Add1
logo
வாடிப்பட்டி அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து 2 லட்சம் கொள்ளை || தீக்கதிர் ஆசிரியருக்கு மிரட்டல் : ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் || முகநூலில் நீதிபதி கிருபாகரன் பற்றி கருத்து வெளியிட்ட பெண் சிறையிலடைப்பு! || ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் || ஜெயலலிதா மறைந்ததற்கு பிறகு தொடர்ந்து ‘பிரேக்கிங் நியூஸ்’தான்: மு.க.ஸ்டாலின் பேச்சு || சீண்டிய இளைஞர்கள்... காலில் விழ வைத்த பெண்! || வட கொரியா, அமெரிக்கா...! போர்மேகம் சூழுமோ.. கலங்கி நிற்கும் உலக நாடுகள்! || திருச்சி வருமான வரி அலுவலகத்தில் ஆஜர் ஆகாமல் மன்னார்குடி சென்ற திவாகரன் || உலக மீனவர் தின விழா கண்காட்சியில் தமிழிசை சவுந்தர்ராஜன்! || சத்துணவுக் கூடங்களில் முட்டை விநியோகம் தடைப்படவில்லை! - அமைச்சர் சரோஜா விளக்கம் || தமிழிசையின் திடீர் ஆய்வு... ஹோட்டலில் சாப்பிட்டு பில்லை சரிபார்த்தார்... || மாற்றுக் கருத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாத சங் பரிவாரங்களின் அடாவடி செயலுக்கு சி.பி.எம் கண்டனம்! || ரூ.1140 கோடி நிலுவை தொகை கோரி ஓய்வூதியர்கள் மறியல் - கைது ||
தமிழகம்
வாடிப்பட்டி அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து 2 லட்சம் கொள்ளை
 ................................................................
தீக்கதிர் ஆசிரியருக்கு மிரட்டல் : ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்
 ................................................................
முகநூலில் நீதிபதி கிருபாகரன் பற்றி கருத்து வெளியிட்ட பெண் சிறையிலடைப்பு!
 ................................................................
ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
உலக மீனவர் தின விழா கண்காட்சியில் தமிழிசை சவுந்தர்ராஜன்!
 ................................................................
சத்துணவுக் கூடங்களில் முட்டை விநியோகம் தடைப்படவில்லை! - அமைச்சர் சரோஜா விளக்கம்
 ................................................................
மாற்றுக் கருத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாத சங் பரிவாரங்களின் அடாவடி செயலுக்கு சி.பி.எம் கண்டனம்!
 ................................................................
ரூ.1140 கோடி நிலுவை தொகை கோரி ஓய்வூதியர்கள் மறியல் - கைது
 ................................................................
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் சென்னையில் மறியல் போராட்டம்!
 ................................................................
மாணவர்களுக்கு முட்டை வழங்குவதை எதற்காகவும் அரசு நிறுத்தக்கூடாது! - ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
சட்டமன்றத்தைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு உத்திரவிட ஆளுநர் தயாரா? மு.க.ஸ்டாலின்
 ................................................................
மாணவர்களின் மீது ஆசிரியர்கள் மதத்தைத் திணிக்கக் கூடாது! - திருமாவளவன்
 ................................................................
முன்னுரிமை காரணங்களைச் சொல்லி ரேசன் அரிசி நிறுத்தப்படும் அவலம்!
 ................................................................
ஓய்வுகால பணப்பயன்களை வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் சாலை மறியல்!
 ................................................................
ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!
 ................................................................
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பல வசதிகளுடன் கூடிய குழந்தைகள் வார்டு திறப்பு!
 ................................................................
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தாய் மற்றும் மகனுக்கு நான்கரை ஆண்டுகள் சிறை!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ராமநாதபுரத்தை பிரித்து கமுதி மாவட்டம் உருவாக்க திட்டம்?
 ................................................................
சகாயத்துக்கு மதுரை ஐகோர்ட் நோட்டீஸ்
 ................................................................
வைகோ மதம் மாறிவிட்டதாக கூறும் கிறிஸ்தவ போதகர் மீது நடவடிக்கை கோரும் அர்ஜூன் சம்பத்
 ................................................................
லதா ரஜினிகாந்தின் மனு தள்ளுபடி
 ................................................................
பாத்ரூமில் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டல், பணம் பறிப்பு: இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
 ................................................................
இலங்கை கடற்படை அட்டூழியம்; ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் மீது தாக்குதல்!
 ................................................................
கூடுதல் பேருந்து இயக்ககோரி மாணவர்கள் ஆலங்குடியில் போராட்டம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, செப்டம்பர் 2017 (23:45 IST)
மாற்றம் செய்த நாள் :13, செப்டம்பர் 2017 (23:45 IST)

மொழி, கலாச்சார ஆய்வுக்காக
தமிழகம் வந்துள்ள ஆஸ்திரேலிய பெண்!

தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம், பண்பாடு, ஆன்மீகம் மீது அதிக பற்றுக் கொண்ட ஆஸ்திரேலிய பெண் கருவூல அதிகாரி கீரமங்கலம் அருகில் உள்ள அலஞ்சிரங்காடு குருகுலம் பள்ளியில் ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

ஆஸ்திரேலிய பெண் அதிகாரி :

ஆஸ்திரேலிய கருவூலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆனந்தமார்க்கா(55). அவர் வடுமுறை காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து வந்துள்ளார். அதே போல இந்தியாவில் அதிகமாக தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், வேலூர் மற்றும் பல இடங்களில் உள்ள கோயில்களுக்கும் பல முறை வந்துள்ளவருக்கு தமிழ்நாட்டு மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு மீது அதிக பற்று ஏற்பட்டுள்ளது. அதனால் தான் பெயரைக் கூட ஆனந்தமார்க்கா என்று மாற்றி வைத்துக் கொண்டவர் தமிழ் மொழியை கற்க நினைத்து இணைய தளம் மூலம் தமிழ் எழுத்துகளை எழுத கற்றுக் கொண்டவர் பேசவும் கற்றுக்கொண்டார்.

பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்..

இந்த ஆண்டும் தமிழகத்தில் 2 மாதங்கள் தங்கி கலாச்சாரம் பற்றி அறிந்து கொள்ள வந்துள்ள அனந்த மார்க்கா புதுக்கோட்டை மாவட்டம் அலஞ்சிரங்காடு கிராமத்தில் உள்ள குருகுலம் பள்ளிக்கு வந்துள்ளார். அவருக்கு வழிகாட்டியாக குருகுலம் சிவநேசன் உள்ளார்.

பள்ளியில் வகுப்பு நடந்து கொண்டிருந்த போது அங்கு சென்று பள்ளி மாணவர்களின் உடையில் உள்ள தமிழ் எண்களை பார்த்து வியந்தார். மேலும் மாணவர்களிடம் தமிழ் பற்றியும், தமிழக தலைவர்கள் பற்றி கேட்டு அறிந்து கொண்டவர். நூன் உங்களுக்கு தமிழில் எழுதட்டுமா என்று கூறி தமிழில் அ, ஆ, இ என்று கரும்பலகையில் எழுதி வாசித்து காட்டினார். இதனைப் பார்த்த மாணவர்கள் வியந்தனர்.

5 வயதுக்கு மேல தான் பள்ளி:

அனந்தமார்க்கா கூறும் போது.. எனக்கு தமிழ் மீது அதிக பற்று உள்ளது. அதனால் தான் அடிக்கடி தமிழக கோயில்களுக்கு வந்து போறேன். மொழியும் கற்றுக் கொள்ள தொடங்கியுள்ளேன். இங்குள்ள பெண்கள் சேலை உடுத்துவதைப் பார்த்து அதே போல நானும் உடுத்த ஆசைப்பட்டு 10 புடவை வாங்கி இணைய தளத்தில் உள்ள வீடியோக்களைப் பார்த்து சேலை உடுத்த கற்றுக் கொண்டேன். அதே போல எழுதவும், பேசவும் இணைய தளத்தின் மூலமே கற்று வருகிறேன். இப்போது நேரடியாக மக்களை சந்தித்து அவர்களின் கலாச்சாரம், பன்பாடு பற்றி அறிந்து வருகிறேன். தமிழக மாணவர்கள் நல்ல அறிவோடு இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் 5 வயதுக்கு கீழே பள்ளியில் சேர்க்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் 3 வயதுக்குள்ளேயே சேர்த்துவிடுகிறார்கள். அங்கே வாரத்தில் 3 நாட்கள் 10 மணி நேரம் மட்டுமே வகுப்புகள் இருக்கும். ஆனால் இங்கே வாரத்தில் 5, 6 நாட்கள் முழுநேர வகுப்பு நடக்கிறது. கிரேடு முறையில் மேல்படிப்புக்கு வாய்ப்பு கிடைக்கும் ஆஸ்திரேலியாவில் என்றார். மேலும் இன்னும் பல கிராமங்களுக்கு சென்று மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் உணவு முறைகளையும் கலாச்சாரத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்திய உணவு நன்றாக உள்ளது என்றார்.

- இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :