Add1
logo
வீரலட்சுமி மீதான வழக்கு ஒத்திவைப்பு || தேவை என்றால் இன்னொரு சர்ஜிகல் ஸ்டிரைக் நடக்கும் - ராணுவ தளபதி || திருச்சி விமான நிலையத்தில் 12 லட்சம் தங்கம் பறிமுதல் || ராஜபக்சேவின் உறவினரை தாக்கிய வழக்கில் 15பேர் விடுதலை || சென்ட்ரல் நிஜாமுதீன் சிறப்பு ரயில் || சென்னையில் ரூ.2 கோடி மோசடி: ஒருவர் கைது || பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணம், ஆவணங்கள் கொள்ளை || பியர்ள்ஸ் நிறுவனம் வசூலித்த பணத்தை மக்களிடம் திருப்பி தர வேண்டும்: ஜி.கே.வாசன் || போக்குவரத்து போராட்டம் ஒத்திவைப்பு: தொ.மு.ச. || கல்வி சான்றிதழ் தொலைந்தால் எளிதில் பெறலாம்: அமைச்சர் அன்பழகன் || தனியார் பள்ளிகளில் இலவச - கட்டாயக் கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு || ஜெ., மருத்துவமனையில் இருந்தபோதே இசட் பிளஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டது: தீபக் || மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்: தமிழக அரசு ||
முக்கிய செய்திகள்
வைகோ மீதான தாக்குதல் முயற்சி கவலையளிக்கிறது: ஸ்டாலின்
 ................................................................
இன்றைய(25.9.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தகராறு செய்யும் சிங்களர்கள்! வைகோவின் பாதுகாப்பு குறித்து ஈழத்தமிழர்கள் கவலை!
 ................................................................
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் வைகோ ஆற்றிய இரண்டு உரைகள்!
 ................................................................
அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு! புதிய திட்டம் தொடக்கம்
 ................................................................
ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்களை நீக்க கோரி திமுக வழக்கு
 ................................................................
ஜெ. கைநாட்டு உண்மையா? அன்றே அலசிய நக்கீரன்!
 ................................................................
ஜெ., மரணம் - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம்!
 ................................................................
தமிழர்களின் தன்மானத்தையே அடகு வைத்த OPS-EPS: பொதுமக்கள் கருத்து
 ................................................................
காவி மயமாக்குவதில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துக: கி.வீரமணி
 ................................................................
ஜெ., சிகிச்சையின் போது நைட்டி அணிந்திருந்ததால் வீடியோவை வெளியிடவில்லை: தினகரன்
 ................................................................
ஜெ., மரணம் குறித்த விசாரணைக்கு விரைவில் நீதிபதி நியமனம் செய்யப்படுவார்: ஜெயக்குமார்
 ................................................................
கீழடி அகழாய்வுப் பணிகளைச் சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகள்: ஸ்டாலின் கண்டனம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, செப்டம்பர் 2017 (20:4 IST)
மாற்றம் செய்த நாள் :12, செப்டம்பர் 2017 (20:12 IST)மாஜி அமைச்சர் பழனியப்பன் எங்கே? 
கர்நாடகாவிற்கு தேடிச்சென்ற 
தமிழக போலீசார் ஏமாற்றம்!


தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான 17 பேரில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி எம்,.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பனும் ஒருவர்.  இவர் மீது நாமக்கல்லைச்சேர்ந்த மருத்துவக்கல்லூரிகள் கட்டிட ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் விசம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்தனர்.  இந்த விசாரணைக்கு  நேரில் ஒரு முறை ஆஜரானார்.  இது தொடர்பான வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

 இந்த தற்கொலை வழக்கில்  பழனியப்பனிடம் விசாரணை செய்ய வேண்டும் என முடிவு செய்த போலீசார் கர்நாடக மாநிலம்  குடகு மாவட்டம் சுண்டிக்குப்பம் அருகில் உள்ள ஸ்டேண்டிங் டோன்  என்ற சொகுசு விடுதியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் பழனியப்பனும் இருப்பார் என்ற நம்பிக்கையில் இன்று மாலை நான்கு மணி அளவில் மூன்று இன்னோவா கார்களிலும் டெம்போ டிராவலர் வேன்களிலும் சென்ற போலீசார் அந்த விடுதியை சுற்றி வளைத்துள்ளனர்.  

 இதையறிந்த தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் போலீசாரின் அனுமதியோடுதான் தமிழக போலீசார் உள்ளே வரவேண்டும் என்று பிரச்சனை செய்ததால் சுண்டிக்குப்பம் காவல்நிலையத்திற்கு சென்றார் தமிழக போலீஸ் அதிகாரி டிஎஸ்பி விஜயராகவன்.  நாங்கள் நீதிமன்ற உத்தரவின்படி பழனியப்பனை விசாரணை செய்ய வந்துள்ளோம்.  அவரை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்.  இதையடுத்து சுண்டிக்குப்பம் காவல்நிலைய அதிகாரிகளூடன் அந்த விடுதிக்கு சென்று சோதனை நடத்தியபோது பழனியப்பன் தவிர, வேறு 17 பேர் மட்டுமே இருந்துள்ளனர்.   

 ’'பழனியப்பன் கடந்த 10ம் தேதி இங்குதான் இருந்தார்.  ஆனால் நேற்று முதல் அவர் இங்கு இல்லை.  அவர் எங்குள்ளார் என்பது எங்களூக்கு தெரியாது’' என்று மற்ற எம்.எல்.ஏக்கள் கூறியதை தொடர்ந்து தமிழக போலீசார் அங்கிருந்து திரும்பிவிட்டனர்.

மைசூருக்கு சென்ற தமிழக காவல்துறை அதிகாரிகளில் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த ஐஜி சத்தியமூர்த்தி மற்றும் ஐஜி பாரி உள்ளிட்டவர்கள் இருந்துள்ளனர்.- சிவசுப்பிரமணியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : rajan Date :9/12/2017 9:35:10 PM
ஒருவரை விசாரிக்க தமிழக காவல்துறை அதிகாரிகளான கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த ஐஜி சத்தியமூர்த்தி மற்றும் ஐஜி பாரி உள்ளிட்டவர்கள் மலைகள் கடந்து மாநிலம் விட்டு மாநிலம் சென்றது ஆச்சரியமே. அதுவும் தமிழா காவல்துறையில்
Name : subramanian Country : Indonesia Date :9/12/2017 8:11:38 PM
இதுபற்றிய முழுத் தகவலையும் விவரத்தையும் எமெர்ஜெண்சியில் அரசின் கண்களில் மண்ணைத்தூவி ஆட்டம் கட்டிய உயர் திரு சுப்ரமணிய சாமியிடம் திரு பழனியப்பன் கற்றிருக்கக் கூடும். சுப்பிரமணி -- பழனி எல்லாம் ஒண்ணுதானே?