Add1
logo
திரிபுரா மாநிலத்தில் பத்திரிக்கையாளர் கடத்தி கொலை - ராகுல் காந்தி கண்டனம் || ரூ.50 லட்சம் போதைப்பொருட்களுடன் 2 நைஜீரியர்கள் கைது || தனியார் முதலீட்டில் பஸ் நிலையம் அமைக்கும் முடிவுக்கு: ராமதாஸ் எதிர்ப்பு || திருவேற்காட்டில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு || திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு || மின் வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை || ஆண்டிபட்டியில் வேன் மோதி 2 பேர் பலி || பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வேண்டும்: ஜவாஹிருல்லா || சென்னை ஏர்போர்ட்டில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல் || மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4 ஆக பதிவு || தமிழகத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் கைது || கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த வாகன ஓட்டுனர்கள் போராட்டம் || தமிழ் படைப்பாளிகள் அங்கீகரிக்கப்படுவதில்லை: கி.ரா விழாவில் எழுத்தாளர்கள் ஆவேசம் ||
தமிழகம்
ரூ.50 லட்சம் போதைப்பொருட்களுடன் 2 நைஜீரியர்கள் கைது
 ................................................................
தனியார் முதலீட்டில் பஸ் நிலையம் அமைக்கும் முடிவுக்கு: ராமதாஸ் எதிர்ப்பு
 ................................................................
மின் வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
 ................................................................
ஆண்டிபட்டியில் வேன் மோதி 2 பேர் பலி
 ................................................................
பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வேண்டும்: ஜவாஹிருல்லா
 ................................................................
சென்னை ஏர்போர்ட்டில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல்
 ................................................................
தமிழகத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் கைது
 ................................................................
கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த வாகன ஓட்டுனர்கள் போராட்டம்
 ................................................................
தமிழ் படைப்பாளிகள் அங்கீகரிக்கப்படுவதில்லை: கி.ரா விழாவில் எழுத்தாளர்கள் ஆவேசம்
 ................................................................
காங்கிரஸ் போராட்டம்(படங்கள்)
 ................................................................
நடிகர் ஜெய் குடிபோதையில் அதிவேமகமாக காரை ஓட்டி விபத்து - ஓட்டுநர் உரிமம் ரத்து?
 ................................................................
நாளை ஜோலார்பேட்டை பேரறிவாளன் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் சந்திப்பு என தகவல்
 ................................................................
நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அலுவலகத்துக்கு சீல்
 ................................................................
ஐம்பொன் சிலைகளை கடத்த முயன்ற 7 பேர் கைது!
 ................................................................
சென்னையில் தனியார் மனமகிழ் மன்றத்தில் தீ விபத்து!
 ................................................................
வங்கி தேர்வில் தமிழக மாணவர்கள் புறக்கணிக்கப் படுவதாக குற்றச்சாட்டு!
 ................................................................
முருகன், நளினி உட்பட மற்றவர்களுக்கு பரோல் வழங்க வேண்டும்: சீமான் கோரிக்கை
 ................................................................
4 மாதங்களில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா!
 ................................................................
இம்மாத இறுதிக்குள் நீட் பயிற்சி மையங்கள் –செங்கோட்டையன் அறிவிப்பு!
 ................................................................
கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் எம்.பி.பாட்டீலுக்கு கண்டனம் - பி.ஆர்.பாண்டியன்
 ................................................................
கமலஹாசனை சந்திக்க சென்னை வந்தார் அரவிந்த் கேஜ்ரிவால்!
 ................................................................
செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி சோதனை!
 ................................................................
அமைச்சர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலி!
 ................................................................
தினகரன் இந்து மதத்தை கலங்கப்படுத்துகிறாரா? ஜெயக்குமார் கேள்வி
 ................................................................
லஞ்சம் கொடுக்க மறுத்த அப்பாவிகளுக்கு அடி உதை; அரசு மருத்துவமனை அவலம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (10:53 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (10:54 IST)


அரசுப் பேருந்துகளை எமன் வாகனங்களாகவே பார்க்க வேண்டியிருக்கிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் கடந்த இரு வாரங்களில் தமிழ்நாடு அரசு பேருந்துகள் எதிர்கொண்ட 8 விபத்துக்களில் 29 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இவர்கள் தவிர மேலும் 78 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதற்கு பினாமி அரசின் அலட்சியமும், பொறுப்பின்மையுமே காரணமாகும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திருப்பூரிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு தஞ்சாவூரை அடுத்த வல்லம் அருகில் சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்த கம்பி ஏற்றப்பட்டிருந்த சரக்குந்து மீது பயங்கரமாக மோதியதில் பேருந்தின் ஓட்டுனர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.. சென்னையிலிருந்து கடந்த சனிக்கிழமை திருச்சி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து கடலூர் மாவட்டம் ஆவட்டி என்ற இடத்தில் மணல் சரக்குந்து மீது மோதியதில் பேருந்தில் பயணித்தவர்களில்  நால்வர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர். கும்பகோணம் அருகில் அரசுப் பேருந்தும், சிறிய  சரக்குந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 25 பயணிகள் காயமடைந்தனர்.

