Add1
logo
சென்னை புத்தகத் திருவிழாவில் ‘ராமானுஜர் 1000’ கருத்தரங்கு || ஆடித்தபசுத் திருவிழா கோலாகலக் கொடியேற்றம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || பா.ஜ.கவை சேர்ந்த பெண் சாலைவிபத்தில் பலி,பலர் படுகாயம் || முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் பாரதபிரதமர் (புகைப்படத்தொகுப்பு) || குடும்ப தகராறில் மின்சார டவரில் ஏரி வாலிபர் தற்கொலை முயற்சி;ரயில் சேவை, பல ஊர் மக்கள் பாதிப்பு || மன்னார்குடி டாக்டர் மனைவி கொலையில் இளவரசி உறவினர்களுக்கு 2 நாள் கஸ்டடி! || நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்:பொங்கலூர் பழனிச்சாமி || மு.க.ஸ்டாலின் விடுவிப்பு! || இளைய சமுதாயத்தின் விடி வெள்ளி கலாம்:மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி || நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் வரை திமுக போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கும்:ஸ்டாலின் || சென்னை, திருவள்ளூரில் திமுக மனித சங்கிலி போராட்டம்(படங்கள்) || கிணற்றை மீண்டும் ஊர்மக்களுக்கே எழுதி கொடுக்க ஓபிஸ் சம்மதம்! ||
சிறப்பு செய்திகள்
“நலம், நலமறிய ஆவல்” ஐந்து லட்சம் முகவரிக்கு கடிதம் எழுதும் ஈசன் இளங்கோ..
 ................................................................
என்னைப் பார்த்து தினகரனுக்கு அச்சம்!
 ................................................................
மக்களின் வாழ்வைக் குடிக்கும் இந்திய சாலைகள்!
 ................................................................
நிதிஷ்குமார் பாஜகவிடம் பம்முவது ஏன்?
 ................................................................
கலாம்... கனவு மட்டுமே கண்டவரா...???
 ................................................................
பிரிவினையை தகர்த்தெறியும் அன்புச்சுவர்!
 ................................................................
மக்கள் போராட்டம் வெல்லும்!
 ................................................................
இந்தியாவுக்கு ஏன் விடுதலை கொடுத்தது பிரிட்டன்?
 ................................................................
யானைகளுக்கு மத்தியில் எறும்புகள்... அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தலித் புத்தகம்!
 ................................................................
நடிகர்களைப் பார்த்து பயப்படுகிறார்கள் அரசியல்வாதிகள் !!!
 ................................................................
ஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா?
 ................................................................
அதிமுகவின் எதிர்காலம்...
 ................................................................
பாடாய்ப்படுத்தும் 5 ஸ்டார் ஜெயில் விவகாரம்... அமைச்சர்கள் டெல்லிக்கு போவது ஏன்?
 ................................................................
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல் வச்சதுதான் சட்டமாம்!
 ................................................................
வாய்ச்சொல் வீரரா மோடி?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (13:15 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (13:41 IST)


புரட்சிக்காரனை கண்டு கதிகலங்கும் 
புரட்சி தேச ஆட்சியாளர்கள்!

1989 ஏப்ரல் 15-ஆம் தேதி சீன ஆட்சியாளர்களுக்கு எதிராக பீய்ஜிங்கில் உள்ள தினாமென் சதுக்கம் முன் குவிந்திருந்த லட்சகணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மக்கள் திரண்டு நின்று ‘சுதந்திரமாக இருக்கவிடு!’ என ஆட்சியாளர்களுக்கு எதிராக குரல் எழுப்பினர். போராட்டத்தை கலைக்கச்சொன்னது அரசாங்கம். போராட்டக்குழு கலையவில்லை. போராட்டம் நாடு முழுக்க பரவியது. மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் படைபடையாக வந்து கலந்துக்கொண்டனர். 1989 ஜீன் 4-ஆம் தேதி, சீனா தனது இராணுவத்தை களத்தில் இறக்கியது. துப்பாக்கிகளும், பீரங்கி குண்டுகளும் போராட்டக்காரர்கள் மீது பாய்ந்தது. அந்த சதுக்கமே ரத்தவெள்ளமாக மாறியது. போராட்டக்காரர்கள் சிதறி ஓடினார்கள். இறந்தவர்கள் எவ்வளவு என்கிற விவரத்தை இன்றுவரை சீன அரசு வெளியிடவில்லை. போராட்டக்குழுவுக்கும் தெரியாது. சீனா செஞ்சிலுவை சங்கம் மட்டும் 3 ஆயிரம் பேர் இறந்தனர் என்றது. ஆனால், அது உண்மையல்ல என்றனர் போராட்டக்காரர்கள். இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர்களில் முக்கியமானவர்கள் பேராசிரியர் லீ ஜியோபோ, அவரது சக தோழர்களான டீஜியான், சூ ஜி டியோ, ஜியோ டின் உட்பட பலர் ஜீன் 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்கள். 

பேராசிரியர் லீ லியோபோ, சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள பெரிய நகரான ஜில்லின் அருகேயுள்ள சாங்குசன் என்ற பகுதியில் 1955 டிசம்பர் 28-ஆம் தேதி லியூ லிங்க்கு என்பவரின் மகனாக பிறந்தவர். எம்.ஏ., பி.எச்டி முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவரது அப்பா கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்ததால் இவருக்கும் கம்யூனிஸ்ட்களைப் பற்றி அறிந்து வந்தார்; அரசியல் தொடர்பும் இருந்தது. அதேநேரத்தில் ஆட்சியாளர்கள் செய்யும் அநியாயங்களையும் கண்டுவந்தார்.

தனது நாடான சீனாவின் அரசாங்கத்தால் நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து கடுமையாக குரல் கொடுக்க துவங்கினார் லீ ஜியோபோ. அதில் ஒரு போராட்டம் தான் 1989 ஜீன் மாத போராட்டம். மிக கொடூரமாக இந்த போராட்டத்தை அடக்கிய சீன அரசு, இந்த போராட்டத்தை நடத்தியவர் என பேராசிரியர் லீ ஜியோபோவை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்த, 22 மாதங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கியது நீதித்துறை. தண்டனை முடிந்து வெளியே வந்தவர், நார்வே மற்றும் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்று வந்தவர், மிக தீவிரமாக மனித உரிமை செயல்பாட்டில் இறங்கினார்; எழுதினார். இது சீனாவுக்கு அச்சுறுத்தலாகவே இருந்துவந்தது. 1995 மே 18-ஆம் தேதி, 1989 ஜீன் மாத போராட்டத்தில் கலந்துக்கொண்டு உயிர் விட்ட மாவீரர்களுக்காக 6-ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி நடத்த முயன்றபோது, மீண்டும் கைது செய்யப்பட்டார். மூன்றாண்டுகள் சித்ரவதைகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டார். அங்கு தான் 1996-ல் தனது வாழ்க்கை துணைவியாக லீ ஜியோவை ஏற்றுக்கொண்டார். எழுத்தாளர், புகைப்பட நிபுணர், கவிஞர் என வாழ்ந்த அவரை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது திருமணத்துக்கு பின்பும் குடைச்சல் தந்தது சீன அரசாங்கம். தண்டனை முடிந்து 1999 அக்டோபர் மாதம் வெளியே வந்து மீண்டும் தீவிரமாக செயல்பட துவங்கினார். நாட்டில் எங்கு போராட்டம் நடைபெற்றாலும் லீயை கைது செய்து வீட்டு சிறையில் வைப்பதை வாடிக்கையாக வைத்திருந்தது அரசாங்கம். 

