Add1
logo
நீட் தேர்வை எதிர்க்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் - செங்கோட்டையன் || விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன் || மாயாவதியின் ராஜினாமா கடிதம் ஏற்பு || மயிலையில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது || ஐகோர்ட் லிப்டில் சிக்கி 3 பேர் தவிப்பு || ஐ.பி.எல், நிதி முறைகேடு: ஷாருக்கான் உள்ளிட்ட 3 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் || சென்னையில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் || முரசொலி பவள விழாவிற்க்கு ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு || தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாக அமெரிக்கா குற்றச்சாட்டு || இந்திய குண்டு எறிதல் வீராங்கனை மன்பிரீத் கவுர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் இடைநீக்கம் || “கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது..” -தமிழிசை கிண்டல்! || இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா் மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலே பலி || நடிகை சுஷ்மிதா சென் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு ||
தமிழகம்
நீட் தேர்வை எதிர்க்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் - செங்கோட்டையன்
 ................................................................
விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன்
 ................................................................
மயிலையில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது
 ................................................................
ஐகோர்ட் லிப்டில் சிக்கி 3 பேர் தவிப்பு
 ................................................................
சென்னையில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
 ................................................................
முரசொலி பவள விழாவிற்க்கு ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு
 ................................................................
இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா் மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலே பலி
 ................................................................
நடிகை சுஷ்மிதா சென் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
 ................................................................
தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களை தனியார் கல்லூரிகள் நிரப்பும் வழக்குஒத்திவைப்பு
 ................................................................
தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் மனிதன் நிலவில் தடம் பதித்த தினம்
 ................................................................
ராம்நாத் கோவிந்த்துக்கு ஸ்டாலின் வாழ்த்து!
 ................................................................
முசிறி எம்.எல்.ஏ. மருத்துவமனையில் அனுமதி!
 ................................................................
மகன்களுக்கு வீடுகட்ட வாங்கிய கடனை கட்டமுடியாததால் தாய் - தந்தை தற்கொலை!
 ................................................................
மனித சங்கிலியில் திராவிடர் கழகம் பங்கேற்கும்: கி.வீரமணி
 ................................................................
கடலூர் கிளை சிறைச்சாலையில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓட்டம்
 ................................................................
சினைமாட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை-பீதியில் கிராமங்கள்!
 ................................................................
முதல்வர் நிகழ்சிக்கு 10,000 மாணவர்ககளை அழைத்து வர உத்தரவு : தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
 ................................................................
சென்னை கோயம்பேட்டில் வரி செலுத்தாத 39 கடைகளுக்கு சீல் !
 ................................................................
கால்நடைத்துறை அமைச்சரை முற்றுகையிட்டு போராட்டம் - பரபரப்பு!
 ................................................................
சென்னையில் வருமானவரித்துறை சோதனை!
 ................................................................
குடி மீட்பு மையங்களை திறக்க கோரிக்கை
 ................................................................
போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: வைகோ
 ................................................................
மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ள - 54 ஆயிரம் கேள்வி, பதில்கள் அடங்கிய தொகுப்பு தயார்:செங்கோட்டையன்
 ................................................................
குட்காவுக்கு எதிரான புகாருக்கு வரவேற்பு: மது ஆலைகளையும் எதிர்க்கத் தயாரா? அன்புமணி
 ................................................................
கமலுக்கு ஆதரவாக dyfi சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! (படங்கள்)
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 16, ஜூலை 2017 (19:8 IST)
மாற்றம் செய்த நாள் :16, ஜூலை 2017 (19:8 IST)

அண்ணாமலை பல்கலையில் வேளாண்மை படிப்புகளுக்கு தரவரிசை பட்டில் வெளியீடு

 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்  வேளாண்மை படிப்புகளுக்கு  தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் வேளாண்மை, இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி), இளநிலை அறிவியல் தோட்டக்கலை படிப்புகளுக்கான பதிவுகள் இணையதளம் மூலம் கடந்த 08-05- 2017 முதல் 31-05- 2017 வரை பதிவு செய்யப்பட்டது. இதில் இளம் அறிவியல் வேளாண்மை  படிப்புக்கு 13 ஆயிரத்து754 விண்ணப்பங்களும், இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி) படிப்புக்கு 2 ஆயிரத்து 82 விண்ணப்பங்களும்,தோட்டக்கலை படிப்புக்கு 1102 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டது. அவற்றில் 322 இளம்அறிவியல் வேளாண்மை விண்ணப்பங்களும்,  52 இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி), 14 தோட்டக்கலை விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. 

இந்த படிப்புகளுக்கு படிப்புகளுக்கு சமவாய்ப்பு எண்கள் கடந்த 7ம் தேதி அன்று வழங்கப்பட்டது. இந்த படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி ஞாயிறன்று பல்கலைக்கழகத்தில் நடந்தது. வருகை தந்த அனைவரையும் மாணவர் சேர்க்கை ஆலோசகர் பேராசிரியர்  ராம்குமார் வரவேற்று பேசினார். இளம் அறிவியல் வேளாண்மை படிப்புக்கான தரவரிசை பட்டியலை துணைவேந்தர் முனைவர் செ. மணியன் வெளியிட்டார், இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி) படிப்புக்கான தரவரிசை  பட்டியலை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும், பல்கலைக்கழக ஆட்சிமன்றகுழு உறுப்பினருமான பாண்டியன் வெளியிட்டார். 

இளநிலை அறிவியல் தோட்டக்கலை படிப்புக்கான தரவரிசை பட்டியலை  பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர்  உமாமகேஸ்வரன் வெளியிட்டார். மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in. தங்களது தரவரிசையை தெரிந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும் இளநிலை பொறியியல் படிப்புக்கான சமவாய்ப்பு எண்ணை பல்கலைக்கழக பதிவாளர் ஆறுமுகமும், இளநிலை மீன்வள படிப்புக்கான சமவாய்ப்பு எண்ணை தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி இராமசந்திரசேகரனுன்,இளநிலை தொழில்முறை சிகிச்சை படிப்புக்கான சமவாய்ப்பு எண்ணை வேளாண்புல முதல்வர் ரவிச்சந்திரனுன், இளநிலை இயற்பியல் சிகிச்சை  படிப்புக்கான சமவாய்ப்பு எண்ணை  கல்வியியல் புல முதல்வர்  பாபுவும் வெளியிட்டனர். 

மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேல் நிலை  படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிப்படியும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடங்கள் தமிழக அரசின் விதிப்படி ஒதுக்கப்படும்.மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும். கலந்தாய்வு அட்டவணை மற்றும் கலந்தாய்வுக்கான அனுமதி கடிதத்தை தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு தனியாக கலந்தாய்வு கடிதம் அனுப்பப்படமாட்டாது.மேலும் உதவி மைய தொலைபேசி எண்களிலும் (04144-238348 மற்றும் 238349) தகவல்கள் பெறலாம் என்று துணைவேந்தர் மணியன் தெரிவித்தார். இதில் புல முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- காளிதாஸ்
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :