Add1
logo
17 ஆண்டுக்கு பின்னர் உலக அழகியாக இந்திய பெண் தேர்வு || இன்றைய(18.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு || கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்! கி.வீரமணி || அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது வருமான வரித்துறை: திருநாவுக்கரசு || ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம் || பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்) || வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி. || ஆளுநர் ஆய்வு செய்யவில்லை: ஈபிஎஸ் புதுமையான விளக்கம் || கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி || தவறு செய்ததால் சோதனை நடக்கிறது: ஈபிஎஸ் || தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன் || நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்! ||
முக்கிய செய்திகள்
இன்றைய(18.11.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்! கி.வீரமணி
 ................................................................
ஆளுநர் ஆய்வு செய்யவில்லை: ஈபிஎஸ் புதுமையான விளக்கம்
 ................................................................
தவறு செய்ததால் சோதனை நடக்கிறது: ஈபிஎஸ்
 ................................................................
பிரதமர் மோடியின் கவிஞர் அவதாரம்!
 ................................................................
மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய நிர்மலா சீதாராமன்: மு.க.ஸ்டாலின் வேதனை
 ................................................................
‘தோட்டாக்கள் எங்கிருந்து வந்தது என்றே தெரியாது!’ - நிர்மலா சீத்தாராமன் சர்ச்சை கருத்து
 ................................................................
என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குத்தான் புரியும்: விஜயகாந்த்
 ................................................................
ஜெ. பெயரைக் கெடுக்க சசிகலா குடும்பத்தின் சதித்திட்டமே ரெய்டு!- தீபா ஆதங்கம்
 ................................................................
போயஸ் இல்லத்தில் சோதனை நடைபெற்றது வேதனையளிக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்
 ................................................................
கத்தியை எடுத்தவர்களுக்கு கத்தியால்தான் வீழ்ச்சி: டிடிவி தினகரன்
 ................................................................
ஜெ. அறையை சோதனை செய்ய அனுமதிக்கவில்லை: விவேக் பேட்டி
 ................................................................
போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனை மத்திய அரசின் திட்டமிட்ட சதி: தங்க தமிழ்ச்செல்வன்
 ................................................................
போயஸ் தோட்டத்தில் சோதனை செய்தது மிகுந்த மன வேதனை அளிக்கிறது: மைத்ரேயன்
 ................................................................
சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி!
 ................................................................
ஜெ.வின் கைக்குட்டையிலும் உரிமை இருக்கிறது: தீபா ஆவேசம்
 ................................................................
ஜெ. ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகத்தின் பின்னணியில் ஈபிஎஸ், ஓபிஎஸ்: தினகரன்
 ................................................................
தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஆகஸ்ட் 2017 (10:26 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஆகஸ்ட் 2017 (10:26 IST)


உழவர் கண்ணீர் துடைக்க ஆண்டுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்க என்ன தடை? அன்புமணி கேள்வி

உழவர் கண்ணீர் துடைக்க ஆண்டுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்க என்ன தடை? என கேள்வி எழுப்பியுள்ளார் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

உழவர்களின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கப் படும் என்று ஒருபுறம் கூறிவரும் மத்திய அரசு, மறுபுறம் உழவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்களாக சித்தரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. உழவர்களை கடன் சுமையிலிருந்து மீட்பதும், விவசாயத்தை லாபமானதாக மாற்றுவதும் எளிது என்றாலும் அதை ஆட்சியாளர்கள் செய்யாதது கண்டிக்கத்தக்கது.நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது பொருளாதார ஆய்வறிக்கையில் வேளாண்துறைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பு குறித்து எதிர்மறையான கணிப்புகளே இடம்பெற்றுள்ளன. மாநில அரசுகள் தள்ளுபடி செய்த பயிர்க்கடனின் மதிப்பு ரூ.2.70 லட்சம் கோடியைத் தொடக்கூடும் என்றும், பயிர்க்கடன் தள்ளுபடியால் நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.70%, அதாவது ரூ.1.10 லட்சம் கோடி குறையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவதற்கு முக்கியக் காரணம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப் படுவது உள்ளிட்ட வேளாண்துறைக்கு வழங்கப்படும் சலுகைகள் தான் என்பது போன்ற தோற்றத்தை  ஏற்படுத்த மத்திய அரசு முயல்கிறது. இனி எந்தக் காலத்திலும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாது என்பது தான் மத்திய அரசு சொல்ல வரும் செய்தியாகும். இது செய்தியல்ல... திட்டமிடப்பட்ட சதியாகும்.

உழவர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி தான் தீர்வு என்று பாட்டாளி மக்கள் கட்சி ஒருமுறைகூட கூறியதில்லை. ஆனால், உழவர்களுக்கும், உழவுத் தொழிலுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை மத்திய, மாநில அரசுகள் செய்யத் தவறிய பாவத்துக்கான செய்ய வேண்டிய பரிகாரம் தான் பயிர்க்கடன் தள்ளுபடி என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். உழவர்களின் விளைபொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை கொடுத்தால், அதைத் தவிர கூடுதலாக எந்த சலுகையும் வழங்கத் தேவையில்லை என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், எந்த அரசும் இந்த கோரிக்கையை நிறைவேற்றாதது தான் உழவர்களின் அவலநிலைக்கு காரணமாகும். உழவர்களின் விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து வழங்க வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான குழு கடந்த 2006-ஆம் ஆண்டு அறிக்கை அளித்தது. ஆனால், அதன்பின் 12 ஆண்டுகள் ஆகியும் அது நிறைவேற்றப்படவில்லை.

இதுகுறித்து ஆங்கில நாளேட்டுக்கு நேர்காணல் அளித்துள்ள எம்.எஸ்.சுவாமிநாதன்,‘‘ வேளாண் விளைபொருட்களுக்கு கூடுதல் விலை  வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை செயல்படுத்தாததற்கு விலைவாசி உயர்ந்து விடும் என்பது போன்ற அனைத்துக் காரணங்களும் கூறப்படுகின்றன. ஆனால், நாட்டு மக்கள்தொகையில் பாதியாக உள்ள விவசாயிகள் சாப்பிட வேண்டாமா? பணவீக்கத்திலிருந்து அரசு ஊழியர்களைக் காப்பாற்ற ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்த தயாராக இருக்கும் மத்திய அரசு, விவசாயிகளுக்கு அதிக ஊதியம் வழங்க வேண்டாமா? பயிர்க்கடன் தள்ளுபடிகள் அரசுக்கு பெரும் சவாலை ஏற்படுத்துகின்றன. ஆனால், அதைவிடக் குறைவாக ஆண்டுக்கு ரூ.20,000 கோடி மட்டுமே செலவு பிடிக்கக்கூடிய, வேளாண்விளைபொருட்களுக்கு கூடுதல் கொள்முதல் விலை தரும் திட்டத்தை செயல்படுத்த ஆட்சியாளர்கள் தயாராக இல்லை’’ என்று தெரிவித்திருக்கிறார்.எம்.எஸ்.சுவாமிநாதனின் இந்தக் குற்றச்சாற்றை அவ்வளவு எளிதாக ஒதுக்கிச் சென்றுவிட முடியாது. ஆண்டுக்கு சுமார் ரூ.20 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் மத்திய அரசுக்கு அதில் ஒரு விழுக்காட்டை உழவர்களுக்கு கூடுதல் விலை வழங்குவதற்காக ஒதுக்க மனம் வராதது வேதனை அளிக்கிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு இணையாக உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல், கலால் வரியை உயர்த்தியதால் மட்டும் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கிறது. அதில் 10% ஒதுக்கீடு செய்தால் இந்தியாவில் உள்ள 60 கோடிக்கும் அதிகமான உழவர்கள் கண்ணியத்துடன் வாழ்வர். அதுமட்டுமல்ல...  ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு முன்பாக சேவை வரி மீது 0.5% விவசாயிகள் நல வரி வசூலிக்கப்பட்டது.  நடப்பாண்டில் ரூ.10,800 கோடி அளவுக்கு இந்த வரி வசூலிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. 

ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வந்த பின்னர் இந்த வரி ரத்தாகி விட்டது. அதற்கு பதிலாக ஒட்டுமொத்த  ஜி.எஸ்.டி வரியில் அரை விழுக்காடு உழவர் நலனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டால் அதன் மதிப்பு ரூ.25,000 கோடியைத் தாண்டும். இந்த நிதியை விளைபொருட்களுக்கு கூடுதல் விலை வழங்குவதற்கு ஒதுக்கினால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2750, ஒரு டன் கரும்புக்கு ரூ.4000 விலை வழங்க முடியும். இது உழவர்களின் வாழ்வில் துயரத்தைத் துரத்தி விடும். எனவே, விளைப்பொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலை வழங்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :