}
3.கு மூத்த அ
4.டவு{ மாலய
5. த்திகைய{ன்}
6.உத்தம பாண்{டி}
7.ய மூவேந்த வே
8.ளார்



1.{பி}லாயம்
2.வீரபாண்டி{ய}
3.மூ வேந்த வே
4.{ளா}ர் தன்மம் உ



1.ஸ்வஸ்திஸ்ரீ
2.ரம்பனூ
3.{த்}த அடை..
4.{தென்}

ஒழுங்கு படுத்தப்பட்ட தூண்களாக இருப்பினும் அவற்றின் கீழ்பகுதி நிலத்தில் ஊன்றுவதற்கு ஏதுவாக ஒழுங்கற்றவையாக காணப்படுகின்றன. ‘அடவு’ அல்லது ’அடைவு’ என்பது அவர்கள் செய்த தன்மமாக (கொடை) தெரிகிறது. மூத்த அடவு, நான்காம் அடைவு என்றும் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

’தர்மத்தாய் ஊருணி’ எனப்படும் இந்த ஏரியானது நுரம்பன்{முறம்பன்}, பன்னூர் ஆகிய இரண்டு ஊர்களுக்கு நீர்பாசனம் செய்வதற்கு பயன்பட்டிருக்கிறது. இதனால் இந்த ஏரி அக்காலத்தில் மடை, மதகு ஆகியவற்றுடன் கூடிய பெரிய ஏரியாக இருந்திருக்கலாம். அதே சமயம் ’நுரம்பனூருக்கு’, ’பன்னூர்க்கு’ என்ற சொல்லாட்சிகள் உள்ளதால் அந்தந்த ஊர்களுக்கு அந்தந்தப் பகுதி(அடைவு) நீர்ப்பாசன வசதியை உரிமையாக்கியதாகவோ அல்லது அதனை பயன்படுத்தும் வரிசை கிரம (மரியாதையை) உரிமையைக் கொடுத்ததாகவோ கருதலாம். எனவே இத்தூண்கள் கொடையாக கொடுக்கப்பட்ட அடையாளத் அடைவுத்தூண்களாகவே நாம் பொருள் கொள்ள வேண்டியுள்ளது.

1.உத்தம பாண்டிய மூவேந்தவேளார்
2.வீரபாண்டிய மூவேந்த வேளார்
3.பிடாரன் கம்பனான சோழகுல சுந்தர மூவேந்த வேளார்
4.அரங்கன் சோளன்(சேரளன்)

’மூவேந்த வேளார்’ எனும் பட்டத்துக்குரிய அரச உயர் அதிகாரிகள், இந்த ஏரிக்கு தன்மமாக அடைவுத் தூண்களை தந்துள்ளார்கள் என்பது தெளிவு. கல்வெட்டில் எழுத்துகள் அழிந்திருப்பதாலும் விடுபட்டு இருப்பதாலும் இது இன்னும் மீளாய்வுக்கு உட்பட்டதாகவே கருதுகிறேன் என்றும் தெரிவித்தார்.

-பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :