Add1
logo
சென்னை புத்தகத் திருவிழாவில் ‘ராமானுஜர் 1000’ கருத்தரங்கு || ஆடித்தபசுத் திருவிழா கோலாகலக் கொடியேற்றம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || பா.ஜ.கவை சேர்ந்த பெண் சாலைவிபத்தில் பலி,பலர் படுகாயம் || முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் பாரதபிரதமர் (புகைப்படத்தொகுப்பு) || குடும்ப தகராறில் மின்சார டவரில் ஏரி வாலிபர் தற்கொலை முயற்சி;ரயில் சேவை, பல ஊர் மக்கள் பாதிப்பு || மன்னார்குடி டாக்டர் மனைவி கொலையில் இளவரசி உறவினர்களுக்கு 2 நாள் கஸ்டடி! || நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்:பொங்கலூர் பழனிச்சாமி || மு.க.ஸ்டாலின் விடுவிப்பு! || இளைய சமுதாயத்தின் விடி வெள்ளி கலாம்:மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி || நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் வரை திமுக போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கும்:ஸ்டாலின் || சென்னை, திருவள்ளூரில் திமுக மனித சங்கிலி போராட்டம்(படங்கள்) || கிணற்றை மீண்டும் ஊர்மக்களுக்கே எழுதி கொடுக்க ஓபிஸ் சம்மதம்! ||
முக்கிய செய்திகள்
மன்னார்குடி டாக்டர் மனைவி கொலையில் இளவரசி உறவினர்களுக்கு 2 நாள் கஸ்டடி!
 ................................................................
சென்னை, திருவள்ளூரில் திமுக மனித சங்கிலி போராட்டம்(படங்கள்)
 ................................................................
கிணற்றை மீண்டும் ஊர்மக்களுக்கே எழுதி கொடுக்க ஓபிஸ் சம்மதம்!
 ................................................................
பிறக்கும்போதே இறப்புச் சான்றிதழா?
 ................................................................
விடுதலைப் புலிகள் மீதான தடைநீக்கம்! இத்தீர்ப்பு ஒரூ வரலாற்று திருப்புமுனையாகும்! திருமாவளவன்
 ................................................................
அமைச்சர்களின் கொள்ளை விவரங்களை வெளியிடுவோம்: ஸ்டாலின் பேட்டி
 ................................................................
கீழடி நாகரிகம் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டது - கனிமொழி கேள்விக்கு பதில்!
 ................................................................
கோவை அருகே மு.க.ஸ்டாலின் கைது! திமுகவினர் சாலை மறியல்!
 ................................................................
ராமேஸ்வரம் மண்ணை தொடுவதை பெருமையாக கருதுகிறேன்: பிரதமர் மோடி
 ................................................................
தடை ஆணை இருந்தால் காட்டுங்கள் என்று போலீசாருடன் ஸ்டாலின் வாக்குவாதம்
 ................................................................
அப்துல் கலாமின் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் நரேந்திர மோடி
 ................................................................
திமுகவினர் தூர்வாரிய ஏரியை பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி மறுப்பு: பதட்டம், பரபரப்பு
 ................................................................
மதுரை வந்தடைந்தார் பிரதமர்!
 ................................................................
விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும்: வைகோ
 ................................................................
விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியாவிலும் நீக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
பீகார் முதல் அமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (13:50 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (13:50 IST)



கமல் மீது வழக்கு தொடர்வதாக அச்சுறுத்தும் அமைச்சர்கள் என் மீது வழக்குப் பதிவு செய்வார்களா? ஸ்டாலின்


ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, தமிழக சட்டப்பேரவையில் இன்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

இந்திய ஜனாதிபதியை பொறுத்தவரையில் ஒட்டுமொத்த இந்திய திருநாட்டின் அனைத்து மாநிலங்களில் இருக்கக்கூடிய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகளின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இன்றைக்கு பெரும்பான்மையுடன் இருக்கக்கூடிய மத்திய பாரதிய ஜனதா கட்சி தொடக்கத்தில், ’அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையோடு, போட்டியின்றி ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்’, என்று ஒரு கபட நாடகத்தினை நடத்திவிட்டு, தன்னிச்சையாக ஒரு வேட்பாளரை நிறுத்திய காரணத்தால், இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருப்பது உள்ளபடியே வேதனைப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

இருந்தாலும், ஆளும்கட்சியான பிஜேபி நிறுத்தியுள்ள வேட்பாளரை எதிர்த்து 17 கட்சிகளைக் கொண்ட ஒரு கூட்டணியாக சேர்ந்து ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு, களத்தில் இறக்கியிருக்கின்றன என்று சொன்னால், அதுவே ஒரு மிகப்பெரிய வெற்றிக்கு அடிகோலாக அமைந்திருக்கிறது என்பது தான் எனது கருத்து. அந்தவகையில், இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஜனநாயக அடிப்படையில் எங்கள் வாக்குகளை பதிவு செய்திருக்கிறோம்.

கேள்வி: திமுக தலைவர் கலைஞர் அவர்கள் வாக்களிக்க வருவாரா?

பதில்:
மருத்துவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. எனவே, இன்றைக்கு தலைவர் கலைஞர் அவர்கள் வாக்களிக்க வாய்ப்பில்லை.

கேள்வி: திமுக சார்பில் 88 பேரும் வாக்களித்து உள்ளார்களா?

பதில்:  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அத்தனை பேரும் வாக்களித்துள்ளனர்.

கேள்வி: கமல்ஹாசன் தொடர்ந்து இந்த அரசு குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அதற்கு வேறு மாதிரியான கருத்துக்கள் அதிமுக தரப்பில் இருந்து வருகிறது. மிரட்டல் விடுக்கும் விதமாக அமைச்சர்கள் பேசி வருகிறார்கள். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். அது பற்றிய உங்கள் கருத்து?

பதில்: அதாவது, அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, வாக்களித்திருக்கக் கூடியவர்களுக்கு, ஓட்டுரிமைப் பெற்றிருக்கக் கூடியவர்களுக்கு ஜனநாயக ரீதியில் ஒரு அரசை விமர்சிப்பதற்கு எல்லாவித உரிமையும் உண்டு. அந்த அடிப்படையில்தான் கமல்ஹாசன் தன்னுடைய கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார். அப்படி எடுத்து வைத்திருக்கக்கூடிய காரணத்தால், அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கக்கூடிய பலர் இன்றைக்கு அவரை மிரட்டுவது, அச்சுறுத்துவது, வழக்குப் போடுவேன் என்று சொல்வது எல்லாம் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்.

பொத்தாம் பொதுவாக ஊழல் நடந்துக் கொண்டிருக்கிறது, முறைகேடு நடந்துக் கொண்டிருக்கிறது, அனைத்துத் துறைகளிலுமே ஊழல் என்றுதான் அவர் சொன்னார். அதற்கே அவர் மீது வழக்கு போடுவோம் என்று சொல்பவர்கள், நான் ஆதாரங்களோடு சட்டமன்றத்தில் மட்டுமல்ல, மக்கள் மன்றத்திலும் விஜயபாஸ்கர் செய்திருக்கக்கூடிய ஊழல், அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்திருக்கக்கூடிய ஊழல், போலீஸ் கமிஷனர் செய்திருக்கக்கூடிய ஊழல் என இந்த ஊழல்கள் மீதெல்லாம் வருமான வரித்துறையினர் மூலமாகவும், அதேபோல தேர்தல் கமிஷன் மூலமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வந்திருக்கக்கூடிய அந்த கடிதங்களின் அடிப்படையில், நான் தொடர்ந்து குற்றச்சாட்டு சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

கமல்ஹாசன் மீது வழக்குப் போடுவேன் என்று சொல்லக்கூடிய அந்த தைரியம், அந்த பிரசாரம், இன்றைக்கு திமுக சார்பில் ஊழல் குற்றாச்சாட்டுகள் சொல்லிக் கொண்டிருக்கும் எங்கள் மீது அவர்கள் வழக்குப் போட தயாராக இருக்கிறார்களா? அப்படி, வழக்குப் போட்டால் அதை நாங்கள் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : karikalan1 Date :7/18/2017 1:57:58 PM
கமல் ஒரு தமிழின விரோதி முக்கியமாக அவன் சைவ சமயத்தை எதிர்ப்பவன் சைவ சமயத்தை சார்ந்த மக்களையும் எதிர்ப்பவன்...ஸ்டாலின் அவரை ஆதரிப்பதை நிறுத்துவது நல்லது தமிழ் மக்கள் அவனுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்....தென்னாடுடைய சிவனே போற்றி....
Name : selvarajan Date :7/17/2017 6:38:22 PM
கொள்கை, கோட்பாடு, ஒழுக்கமென்று எதுவுமில்லாத உளறுவாயன் கமலின் பிரச்சனையில் தலையிடுவது ஸ்டாலினிக்கு தேவையில்லாதது.