Add1
logo
அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் || கமல்ஹாசன் எனக்கு போன் செய்து வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்: ஜெயக்குமார் || தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா ||
முக்கிய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா
 ................................................................
நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு!
 ................................................................
மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே
 ................................................................
சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது!
 ................................................................
நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு
 ................................................................
பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத்
 ................................................................
ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத்
 ................................................................
மே 6ம் தேதி நீட் தேர்வு - சிபிஎஸ்இ அறிவிப்பு!
 ................................................................
நாங்கள் சொல்லவில்லை: அமைச்சருக்கு ஆறுமுக நயினார் கண்டனம்
 ................................................................
ஆ.ராசா தவறு செய்யாதவர் போல் பேசுகிறார்! - சிஏஜி முன்னாள் இயக்குனர் காட்டம்
 ................................................................
வெறும் 1 சதவீதத்தினரிடம் நாட்டின் 73 சதவீத சொத்துகள்! - அதிர்ச்சி தரும் ஆய்வு
 ................................................................
20 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் - ஆம் ஆத்மி ஆட்சிக்கு பாதிப்பா?
 ................................................................
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, செப்டம்பர் 2017 (17:43 IST)
மாற்றம் செய்த நாள் :13, செப்டம்பர் 2017 (17:43 IST)


தினகரன் ஆதரவாளருக்கு திடீர் நெஞ்சு வலி!
காக்கிகளின் காமெடி சேஸிங்!

அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானங்களைக் கண்டித்து, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உருவ பொம்மைகளை எரித்து, டி.டி.வி.தினகரன் மனதில் இடம் பிடிக்கவேண்டும் என்று விருதுநகர் மாவட்டத்திலும் அந்த அணியினர் பரபரப்பானார்கள்.

காரியாபட்டியில் தினகரன் ஆதரவாளர்கள் எடப்பாடி உருவ பொம்மையை எரித்தனர்.
ராஜபாளையம் பழைய பேருந்து நிலைம் அருகே எடப்பாடியின் உருவ பொம்மையைக் கொளுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். சேத்தூரில் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகையா பாண்டியன் தலைமையில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். உருவ பொம்மைகளை எரித்தார்கள். அதன்பிறகு, முருகையா பாண்டியன் பண்ணிய அலம்பல் காக்கிகளை டென்ஷன் ஆக்கிவிட்டது.

காவல்துறையினருக்குத் தெரியாமல் சேத்தூர் தேவர் சிலை அருகே முருகையா பாண்டியன்
உள்ளிட்ட தினகரன் ஆதரவாளர்கள் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். உருவ பொம்மைகளை எரித்தனர். சற்று தாமதமாக இதைத் தெரித்துகொண்ட சேத்தூர் போலீசார் முருகையா பாண்டியனைத் தேடினார்கள். போலீஸ் தேடுவதை அறிந்த முருகையா பாண்டியன், ‘நெஞ்சு வலி’ எனச் சொல்லி, ராஜபாளையத்தில் உள்ள கோவிந்தராஜ் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அங்கு அவரை சோதித்துப் பார்த்த டாக்டர் ‘நீங்க நல்லாத்தான் இருக்கீங்க’ என்றிருக்கிறார். முருகையாபாண்டியன் தரப்பில், போலீஸ் தேடும் தகவலைக் கூறி, இங்கே ட்ரீட்மெண்ட் எடுத்து, எங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.



டாக்டரோ ”அதெல்லாம் முடியாது.. கிளம்புங்க..” என்று வற்புறுத்தி வெளியேற்றி இருக்கிறார். இந்த நேரத்தில் போலீஸ் அந்த மருத்துவமனைக்கு வந்துவிட, போலீசாரிடம் முருகையாபாண்டியன் ஆட்கள் “அண்ணனுக்கு நெஞ்சுவலி.. மதுரைக்கு கொண்டுபோகச் சொல்லிவிட்டார்கள்.” என்று சமாளித்திருக்கிறார்கள். போலீசாரோ “நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.” என்று முருகையாபாண்டியனைக் கைது செய்வதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள். உடனே, முருகையாபாண்டியனின் தாயார், ஆம்புலன்ஸ் முன்னால் படுத்துக்கொண்டு “என் மகனுக்கு நெஞ்சுவலி.. அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.. இதற்கு போலீஸ் எப்படி இடையூறாக இருக்கலாம்?” என்று ரகளை பண்ணிவிட்டார். வழக்கறிஞர் குழுவும் “உயிரோடு விளையாடாதீர்கள்” என்று போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த இடைவெளியில், கிடைத்த சந்தர்ப்பத்தில், முருகையாபாண்டியனோடு தனியார் ஆம்புலன்ஸ் மதுரையை நோக்கி விர்ரென்று கிளம்பிவிட்டது. இரவு நேரத்திலும் காக்கிகள் விடாமல் ‘சேஸிங்’ செய்து அழகாபுரி அருகே ஆம்புலன்ஸை மடக்கிப் பிடித்தார்கள். ஆம்புலன்ஸ் டிரைவரோ தெனாவெட்டாக “ஜனாதிபதியே வந்து உத்தரவிட்டாலும் ஆம்புலன்ஸிலிருந்து நோயாளியை இறக்க அனுமதிக்க மாட்டேன். போலீஸ் அதிகாரத்துக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.  ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டுபோவேன்.” என்று கறாராகச் சொல்லிவிட, வேறுவழியின்றி ஆம்புலன்ஸில் ஏறி போலீஸ் அதிகாரி ஒருவர் உட்கார்ந்து கொண்டார்.



மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸை விடு என்றிருக்கிறார் அந்த அதிகாரி. ஆனாலும் வழக்கறிஞர்களின் வழிகாட்டுதலில், ஆம்புலன்ஸ் நேராக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் போய் நின்றது. வேறென்ன? போலீஸ் கஸ்டடியில் இப்போது அந்த மருத்துவமனையில் சிகிச்சை(?) பெற்று வருகிறார் முருகையாபாண்டியன். காக்கிகள் தரப்பிலோ “அரசியல்ல இவங்க முட்டி மோதிக்கிட்டு எங்கள மண்டை காய வைக்கிறாங்க.. கொடும்பாவி எரிக்கிறப்ப துணிச்சல் காட்டுறாங்க.. போலீஸ் நடவடிக்கைன்னதும் நடுங்குறாங்க.. என்னத்தச் சொல்ல?”  என்று தலையில் அடித்துக்கொண்டார்கள்.

- சி.என்.இராமகிருஷ்ணன்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :