Add1
logo
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா || தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம் || போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்) || இன்றைய(17.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை! போலீஸ் குவிப்பு! || அமைச்சர்கள் எந்த உணர்வோடு பேசுகிறார்கள் என்பதை புரியவில்லை:ஸ்டாலின் || தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுகை புத்தக திருவிழா!ஆட்சியர் பேச்சு! (படங்கள்) || டிரீம் கேர்ள்! துபாயில் நடிகை ஹேமமாலினி வெளியிட்ட நூல்! (படங்கள்) || விசாரணை முடிந்து வெளியே வரும் ஷகிலா, ராஜராஜன்,நரசிம்மன், பூங்குன்றன்!(படங்கள்) || கோட்சேவுக்கு தமிழ்நாட்டில் வீர வணக்க விழாவா? அரசு அனுமதிக்கிறதா?வீரமணி கண்டனம் || முல்லைப்பெரியாறு; பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்:ராமதாஸ் || பயிர்காப்பீடு செய்ய அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்! வெயிலில் மயங்கிய 5 பேர் மருத்துவமனையில் அனுமதி! || தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் காங். தலைவர் வி.மகேஸ்வரன்! ||
முக்கிய செய்திகள்
தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்
 ................................................................
இன்றைய(17.11.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை! போலீஸ் குவிப்பு!
 ................................................................
கோட்சேவுக்கு தமிழ்நாட்டில் வீர வணக்க விழாவா? அரசு அனுமதிக்கிறதா?வீரமணி கண்டனம்
 ................................................................
சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை; உறுதி செய்த ஐகோர்ட்!
 ................................................................
டி.டி.வி.தினகரனை அதிர்ச்சியடைய வைத்த தீர்ப்பு!
 ................................................................
‘மோடியால் இந்தியப் பொருளாதாரம் ஒற்றைக் காலில் நிற்கிறது!’ - யஷ்வந்த் சின்கா
 ................................................................
பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின்
 ................................................................
ஆளுநரின் செயல்பாடு குறித்து கவலைப்பட வேண்டியவர்களே கவலைப்படவில்லை: தமிழிசை
 ................................................................
ஸ்டாலின் வேண்டுமென்றே குறை கூறுகிறார்: அமைச்சர் தங்கமணி
 ................................................................
ஆளுநருக்கு வந்த மத்திய அரசின் உத்தரவு!
 ................................................................
குட்கா முதலாளிகளைக் காப்பாற்றிய போலீஸ் உயரதிகாரிகள்!
 ................................................................
தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வந்துவிட்டதோ? நாஞ்சில் சம்பத்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, செப்டம்பர் 2017 (14:15 IST)
மாற்றம் செய்த நாள் :12, செப்டம்பர் 2017 (14:17 IST)


"இளையராஜா வீட்டுல சாதியிருக்கா?"
 
சின்னப்பையன்  ரஞ்சித்...  சீமான் சீற்றம் 
தியாகி  இம்மானுவேல் சேகரன்  நினைவு நாள் தமிழகமெங்கும்  நேற்று அனுசரிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், இம்மானுவேல் சேகரனுக்கு வீரவணக்கம் செலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இயக்குனர் ரஞ்சித் குறித்தான கேள்விக்கு பதிலளிக்கும்பொழுது மிகுந்த சீற்றமடைந்தார்.

"சாதி, தொட்டிலிலிருந்து சுடுகாடு வரை தொடர்கிறது. இந்தக் கொடுமையை ஒழிக்க வேண்டுமென போராடியவர் எங்கள் தாத்தா இம்மானுவேல் சேகரனார். சாதிய வேறுபாட்டை ஒழித்து சமமான சமூகத்தைப் பார்த்திட அவர் போராடினார், மறைந்தார். அவர் கொண்டிருந்த அந்த நோக்கத்தை கொள்கையாகக் கொண்ட தமிழ் தேசிய பிள்ளைகள் நாங்கள், அந்த உறுதியை ஏற்றுக்கொள்ளும் தினமாக அவரது நினைவு நாளை கடைபிடிக்கிறோம் ", என்று கூறிய சீமானிடம், 'தமிழர்கள் இன்றும் ஊரும் சேரியுமாகப் பிரிந்து கிடக்கின்றனர்.  இந்த நிலை இருக்கும் வரை தமிழ் தேசியம் என்பதெல்லாம் எட்டாக்கனி தான். இன்னும் எத்தனை நாளைக்கு இதைச் சொல்லி ஏமாற்றுவீர்கள்?' என்று அனிதா உரிமையேந்தல் நிகழ்ச்சியில் இயக்குனர் ரஞ்சித் கூறியதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்ட பொழுது, "சாதி அடிப்படையில் பிரிந்திருக்கும்வரை தமிழ் தேசியமாக இணைய முடியாது என்று  ரஞ்சித் கூறிய அடிப்படை கருத்தில்  எனக்கு முரண்பாடு இல்லை. அப்படி பிரிஞ்சு இருக்கவனை ஒன்று படுத்துவது மொழிதான். அதுதான் எங்களை ஒன்னாக்குது. ஈழத்துல செத்தப்போ இங்க முத்துக்குமார் தீக்குளிச்சான்னா, அதுக்கு காரணம் மொழியுணர்வு தான். என் தங்கச்சி அனிதா செத்தப்ப, அத்தனை பேரும் போராடுறாங்கன்னா, அதுக்கு காரணமும் இன, மொழியுணர்வு தான். அந்த உணர்வை ஊட்டும் வேலையில தான் நாங்க இருக்கோம்" என்று பதிலளித்தார்.

மீண்டும் 'தமிழ், தமிழ் என்ற வெற்று உணர்ச்சிவசப்படலால் எதுவும் நடக்காது' என்றும் ரஞ்சித் கூறியிருக்கிறாரே என்று கேட்கப்பட, கோபமடைந்த சீமான், " இதுக்கு உணர்ச்சிவசப்படக்  கூடாதுன்னா, அப்புறம் எதுக்குதாண்டா உணர்ச்சிவசப்பட சொல்லுறீங்க...ரஞ்சித் இந்தக் கருத்தை எப்படி பேசுனாரு? உணர்ச்சிவசப்பட்டுதானே பேசுனாரு? சுத்த பைத்தியக்காரத்தனம்...உணர்ச்சிவசப்படுறது தீர்வாகாதுன்னா, அப்போ எது தீர்வாகும்? தமிழ்ச் சமூகம் எல்லாத்துக்கும் உணர்ச்சிவசப்படுற சமூகமும் இல்ல. அறிவார்ந்த சமூகம். அறிவால் சிந்திச்சு, உணர்வுப்பூர்வமா செயல்படுற சமூகம். இது வேலைக்காகாது, வேலைக்காகாதுன்னா, அப்போ எது தீர்வுன்னு சொல்லு. அதைச் செய்யலாம். அவர் சொல்லுற  சித்தாந்தத்துக்கு அவரு என்ன வேலை செஞ்சாரு? நாங்க ஒரு வேலை செய்யுறோம்... ஈழத்துல அவன் சாதிக்காரன் செத்தான்னா முத்துக்குமார் தீக்குளிச்சான்? அவ அண்ணன்தம்பி உள்ள இருக்கான்னா, செங்கொடி செத்துச்சு? அவன் வீட்டு தோட்டத்துக்கு தண்ணி வரலைன்னா, விக்னேசு உயிரை விட்டான்? இன்னைக்கு அனிதா இறந்துச்சுன்னு போராடுற தம்பி தங்கையெல்லாம் தலித்தா? பிற சமூகம் போராடலையா? இது தான் தீர்வு, இது தான் மாற்றம்...ஒன்னா சேரும்போது, 'நான் தலித்து, நான் தலித்து'ன்னு பிரிக்கிறது யாரு?   திராவிடன்னு சொல்லும்போதும், இந்தியன்னு சொல்லும்போதும் ஒன்னாவா இருந்தீங்க? இப்போ, தமிழன்னு சொல்லி ஒன்னாக்குறோம். வேற என்ன வழியிருக்கு? உனக்கு வழி தெரியலைன்னா ஓரமா உக்காரு. 

கட்ட வண்டியில போனவரைக்கும் சாதி இருந்துச்சு. வெள்ளைக்காரன் மகிழுந்து கண்டுபிடிச்சான். அதுல சாதியில்ல. எங்க ஊருல கூத்து பாத்தப்ப நடுல கயித்தக்கட்டி 'இந்த சாதி இங்க உக்காரு, அந்த சாதி  அங்க உக்காருன்னு சொன்னான். இன்னைக்கு அறிவியல் வளர்ந்து சினிமா பாக்கும்போது, இருக்கை எண் தான் இருக்கு. சாதியில்ல. இப்படித்தான் மாற்றம் வரும். இளையராஜா வீட்டுல சாதியிருக்கா? கங்கை அமரன் வீட்டுல சாதியிருக்கா ? இது எப்படி நடந்துச்சு? கல்வி, பொருளியல் மேம்பாடு. அது நடந்தா சாதி காணாமப் போகும். அம்பேத்காரோட பேரு அவரோடதா? அவருக்குக் கல்வி கொடுத்த பிராமணரோடது. அவரோட ரெண்டு மனைவிகளும் பிராமணர். இது எப்படி சாத்தியமாச்சு? ராம் விலாஸ் பாசுவான் மனைவி யாரு? ஞானசேகரன் IAS  மனைவி   யாரு? இதெல்லாம் எப்படி சாத்தியமாச்சு? கல்வி, பொருளாதாரம்  வந்தா சாதி காணாமப் போயிரும். அதை செய்யுறத விட்டுட்டு, இங்க வந்து இது சரியில்ல, அது சரியில்லைன்னா? அவரோட ஆதங்கம் எல்லாருக்கும் இருக்கு. ஏதோ அவரு மட்டும்தான் சாதிக்கெதிரா இருக்க மாதிரி பேசக்கூடாது.  ரஞ்சித்தை நான் தம்பின்னு சொல்லுறேன். அவரு தலித்துன்னு சொன்னா, நான் என்ன பண்ணுறது? போராடுறவனெல்லாம் அனிதாவை தங்கச்சியா பாத்தப்ப நீ தலித்தாப் பாக்குற? உனக்குதான் சுயவிமர்சனம் தேவை", என்று கூறிய சீமானிடம் மேலும் கேள்விகள் கேற்கப்பட, "அவரு சொன்னது என்ன அண்ணல் அம்பேத்கார் சொன்னதா? ரஞ்சித்  சின்ன பையன்.    இதுக்கு மேல  இதைப் பத்தி கேக்காதீங்க. ரஜினிகிட்ட போயி கேப்பீங்களா, ரஞ்சித் இப்பிடி சொல்லியிருக்கார்னு?", என்று கூறி முடித்தார்.        

வசந்த்                                                            

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(11)
Name : MUTHU Date :9/14/2017 3:57:42 PM
ரஞ்சித் ரஜினிக்கு கொடை பிடிக்க அலையும் ஆள்
Name : prema Country : Australia Date :9/13/2017 8:28:01 PM
இங்கே அனிதா என்ற தமிழ் தங்கை, மாநிலம் வகுத்த கல்வி முறையில் படித்து தன்னை மருத்துவர் ஆக்கி கொள்வதற்கு வேண்டிய மதிப்பெண்ணை பெற்றுள்ளார் . இதில் ரஞ்சித் எதற்கு ஜாதியை கொண்டு வருகிறார் . காரணம் ஜாதி வெறி . சீமானை இங்க கேள்வி கேட்கும் ( ஏன் தாழ்ந்த சாதி பெண்ணை திருமணம் செய்யவில்லை ) நபருக்கு கேட்கிறேன், நீங்கள் ஏன் திறமையின் அடிப்படையில் கல்வி, அரசு வேலையில் சேராமல் , ஒதுக்கீடு என்ற கேவலம் மூலம் வருகிறீர்கள் . அப்போது மட்டும் நான் தாழ்ந்த ஜாதி என்று சலுகை கேட்டகிறீர்களே ? எங்க போனது உங்கள் சுயமரியாதை ? அபோது மட்டும் நீங்கள் தாழ்த்தப்பட்டவர். அப்படித்தானே ? எதனை காலங்கள் இந்த கேவல பிட்சை?
Name : G. Madeswaran Country : Australia Date :9/13/2017 1:29:32 AM
6000 ஆம் ஆண்டுகளுக்கு மேலாக உலகம் முழுதும் கெத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழை இங்கே இப்போது யாரும் கொடி பிடித்து வளர்க்க வேண்டிய தேவை இல்லை, அது வாழ்ந்தது, மிகப்பெரிய அரசர்களால், புலவர்களால் பக்தியுடன் வளர்க்கப்பட்டது, மேலும் வளரும், உலகம் அழிந்தாலும் வாழும், உலகத்திற்கு முதன் முதலில் நாகரிகம் சொல்லி கொடுத்தது தமிழ், அறிவியலை சொல்லி கொடுத்தது தமிழ், மற்ற மொழிகளின் பிறப்பிடம் தமிழ், இதன் பெயரால் தமிழ் தமிழ் என்று சொல்லி அநாகரீகம் செய்யாமல்,தமிழனின் அடையாளத்தை,நற்திறமைகளை மாசு படுத்தாமல் இருந்தால் மிக நன்று! ஜாதி என்பது ஒரு சிறிய இனக்கூட்டம் என்றால், தமிழன் என்பது பல சிறிய இனங்கள் சேர்ந்த ஒரு பெரிய இனக்கூட்டம்! மனிதன் "பந்து" என்று வைத்துக்கொண்டால், அதை வைத்து "வாலிபால்" என்று "ஜாதி" விளையாட்டும் ஆடலாம்,"புட்பால்" என்று "தமிழ்" விளையாட்டும் ஆடலாம், எதை எப்போது வெற்றியுடன் விளையாடலாம்,எத்தனை பேர் என்று தீர்மானிப்பது மூளையின் அப்போதைய விருப்பம்,தேவை! நல்ல உணர்ச்சிகளுடன், மூளைக்கும் வேலை கொடுத்தால் தமிழன் வரும் காலங்களில் ஜகத்தினில் ஒளிர்வான்!
Name : pathman Country : United States Date :9/12/2017 9:22:15 PM
ரஞ்சித் சின்ன பையன்.ஆனால் உங்களைவிட யதார்த்த மாணவர். பத்தாம் வகுப்பும் படிக்காமல் தேசியம் பற்றி பேசி வீம்புக்குக்கு வேட்டடையாடி தமிழருக்கு இருந்த கொஞ்ச மதிப்பையும் இல்லாமல் செய்த ஒருவர்தான் உன் வழி காட்டி.ஜனத்தொகை பெருகி உள்ள காலத்தில் 200 வருடங்கள் இருந்த சனத்தொகைக்கு ஏற்ற பொருளாதார கொள்கை வைத்திருக்கும் ஆள் தான் நீங்கள்.கத்தி கத்தி சாகவேண்டியது தான்.
Name : karikalan1 Country : United Kingdom Date :9/12/2017 8:06:53 PM
சீமான் சொல்லுவது சரியே.....அனிதா மரணம் அடைந்தபொழுது தமிழகம் முழுவதும் தாங்கமுடியா கவலை அடைந்தது ...ஆனா இப்பொழுது அந்த பொண்ணு தலித் அது இது என்று சொல்கிறார் ரஞ்சித்....எதட்காக என்றுபுரியவில்லை...அநியாயமாக ஒரு குழந்தை irunthu விடடாள் என்று நாங்கள் கவலை படும்போது எதட்காக அவரின் சாத்திய பற்றி ரஞ்சித் பேசவேண்டும்....அவர் ஒரு உள்நோக்கத்தோடுதான் அப்படி பேசியிருக்கிறார்...அவருக்கு தமிழ் தேசியம் பேசுவோர் மீது ஏதோ ஒரு கோபம்....அதை இப்பொழுது காட்டுகிறார்...அமீரிடம் மைக்கை பிடுங்கி பேசுவதட்கு எத்தனிக்கிறார்...அவருக்கு மேடையில் எப்படி நடந்துகொள்வது என்றே தெரியவில்லை.....ஒரு வேலை பப்ளிசிட்டிக்கு அப்படி செய்தாரோ தெரியவில்லை...ரொம்ப அசிங்கமாய் இருந்தது ரஞ்சித்தின் செயல்பாடும் அவர் பேசிய விதமும்.....
Name : shanmuga sundaram Country : Australia Date :9/12/2017 7:49:13 PM
உலகத்திலேயே இவர் ஒருவருக்குத்தான் எல்லாம் தெரியும். நல்லது செய்து, நாட்டுக்காக போராடிய தமிழர்களை எல்லாம் இவர் என் அப்பன் , பாட்டன், முப்பாட்டன் என்று சொந்தம் கொண்டாடுவார். எதோ இவரே அதை எல்லாம் செய்தது போல அவர்களின் நல்ல பெயரை இவர் "கிரெடிட்" எடுத்து கொள்வார். இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இவர் இந்த நாட்டு மக்களுக்கு என்ன செய்தார் ? ஒரு ருபாய் எவருக்காவது தானம் செய்திருப்பாரா ? படிக்காத ஏழை மாணவர்களை தனக்கு securty -ஆக வைத்து கொண்டு ஆளே இல்லாத கடையில் tea ஆற்றிக்கொண்டுள்ளார். இவருக்கு எதற்கு செக்யூரிட்டி? இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா ? ஆடு , மாடு மேய்ப்பதை அரசாங்க வேலை ஆக்குவேன் என்று சொன்ன முதல் ஆள் இவர்தான் . ஒன்றுக்கும் உருப்படாதவர்களைத்தான் ஆடு மாடு மேய்க்க கூட லாயக்கில்லாதவன் என்று திட்டுவார்கள். இவர் அப்படிப்பட்ட நபர். வார்த்தையில் கண்ணியம், மரியாதை, நாகரிகம் இல்லாதவர்கள் எக்காலத்திலும் தலைவர் ஆக முடியாது. அதை முதலில் புரிந்து கொண்டு அரசியல் பழகு. ( ஏனென்றால் நீ இன்னும் அரசியலில் அரிச்சுவடி கூட கற்று கொள்ளவில்லை)
Name : shanmuga sundaram Country : Australia Date :9/12/2017 7:48:41 PM
உலகத்திலேயே இவர் ஒருவருக்குத்தான் எல்லாம் தெரியும். நல்லது செய்து, நாட்டுக்காக போராடிய தமிழர்களை எல்லாம் இவர் என் அப்பன் , பாட்டன், முப்பாட்டன் என்று சொந்தம் கொண்டாடுவார். எதோ இவரே அதை எல்லாம் செய்தது போல அவர்களின் நல்ல பெயரை இவர் "கிரெடிட்" எடுத்து கொள்வார். இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இவர் இந்த நாட்டு மக்களுக்கு என்ன செய்தார் ? ஒரு ருபாய் எவருக்காவது தானம் செய்திருப்பாரா ? படிக்காத ஏழை மாணவர்களை தனக்கு securty -ஆக வைத்து கொண்டு ஆளே இல்லாத கடையில் tea ஆற்றிக்கொண்டுள்ளார். இவருக்கு எதற்கு செக்யூரிட்டி? இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா ? ஆடு , மாடு மேய்ப்பதை அரசாங்க வேலை ஆக்குவேன் என்று சொன்ன முதல் ஆள் இவர்தான் . ஒன்றுக்கும் உருப்படாதவர்களைத்தான் ஆடு மாடு மேய்க்க கூட லாயக்கில்லாதவன் என்று திட்டுவார்கள். இவர் அப்படிப்பட்ட நபர். வார்த்தையில் கண்ணியம், மரியாதை, நாகரிகம் இல்லாதவர்கள் எக்காலத்திலும் தலைவர் ஆக முடியாது. அதை முதலில் புரிந்து கொண்டு அரசியல் பழகு. ( ஏனென்றால் நீ இன்னும் அரசியலில் அரிச்சுவடி கூட கற்று கொள்ளவில்லை)
Name : rama subramanian Country : India Date :9/12/2017 3:56:47 PM
ரஜினி இங்கே ஏன் வராரு ஏன்யா அமைதியா இருக்கிற ஒருத்தர தேவையில்லாம பேர இழுக்கீங்க ரஞ்சித் சின்ன பையன் அனா நீஙக பெரிய ஆளா அண்ணா
Name : Aatral Date :9/12/2017 3:51:46 PM
எப்படி ஆர் ஸ் ஸ் இந்தியாவில் சாதியில்லை என்று சொல்கிறதோ. அதை போல தான் சீமான் போன்ற தமிழ் தேசியவாதிகள் உண்மை மறைத்து பேசுவது. நீங்கள் மேலே குறிப்பிட்ட நபர்கள் எல்லாம் விரல்விட்டு எண்ணக்கூடியவை. அதில் இளையராஜா என்பவர் தன்னை தலித் என்றோ தமிழன் என்றோ சொல்லிக்கொள்வில்லை. சீமான் அவர்களே, தங்களை உயிர்த்த பட்ட தமிழ் சாதி என்று நினைக்கும் குடும்பத்தை சேர்ந்த பையன்களையோ பெண்களையோ தாழ்த்தப்பட்ட பெண்களுக்கோ பையன்களோ (சாதாரண குடும்பங்கள்) ஊர் அறிய திருமணம் செய்துவைக்கமுடியுமா? (சுமார் ௨௦ மணமக்களுக்கு பெற்றோர் ஒப்புதலுடன்). சீமானுடைய தொண்டர்களே ஒரு புரட்சி செய்க!
Name : Raj Country : Indonesia Date :9/12/2017 3:22:45 PM
சூப்பர் thalaiva
Name : Chandran Country : Australia Date :9/12/2017 3:02:26 PM
தமிழர் என்று சொல்லும் நீ தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்திருக்கலாம் ஏன் பண்ணவில்லை பணத்திற்கு ஆசை பட்டு ???