Add1
logo
“அடித்தே கொன்று விட்டது போலீஸ்..” -இருவரின் சாவுக்கு நியாயம் கேட்கும் கிராமம்! || என் கேள்விக்கு ஸ்டாலினை பதிலளிக்க சொல்லுங்கள் பார்ப்போம்: சைதை துரைசாமி ஆவேசம் || தமிழகம் வெகுவிரைவில் பாலைவனமாகி விடும்! அன்புமணி || ஜெ. மரணம் தொடர்பான விசாரணை: டாக்டர் சரவணன் ஆஜராகி விளக்கம் || கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் போராட்டம் || நிச்சயம் சந்திப்போம் தேர்தலில்... தினகரன் ஆதரவாளர்கள் போஸ்டரால் பரபரப்பு || போயஸ் இல்லத்திற்குள் டிடிவி ஆதரவாளர்கள் நுழைய முயற்சி! போலீசாருடன் வாக்குவாதம்! || இரட்டை இலை சின்னம் யாருக்கு? இன்று தீர்ப்பு! || அரசு போக்குவரத்துத் துறையை மீட்குமாறு விஜயகாந்த் வலியுறுத்தல் || பைனான்சியர் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை அமைப்பு! || ஆந்திராவுக்கு செல்லும் கரும்பு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இன்றைய(21.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! ||
சிறப்பு செய்திகள்
யார் இந்த பைனான்சியர் அன்புச்செழியன்...
 ................................................................
முட்டைக்கும் வந்துருச்சா ஆபத்து?
 ................................................................
மூன்று பெண்களின் மகனான விவேக்கின் கதை!
 ................................................................
பூனைகளுக்குப் பதவி தரும் ஆங்கிலேய அரசு...
 ................................................................
ஜெயலலிதாவை ஒன்னும் தெரியாத குழந்தையாக்கும் மீடியா!
 ................................................................
சிசுக்களின் உயிர்! தனியார் மருத்துவமனைகளின் தரம்!
 ................................................................
இந்தியாவின் உலக அழகிகள்!
 ................................................................
கலைஞரின் சரியான முடிவும், தவறான முடிவும்!
 ................................................................
சிதைகிறது மோடியின் இமேஜும், பில்டப்பும்!
 ................................................................
மெர்சலைத் தொடர்ந்து பத்மாவதி?
 ................................................................
மைசூர்பாகிற்கும் போட்டி போடும் கர்நாடகா!!!
 ................................................................
தீரன் அதிகாரம் ஒன்று...
 ................................................................
அரசியல் பின்னணி, சதி, வன்மம் இருக்கிறது:
 ................................................................
ஜெ. வீட்டில் ரெய்டு... செம்மலை கருத்து
 ................................................................
இவர்தான் நிஜ 'அறம்' நயன்தாரா?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 16, ஜூலை 2017 (23:20 IST)
மாற்றம் செய்த நாள் :16, ஜூலை 2017 (23:23 IST)


அரசியலில் காமராஜர் ஒரு அதிசயம்!பெருந்தலைவரின் பிறந்த நாளை நாடே கொண்டாடி மகிழ்கிறது. குறிப்பாக, பள்ளிகளும், மாணவ சமுதாயமும் அவரை நன்றிப் பெருக்குடன் போற்றுகின்றன. இன்றைய அரசியலும் அரசியல்வாதிகளும் காமராஜருக்கு முன் வெறும் தூசி. அத்தகைய மேன்மையான அரசியலில் அவர் தன்னை ஈடுபடுத்தி வந்தார். அதை விரிவாகப் பார்ப்போம்.

விருதுநகரில் ஒரு சாதரண குடும்பத்தில் பிறந்து, தமிழகத்தின் முதலமைச்சராகி, கல்விக்கண் திறந்தவர் என்று பெயரெடுத்த காமராஜருக்கு இளமைக் காலத்திலேயே அரசியல் ஈடுபாடு வந்துவிட்டது. படிக்காத மேதையான அவர் ஆண்ட காலமே தமிழகத்தின் பொற்காலம் என, இன்றளவிலும் பேசப்பட்டு வருகிறது. அவரது அரசியல் பணி என்பது அனைவரும் வியந்து போற்றக் கூடியது.

5 வயதில் திண்ணைப் பள்ளியில் காமராஜர் சேர்க்கப்பட்டார். அவரது 6-வது வயதில், 1909 ஆம் ஆண்டு காமராஜரின் தந்தை குமாரசாமி நாடார் காலமாகிவிட்டார். தந்தையை இழந்த காமராஜர், சில ஆண்டுகளே பள்ளிக்குச் சென்றார். பின்னர் தனது 12 – வது வயதில் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை உருவாகியது. இளம் வயதிலேயே நாட்டுப்பற்று கொண்ட காமராஜர், செய்தித் தாள்களைத் தினமும் படித்து அரசியல் குறித்து தெரிந்து கொண்டார். அப்போதே, அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டார். தலைவர்களின் உரைகளைக் கேட்பதிலும் ஆர்வம் காட்டினார்.

சொந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தராதவர்!

காமராஜர் பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதாக, அவரது தாயார் சிவகாமி கவலைப்பட்டார். விருதுநகரிலிருந்து வேறு ஊருக்குச் சென்றால், மகனுக்கு பொறுப்பு வந்துவிடும் என்று நினைத்தார். திருவனந்தபுரத்தில் மரக்கடை வியாபாரம் செய்யும் தாய்மாமனார் காசிநாடாரின் கடைக்கு அனுப்பினால் காமராஜரின் கவனம் தொழில் மீது பதியும் என்ற நோக்கத்தோடு திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தார். அப்போது, கேரளாவில் சாதிப் போராட்டங்கள் நடந்தன. இனவேற்றுமைக் கொடுமைகள் நீங்க ஈ.வெ.ரா. பெரியார் வைக்கம் போராட்டத்தை நடத்தினார். காமராஜர் அந்தப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கேரளாவில் நடந்த எல்லா சுதந்திரப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு நாட்டு விடுதலைக்காகப் போராடினார். இதனால் காமராஜரின் கவனம் திசை திரும்பியது. தாய் மாமனார் மனம் வருந்தினார். தொழிலில் கவனம் இல்லாமல் காமராஜ் இருக்கிறாரே என்ற கவலையோடு, மீண்டும் காமராஜரை விருதுபட்டிக்கு அனுப்பி வைத்தார்.திருமணம் செய்து வைத்தால் குடும்பத்தைக்கவனிப்பார்; தொழிலிலும் அக்கறையுடன் இருப்பார்; மகனுக்கு பொறுப்பு உண்டாகும் என்று எண்ணினார் சிவகாமி அம்மாள். திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்.

இதனை அறிந்த காமராஜர் தனக்கு திருமணம் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். திருமணம் வேண்டாம் என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருந்ததால், தாயார் சிவகாமி அம்மாள் திருமணம் பற்றி பிறகு வற்புறுத்தாமல் விட்டுவிட்டார்.

அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபாடு!

1920-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் மற்றும் சட்ட மறுப்பு இயக்கத்தில் காமராஜர் தீவிரமாக கலந்து கொண்டார். 1923 -ஆம் ஆண்டு நாகபுரி கொடிப்போராட்டத்தில் பங்கு கொண்டார்.

அதே ஆண்டு மதுரையில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்திலும் கலந்து கொண்டார். பின்னர் 1925-ஆம் ஆண்டு கடலூரிலிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் பணிக்காக 1926-ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி – சீனிவாச அய்யங்கார் ஆகியோருடன் பணிபுரிந்தார். சென்னையில் 1927 -ஆம் ஆண்டு கர்னல் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தை நடத்த அண்ணல் காந்தியிடம் அனுமதிபெற்றார். போராட்டம் நடைபெறுவதற்குள் அரசாங்கமே நீல் சிலையை அகற்றிவிட்டது. 1930- ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டார். பின்னர் அலிபூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1931- ஆம் ஆண்டு காந்தி – இர்வின் ஒப்பந்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.இராமநாதபுரத்திலிருந்து சென்னை மாகாணக் காங்கிரஸ் செயற்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1933-ஆம் ஆண்டு காமராஜர் மீது விருதுநகர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் வெடி குண்டு வழக்கு பொய்யாக புனையப்பட்டது.. இந்த வழக்கில் காமராஜர் சிறைக்கு அனுப்பப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார். காமராஜரின் உழைப்பால் 1934 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், பெருவாரியான வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் வென்றது. 1936- ஆம் ஆண்டு காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டித் தேர்தலில் சத்தியமூர்த்தி தலைவராகவும், காமராஜர் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1937 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1940-ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். 1941-ஆம் ஆண்டு யுத்த நிதிக்கு எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ததால் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

உழைப்பால் உயர்ந்தார்!

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும், விருதுநகர் நகராட்சியின் தலைவராகத் தேரந்தெடுக்கப்பட்டார்.

சிறையிலிருக்கும் போதே நகர் மன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் நகர் மன்ற கூட்டங்களில் காமராஜர் கலந்து கொள்ளவில்லை. 1942-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் காமராஜ் விடுதலை ஆனார். 1942- ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி நகர் மன்றக்கூட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர், கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காமராஜர்- “என்னை நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுத்தது குறித்து மகிழ்ச்சி, எனக்கு பல முக்கிய பணிகள் இருப்பதால் நான் நகர் மன்றத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்” என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார். 1942 ஆகஸ்டு மாதம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டார். அமராவதி சிறைச்சாலையில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.பின்னர் அவர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். 1945-இல் காமராஜர் விடுதலை செய்யப்பட்டார். 1946 மே மாதம் 16-ஆம் நாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் அதே ஆண்டு சென்னை சட்ட மன்றத்திற்கும் காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம்நாள் இந்தியா விடுதலை பெற்றது. பண்டித நேருவின் தலைமையில் இடைக்கால அரசு உருவானது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர். ஆனார். 1948-ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆனார். 1950-ஆம் ஆண்டு நான்காவது முறையாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆனார். 1954 ஏப்ரல் 13-ஆம் நாள் சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். அவரது ஆட்சிக்காலத்தில்தான் கல்விக்கூடங்கள் அதிகமாகத் திறக்கப்பட்டன. இலவச சீருடை, மதிய உணவுத் திட்டம் போன்ற மகத்தான திட்டங்களை உருவாக்கி, அதனைச் செம்மையாகச் செயல்படுத்தினார்.

பதவியைத் தூக்கி எறிந்த துணிச்சல்!

காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வகித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியில் சில பிரச்சனைகள் உருவாகின.எனவே காமராஜர் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மூத்த தலைவர்களும் நீண்ட நாட்கள் பதவி வகிப்பவர்களும், ஆட்சிப் பணியை விட்டு விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற திட்டத்தை பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் கூறினார். இந்த திட்டத்தைப் பிரதமர் ஜவஹர்லால் நேரு வரவேற்று ஆதரித்தார்; மிகவும் பாராட்டினார். உலகெங்கிலும் பிரசுரமாகும் நாளிதழ்கள் பலவும் பெருந்தலைவர் காமராஜரின் இந்த திட்டத்தைப் பாராட்டின. மூத்த தலைவர்கள் பதவி விலகும் திட்டத்தை “காமராஜர் திட்டம்” என்றே அழைத்தார்கள். இதனை ‘கே பிளான்’ என்று கூறினார்கள். தான் கொண்டுவந்த திட்டத்தைச் செயல்படுத்தும் விதத்தில், 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். காமராஜரின் இந்த துணிச்சலான செயலைக் கண்டு உலகமே பாராட்டியது.

கிங் மேக்கர் ஆன காலா காந்தி!

1964- ஆம் ஆண்டு புவனேஸ்வரத்தில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு பின்பு காமராஜரை ‘காலாகாந்தி’ (கருப்புக் காந்தி) என்றே அழைத்தார்கள். காந்திஜியின் மறு அவதாரமாக கருதினார்கள். 1965-ஆம் ஆண்டு பிரதமர் பதிவியில் இருக்கும்போதே ஜவஹர்லால் நேரு காலமானார். அவருக்குப் பிறகு யாரைப் பிரதமராக்குவது என்று பல கேள்விகள் எழுந்தன. தனது அரசியல் ஞானத்தால் போட்டியின்றி பிரதமரை தேர்ந்தெடுக்கும் வகையில் லால்பகதூர் சாஸ்திரியை பாரதப் பிரதமராக தேர்ந்தெடுக்க வழி செய்தார். அதனால் இவரை ராஜதந்திரி என்று அனைவரும் புகழ்ந்தார்கள். ரஷியாவிற்கு சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அங்கு காலமானதால் மீண்டும் பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. அந்த நிலையில் பிரதமர் இந்திரா காந்திக்கும், மொரார்ஜிதேசாய்க்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கப் பெரும் முயற்சி எடுத்தார் காமராஜர். போட்டியிலிருந்து விலக மொரார்ஜிதேசாய் மறுத்துவிட்டதால், இந்திரா காந்தியைப் பிரதமராக்க, கடுமையாக உழைத்தார். இந்திராகாந்தியை பிரதமராக்கிக் காட்டினார்.இதனால் காமராஜரை கிங் மேக்கர் (மன்னர்களை உருவாக்குபவர்) என்று அழைத்தார்கள்.

தோல்விக்குத் தோல்வி தந்தவர்!

1967-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விருது நகர் தொகுதியில் போட்டியிட்டார். தென்மாவட்டங்களில் பொது தேர்தலில் நின்ற மற்ற வேட்பாளர்களுக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் காயம் அடைந்ததால் தேர்தலில் பிரச்சாரம் செய்ய இயலவில்லை. தேர்தலில் பெருந்தலைவர் காமராஜர் வெற்றிபெற இயலாத நிலை உருவாகியது. ஆனாலும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் தொகுதியில் நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டு அமோக வெற்றி அடைந்து எம்.பி. ஆனார்.1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி காந்தி பிறந்த நாளில் காமராஜர் இயற்கை எய்தினார். காங்கிரஸ் கட்சியில் ஒரு சாதாரண தொண்டராக இருந்து, கடும் உழைப்பால், அகில இந்திய காங்கிரஸின் தலைவரானர்.தமிழகத்தின் முதலமைச்சரும் ஆனார். உழைப்பு உயர்வைத் தரும் என்பதற்கு காமராஜர் சிறந்த உதாரணமாக திகழ்கிறார். எளிமையான அவரது வாழ்க்கை, இன்றைய தலைமுறையினருக்கு நல்லதொரு பாடம்.

-சி.என்.இராமகிருஷ்ணன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :