Add1
logo
17 ஆண்டுக்கு பின்னர் உலக அழகியாக இந்திய பெண் தேர்வு || இன்றைய(18.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு || கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்! கி.வீரமணி || அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது வருமான வரித்துறை: திருநாவுக்கரசு || ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம் || பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்) || வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி. || ஆளுநர் ஆய்வு செய்யவில்லை: ஈபிஎஸ் புதுமையான விளக்கம் || கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி || தவறு செய்ததால் சோதனை நடக்கிறது: ஈபிஎஸ் || தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன் || நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்! ||
முக்கிய செய்திகள்
இன்றைய(18.11.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்! கி.வீரமணி
 ................................................................
ஆளுநர் ஆய்வு செய்யவில்லை: ஈபிஎஸ் புதுமையான விளக்கம்
 ................................................................
தவறு செய்ததால் சோதனை நடக்கிறது: ஈபிஎஸ்
 ................................................................
பிரதமர் மோடியின் கவிஞர் அவதாரம்!
 ................................................................
மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய நிர்மலா சீதாராமன்: மு.க.ஸ்டாலின் வேதனை
 ................................................................
‘தோட்டாக்கள் எங்கிருந்து வந்தது என்றே தெரியாது!’ - நிர்மலா சீத்தாராமன் சர்ச்சை கருத்து
 ................................................................
என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குத்தான் புரியும்: விஜயகாந்த்
 ................................................................
ஜெ. பெயரைக் கெடுக்க சசிகலா குடும்பத்தின் சதித்திட்டமே ரெய்டு!- தீபா ஆதங்கம்
 ................................................................
போயஸ் இல்லத்தில் சோதனை நடைபெற்றது வேதனையளிக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்
 ................................................................
கத்தியை எடுத்தவர்களுக்கு கத்தியால்தான் வீழ்ச்சி: டிடிவி தினகரன்
 ................................................................
ஜெ. அறையை சோதனை செய்ய அனுமதிக்கவில்லை: விவேக் பேட்டி
 ................................................................
போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனை மத்திய அரசின் திட்டமிட்ட சதி: தங்க தமிழ்ச்செல்வன்
 ................................................................
போயஸ் தோட்டத்தில் சோதனை செய்தது மிகுந்த மன வேதனை அளிக்கிறது: மைத்ரேயன்
 ................................................................
சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி!
 ................................................................
ஜெ.வின் கைக்குட்டையிலும் உரிமை இருக்கிறது: தீபா ஆவேசம்
 ................................................................
ஜெ. ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகத்தின் பின்னணியில் ஈபிஎஸ், ஓபிஎஸ்: தினகரன்
 ................................................................
தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, செப்டம்பர் 2017 (16:38 IST)
மாற்றம் செய்த நாள் :14, செப்டம்பர் 2017 (21:25 IST)


நீதியின் மேல் நம்பிக்கை வைத்து போராடுவேன் - சிறுமி ஹாசினியின் தந்தை உருக்கம்!



நீதியின் மேல் நம்பிக்கை வைத்து போராடுவேன் - சிறுமி ஹாசினியின் தந்தை உருக்கம்!

சென்னை முகலிவாக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 7 வயது சிறுமி ஹாசினியை, அதே பகுதியைச் சேர்ந்த தஷ்வந்த் எனும் 22 வயதுமிக்க வாலிபர் பாலியல் வன்புணர்வு செய்தான். மேலும், இதை வெளியில் சிறுமி ஹாசினி சொல்லிவிடுவார் என அஞ்சிய தஷ்வந்த், சிறுமியை படுகொலை செய்து அவரது உடலை யாருமில்லாத பகுதிக்கு எடுத்துச்சென்று தீயிட்டு எரித்தான். அதன்பின்னர் மார்ச் 20ஆம் தேதி காவல்துறை தஷ்வந்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தது. தஷ்வந்த் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கு முன்னமே, அவனது தந்தை செங்கல்பட்டிலுள்ள மகிளா நீதிமன்றத்தில் பெயில் கேட்டு மனு கொடுத்திருந்தார். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெபியஸ் கார்பஸ் மனுவும் அவர் கொடுத்திருந்தார்.

ஹாசினி படுகொலை செய்யப்பட்டு ஐந்து மாதங்களுக்குப் பின்பு ஜூன் மாதத்தில்தான், அவரது பிரேதப் பரிசோதனையின் அறிக்கையானது வெளியிடப்பட்டது. இருதினங்களுக்கு முன்பு தஷ்வந்திற்கு ஜாமின் கேட்டு, தலைமை வழக்கறிஞர் பி.குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியதில் தஷ்வந்திற்கு பெயில் வழங்கி நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். 



இந்நிலையில், ஹாசினியின் தந்தை பாபு,  இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “நீதியின் மேல் நம்பிக்கை இருக்கிறது. தஷ்வந்திற்கு தண்டனை பெற்றுத்தர தொடர்ந்து போராடப்போகிறேன். ஹாசினி கொலைசெய்யப்பட்ட அன்றே தஷ்வந்தின் தந்தை ‘தன் மகனை எப்படியாவது வெளியே கொண்டுவந்துவிடுவேன்’ என என்னிடம் சவால் விட்டார். தற்போது தஷ்வந்த் பெயிலில் வெளிவந்திருக்கும் நிலையில், எப்படியாவது தனது மகனை இந்த வழக்கிலிருந்து வெளியே கொண்டுவந்துவிடுவேன் என்றும் தஷ்வந்தின் தந்தை என்னிடம் கூறுகிறார். 

இவ்வளவு பெரிய குற்றம் நடந்திருக்கும் நிலையில், எந்தவிதமான சிறுதண்டனையும் இல்லாமல் தஷ்வந்தை வெளியில்விட்டது சிறிதும் ஏற்றுக்கொள்ளமுடியாதது. தினம்தினம் சிறுகுழந்தைகளின் மீதான பாலியல், கொலைக்குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த வழக்கை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, இதுபோன்ற குற்றங்கள் இனிமேல் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய கடுமையான சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும். மேலும், தஷ்வந்திற்கு கொடுக்கப்பட்ட பெயில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரும்பப்பெற வேண்டும். அப்போதுதான் நீதியின்மேல் ஒவ்வொரு சகமனிதனுக்கும் நம்பிக்கை உருவாகும். தமிழக அரசும் இந்த வழக்கின்மீது கவனம் செலுத்தி, தஷ்வந்திற்கு வழங்கியிருக்கும் பெயிலை ரத்துசெய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

இதுமாதிரியான குற்றம்புரிந்த நபர்களை வெளியில் விட்டால், சமூகத்தில் தொடர்ந்து அதே தவறை மீண்டும் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நாடுமுழுவதும் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், நீண்டநாட்களாக வலியுறுத்தப்பட்டுவரும் சட்டத்திருத்தம் அல்லது புதிய சட்டம் கொண்டுவரப்படுவதற்கான வழிவகைகளை அரசும் நீதித்துறையும் விரைவில் மேற்கொள்ளவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

- சி.ஜீவாபாரதி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : rajan Date :9/15/2017 2:09:25 PM
உலகத்திற்கே தெரியும் இந்த கொடுன்செயலை செய்தவன் உயிர்வாழத்தகுதியே இல்லாதவன் என்று, ஆனால் நீதிமன்றத்திற்கு தெரியாமல் போனது ஏன்? மெத்தனமாக இருந்து 90 நாட்களில் சார்ஜ் சீட் பைல் செய்யாதது ஏன் என்று போலீசை எச்சரிக்காதது ஏன்.
Name : Mohanraj Date :9/14/2017 5:37:33 PM
Neethi sethu vittathu nithiyidam
Name : அணிலவன் Country : India Date :9/14/2017 4:55:16 PM
மகள்களை விட மாடுகளை காப்பாற்றுவதுதான் அவர்களின் தலையாய கடமை. ஒவ்வொரு மகளும் அதேதான் நினைப்பாள். இந்த நாட்டில் பெண்ணாக பிறந்ததைவிட மாடாக பிறந்திருக்கலாம் என்று. அதிகம் படித்த திருமதி. லலிதா குமாரமங்கலம் போன்றவர்கள், உடனே, அவள் விதி முடிந்தது செத்துவிட்டாள், நாங்கள் என்ன செய்ய முடியும் என்று மனசாட்சியே இல்லாம சொல்வார்கள். வலி உங்களுக்குத்தான், நீதி கிடைக்கும். போராடுங்கள்ப.பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று சும்மாவா சொன்னான் பாரதி.