Add1
logo
17 ஆண்டுக்கு பின்னர் உலக அழகியாக இந்திய பெண் தேர்வு || இன்றைய(18.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு || கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்! கி.வீரமணி || அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது வருமான வரித்துறை: திருநாவுக்கரசு || ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம் || பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்) || வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி. || ஆளுநர் ஆய்வு செய்யவில்லை: ஈபிஎஸ் புதுமையான விளக்கம் || கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி || தவறு செய்ததால் சோதனை நடக்கிறது: ஈபிஎஸ் || தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன் || நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்! ||
முக்கிய செய்திகள்
இன்றைய(18.11.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்! கி.வீரமணி
 ................................................................
ஆளுநர் ஆய்வு செய்யவில்லை: ஈபிஎஸ் புதுமையான விளக்கம்
 ................................................................
தவறு செய்ததால் சோதனை நடக்கிறது: ஈபிஎஸ்
 ................................................................
பிரதமர் மோடியின் கவிஞர் அவதாரம்!
 ................................................................
மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய நிர்மலா சீதாராமன்: மு.க.ஸ்டாலின் வேதனை
 ................................................................
‘தோட்டாக்கள் எங்கிருந்து வந்தது என்றே தெரியாது!’ - நிர்மலா சீத்தாராமன் சர்ச்சை கருத்து
 ................................................................
என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குத்தான் புரியும்: விஜயகாந்த்
 ................................................................
ஜெ. பெயரைக் கெடுக்க சசிகலா குடும்பத்தின் சதித்திட்டமே ரெய்டு!- தீபா ஆதங்கம்
 ................................................................
போயஸ் இல்லத்தில் சோதனை நடைபெற்றது வேதனையளிக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்
 ................................................................
கத்தியை எடுத்தவர்களுக்கு கத்தியால்தான் வீழ்ச்சி: டிடிவி தினகரன்
 ................................................................
ஜெ. அறையை சோதனை செய்ய அனுமதிக்கவில்லை: விவேக் பேட்டி
 ................................................................
போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனை மத்திய அரசின் திட்டமிட்ட சதி: தங்க தமிழ்ச்செல்வன்
 ................................................................
போயஸ் தோட்டத்தில் சோதனை செய்தது மிகுந்த மன வேதனை அளிக்கிறது: மைத்ரேயன்
 ................................................................
சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி!
 ................................................................
ஜெ.வின் கைக்குட்டையிலும் உரிமை இருக்கிறது: தீபா ஆவேசம்
 ................................................................
ஜெ. ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகத்தின் பின்னணியில் ஈபிஎஸ், ஓபிஎஸ்: தினகரன்
 ................................................................
தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, செப்டம்பர் 2017 (14:19 IST)
மாற்றம் செய்த நாள் :14, செப்டம்பர் 2017 (14:19 IST)


தமிழ்நாட்டு அரசியல் கேலிக்கூத்தாக மாறியதில் ஆளுனருக்கு முக்கியப் பங்கு: ராமதாஸ்

தமிழ்நாட்டு அரசியல் கேலிக்கூத்தாக மாறியதில் ஆளுனருக்கு முக்கியப் பங்கு உண்டு என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய அரசியலில் மிக முக்கியத் திருப்பங்களுக்கு வித்திட்ட தமிழகத்தில் இன்று அரசியல் படும்பாடு தமிழக மக்களை தலைகுனிய வைத்திருக்கிறது. இத்தகையக் கொடுமைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்காமல் அநாகரிக அரசியலுக்கு அனைத்து வழியிலும் ஆளுனர் துணைபோவது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் எப்படியாவது, யார் காலில் விழுந்தாவது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும், எடப்பாடி அரசை எவ்வழியிலாவது கவிழ்த்து விட வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் தினகரன் அணிக்கும் இடையில் எந்த வித்தியாசமும் கிடையாது. இருவருமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான். ஜெயலலிதாவால் அமைக்கப்ட்ட ஆட்சியின் எஞ்சிய பதவிக்காலம் மூன்றரை ஆண்டுகளை அனுபவித்து முயன்றவரை கொள்ளை அடிக்க வேண்டும் என்பது தான் இரு தரப்பினரின் நோக்கம் ஆகும். இதற்கான போட்டியில் தான் இரு அணியினரும் முட்டி மோதிக்கொள்கின்றனர்.

தினகரன் அணியைச் சேர்ந்த 19 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடந்த மாதம் 22-ஆம் தேதி தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவை சந்திந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப்பெறுவதாக கடிதம் அளிக்கின்றனர். அதை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுனர் வித்யாசாகர் ராவ் ஆணையிட்டிருந்தால் தமிழக அரசியல் இவ்வளவு தரம் தாழ்ந்திருக்காது. ஆனால், அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவைத் திரும்பப்பெற்று 24 நாட்கள் ஆகியும் அது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் ஆளுனர் மாளிகைக்கு வருபவர்கள் அனைவரிடத்திலும் மனு வாங்கிக் கொண்டு அனுப்பும் சடங்கை மட்டும் ஆளுனர் செய்து கொண்டிருப்பது தான் தமிழகத்தில் நிலவும் குழப்பங்களெக்கெல்லாம் காரணம்.

கடந்த 24 நாட்களில் எடப்பாடியின் பெரும்பான்மை குறித்து ஆளுனர் தெரிவித்ததாக முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த சிக்கல் குறித்து ஆளுனர் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் கூறவில்லை. இதன்மூலம் குதிரை பேரத்தை ஆளுனர் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு அரசியல் கேலிக்கூத்தாக மாறியதில் ஆளுனருக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த கேலிக்கூத்து அரசியலுக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். அதற்காக தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி  பெரும்பான்மையை நிரூபிக்கும்படி எடப்பாடி அரசுக்கு ஆளுனர் வித்யாசாகர் ராவ் ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : subramanian Country : Indonesia Date :9/14/2017 2:44:38 PM
மருத்துவர் ஐயா! வணக்கம்! கவர்னரைப் பற்றிப்பேச உங்களுக்குத் தகுதி இருக்கிறதா என்பதற்கான சான்றிதழை எச் ராஜாவிடமிருந்து முதலில் பெற்றுக்கொள்ளவும். இல்லையென்றால் அவர் வழக்குத் தொடர்ந்து விடுவார்.! கவனம். எச் ராஜா தற்போது தகுதிச்சான்றிதழ் வழங்கும் மையத்தை நடத்திவருகிறார். 'பாஜக அம்மா புரட்சித் தலைவலி அம்மா' கட்சி தவிர தமிழ்நாட்டின் மற்ற கட்சியைச் சேர்ந்தவர்களெல்லாம் இந்த மையத்தில் பதிவு செய்து அத்துடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Name : R,Nadarajah switzerland Country : Switzerland Date :9/14/2017 2:36:56 PM
உண்மை இந்த கேலிக்கூத்துக்கு மோசடி மோடிக்கு முக்கிய பங்கு உண்டு அரசியல் நாகரிகம் தெரியாத கோமாளிகள் கையில் நாடு சிக்கி சீரழியுது
Name : A Venkatachalam Country : India Date :9/14/2017 2:22:48 PM
முற்றிலும் உண்மை