Add1
logo
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் || ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஜெ.தீபா ஆஜர் || கடலூர் என்.எல்.சியில் பணியில் உயிரிழந்த தொழிலாளி : உறவினர்கள் போராட்டம் || ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? பேராசிரியர் ராஜநாயகம் சர்வே முடிவுகள்! || காவல் ஆய்வாளர் பெரியபாண்டி வாரிசுதாரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்துக்கு ராஜஸ்தான் அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: ஜவாஹிருல்லா || திருப்பதிக்கு திடீரென கிளம்பிய தினகரன்! || ஆர்.கே.நகரில் டெபாசிட்டே காலி எனப் புரிந்த பின்தான், முதல்வர் குமரிக்கே சென்றார்: வேல்முருகன் || நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஊழல்கள்: ராமதாஸ் || குட்கா ஊழலில் உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி: திருநாவுக்கரசர் கண்டனம் || வங்கியில் டெபாசிட் செய்தோருக்குத் தண்டனையா? மக்கள் விரோத மசோதாவைக் கைவிட வேண்டும்: கி.வீரமணி || பெரம்பலூரில் பாஜக - விசிக மோதல்! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின், சென்னை கமிஷ்னர் ஆறுதல் ||
முக்கிய செய்திகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? பேராசிரியர் ராஜநாயகம் சர்வே முடிவுகள்!
 ................................................................
திருப்பதிக்கு திடீரென கிளம்பிய தினகரன்!
 ................................................................
தாய் கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: நீதிமன்றத்தில் தஷ்வந்த்
 ................................................................
எங்களுக்கு மோடியும் வேண்டாம், ராகுல்காந்தியும் வேண்டாம்! - அன்னா ஹசாரே அதிரடி
 ................................................................
விவசாய நிலங்களை பறிக்க ஆட்களை வைத்து விவசாயிகளை தாக்கும் தனியார் நிறுவனம்!
 ................................................................
ஆர்.கே.நகரில் பெண்களுக்கு குக்கர் சப்ளை - விரட்டியடித்த போலீஸ் (படங்கள்)
 ................................................................
கோர்ட்டில் ஆஜராக வந்த தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல்
 ................................................................
மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை வருமா?
 ................................................................
ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி நாளை குமரி வருகை!
 ................................................................
சமஸ்கிருத கல்லூரியில் ஒரே ஒரு மாணவனும், பிரின்சிபாலும்!
 ................................................................
சின்னம் பெற லஞ்சம்: டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
 ................................................................
ராஜஸ்தானில் சென்னை காவல் ஆய்வாளர் சுட்டுக்கொலை! தீரன் திரைப்பட பாணியில் கொள்ளையர்கள் அட்டூழியம்!
 ................................................................
இன்றைய(12.12.2017) டாப்-10 நிகழ்வுகள்
 ................................................................
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!
 ................................................................
சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது: கெளசல்யா பேட்டி!
 ................................................................
கெளசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை!
 ................................................................
குஜராத் தேர்தலில் பாக். எப்படி தலையிட முடியும்? - மோடிக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி
 ................................................................
சங்கர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள்!
 ................................................................
தலைமைச் செயலகத்தில் களைகட்டும் தேர்தல்!
 ................................................................
சேகர் ரெட்டியின் டைரியை வெளியிட்டது தினகரன் குடும்பம்!
 ................................................................
இபிஎஸ் - ஒபிஎஸ் கண்ணை குத்தக் காத்திருக்கும் ஜெ.வின் கைரேகை!
 ................................................................
ஒக்கி புயலால் 4 மரணங்கள்தான் ஏற்பட்டுள்ளன: ஜெயக்குமார் விளக்கம்!
 ................................................................
அரசுக்கு ஜால்ரா போடுபவரே தகவல் ஆணையத் தலைவர்?
 ................................................................
ஒக்கி புயல் பாதிப்பு: 12நாள் கழித்து முதல்வர் எடப்பாடி இன்று குமரியில் ஆய்வு
 ................................................................
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் வழக்கில் இன்று தீர்ப்பு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, செப்டம்பர் 2017 (13:35 IST)
மாற்றம் செய்த நாள் :23, செப்டம்பர் 2017 (13:35 IST)

ஜெ.,சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை: தினகரன் பேட்டி

ஜெயலலிதா சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கார்நாடக மாநிலம் குடகில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

சசிகலா முதல்வராக வேண்டும் என்று கண்ணீர்விட்டு கேட்டவர் தான் திண்டுக்கல் சீனிவாசன். தற்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார்.

பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக அவர் குடும்பத்தையே என் பொண்டாட்டி இல்லை, புள்ளைகள் இல்லை என்பார். அவர்களுக்கெல்லாம் பதவி முக்கியம் ஏனெனில் வயதாகிவிட்டது பல நாள் ஆசை தற்போது தான் மந்திரி பதவி கிடைத்துள்ளது. இருக்கும் வரை அந்த பதவி சுகத்தை அனுபவித்து செல்லலாம் என்பதற்காக பேசுகிறார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஆளுநர் வித்யாசாகர்ராவ் வந்து சந்தித்தார். அப்படி என்றால் ஆளுநரும் இவர்களுடன் சேர்ந்து பொய் சொல்கிறாரா? அதை ஆளுநரை பார்த்து தான் கேட்க வேண்டும். அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு எங்கள் சித்தியையே சிகிச்சை அறைக்குள் விடவில்லை. ஏப்போதாவது மருத்துவர்கள் சொன்னால் 2 நிமிடங்கள் போய் பார்ப்பார். நோய்தொற்று ஏற்படும் என்பதால் தான் ஜெயலலிதாவை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை.

சிபிஐ விசாரணை வைத்தால் இவர்கள் தான் உள்ளே போவார்கள். அன்று முதல்வராக இருந்தது ஓபிஎஸ்-தான். ஜெ., சிகிச்சையில் இவ்வளவு சந்தேகம் இருக்கும் போது சசிகலா முதல்வராக பதவி ஏற்க சொன்னதும் ஏன் ஏற்றுக்கொண்டார்? பதவியில் ஓட்டிக்கொண்டிருக்க எவ்வளவு வேண்டுமானாலும் பேசுவார்கள்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்தாலும், இறுதியில் வெற்றி எங்களுக்கே கிடைக்கும். நீதி தேவதையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. பெரும்பான்மை வாக்கெடுப்பு நடைபெற்றால், ஆட்சி கவிழும். ஆட்சி கவிழ்ந்தபின் வரும் தேர்தலில், நாங்கள் பெரும் வெற்றிபெறுவோம். கட்சித் தொண்டர்களுக்கும் மக்களுக்கும், நடக்கும் உண்மைகள் முழுவதும் தெரியும்.

ஊழல் ஆட்சி என்று விமர்சித்த ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்குப் பதில்சொல்லி, நான் தரம் தாழ்ந்துபோக விரும்பவில்லை. இவர்களுக்கெல்லாம் பதில் பேசினாலே அசிங்கம். என்னுடன் உள்ள எம்.எல்.ஏக்கள் பதவிக்காக இல்லை. அதிமுக எனும் கட்சியை காப்பாற்றவே நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : ராஜகோபாலன். Country : India Date :9/24/2017 2:32:29 PM
பல வருடங்களாக ஜெயாவிடம் பறிகொடுத்த..... சித்தியை....., பார்க்க விடாத அந்த பாவிகளை..., இந்த பிள்ளையின் ஆசையே.... நிறைவேற்றாத அந்த துன்மார்க்கர்களை..., அலட்சியப்படுத்துகிறேன்??? (யார்...??? என்று தான் தெரியவில்லை!!! ஆர் கே நகர் மக்களுக்கு.... குல்லா போட முயன்றவருக்கே.... குல்லாவா???)