இந்த சாலை விபத்துக்கள் அனைத்தும் ஜூன் மாத இறுதியிலிருந்து ஜூலை 15-ஆம் தேதி வரையிலான இரு வாரங்களில் நடந்தவை ஆகும். இந்த விபத்துக்கள் அனைத்திலும் உயிரிழந்தவர்கள் பேருந்துகளில் பயணம் செய்தவர்கள் மட்டுமே. இந்த விபத்துகளுக்கான காரணங்களை ஆராயும் போது, முழுக்க முழுக்க போக்குவரத்துக் கழகங்களின் அலட்சியம் தான் காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது.  கடலூர் மாவட்டம் ஆவட்டி கிராமத்தில் அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானதற்கு காரணம் அதன் ஓட்டுனர் திடீரென உறங்கி விட்டது தான். அதேநேரத்தில் இதற்காக அவரைக் குறைக் கூறவும் முடியாது. அந்த ஓட்டுனர் ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை  சென்னையிலிருந்து திருச்சிக்கு ஓய்வின்றி பேருந்தை இயக்கும்படி கட்டாயப்படுத்தப் பட்டிருக்கிறார். கடந்த வாரமும் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஓய்வின்றி பேருந்தை ஓட்டியதால் ஏற்பட்ட சோர்வில் கண்ணயர்ந்து விட்டார். அதன்விளைவாக பேருந்தின் நடத்துனர் உட்பட நால்வர் உயிரிழந்து விட்டனர்.

கடந்த 2016-17 ஆம் ஆண்டில் அரசுப் பேருந்துகள் 1209 விபத்துக்களை சந்தித்துள்ளன. இவற்றில் 1,373 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டில் அரசுப் பேருந்துகள் எதிர்கொண்ட விபத்துக்கள் மற்றும்  உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதுவரை மட்டும் 20 விழுக்காட்டுக்கும் கூடுதலாக அதிகரித்துள்ளன. அரசுப் பேருந்துகள் எதிர்கொள்ளும் பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாக அமைந்தவை பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாதது, பிரேக் சரியாக பிடிக்காதது, ஓட்டுனர்கள் ஓய்வின்றி  தொடர்ச்சியாக பேருந்துகளை இயக்கும்படி கட்டாயப்படுத்தப்படுவது போன்றவை தான் என்று ஆய்வில்  தெரியவந்துள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது. செங்கல்பட்டை அடுத்த மேல்மருவத்தூரிலும்,  ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த எல்லிஸ்பேட்டையில் இரு அரசுப் பேருந்துகள் ஓடும்போதே தீப்பிடித்து எரிந்துள்ளன. இதற்குக் காரணம் பேருந்துகளில் இருந்து எண்ணெயும், எரிபொருளும் கசிவது தடுக்கப்படாதது தான் என்று அரசுப் போக்குவரத்துக்கழகப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர்களுக்கு போதிய ஓய்வும், நல்ல மனநிலையும் அவசியமாகும். ஆனால், இரவு நேரங்களில் ஓட்டுனர்கள் ஓய்வெடுப்பதற்காகவும், உறங்குவதற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் அதற்குத் தகுதியற்றவை ஆகும். இதனால், ஓய்வெடுக்க முடியாமலும், உறங்க முடியாமலும் அடுத்து பேருந்து ஓட்டும் போது ஓட்டுனர்கள் உறங்கி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மற்றொருபக்கம்  பேருந்துகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளன. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இயக்கப்படும் 22,500 பேருந்துகளில் 7000 பேருந்துகள் மட்டுமே இயக்குவதற்கு தகுதியானவை. மீதமுள்ள பேருந்துகள் அனைத்தும் 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோமீட்டருக்கும்  மேல் ஓடி காலாவதியானவை ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 20 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 7000 பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டிருக்கின்றன. பினாமி ஆட்சியில் தமிழக போக்குவரத்துத் துறை செயல்படும் விதம் இந்த லட்சனத்தில் தான் இருக்கிறது.

முன்பெல்லாம் அரசுப் பேருந்துகளில் ஏறினால் கவலையின்றி அயர்ந்து உறங்கலாம், நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று விடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்ற கவலையுடனேயே பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் அரசுப் பேருந்துகளை எமன் வாகனங்களாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். இதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காணப்படும் ஊழலை ஒழித்து, பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : R,Nadarajah switzerland Country : Switzerland Date :7/18/2017 4:00:20 AM
உண்மையை சொல்லுங்கள் நீங்கள் ஒருகாலத்தில் ஓடின நல்ல பஸ்களை எல்லாம் கொளுத்தினீர்கள் உங்கள் ஊர்வலங்கள் மாநாடுகள் செய்யும் பொழுது அதனால் இப்ப ஓடும் எல்லாமே நீங்கள் கூறும் அதே பஸ்கள் இதில் முழு பொறுப்பு உங்களுக்கே