அதேநேரத்தில், 2003-ல் முதல்முறையும், அதற்கடுத்த முறையென இரண்டு முறை சீன எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2008-ல் சார்ட்டர் 08 என்கிற அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், மனித உரிமைகளை மதிக்காத சீனாவில் ஆட்சியாளர்களின் சர்வாதரிகாரம் ஒழியவேண்டும், மக்களாட்சி வரவேண்டும், அதிகாரங்களை பரவலாக்க வேண்டும், சுதந்திரமான நீதித்துறை வேண்டும், சமய சுதந்திரம், கருத்துக்கூறும் உரிமை வேண்டும் என 19 கோரிக்கைகளை வைத்திருந்ததே அந்த அறிக்கையின் முக்கிய சாரம். இதில் சீனாவின் முக்கிய பிரமுர்கள் 300 பேரை ஒருங்கிணைத்து அரசுக்கு எதிரான அந்த அறிக்கையில் கையெழுத்திட வைத்திருந்தார். இதனால் வெகுண்டெழுந்த சீனா, அவரை தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்து 11 வருட தண்டனையை வழங்கியது. இது அநியாயம் என உலகின் பல நாடுகள் கண்டித்தன, சீனா அதுப்பற்றி கண்டுக்கொள்ளவில்லை.ஜனநாயக சீனா என்கிற இதழை நடத்தி, ‘நாட்டில் ஜனநாயகம் வேண்டும்’ என்கிற கருத்தை முன்வைத்து வந்தார் லீ. அவரது ஆதரவாளர்களால் சீனாவின் மண்டேலா என புகழப்பட்டவர் 800-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் மனித உரிமைகள் சம்மந்தமாக எழுதினார். லீயின் மனித உரிமைப்பணிகளை ஆராய்ந்து, 2010-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கியது நோபல் பரிசு கமிட்டி. அந்த பரிசை வாங்க லீ ஜியோபோ, தனது துணைவியாரை அனுப்ப முயன்றார். சீனா அரசு அதற்கும் சம்மதிக்கவில்லை. நோபல் பரிசு கமிட்டியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நோபல் பரிசு கமிட்டி, முதல்முறையாக மேடையில் நாற்காலி வைத்து அதில் லீ யின் புகைப்படத்தை வைத்து அதற்கு பரிசை சூட்டி சீனாவின் ஜனநாயக முகத்திரையை கிழித்தது. 

லீ, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார் என தகவல்கள் வெளியே வந்தன. அதை சீனாவின் சிறை நிர்வாகம் உறுதி செய்யவில்லை. மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்யுங்கள் என பல நாடுகளும் கோரிக்கை விடுத்தன. என் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள் என முகத்தில் அடித்தாற்போல் பதில் சொன்னது சீன அரசாங்கம். கடந்த 2017-ல் கல்லீரல் புற்றுநோய் முற்றிய நிலையில், 2017 ஜீன் 16-ஆம் தேதி மருத்துவ விடுப்பில் சிறையில் இருந்து வெளியே வந்தார் லீ. செங்காயில் உள்ள சீனா மருத்துவக்கல்லூரி பல்கலைகழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புற்றுநோய் முற்றிவிட்டது இவரை காப்பாற்ற வேண்டுமானால் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவேண்டும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள் மருத்துவர்கள். அவருக்காக பல மனித உரிமை அமைப்புகள் சீன அரசின் கதவை தட்டின; அரசாங்கம் ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியில் ஜீலை 13-ஆம் தேதி தனது 61-ஆவது வயதில் உயிரிழந்தார் லீ ஜியோபோ. இறக்கும்போது தனது அருகில் இருந்த மனைவியிடம் நலமுடன் வாழுங்கள் என்றுள்ளார்.நோபால் பரிசு கமிட்டி, ஜியோ போ மரணத்துக்கு சீனா அரசு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என பகிரங்கமாக அறிக்கை மூலம் அறிவித்துள்ளது. ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலோ மெர்கல், சிறந்த மனித உரிமைப்போராளி என புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், லீ குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு பதிலடியாக சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங், ஜியோவின் மரணத்தை விமர்சிக்கிறேன் என்கிற பெயரில், சீனாவின் நீதித்துறை இறையான்மையில் பிறர் குறுக்கிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிந்தனையாளர் என அவருக்கு வழங்கப்படும் விருதுகள் நோக்கத்துக்கு எதிரானவை என கோபத்தைக் காட்டினார். இறந்த லீயின் உடலையாவது அவரது மனைவியிடம் தருவார்கள் என உலக நாடுகள் எதிர்பார்த்தது. ஆனால், சிலருக்கு மட்டும் அஞ்சலி செலுத்த அனுமதித்த சீனா அரசாங்கம், அவரது உடலை எங்கே அடக்கம் செய்தது என்பதை இதுவரை அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கவில்லை. அவரது மனைவியை மக்களின் பார்வையில் இருந்து மறைத்து வைத்துள்ளார்கள் சீனாவின் ஆட்சியாளர்கள். 

வாழும்போது ஒரு போராளியை கண்டு பயந்த சீனாவின் ஆட்சியாளர்கள், அவர் இறந்தபின்பும் அவரது உடலை கண்டு அஞ்சினார்கள் என்பதே புரட்சி தேசத்தில் அந்த புரட்சியாளரின் ஒப்பற்ற போராட்டங்களின் வெற்றி!

- ராஜ்ப்ரியன்
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :