Add1
logo
17 ஆண்டுக்கு பின்னர் உலக அழகியாக இந்திய பெண் தேர்வு || இன்றைய(18.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு || கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்! கி.வீரமணி || அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது வருமான வரித்துறை: திருநாவுக்கரசு || ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம் || பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்) || வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி. || ஆளுநர் ஆய்வு செய்யவில்லை: ஈபிஎஸ் புதுமையான விளக்கம் || கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி || தவறு செய்ததால் சோதனை நடக்கிறது: ஈபிஎஸ் || தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன் || நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (6:36 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (6:36 IST)


அமர்நாத் பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல், ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள்.

சிக்கலான மலைப்பாதைகளை கடந்து சிவலிங்கத்தை தரிசனம் செய்ய லட்சக் கணக்கான பக்தர்கள் பஹால்காம் பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு செல்வர். 62-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த ஆண்டின் யாத்திரை கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது.

இந்த யாத்திரை 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி ரக்‌ஷா பந்தன் தினத்தன்று நிறைவடையும். பல்டல் மற்றும் பாஹல்காம் முகாம்களில் இருந்து மலைப்பாதை வழியாக தினந்தோறும் குழுக்களாக செல்லும் யாத்ரீகர்கள் அமர்நாத் ஆலயத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில், யாத்ரீகர்களில் சிலர் இன்று ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். ரம்பான் மாவட்ட எல்லைக்குட்பட்ட சாலையில் ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் உள்ள பெரிய பள்ளத்துக்குள் உருண்டு கவிழ்ந்தது.

பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி அதில் பயணம் செய்த 16 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 19 பேர் அபாய நிலையிலும், மேலும் 8 பயங்கர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவில் நிர்வாகம் சார்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மூன்று லட்சமும், படுகாயம் அடைந்தோருக்கு ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :