Add1
logo
திரிபுரா மாநிலத்தில் பத்திரிக்கையாளர் கடத்தி கொலை - ராகுல் காந்தி கண்டனம் || ரூ.50 லட்சம் போதைப்பொருட்களுடன் 2 நைஜீரியர்கள் கைது || தனியார் முதலீட்டில் பஸ் நிலையம் அமைக்கும் முடிவுக்கு: ராமதாஸ் எதிர்ப்பு || திருவேற்காட்டில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு || திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு || மின் வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை || ஆண்டிபட்டியில் வேன் மோதி 2 பேர் பலி || பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வேண்டும்: ஜவாஹிருல்லா || சென்னை ஏர்போர்ட்டில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல் || மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4 ஆக பதிவு || தமிழகத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் கைது || கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த வாகன ஓட்டுனர்கள் போராட்டம் || தமிழ் படைப்பாளிகள் அங்கீகரிக்கப்படுவதில்லை: கி.ரா விழாவில் எழுத்தாளர்கள் ஆவேசம் ||
இந்தியா
திரிபுரா மாநிலத்தில் பத்திரிக்கையாளர் கடத்தி கொலை - ராகுல் காந்தி கண்டனம்
 ................................................................
திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
 ................................................................
மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4 ஆக பதிவு
 ................................................................
சிபிஐ வழக்குப்பதிவு விவகாரம் - அதிகாரிகளை பழிவாங்கும் நடவடிக்கை: நாராயணசாமி
 ................................................................
ஆந்திரா: 24 தமிழர்கள் கைது
 ................................................................
திருமணம் முடிந்த மறுநாளே தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி
 ................................................................
பீகாரில் 900 கிலோ கஞ்சா பறிமுதல்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (15:50 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (16:19 IST)


பசுவின் ‘பஞ்சகவ்ய’த்தை ஆய்வுசெய்ய ஆராய்ச்சிக்குழு!

‘பசு சேவகர்கள் எனச் சொல்லிக்கொண்டு அப்பாவிகளைத் தாக்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பிரதமர் மோடி வலியுறுத்தும் அளவிற்கு, நாட்டில் கடந்த சில மாதங்களாக பசு பாதுகாப்பு என்ற பெயரில் பல அப்பாவிகள் தாக்கப்பட்டு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் மாட்டின் ‘பஞ்சகவ்யம்’ குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.



பஞ்சகவ்யம் எனப்படுவது மாட்டின் சிறுநீர், சாணம், பால், பாலிலிருந்து பெறப்படும் நெய் மற்றும் தயிர் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருள். இந்த பஞ்சகவ்யம் விவசாயம், மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் இதர பயன்பாடுகளுக்கு உகந்தது என இந்து மதத்தினரால் பரவலாக நம்பப்படுகிறது. மாட்டின் பயன்கள் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் அதன் பஞ்சகவ்யத்தை ஆய்வு செய்ய இந்தக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

19 பேர் கொண்ட இந்தக்குழுவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கிளை அமைப்பான வி.எச்.பி அமைப்பைச் சேர்ந்த மூவர் இடம்பெற்றுள்ளனர். ‘நேசனல் ஸ்டீரிங் கமிட்டி’ எனப் பெயரிடப் பட்டிருக்கும் இந்தக்குழுவில் டெல்லி ஐஐடியைச் சேர்ந்த ராம்கோபல் ராவ், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் மன்ஷேல்கர், நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தர் விஜய் பட்கர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக்குழுவிற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமை தாங்குவார்.

அடுத்த மாதம் இந்தக்குழுவிற்கான முதல் கூட்டம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக்குழுவின் ஆயுட்காலம் மூன்று ஆண்டுகள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ச.ப.மதிவாணன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :