Add1
logo
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு || தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ ||
முக்கிய செய்திகள்
புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்!
 ................................................................
பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து
 ................................................................
வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்!
 ................................................................
இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி
 ................................................................
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி
 ................................................................
எம்.எல்.ஏக்கள் ஊதியத்தை உயர்த்தியபோது நிதிச்சுமை இல்லையா? - தமிழிசை கேள்வி
 ................................................................
பட்டாசுத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் பேசிய விஜயகாந்த்! - மேடை மீது கல்வீச்சு
 ................................................................
ஜெயலலிதா உயிரிழந்த விஷயம் முன்கூட்டியே தெரியும்! - ராஜேந்திரபாலாஜி
 ................................................................
அரசுப்பள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்றிய நக்கீரன்!
 ................................................................
சென்னையில் ஓடஓட விரட்டி இளைஞர் படுகொலை! - பதர வைக்கும் சிசிடிவி காட்சிகள்
 ................................................................
வீடு தேடி மது விற்பனை: எங்கே போகிறது தமிழக அரசு? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஆகஸ்ட் 2017 (11:12 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஆகஸ்ட் 2017 (14:28 IST)


ஆக. 20 ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம்: எடப்பாடி ஆட்சி கவிழ்வதற்கான தொடக்கம்: தமிழருவி மணியன் 

ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைப்பதற்காக ஆகஸ்ட் 20 அன்று திருச்சி உழவர் சந்தைத் திடலில் மாபெரும் மக்கள் திரள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டின் முடிவிலிருந்து எடப்பாடி ஆட்சி கவிழ்வதற்கான அரசியல் திருப்புமுனை தொடங்கவிருக்கிறது என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பொது வாழ்வின் புனிதத்தைப் பாழ்படுத்தி, ஊழலுக்கு அன்றாடம் உற்சவம் நடத்தி, மக்கள் நலன் சார்ந்த அரசியலை இழிந்த தொழிலாக உருமாற்றி, அரசியல் அமைப்பு முறையை முற்றாக அழுகும் நிலைக்கு மாற்றிவிட்ட தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ஆகிய திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்கும் வேள்வியில் காந்திய மக்கள் இயக்கம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.  கடந்த ஐம்பது ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி பீடத்தில் அமர்ந்த இந்த இரண்டு திராவிடக் கட்சிகளால், ஊழல் பொது வாழ்வின் தவிர்க்க முடியாத தீமையாகத் திசையெங்கும் வியாபித்துவிட்டது.


 
          இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் எடப்பாடி அமைச்சரவை உட்கட்சிக் குழப்பங்களால் கோட்டையிலிருந்து வெளித்தள்ளப்படுவதற்கான நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த ஆட்சி நீடிக்கும் ஒவ்வொரு கணமும் தமிழக நலனுக்கு எதிரானது என்ற உணர்வு மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்துவிட்டது. இரு திராவிடக் கட்சிகளின் ஊழல் மலிந்த ஆட்சி முறையைப் பார்த்துப் பார்த்து மனம் சலித்துக் கிடக்கும் மக்கள் அரசியல் அரங்கில் நல்ல மாற்றம் ஒன்று நிகழாதா ? நம்மை இரட்சிக்கும் ஒரு நல்ல தலைமை வந்து வாய்க்காதா?  என்று ஏங்கித் தவமிருக்கும் சூழலில்  ரஜினிகாந்த்  அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்து ஊழலின் ஆணிவேரை அறுத்தெறிவதற்கு உறுதி பூண்டிருக்கிறார்.
 
          ரஜினியின் அரசியல் பிரவேசம் ஏன் அவசியம்? அவரால் தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் நிகழக் கூடுமா? அவரால் மக்கள் எதிர்பார்க்கும் நல்லரசியல் எப்படி அமைய வேண்டும் என்ற கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் தருவதற்காகவும், ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைப்பதற்காகவும்  காந்திய மக்கள் இயக்கம் ஆகஸ்ட் 20 அன்று திருச்சி உழவர் சந்தைத் திடலில் மாபெரும் மக்கள் திரள் மாநாட்டை நடத்த இருக்கிறது.    காந்திய மக்கள் இயக்கத் தொண்டர்களும்,  ரஜினியை உயிருக்கு உயிராய் நேசிக்கும் நெஞ்சங்களும், ஆரோக்கியமான அரசியல் மாற்றத்தை விரும்பும் அறிவார்ந்த பொது மக்களும் திரளாகக் கூடவிருக்கும் இந்த மாநாட்டின் முடிவிலிருந்து எடப்பாடி ஆட்சி கவிழ்வதற்கான அரசியல் திருப்புமுனை தொடங்கவிருக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(23)
Name : christopher Date :8/18/2017 4:18:58 PM
தமிழகம் முன்னேற தமிழக மக்கள் வாழ்வு சிறக்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தமிழக முதல்வர் ஆகியே தீரவேண்டும். தமிழ் நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்ட ஒரே தமிழ் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தான். தமிழக மக்களின் ஏகோபித்த மக்களின் அன்பை பெற்றவர் எங்கள் தமிழ் தலைவர் ரஜினி அவர்கள் தான்.
Name : kalaimani Date :8/18/2017 3:58:45 PM
ரஜினி வந்தால் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உண்மையினை தமிழ் மக்களிடம் உள்ளது.
Name : subramanian Date :8/18/2017 3:57:46 PM
தலைவர் ரஜினி அவர்கள் எது செய்தாலும் தமிழ் சமுதாயத்துக்கு நன்மையே பயக்கும்.
Name : karikalan1 Country : United Kingdom Date :8/18/2017 2:02:00 PM
ரஜினி குஞ்சுகள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்...லதா ரஜினி கல்லூரி வாடகை கொடுக்காததால் மூட பட்டுள்ளது....அதுவும் கொஞ்ச நஞ்சமல்ல....கிடா தடட 10 கோடி...இவரால் எப்படி நாட்டிலே நல்லாட்சி செய்யமுடியும் ...வேணுமானால் லதா ரஜினி ஒரு யூனிவர்சிட்டியை தொடங்குவாங்க...நீங்க திருந்துவீங்கன்னு நினைச்சேன் ...என் எண்ணத்தில் மண்ணை தூவிடதீங்க...
Name : kalaimani Date :8/18/2017 10:55:21 AM
இந்த புறம்போக்கு பி.ஜே.பி.க்கு வால் பிடித்து ஒரு கூட்டணியை உருவாக்கினார். ம.ந.கூட்டணியை உருவாக்கனார் . அப்புறம் அரசியலே வேண்டாம் என்றார். இவருக்கு தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒரே நோக்கம் வைகோவைப்போல.
Name : இன்பச்செல்வன் Date :8/18/2017 9:51:02 AM
ஊழல் அற்ற லஞ்ச லாவண்யம் அற்ற வெளிப்படை நிர்வாகம் தான், மனித புனிதர் ரஜினியோட ஆட்சிக்கொள்கை .
Name : Joseph Vijay Date :8/18/2017 9:50:25 AM
கொள்கையை வச்சி கொள்ளை அடிச்சவன் தான் அதிகம். இது தான் பொதுவான அரசியல் கொள்கை. கொள்கை மாறவேண்டும் ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கு தகுந்தபடி. மக்கள் நலன் பேணுவது மட்டுமே மாறாத கொள்கையாக இருக்க வேண்டும். உங்க கொள்கையை வச்சி எவ்வளவோ பேருக்கும் நல்லது செய்கிறீர்கள் ஆனால் எல்லாருக்கும் முடியாதே. கொள்கை ஒரு தடை அதை உடைக்க வேண்டும்.
Name : தமிழரசன் Date :8/18/2017 9:49:29 AM
மற்றவர்களை வாக்களிக்காதீர்கள் என்று சொல்லக் கூட உரிமை இருக்கிறது. ஆனால் அவரை அரசியலுக்கு வரக்கூடாது என்று கூற யாருக்கும் உரிமை இல்லை. ரஜினி ஏத்திக்கிறையே அவர் என்ன ஊழல் செய்தார் உன்னை போல ஊழல் அரசியல் வாதிகளுக்கு சிம்ம சொப்பனம் டா எங்க ரஜினி
Name : Sathyaraj Date :8/18/2017 9:48:21 AM
ரஜினிக்கு எதிர்ப்பு இருப்பதாக காட்டிக்கொள்ளும் வயதரிச்சல் அரசியல் வாதிகள்.யார் கரடியாக கத்தினாலும் ரஜினி அரசியலுக்கு வருவதை தடுக்க முடியாது
Name : அகிலன் Date :8/18/2017 9:47:37 AM
சொந்த புத்தியோடு மனசுத்தியோடு தான் சொல்கிறோம் . தமிழக மக்கள் முன்னேற தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தமிழக முதல்வர் ஆனால் தான் சாத்தியம். மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள். ரஜினி தான் அடுத்த முதல்வர் என்று.
Name : தமிழ்நேசன் Date :8/18/2017 9:46:46 AM
தலைவர் வராரு, வெற்றி அடையிறாரு. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு தமிழக மக்கள் சேவை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும்.
Name : Kumar Date :8/18/2017 9:45:53 AM
ரஜினி அரசியலுக்கு வரலாமா என்று யோசிக்கும்போதே இங்க சில பல கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் வயிறு கலக்குது.. வந்தா எப்படி இருக்கும்!! வா ராஜா நீ வா ! கண்டிப்பாக இந்த திராவிட கட்சிகளைவிடவும் ரவுடி கட்சிகளான சீமான் மற்றும் தைலாபுர திண்ணை பேச்சாளரை விடவும் மோசமாக நீர் ஆட்சி செய்யப் போவதில்லை. கண்டிப்பாக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நோக்கமே போதும். நாங்கள் இருக்கிறோம், உம்மை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்க. தைரியமாக வாருங்கள். வந்து இந்த பாழாய்ப்போன தமிழ்நாட்டு அரசியல்வியாதிகளிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள். காத்திருக்கிறோம்.
Name : John Rufus Date :8/18/2017 9:44:17 AM
தலைவர் ரஜினி அவர்களின் அரசியல் வெற்றி பயணம் துவங்கி விட்டது. தமிழகம் தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென்றால் தலைவர் ரஜினி அவர்கள் தமிழக அரியணை எற வேண்டும். தலைவர் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவது 100 % உறுதி.
Name : karikalan1 Country : United Kingdom Date :8/17/2017 11:27:08 PM
ரஜினியால் வீட்லே உள்ள சிஸ்டத்தையே சரி செய்ய முடியல....நாட்டிலே உள்ள சிஸ்டத்தை எப்பிடி சரி செய்யப்போறார்....அதாங்க....வாடகை குடுக்காம உரிமையாளரை ஏமாத்துறாங்க மனைவி....இத இவர் தட்டி கேக்காம விட்டிடாரே ...எதுக்கு....இவரை பார்க்க உரிமையாளர் போனா சரிபன்றேன்னு சொல்றார்...ஆனா கல்லூரியை மூடிட்டிடங்களே....ஏங்க வாடை குடுக்காம எப்படிங்க பள்ளி நடத்துவாங்க...
Name : Seenivas J Country : Indonesia Date :8/17/2017 11:16:56 PM
மகிழ்ச்சி.
Name : christopher Country : Kuwait Date :8/17/2017 7:36:31 PM
காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் இயக்கத்தில் சேரபோகிறீர்களா திரு. ரஜினி அவர்களே, அப்படியானால் தலைவர் திரு. தமிழருவி மணியன் அவர்கள், பொதுச்செயலாளர் நீங்கள். திரு. மிழருவி மணியன் அவர்கள் எத்தனை இயக்கத்தை தாண்டி காந்திய மக்கள் இயக்கம் கண்டவர் என்று திரு. ரஜினி அவர்கள் யோசிக்கவேண்டும். காந்திய மக்கள் இயக்கத்தின் மாநாட்டில் தன் ரசிகர்களை போகச்சொல்லி pulse பார்க்கிறீர்களே, சொந்தமாக ஒரு மாநாடு நடத்த தைரியம் இல்லையா ? மாநாட்டிற்கு கூட்டம் அதிகமாக இருந்தால் அரசியலில் நீங்கள் entry ஆவீர்கள், கூட்டம் அதிகமாக இல்லை எண்டால் அப்படியே ஒதுங்கிக்கொள்வீர்கள் இதுதான் உங்கள் திட்டம். இந்த மாநாட்டிற்கு உங்கள் ரசிகர்களும், நடுநிலையாளர்களும் சேர்ந்து ஒரு பத்து லட்ச்சம் மக்கள் வருகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், இந்த பத்து லட்ச்சம் மக்களையும் தமிழகத்தின் 32 மாவட்டங்களுக்கு பகருங்கள் பிறகு ஒரு மாவட்டத்திற்கு 6 MLA தொகுதிகளுக்கு பகருங்கள் ஒரு தொகுதிக்கு 5208 . 3 இதுதான் உங்கள் பலம் வெற்றிபெற முடியுமா ? நடிகர்கள் இனி ஆட்சியை பிதுக்கி முடியாது யோசித்து முடிவெடுங்கள்.
Name : குபீர் கான் Country : Taiwan, Province of China Date :8/17/2017 6:03:38 PM
அல்லேலூயா! அரோகரா! ஆமென்!!
Name : subramanian Date :8/17/2017 3:57:39 PM
மனிதனாகப் பிறப்பதே அரிது. அதிலும் தன்முயற்சியால் அறிவாளியாகச் சிந்தனையாளனாக உருவெடுப்பது அரிதினும் அரிது. அந்த அறிவு மானுடச் சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டும். ஆனால் அரசியலில் பலருடைய அறிவாற்றல் பயன்படாமலே பாழானது. அன்றைக்கு ஈவெகி சம்பத். பின்னாளில் பழ நெடுமாறன். வைகோ. தற்போது தமிழருவி மணியன். என்ன செய்வது? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
Name : arabuthamilan Country : Bahrain Date :8/17/2017 1:56:31 PM
இவன் ஒரு ஒட்டுண்ணி வகையை சேர்ந்தவன்.
Name : R,Nadarajah switzerland Country : Switzerland Date :8/17/2017 1:39:23 PM
இவனை கெட்ட வார்த்தையில் திட்டினா மனசு சந்தோசப்படும் எல்லோரையும் குறை சொல்லும் இவர் ஒரு மோசமான ஓடு காலி இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகளுக்கு ஆயுள் மட்டும் நூறுக்கு மேல்
Name : rama subramanian Country : India Date :8/17/2017 1:21:15 PM
அண்ணாச்சி எதை செய்தாலும் யோசிச்சு செய்யுங்க
Name : kumar Date :8/17/2017 12:17:31 PM
எடப்பாடி அரசு கவிழுதோ இல்லையோ, ரஜினி கவுந்துடுவாரு.
Name : r muthukumar Date :8/17/2017 12:14:41 PM
நல்ல ராசிக்காரர் சொல்லிட்டாரு. அடுத்த முதல்வர் ரஜினியா வைகோவா அய்யா ???