Add1
logo
நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (7:24 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (7:54 IST)ஜனாதிபதி தேர்தல்: பலத்த பாதுகாப்புகளுடன்
இன்று வாக்குப்பதிவு

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று ஜூலை 17-ந் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணியும், எதிர்க்கட்சிகள் அணியும் வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டன.

இறுதியில் இந்த தேர்தலில் சற்றும் எதிர்பாராத வகையில், பீகார் மாநில கவர்னராக இருந்து வந்த ராம்நாத் கோவிந்த் (வயது 71) பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தலித் இனத்தலைவர் ஆவார்.

இவரை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான 17 எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீராகுமார் (72) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தலித் இனத்தலைவர் ஆவார்.

பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா மற்றும் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள் முன்னிலையில் தனது வேட்பு மனுவை கடந்த 23-ந் தேதி பாராளுமன்ற மக்களவை தலைமைச்செயலாளர் அனுப் மிஷ்ராவிடம் தாக்கல் செய்தார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீராகுமார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் தனது வேட்புமனுவை சென்ற 28-ந் தேதி தாக்கல் செய்தார்.

இந்த தேர்தலில் 776 தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், 4,120 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். (எம்.பி.க் களில் 543 பேர் மக்களவை உறுப்பினர்கள், 233 பேர் டெல்லி மேல்-சபை உறுப்பினர்கள்).

ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 ஆகும். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டின் மதிப்பு, அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும்.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. டெல்லியில் பாராளுமன்ற வளாகத்திலும், தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள சட்டசபை வளாகத்திலும், இதே போன்று பிற மாநிலங்களில் உள்ள சட்டசபை வளாகங்களிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்தம் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டசபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமிழக எம்.எல்.ஏ.க்கள் வாக்குபதிக்கிறார்கள்.

ஜனாதிபதி தேர்தலையொட்டி பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் வாக்குரிமை பெற்றுள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் பாராளுமன்றத்துக்கு இன்று வருவதாலும், மழைக் கால கூட்டத்தொடர் தொடங்குவதாலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பெட்டிகளும், வாக்குச்சீட்டுகளும், பிற சாதனங்களும் போய்ச்சேர்ந்து விட்டன.

இன்று காலை 10 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிகிறது. ஓட்டுப்பதிவை தேர்தல் கமிஷனின் 33 பார்வையாளர்கள் மேற்பார்வையிடுகிறார்கள்.

எம்.பி.க்களுக்கான வாக்குச்சீட்டுகள் பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுச்சீட்டுகள் இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும்.

வாக்காளர்களான எம்.பி.க் களும், எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுச்சீட்டில் இடம்பெற்றிருக்கிற 2 வேட்பாளர்களில் 1, 2 என்று தங்கள் முதல் தேர்வையும், இரண்டாவது தேர்வையும் வரிசைப்படுத்தி எழுதி ஓட்டுப்போட வேண்டும்.

இதற்கான பிரத்யேக பேனாவை வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் வழங்குகிறது. ஓட்டுப்போட செல்வதற்கு முன் வாக்குச்சாவடியில் எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்களின் சொந்த பேனாக்களை அங்கிருக்கிற அலுவலர் வாங்கிக்கொண்டு விடுவார். அவர்கள் தேர்தல் கமிஷன் வழங்குகிற தொடர் எண்களைக் கொண்ட பேனாவை பெற்றுச் சென்று, ஓட்டுப்போட்டு விட்டு வந்தபின்னர், அவர்களது பேனாக்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விடும்.

தேர்தல் கமிஷன் வழங்குகிற பிரத்யேக பேனாவில் வைலட் நிற மை பயன்படுத்தப்படுகிறது. இந்த பேனாக்களை, மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னி லிமிடெட்டில் இருந்து தேர்தல் கமிஷன் வாங்கி உள்ளது. இந்த நிறுவனம்தான் வாக்காளர்கள் கை விரலில் வைக்கிற அழியாத மையை தேர்தல் கமிஷனுக்கு வினியோகிக்கிறது.

பாராளுமன்ற வளாக வாக்குச்சாவடியில் வைக்கப்படுகிற ஓட்டுப்பெட்டிகள், வாக்குப்பதிவு முடிந்தவுடன் ‘சீல்’ வைக்கப்பட்டு அங்குள்ள அறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் வைக்கப்படும்.

இதே போன்று மாநில சட்டசபைகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படுகிற வாக்குப்பெட்டிகளும் ஓட்டுப்பதிவு முடிந்து ‘சீல்’ வைத்து டெல்லிக்கு அனுப்பிவைக்கப்படும்.

வருகிற 20-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு என்று தெரிவித்துள்ளனர். புதிய ஜனாதிபதி 25-ந் தேதி பதவி ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :