Add1
logo
இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்! || கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல் || பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு || சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை || அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி || எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்! || கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம் || தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி! - புகழேந்தி பேட்டி || கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு || மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்) || ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்! || பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி ||
தமிழகம்
கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல்
 ................................................................
பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
 ................................................................
சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை
 ................................................................
அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி
 ................................................................
எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்!
 ................................................................
கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம்
 ................................................................
கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு
 ................................................................
மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு –சீமான்
 ................................................................
முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி!
 ................................................................
ஆர்.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் நாகராஜன் பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை: கி.வீரமணி இரங்கல்
 ................................................................
திருச்செந்தூர் கோவில் விபத்தில் உயிரிழந்தவருக்கு 5 லட்சம் நிவாரணம் - எடப்பாடி அறிவிப்பு!
 ................................................................
வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி
 ................................................................
காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்!
 ................................................................
ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு!
 ................................................................
முதல் முறையாக மாவட்ட ஆட்சியரை சொந்த கிராமத்தில் பார்த்த மக்கள்
 ................................................................
ஆளுநரின் ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
 ................................................................
திருச்சியில் ஹெல்மெட் சோதனையில் ரூ.36 லட்சம் வசூல்!
 ................................................................
புற்றீசல் போல் வந்து குவியும் வட மாநிலத்தவர்களை கண்காணிக்க வேண்டும்: வேல்முருகன்
 ................................................................
வேலூர் மத்திய சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்! (படம்)
 ................................................................
3 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலையை கடத்த முயற்சி!
 ................................................................
ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்!
 ................................................................
கடலூர் மாவட்டத்தில் ஆளுநர் ஆய்வுக்கு கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, செப்டம்பர் 2017 (13:36 IST)
மாற்றம் செய்த நாள் :23, செப்டம்பர் 2017 (13:36 IST)


பா.ஜ.க. பிரமுகரின் கபட நாடகம் அம்பலம்! கி.வீரமணி

திருவள்ளூர் மாவட்டத்தில் பா.ஜ.க. பிரமுகர் அரங்கேற்றிய கபட நாடகத்தை பொதுமக்களே புரிந்துகொள்வீர் என்று  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

திருவள்ளூர் மாவட்டம் அயனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பரமானந்தம் என்ற நபர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. எஸ்.சி. பிரிவு செயலாளராக உள்ளவர். இவர் நேற்று முன்தினம் (21 ஆம் தேதி) அதிகாலை, தன் வீட்டுக்குள்ளே மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியதாகவும், அதனால் வீட்டிலிருந்த சோபா தீப்பிடித்து எரிந்ததாகவும் காவல்துறையில் புகார் கொடுத்ததையடுத்து, திருவேற்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து, அது அவரே நடத்திய நாடகம் - அப்படி ஏதும் நடக்காமலேயே அவர் செய்தது என்று கண்டறிந்து, நேற்று (22.9.2017) மாலை பரமானந்தத்தினைக் கைது செய்துள்ளனர்.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்று ஒரு பழமொழி நம் நாட்டில்  உண்டு. ஆனால், இவரின் புளுகோ ஒரு நாள்கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை! தனது தோல்வியைத்  திசை திருப்புவதற்காக...

அவரிடம் பதிவு செய்த வாக்குமூலத்தில் சில உண்மைகளை காவல்துறையினர் அம்பலப்படுத்தியுள்ளனர்.

பரமானந்தத்திற்குச் சொந்தமான நிலத்தருகே பொதுமக்கள், கடந்த ஆண்டு நடந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்துக்கான யாக சாலை பந்தல் அமைத்தனர். இதற்கு எதிராக பரமானந்தம் மற்றும் அவரது சகோதரர்கள், உறவினர்கள் பூவிருந்தவல்லி மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் விளைவாக பொதுமக்கள் யாக சாலைக்காக அமைக்கப்பட்ட பந்தலை அகற்றிவிட்டு, அதே இடத்தில் கொட்டகை அமைத்தனர். அதனைக் கண்டு ஆத்திரமடைந்த பரமானந்தம், தனது தோல்வியைத் திசை திருப்புவதற்காக, தன் வீட்டுக்குள்ளே தானே தீயை வைத்துவிட்டு, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது! (தி இந்து தமிழ், 23.9.2017, பக்கம் 4)

இது முதல்முறை அரங்கேற்றம் அல்ல

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் செய்யும் இத்தகைய பித்தலாட்ட நாடகம் இது முதல்முறை அரங்கேற்றம் அல்ல. இதற்குமுன் பல இடங்களிலும் இதுபோன்ற பொய்ப் புகார்கள் காவல்துறையினரிடம் தாக்கல் செய்யப்பட்டு, பிறகு பொய் என்று கண்டறியப்பட்டுள்ள சம்பவங்கள் பற்பல ஊர்களில் நடந்துள்ளன.

திண்டுக்கல்லில் ஒரு பா.ஜ.க. சேர்ந்தவரின் வீட்டு ஜன்னலை உடைத்து தாக்க வந்தனர் என்று கொடுக்கப்பட்ட புகாரும் கற்பனை - திட்டமிட்ட நாடகம் என்று காவல்துறை கண்டறிந்து  - சில மாதங்களுக்குமுன் இந்நிகழ்வு - கற்பனை, ஜோடிப்புகள் என்பது அம்பலமாகியது!

கோவை வடவள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு ஒரு பொய்ப்புகாரை காவல்துறையினர் விரைந்து, விசாரித்து இதன் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. தனது வீட்டில் குண்டு வீசப்பட்டது என்று காவிக் கட்சிப் பிரமுகர் கூறிய புகாரில் உண்மை இல்லை என்று கண்டறியப்பட்டது.

ஈரோட்டை அடுத்த சதுமுகையில் பிள்ளையார் சிலைக்குச் செருப்பு மாலை போட்டதும் இந்து முன்னணியினர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

குறுக்குவழியில் விளம்பரம் தேடுவது!

தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவரைக் கொலை செய்துவிட்டு, அவரது உடலைக்கூட வாங்கமாட்டோம் என்று சண்டித்தனம் செய்து, பிறகு ஒரு இஸ்லாமிய இளைஞர்மீது கொலைக் குற்றம் சுமத்தியதால்,  ஊரில் பதற்றமான சூழ்நிலை உருவானது. பிறகு தமிழகக் காவல்துறை சில மாதங்களுக்குப் பிறகு இந்த உண்மைகளை அலசி ஆராய்ந்து வெளிப்படுத்தியது!
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை வளர்த்தெடுக்க இப்படி ஒரு குறுக்குவழி, விளம்பரம் தேடுவது ஒருபுறம் -

திடீர் தேசப் பக்த திலகங்களாக

மற்றொரு புறம், பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள பழைய கிரிமினல் பேர்வழிகளுக்கும், பொறுப்புக்கு ஆட்கள் சிக்காத நிலையில், இவர்கள் திடீரென்று காவி உடை அணிந்து, காக்கிகளை மிரட்டி, தாங்கள் ஏதோ மிகப்பெரிய பொது சேவையாளர்கள், திடீர் தேசப் பக்த திலகங்களாக வேடமணிந்து உலா வருகின்றனர்.

எனவே, பொதுமக்களுக்கு இது புரிய வைக்கப்படல் வேண்டும்.
எந்த அரசியல் கட்சியானாலும், அவர்களது பூர்வோத்திரம் அறிந்தே தங்கள் அமைப்பில் சேர்த்தால், புது உறுப்பினர்களால் பொது ஒழுக்கம் காப்பாற்றப்பட பெரிதும் உதவிடும். கட்சியை வளர்க்கும் கண்ணோட்டம் தேவைதான் - ஆனால், பொது ஒழுக்கம் அதைவிட முக்கியம் அல்லவா!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : thamizhan Country : Australia Date :9/23/2017 9:45:13 PM
கூடங்குளம் உதயகுமாரின் போராட்டத்தின் போது பல இடங்களில் குண்டுகளைக்கைப்பற்றியதும் , வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்று சொன்னதெல்லாம் , இந்தியாவிலுள்ள 'அயோக்கிய' அதிகாரிகளின் தந்திரங்கள். பிஜேபி இந்த குண்டுவீச்சு நாடகங்களை ஆயிரக்கணக்கில் செய்துள்ளது. அநேக எளியவர்கள் இதனால் சிறைக்குச்சென்றிருக்கின்றனர்.. இந்த கபட நாடகங்களை நக்கீரன் போன்ற பத்திரிகைகள் மட்டும் அம்பலப்படுத்துகின்றன. மற்ற ஊடகங்கள் மயான அமைதிகாக்கின்றன.
Name : abbasalikhanks Date :9/23/2017 3:11:23 PM
BJP/RSS entire cadres perfectly following their leaders Late Godse, Shri Modi Ji and Shri Amit Shah Ji.
Name : தான்தோன்றிப்புலவர் Date :9/23/2017 2:09:29 PM
ஆண்டாண்டு காலமாய் பூடகமாய் நடந்துவரும் காலத்தை வென்ற "காவி"ய நாடகங்களில் ஒன்றே தற்போது மாட்டிக்கொண்ட பார் புகழ் "பரமானந்த(ம்)" நாடகமும் என்றால் அது மிகையாகாது! இவர்களின் ஜகஜால ஏமாற்று இந்திரஜாலங்களைக் காத்திருந்து பிடித்து, தோலுரித்து, மக்களிடம் அம்பலப்படுத்தி கேவலப்படுத்திவிடும் அமைப்புகள் உள்ள தமிழ் நாட்டிலேயே கைவரிசையை காட்டும் இவர்கள், உணர்வற்று மந்தைகளாய்த் தூங்கும் வடநாட்டில் மலை, மடு, மாடு, புல், புதர், மண், மரம், மனிதன் என்று அனைத்தையும் வளைத்து மேய்வது இயற்கையே!