Add1
logo
நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் ||
சிறப்பு செய்திகள்
பேருந்து கட்டண உயர்வு, சாமானியனுக்கு சறுக்கல் - கதறும் தமிழகம்
 ................................................................
பெண்கள் சக்தியை புறக்கணிக்கிறதா திமுக?
 ................................................................
அனுமன் பாலம் கட்டுவதை நம்புவோம்!
 ................................................................
பாஜகவுக்கு ஆதரவான பிரகாஷ்காரத் தீர்மானம்?
 ................................................................
"கீழடி கதை" -சு.வெங்கடேசன்
 ................................................................
அவதூறு பரப்பக் கூடாது:
 ................................................................
42 பேர் கண்தானம், 35 பேர் உடல் உறுப்புதானம்!
 ................................................................
பஸ் கட்டண உயர்வா, கொள்ளையா?
 ................................................................
“இருக்கு; ஆனா இல்ல.. இருக்கு; அதுவே வேற மாதிரி இருக்கு!”
 ................................................................
விளிம்புநிலை மக்களும் இணைந்த விரிவான அணி திரட்டல் தேவை!
 ................................................................
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, ஜூலை 2017 (18:0 IST)
மாற்றம் செய்த நாள் :14, ஜூலை 2017 (19:10 IST)


அதிமுகவுக்கு தொடர் அச்சுறுத்தல்
தரும் பாஜக! தனியரசு தாக்கு!

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர். ஜெ. இருக்கும் வரை அதிமுகவின் தீவிர விசுவாசியாக தன்னை காட்டிக்கொண்டவர். கூவத்தூர் முகாமில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்களுடன் தனியரசும் இருந்தார். மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் இவர், சமீப காலமாக மத்திய அரசுக்கு பணிந்து செல்லும் அதிமுக அரசை கண்டித்து சட்டசபையில் வெளிநடப்பு செய்வது, பேட்டி கொடுப்பதோடு, திமுக பக்கமும் தோழமையோடு இருக்கிறார். நக்கீரன் இணையதளத்திற்காக அவரிடம் சில கேள்விகளை வைத்தோம்.

சமீபகாலமாக தமிமுன் அன்சாரி, கருணாஸ் மற்றும் நீங்கள் 3 பேரும் ஒன்றாக செயல்படுகிறீர்களே?

அவரவர் கருத்தை சொல்கிறோம். அவ்வளவுதான். மாநில அளவில் தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும், மேம்பாட்டிற்காகவும், தமிழகத்தின் வலிமையான சமூக உணர்வுகளை வெளிப்படுத்துவது, சமூக நீதியை நிலைநாட்டுவது, சமத்துவத்திற்கான கருத்துக்களை முன்வைப்பது போன்றவைகளை செய்து வருகிறோம். அதற்காகத்தான் அமைப்புகளை துவங்கியிருக்கிறோம்.

3 பேரும் முதன் முதலில் ஒன்றாக எங்கு செயல்பட தொடங்குனீர்கள், எந்த விசயத்தில் தொடங்குனீர்கள்?

முதல் முதலில் அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்தோம். அதற்கு பிறகுதான் அனைத்துக் கட்சித் தலைவர்களும் குரல் எழுப்பினார்கள். அதேபோல் பேரறிவாளன் பரோல் விசயத்தில் கட்சி பாகுபாடு பார்க்காமல் சட்டமன்றத்தில் குரல் எழுப்பினோம். 

நீட் தேர்வு விவகாரம், காவிரி மேலாண்மை வாரியம், நெடுவாசல், கதிராமங்கலம் போன்றவைகளுக்கு குரல் கொடுத்து வருகிறோம். நெடுவாசல், கதிராமங்கலம் பகுதி மக்களின் எண்ணத்திற்கு எதிராக மத்திய அரசும், எண்ணெய் நிறுவனமும் விரிவாக்கம் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என குரல் கொடுத்தோம்.

மாட்டுக்கறி உணவு விஷயத்தில் 90 விழுக்காடு மக்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது என்று சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தோம். வெளிநடப்பு செய்து அந்த சட்டத்திற்கு தமிழகத்திற்கு விதிவிலக்கு வேண்டும். கட்டுப்பாடு இல்லாத பழைய நிலையே தொடர வேண்டும். அதற்காக தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என்றோம். 

ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி பேரறிவாளன் உள்ளிட்டவர்களையும், 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களையும் விடுவிக்க வேண்டும், தண்டனை குறைக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் முதல்வர், சம்மந்தப்பட்ட அமைச்சர்கள், சட்டமன்றத்தில் வேண்டுகோள் வைத்திருக்கிறோம்.

3 பேரும் இணைந்திருந்தால் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில், கூட்டணி பேசும்போது வசதியாக இருக்கும், முக்கியத்துவம், மதிப்பு கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா?

அதற்கு இன்னும் நாள் இருக்கிறது. வருடங்கள் இருக்கிறது. மக்கள் நலக் கூட்டணியில் சில கட்சிகள் ஒன்று சேர்ந்தன. பின்னர் பிரிந்தன. ஆகையால் தேர்தல் நேரத்தில் அவரவர்கள் எடுக்கும் முடிவை கட்டுப்படுத்த முடியாது. நாங்கள் அதைப்பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. ஒத்த கருத்து இருந்து ஒருமித்த முடிவு எடுப்பது நல்லதுதான். 

கூவத்தூர் முகாமில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும், கூட்டணி எம்எல்ஏக்களான உங்களுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டதாகவும் வீடியோவில் செய்தி வெளியானது. அந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள 3 பேரும் ஒற்றுமையாக உள்ளீர்களா?

அந்த வீடிவோவில் பேசியது நான் இல்லை என்று அந்த எம்எல்ஏவே மறுத்துவிட்டார். நாங்கள் அந்த மாதிரி செயலில் ஈடுபடவில்லை. பழக்கமும் இல்லை. யாருடைய அச்சுறுத்தலுக்கும், வதந்திகளுக்கும் இறையாகக் கூடாது. ஜெ. அமைத்த ஆட்சி நிலைக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்களை பெருமளவு ஒருங்கிணைத்து சென்றேன். 

அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்தாலும், தனிக்கட்சியான உங்களுக்கு சட்டமன்றத்தில் பேசுவதற்கு, தொகுதி நிதி ஒதுக்கீடு, கோரிக்கை நிறைவேறுவதில் முக்கியத்துவம் தரப்படுகிறதா?

ஏனைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கிற உரிமைகள், மேலும், சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டியது கிடைக்கிறது. அதில் எந்த தடையோ, தாமதமோ இல்லை. சம்மந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் பரிசீலனை செய்கிறார்கள்.

சட்டமன்றத்தில் மீண்டும் துதிபாடும் கலாச்சாரம் இருக்கிறதே?

கட்சியின் தலைவரின் உயர் பண்புகளை, சாதனைகளை உயர்த்தி பேசுவது வழக்கம்தான். இப்போது அந்த அளவுக்கு இல்லை. ஜெ.வும் மறைந்துவிட்டார். கலைஞரும் இப்படிப்பட்ட சூழலில் உள்ளார். ஆகையால் இந்த கலாச்சாரம் 90 விழுக்காடு இப்போது இல்லை. யாராவது தனது தொகுதிக்கு தேவையானவற்றை கேட்டிருப்பார்கள். அதை செய்திருந்தால் அதற்காக புகழுவார்கள். இது இயல்பானதுதான். இது தவறில்லை.

பொதுவாக பாஜக தலைமையிலான மத்திய அரசின் போக்கு எப்படி உள்ளது?

ஜி.எஸ்.டி. வரியால் வணிகர்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். நுகர்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவகங்களில் சாப்பிட சென்றால் 100 ரூபாய்க்கு 120, 130 ரூபாய் தர வேண்டியுள்ளது. மத்திய அரசின் ஒத்துழையாமையாட்சியின் தத்துவத்திற்கான வடிவம்தான் தேசம் முழுக்க ஒரே வரி, தேசம் முழுக்க சிபிஎஸ்சி கல்வி திட்டம், அதேபோல் பாஸ்போர்ட்டில் இந்தி, அதற்கு பின்னர் சமஸ்கிருதம் திணிப்பு. 

பிராந்திய கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்துவது. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ ஆகியவற்றை ஏவி நாடு முழுக்க உள்ள பிராந்திய கட்சிகளை வலுவிழக்க செய்வது. உளவியல் ரீதியாக மக்களிடத்தில் களங்கப்படுத்துவது. 

லாலு பிரசாத் யாதவ், மீராகுமாரை ஆதரிக்கிறார் என்றால் அடுத்த நாளே ரெய்டுக்கு போகிறார்கள். ஜார்க்கண்ட் சிபுசோரன் மீது வழக்கு, தண்டனை. மாயாவதி தேசம் முழுக்க குரல் கொடுக்கிறாங்க என்றால் அவர்கள் மீது வழக்கு. 

பாண்டிச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த கிரண்பேடியை அனுப்பி, அரசியல் சாசனப்படி அமைக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை திட்டமிட்டு தொந்தரவு செய்கிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் தத்துவத்திற்கு எதிரான எந்த அமைப்புகளையும் பணியாற்ற விடுவதில்லை. 

குறிப்பாக அதிமுக ஆட்சி ஜெ. மறைவுக்கு பின்னர் எவ்வளவு ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கிறது. அவர்களும் இரையாகியிருக்கிறார்கள். தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கிறது. சசிகலா பெங்களுரு சிறையில் பணம் கொடுத்தார்கள் என்று ஒரு அச்சுறுத்தல் செய்கிறது. அதேபோல் திமுக மேலேயும் முக்கிய தலைவர்களை, அந்த குடும்பத்தின் முன்னணியிரை களங்கப்படுத்துவது, அவர்கள் மேலேயும் வழக்கு போடுவது. அதேபோல் தேசிய கட்சியான காங்கிரஸ் மீதும் வழக்கு போடுவது என நாடு முழுக்க இதுபோன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. 

ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சி வேட்பாளரான மீராகுமாரை ஆதரிக்கிறேன் என்று தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். உங்கள் முடிவு என்ன?

இன்னும் முடிவு எடுக்கவில்லை. 

மத்திய அரசை தாக்கி பேசுகிறீர்களே, மீரா குமாருக்கு உங்கள் ஆதரவு இருக்குமா?

ஞாயிற்றுக்கிழமைதான் முடிவு எடுப்பேன்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக திமுக, காங்கிரஸ் அணுகியதா?

திமுக அணுகவில்லை. காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் ராமசாமி, மீராகுமார் தன்னை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்ட கடிதத்தை கொடுத்தார்.

ஸ்டாலினை சந்தித்துள்ளீர்களே? திமுக பக்கம் உங்கள் ஆதரவு திரும்புகிறதா?

அப்படியில்லை. முரசொலி பவள விழாவிற்கு நேரடியாக அழைப்பு கொடுத்தார்கள். சிறப்புரை ஆற்ற வேண்டும் என்றார்கள். நாங்களும் முரசொலி பவள விழா சிறக்க வாழ்த்துக்கள் சொன்னோம். அரசியல் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் என்று தெரிவித்தோம். பேரறிவாளன் பரோல் விசயமாக குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அதற்கு அவர் குரல் கொடுத்தார். அதற்கு நாங்கள் நன்றியும் தெரிவித்தோம். 

முரசொலி பவள விழாவில் கலந்து கொள்வீர்களா?

விழா சிறக்க வாழ்த்தியுள்ளோம். பங்கேற்பது பற்றி இயன்ற அளவு கலந்து பேசி சொல்கிறோம் என்று தெரிவித்துள்ளோம். 

-வே.ராஜவேல்
படம்: அசோக்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : azhagiri Country : Malaysia Date :7/20/2017 7:00:14 PM
திமுக ஆட்சி விரைவில் மலர போவுது
Name : arul Date :7/14/2017 9:38:37 PM
தமிழ்நாட்டில் அடிக்கடி சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு மக்கள்நலமின்றி சுயநலத்துக்காக காட்ச்ச்சி தாவுவோரைமக்கள் முன்னிலையில் தூக்கிலத்திட்டங்கவிடவேண்டும், அப்போதுதான் இவர்களைப்போன்றவர்கள் டிருந்த வாய்ப்புண்டு.