Add1
logo
“அடித்தே கொன்று விட்டது போலீஸ்..” -இருவரின் சாவுக்கு நியாயம் கேட்கும் கிராமம்! || என் கேள்விக்கு ஸ்டாலினை பதிலளிக்க சொல்லுங்கள் பார்ப்போம்: சைதை துரைசாமி ஆவேசம் || தமிழகம் வெகுவிரைவில் பாலைவனமாகி விடும்! அன்புமணி || ஜெ. மரணம் தொடர்பான விசாரணை: டாக்டர் சரவணன் ஆஜராகி விளக்கம் || கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் போராட்டம் || நிச்சயம் சந்திப்போம் தேர்தலில்... தினகரன் ஆதரவாளர்கள் போஸ்டரால் பரபரப்பு || போயஸ் இல்லத்திற்குள் டிடிவி ஆதரவாளர்கள் நுழைய முயற்சி! போலீசாருடன் வாக்குவாதம்! || இரட்டை இலை சின்னம் யாருக்கு? இன்று தீர்ப்பு! || அரசு போக்குவரத்துத் துறையை மீட்குமாறு விஜயகாந்த் வலியுறுத்தல் || பைனான்சியர் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை அமைப்பு! || ஆந்திராவுக்கு செல்லும் கரும்பு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இன்றைய(21.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! ||
தமிழகம்
“அடித்தே கொன்று விட்டது போலீஸ்..” -இருவரின் சாவுக்கு நியாயம் கேட்கும் கிராமம்!
 ................................................................
தமிழகம் வெகுவிரைவில் பாலைவனமாகி விடும்! அன்புமணி
 ................................................................
கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் போராட்டம்
 ................................................................
அரசு போக்குவரத்துத் துறையை மீட்குமாறு விஜயகாந்த் வலியுறுத்தல்
 ................................................................
ஆந்திராவுக்கு செல்லும் கரும்பு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
உலக மரபு வார விழாவை முன்னிட்டு தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
 ................................................................
சபீர் கரிமின் ஜாமின் மனு குறித்து நாளை சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு
 ................................................................
மாநில உரிமைகளில் கவர்னர் தலையிடலாமா? மோடியின் கடிதத்தை மோடிக்கு நினைவூட்டும் போராட்டம்!
 ................................................................
வாடிப்பட்டி அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து 2 லட்சம் கொள்ளை
 ................................................................
தீக்கதிர் ஆசிரியருக்கு மிரட்டல் : ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்
 ................................................................
முகநூலில் நீதிபதி கிருபாகரன் பற்றி கருத்து வெளியிட்ட பெண் சிறையிலடைப்பு!
 ................................................................
ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
உலக மீனவர் தின விழா கண்காட்சியில் தமிழிசை சவுந்தர்ராஜன்!
 ................................................................
சத்துணவுக் கூடங்களில் முட்டை விநியோகம் தடைப்படவில்லை! - அமைச்சர் சரோஜா விளக்கம்
 ................................................................
மாற்றுக் கருத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாத சங் பரிவாரங்களின் அடாவடி செயலுக்கு சி.பி.எம் கண்டனம்!
 ................................................................
ரூ.1140 கோடி நிலுவை தொகை கோரி ஓய்வூதியர்கள் மறியல் - கைது
 ................................................................
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் சென்னையில் மறியல் போராட்டம்!
 ................................................................
மாணவர்களுக்கு முட்டை வழங்குவதை எதற்காகவும் அரசு நிறுத்தக்கூடாது! - ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
சட்டமன்றத்தைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு உத்திரவிட ஆளுநர் தயாரா? மு.க.ஸ்டாலின்
 ................................................................
மாணவர்களின் மீது ஆசிரியர்கள் மதத்தைத் திணிக்கக் கூடாது! - திருமாவளவன்
 ................................................................
முன்னுரிமை காரணங்களைச் சொல்லி ரேசன் அரிசி நிறுத்தப்படும் அவலம்!
 ................................................................
ஓய்வுகால பணப்பயன்களை வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் சாலை மறியல்!
 ................................................................
ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!
 ................................................................
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பல வசதிகளுடன் கூடிய குழந்தைகள் வார்டு திறப்பு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (14:33 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (14:33 IST)



சரியும் முதலீடுகள்: மாயத் தோற்றத்தில்
தமிழகத்தை ஏமாற்றும் பினாமி அரசு!


அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.  தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றப்போவதாக அதிமுக அரசு கூறி வரும் நிலையில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலும் தமிழகம் கடைசி இடத்திற்கு  தள்ளப்பட்டிருக்கிறது.  முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் தோல்வியடைந்து விட்டதையே இது காட்டுகிறது என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

2016-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு மொத்தம் ரூ.2.83 லட்சம் கோடி அந்நிய  முதலீடு வந்திருக்கிறது.  இதில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள முதலீட்டின் அளவு ரூ.8366 கோடி, அதாவது 2.9% மட்டுமே என்று  புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2015-ஆம் ஆண்டிலும் இந்தியாவுக்கு இதே அளவில் தான் வெளிநாட்டு முதலீடு வந்தது. ஆனால், அதில் தமிழகத்தின் பங்கு ரூ.36,686 கோடியாக, அதாவது 13.1% ஆக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டில் அது நான்கில் ஒரு பங்குக்கும் கீழாக குறைந்துள்ளது.  

இதே காலக்கட்டத்தில் மராட்டிய மாநிலத்தின் அந்நிய நேரடி முதலீடு ரூ.51,823 கோடியிலிருந்து, ஒரு லட்சத்து 29,697 கோடியாக, அதாவது கிட்டத்தட்ட 3 மடங்காக அதிகரித்திருக்கிறது. குஜராத் மாநிலம் ஈர்த்த அந்நிய நேரடி முதலீட்டின் அளவு ரூ.16,138 கோடியிலிருந்து ரூ.20,666 கோடியாகவும்,  ஆந்திர மாநிலத்திற்கு வந்த முதலீட்டின் அளவு ரூ.6794 கோடியிலிருந்து ரூ.14,438 கோடியாகவும் உயர்ந்துள்ளது. குஜராத், ஆந்திரா ஆகிய இரண்டுமே தமிழகத்தை விட சிறிய மாநிலங்கள் எனும் போது, அவற்றை விட மிகக்குறைவான முதலீட்டை தமிழகம் ஈர்த்திருப்பதிலிருந்தே தமிழகத்தின் முதலீட்டை ஈர்க்கும்  திறன் எந்த அளவுக்கு குறைந்திருக்கிறது என்பதை உணரலாம். இது தமிழக வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.

நேரடி முதலீடுகள் மட்டுமல்ல... உள்நாட்டு முதலீடும் வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குப் பிறகு தமிழகத்திற்கு வந்த முதலீட்டின் அளவு ரூ.5,000 கோடிக்கும் குறைவாகவே இருக்கும். கடந்த இரு ஆண்டுகளில், தமிழகத்திற்கு வந்த அந்நிய நேரடி முதலீட்டின் அளவு ரூ.45,052 கோடி மட்டுமே. ஆக, கடந்த இரு ஆண்டுகளில் தமிழகத்திற்கு வந்த முதலீடுகளின் மொத்த அளவு ரூ. 50 ஆயிரம் கோடி மட்டுமே.  கடந்த 2015-ஆம் ஆண்டில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்தில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்நாட்டு - வெளிநாட்டு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டிருப்பதாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்பின்னர் இரு ஆண்டுகள் ஆகியும் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 80 விழுக்காடு வந்து சேரவில்லை  என்பது தமிழக அரசின் தோல்வியா... இல்லையா?

தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் சம்பத், தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகக் கூறினார்.  மற்றொரு விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணியும் இதே கருத்தைத் தெரிவித்தார். ஆனால், மத்திய அரசின் புள்ளி விவரங்கள் வேறு விதமாக உள்ளன. மத்திய திட்ட ஆணையத்திற்கு மாற்றாக அமைக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் முதன்மை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் வெளியிட்ட புள்ளி விவரங்களில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் கடைசி இடத்தில் இருப்பதாகக் கூறினார்.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தோல்வியடைந்து விட்ட பினாமி அரசு, தமிழகத்தில்  முதலீடுகள் குவிந்து வருவதாகக் கூறி தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஒருவேளை தமிழக அமைச்சர்கள் கூறுவது உண்மை என்றால் அதற்கான ஆதாரங்களை உடனடியாக வெளியிட வேண்டும். 2011-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.31,706 கோடி மதிப்பில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஒற்றைச்சாளர அனுமதி மூலமாக ரூ.14,896 கோடி உட்பட ரூ.46,602 கோடி முதலீடு வந்துள்ளதாகவும், அதன்மூலம் 2.50 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்தார். 2015-ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு செய்ய 98 நிறுவனங்கள் ஒப்புக்கொண்டதாகவும், அதன்மூலம் 4.70 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

ஆக, அதிமுக ஆட்சியில் ரூ.2.88 லட்சம் கோடி முதலீடும், 7.20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்திருக்க வேண்டும். இந்த இலக்குகள் எட்டப்பட்டனவா? எட்டப்படவில்லை என்றால் இதுவரை எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன? எவ்வளவு பேருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்பன உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :