Add1
logo
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு || தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ ||
முக்கிய செய்திகள்
புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்!
 ................................................................
பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து
 ................................................................
வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்!
 ................................................................
இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி
 ................................................................
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி
 ................................................................
எம்.எல்.ஏக்கள் ஊதியத்தை உயர்த்தியபோது நிதிச்சுமை இல்லையா? - தமிழிசை கேள்வி
 ................................................................
பட்டாசுத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் பேசிய விஜயகாந்த்! - மேடை மீது கல்வீச்சு
 ................................................................
ஜெயலலிதா உயிரிழந்த விஷயம் முன்கூட்டியே தெரியும்! - ராஜேந்திரபாலாஜி
 ................................................................
அரசுப்பள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்றிய நக்கீரன்!
 ................................................................
சென்னையில் ஓடஓட விரட்டி இளைஞர் படுகொலை! - பதர வைக்கும் சிசிடிவி காட்சிகள்
 ................................................................
வீடு தேடி மது விற்பனை: எங்கே போகிறது தமிழக அரசு? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, செப்டம்பர் 2017 (11:20 IST)
மாற்றம் செய்த நாள் :14, செப்டம்பர் 2017 (11:20 IST)


நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம்:
பிரதமர் மோடி துவக்கி வைப்பு!

அகமதாபாத் - மும்பை இடையே, அதிவேக, 'புல்லட்' ரயில் இயக்குவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் நாட்டி, திட்டத்தினை துவக்கி வைத்தனர்.


குஜராத் மாநிலம், ஆமதாபாத்திலிருந்து, மஹாராஷ்டிர மாநிலம், மும்பை வரை, முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம், ஜப்பானின் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு லட்சத்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதில், 65 சதவீத தொகையை, 0.1 சதவீத வட்டியில், ஜப்பான் வழங்குகிறது. இதன்படி, ஆகமதாபாத் நகரில் புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் அடிக்கல்லை நாட்டினர். விழாவில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பேசும் போது,

நமஸ்கார் என்று கூறி தனது உரையை தொடங்கினார். புல்லட் ரயில் திட்டத்தை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய - ஜப்பான் உறவு முறையில் மிக முக்கியமான நாள். இந்தியாவும் - ஜப்பானும் இணைந்து செயல்பட்டால் முடியாதது எதுவுமில்லை. உலக அரங்கில் இந்தியா, ஜப்பானுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இந்தியாவை விரும்புகிறேன். இந்தியாவுக்காக என்னால் முடிந்தவற்றை செய்வேன். அடுத்த முறை இந்தியா வரும்போது புல்லட் ரயிலில் நானும், மோடியும் செல்ல விரும்புகிறேன் என்றார்.

இதையடுத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி,

போக்குவரத்து துறையானது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக உள்ளது. இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை விரைவாக கொண்டு வர முழு ஒத்துழைப்பு அளித்து உதவிய ஷின்சோ அபேவுக்கு நன்றி. குஜராத், மகராஷ்ட்ரா மட்டுமின்றி நாடே வளர்ச்சி பெற புல்லட் ரயில் உதவும். 1964ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்ட பின் ஜப்பானின் வளர்ச்சி அதிவேகமானது.

மும்பை - அகமதாபாத் இடையே 8 மணி நேர ரயில் பயணம் 2 மணி நேரமாகி விடும். அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு விமான பயண நேரத்தை விட புல்லட் ரயில் நேரம் குறைவு. நாட்டின் வளர்ச்சியில் ரயில்வே முக்கிய இடத்தை பெற்றுள்ளது. சர்வதேச நாடுகளுடன் வளர்ச்சியில் போட்டியிட புல்லட் ரயில் போன்ற நவீன வசதிகள் தேவை என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :