Add1
logo
நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு! || நாட்டுமாடுகள் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் பங்கேற்பு || 29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு || பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் || வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது! || பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத் || கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்! ||
சிறப்பு செய்திகள்
பேருந்து கட்டண உயர்வு, சாமானியனுக்கு சறுக்கல் - கதறும் தமிழகம்
 ................................................................
பெண்கள் சக்தியை புறக்கணிக்கிறதா திமுக?
 ................................................................
அனுமன் பாலம் கட்டுவதை நம்புவோம்!
 ................................................................
பாஜகவுக்கு ஆதரவான பிரகாஷ்காரத் தீர்மானம்?
 ................................................................
"கீழடி கதை" -சு.வெங்கடேசன்
 ................................................................
அவதூறு பரப்பக் கூடாது:
 ................................................................
42 பேர் கண்தானம், 35 பேர் உடல் உறுப்புதானம்!
 ................................................................
பஸ் கட்டண உயர்வா, கொள்ளையா?
 ................................................................
“இருக்கு; ஆனா இல்ல.. இருக்கு; அதுவே வேற மாதிரி இருக்கு!”
 ................................................................
விளிம்புநிலை மக்களும் இணைந்த விரிவான அணி திரட்டல் தேவை!
 ................................................................
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜூலை 2017 (17:0 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஜூலை 2017 (10:21 IST)


‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. 
சட்டத்தின் பிடியில் காயத்ரி ரகுராம்!

சேரி என்றால் மக்கள் கூடிவாழும் நிலம் எனப்பொருள்படும். பொதுவாக சேரிப்பகுதி தாழ்ந்த, சூழலியல் சிக்கல்கள் நிறைந்த பகுதியாக இருக்கும். தமிழகத்தில் இருக்கும் சாதி ஏற்றத்தாழ்வுகளின் காரணமாக பட்டியலின மக்கள் அதிகம் வாழும் பகுதியாக அது இருக்கிறது. தொடர்ச்சியாக சமூகத்தில் சேரிவாழ் மக்கள் என்றால் இழிவானவர்கள், மோசமானவர்கள் என்று சித்தரிக்கப்பட்டு வரும் இந்த சூழலில், தமிழகத்தில் சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் இது தொடர்ந்திருக்கிறது. 

நிகழ்ச்சியின் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் புகழ்பெற்ற ஜூலியானாவை சீண்டி, அனைத்து தரப்பினராலும் விமர்சனத்திற்குள்ளானவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் சமீபத்தில் வெளியான ஒரு எபிசோடில், சகபோட்டியாளர் நடிகை ஓவியாவை ‘ஓவியா விஷம்’ என்றும், ‘சேரி பிஹேவியர்’ என்றும் பேசுவது மாதிரியான காட்சிகள் வெளியாகின. இது பொதுத்தளத்தில் இயங்கிவரும் பலரின் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல கண்டனக்குரல்கள் காயத்ரி ரகுராமை நோக்கி எழுப்பப்பட்டன. அவர்மீது வழக்குதொடர்ந்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடிவரும் எவிடென்ஸ் கதிர், ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் வரும் பல விஷயங்களை பரபரப்பிற்காக ஒளிபரப்புவதாக தகவல்கள் வருகின்றன. இந்த குறிப்பிட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவரின் மீது நேரடியாகவும் வழக்குப்பதியலாம். அல்லது சென்னையில் இந்த விவகாரத்தில் ஆர்வமுள்ள வழக்கறிஞர்களுடன் சேர்ந்து இணைப்பு வழக்காகவும் பதியலாம். எஸ்.இ/எஸ்.டி திருத்தப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்- 2015 என்ற சட்டத்தின் படி, பட்டியலின மக்கள் குறித்து சுவர்களில் எழுதியோ, பரப்புரை செய்தோ, பிரச்சாரம் செய்தோ சாதிரீதியிலான பாகுபாடுகளை ஏற்படுத்துபவர்கள் மீது வழக்கு பதியலாம். அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், ஒருவரின் பண்பாடு, அடையாளத்தை ஏற்கனவே தெரிந்திருந்து அதுகுறித்து விரோதமாக பேசினாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். 

சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்திற்குள்ளானாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கும் பார்வையாளர் கூட்டம் அதிகரித்துக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. நெகட்டிவ் இமேஜ் என்ற மோசமான அரசியல் மக்கள் முன் ‘பிக்பாஸ்’ என்ற பெயரில் நடத்தப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தையை உபயோகித்து, குறிப்பிட்ட சில மக்களை இழிவானவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துபவர்களின்மீது வழக்கு தொடராமல் எப்படி இருக்க முடியும்? காயத்ரி ரகுராம் பேசிய காட்சிகளில் ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தையை எதிர்ப்பு கிளம்பியவுடன் நீக்கிவிட்டார்கள். வெறும் விளம்பரத்தை வைத்துமட்டும் வழக்கு தொடர முடியாது. அதன் முக்கிய காட்சிகளை சேகரிக்க முயற்சித்து வருகிறோம். விஜய் டிவியில் நீயா நானா என்ற பாசிட்டிவ் இமேஜ் காட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி தற்போது நீர்த்துப் போய்விட்டது. அந்த சேனலின் பல நிகழ்ச்சிகள் காலங்கடந்தவையாக இருக்கும் சூழலில், இதுமாதிரியான நெகட்டிவ் இமேஜ் உருவாக்கும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து கல்லா கட்ட நினைக்கிறார்கள். மக்கள் இதனை முதலில் புறக்கணிக்க வேண்டும். சேரி என்றால் சாதி சார்ந்த மக்கள் இருக்கும் இடம் என்பதைத் தாண்டி, ஏழை எளிய மக்கள் அதிகம் வாழும் பகுதியாகவும் இருக்கிறது. சென்னையில் பெரும்சேரி என்ற பகுதியில் பலதரப்பட்ட, பலசாதி ஏழைமக்களும் வாழ்கிறார்கள். அவர்களையும் சேர்த்தே இழிவுபடுத்துவதாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் தாழ்த்தப்பட்ட மக்களாக இருப்பவர்களை இழிவுபடுத்தியதற்காக இதை எதிர்த்து காயத்ரி ரகுராம், விஜய் டிவி, தொகுத்துவழங்கும் கமல்ஹாசன் உள்ளிட்டோர் மீது மேற்குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் அழுத்தம் கொடுத்து வழக்குதொடர ஆலோசித்து வருகிறோம். கூடிய விரைவில் தகவல்கள் வெளிவரும்’ என்கிறார் உறுதியாக.

பலதரப்பட்ட மக்கள் வாழும் இந்த நாட்டில், பன்முகத்தன்மை கொண்ட இந்த நாட்டில், குறிப்பிட்ட சில மக்கள் கூட்டத்தை இழிவானவர்கள், மோசமானவர்கள் எனச்சொல்லி எத்தனையோ காலமாக தொடர்ந்துவரும் குரோத சித்தரிப்பு மனநிலையின் ஒட்டுமொத்த வெளிப்பாடே காயத்ரி ரகுராமின் ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தைப் பிரயோகம். தெரியாமல் சொன்னேன் எனக்கூறி தப்பித்துவிட முடியுமா என்ன?

- ச.ப.மதிவாணன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(7)
Name : pathman Country : United States Date :7/20/2017 5:18:53 AM
காயத்திரி செய்யும் வேலைகள் படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் போல் உள்ளது.ஜூலியின் கேவலமான முகம் தெரிய தொடக்கி உள்ளது.காயத்திரி எவளோ கொடுமை சித்தும் இப்போ அக்கா என்று நடிக்குது.காரணம் புரியவில்லை.காயத்திரி ஜூலிக்கு மக்கள் ஆதரவு இருக்குமென நினைத்து ஜூலியை மதிப்பது போல் நடிக்குது.சாப்பாடு ஊட்டி விடுகுது.ரேச நல்ல பெண்,ஆனால் இப்போ கூடாத கூட்டத்துடன் சேர்ந்து ஓவியாவை பற்றி பேசுவது தங்க முடியல.மக்களே மொத்தத்தில் ஓவியா ஒரு அப்பாவி,straight forward,don't care character.Make her as the winner.
Name : தமிழ் மைந்தன் Country : Australia Date :7/20/2017 12:27:50 AM
ஆரம்ப கட்ட வழக்கு விசாரணைக்கு கூட எடுத்து கொள்ள தகுதியற்ற வழக்கு. காயத்ரி எந்த ஒரு சாதியை குறிப்பிட்டும் சொல்லவே இல்லை ! சேரியில் பல சாதியை சேர்ந்த ஏழை மக்களும் உண்டு என்பதால் வழக்கு போட்டாலும், வழக்கில் ஆஜராக இருக்கும் வக்கீலுக்கு கிடைக்க இருக்கும் சம்பளத்தை தவிர அதனால் எந்த பிரயோசனமும் இல்லை. குறிப்பிட்ட பகுதியை மட்டும் "தேர்ந்தெடுத்து" ஒளி பரப்பிய அந்த தொலைக்காட்சி நிறுவனமும், காயத்ரியும் தாங்கள் எந்த ஒரு சாதிக்கும் எதிராக, தரக் குறைவாக பேச வில்லை என விளக்கமளித்தால் போதுமானது ! மிக சிறிய பிரச்சினை இது ! நாட்டில் எவ்வளவு பெரிய பிரச்சினைகள் உள்ளது ? இதை போய் பெரிது படுத்தி அந்த தொலைக்காட்சியின் TRP ரேட்டிங் தான் கூடுகிறது ?
Name : guru Country : United States Date :7/17/2017 7:45:42 PM
இது ஒரு அடங்கா பிடாரி என்பது அதன் பேச்சு,நடை,உடை பாவனைகளில் தெரிகின்றது."சீர்" என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதாம்.அப்படியே வைத்துக்கொண்டாலும் தனக்கு கால்சியம் குறைவய என்று சொன்னபோது டாக்ரரின் முடிவை அவர்கள் சொல்லும் போது சீர் என்றால் என்ன அர்த்தம் என்று அவர்களை கேட்டிருக்கவேண்டும்.Because she was highly concerned about her calcium level. சீர் என்றால் என்ன என்று விளங்கின படியால் கேட்கவில்லை.பிப்பு கமலகாசன் முதலில் சொன்ன போது விளங்கின மாதிரி தலை ஆட்டி விட்டு பின்புதான் சீர் எனறால் என்ன வென்று பக்கத்தில் இருந்தவரை கேட்க்கின்றார்.அதைவிட நமீதா அணியும் உடைகள் பற்றி பேசாமல் இருந்து கொண்டு ஓவியாவை பற்றி கூறுவது ஈனத்தனம்,ஓவியா மிகவும் பரந்தாமனாப் பான்மையும் மனித தன்மையும் உடையவர்.நமிதா கயாத்திரியின் குடும்ப பின்னணி பற்றி பீத்துவது சகிக்கல.இனம் இனத்தோடு தான் சேரும் என்பது தெரிகின்றது.சினேகன்,சக்தி ஆகியோரும் அங்கிடு தத்துகள் l.
Name : roger Date :7/15/2017 2:04:18 PM
ஏன்டா உங்களுக்கு ஜாதி வெறி அன்புமணி,ராமதாஸ் இந்த நாய்ங்க எல்லாம் உங்களுக்கு கண்ணுக்கு தெரியலையா, போங்கடா நீங்களும் உங்கள் செய்தியும், கமல் ஒரு அப்பாவி
Name : வள்ளுவக்குரவன் Date :7/14/2017 7:51:07 AM
உண்மையான சேரி பிகேவியர் (நடத்தை) என்பது பொறுப்புள்ள நனிநாகரிக மனிதர்களாய் நடப்பது(இயங்குவது)ம், உழைப்பதும், படுப்பதுமே ஆகும்! "இவன்(ள்) தந்தை என்னோற்றான் கொல்!" என தன்னை மற்றவர்கள் வியந்து போற்றும் சொற்களை வெளிவரவைக்கும் நடத்தையே சேரிநடத்தை! அதற்குள் பொதுஅறிவுடைமை, சுற்றறிவுடைமை, சமூகப் பார்வையுடன் கூடிய நன்னடத்தை அனைத்தும் அடங்கும்! சேரிநடத்தை உள்ளவர்கள் அறிவும் பொறுப்பும் உடையவர்கள்! அவர்களில் ஒருபகுதியினரின் எளிமையான வெளித்தோற்றம், முழுமையாக தமிழில் பேசும் நனிநாகரிகம் ஆகியவற்றை எள்ளி நகையாடுவது, ".... சிறுமை அணியுமாம் தன்னை வியந்து ' என்ற வள்ளுவனின் வாக்கை நினைவூட்டுகிறது!"
Name : selvarajan Date :7/13/2017 10:14:51 PM
இந்த பொண்ணு முகம் ஒரிஜினல் இந்திய பெண்போல தெரியல. இந்த நிகழ்ச்சியை தடை செய்வதுடன் வீணே விதண்டாவாதம் செய்து தன்னை பகுத்தறிவு மேதைப்போல காட்டிக்கொள்ளும் கமலஹாசனை கொஞ்ச நாள் கம்பி எண்ண வைத்து திருத்தவேண்டும்.
Name : muthu Country : United States Date :7/13/2017 12:55:08 PM
கண்டிப்பா புடிச்சு உள்ளே போடணும்...இனிமே இதுபோல எவனும் பேசவே பயம் வரணும்.