Add1
logo
நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு! || நாட்டுமாடுகள் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் பங்கேற்பு || 29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு || பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் || வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது! || பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத் || கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்! ||
சிறப்பு செய்திகள்
பேருந்து கட்டண உயர்வு, சாமானியனுக்கு சறுக்கல் - கதறும் தமிழகம்
 ................................................................
பெண்கள் சக்தியை புறக்கணிக்கிறதா திமுக?
 ................................................................
அனுமன் பாலம் கட்டுவதை நம்புவோம்!
 ................................................................
பாஜகவுக்கு ஆதரவான பிரகாஷ்காரத் தீர்மானம்?
 ................................................................
"கீழடி கதை" -சு.வெங்கடேசன்
 ................................................................
அவதூறு பரப்பக் கூடாது:
 ................................................................
42 பேர் கண்தானம், 35 பேர் உடல் உறுப்புதானம்!
 ................................................................
பஸ் கட்டண உயர்வா, கொள்ளையா?
 ................................................................
“இருக்கு; ஆனா இல்ல.. இருக்கு; அதுவே வேற மாதிரி இருக்கு!”
 ................................................................
விளிம்புநிலை மக்களும் இணைந்த விரிவான அணி திரட்டல் தேவை!
 ................................................................
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜூலை 2017 (17:43 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜூலை 2017 (18:14 IST)


அடிமைகளாவதைத் தவிர்க்க உணவுப்புரட்சி செய்யுங்கள்!

ஆதிகாலம் தொட்டே மனிதன் உணவுக்காகத்தான் ஒவ்வொரு நாளையும் செலவிட்டு வந்திருக்கிறான். நாட்கள் செல்லச்செல்ல அத்தியாவசியப்பொருள் என்ற நிலைமாறி, உணவு ஆடம்பரப் பொருளாக மாறியுள்ளது. ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு’ என்ற வள்ளுவனின் வாக்கை மறந்துவிட்டு, நேரம் காலம் தெரியாமல் உணவருந்த ஒவ்வொருவரும் பழகிவிட்டோம். காலந்தோறும் கலாச்சாரம், பண்பாடு என்ற ஒழுங்குமுறை பிரச்சாரங்களை ஒருபக்கம் பேசிவிட்டு, காலங்காலமாக தொடர்ந்துவந்த நம் மரபுவழி பண்பாட்டு உணவுமுறையைத் தொலைத்துவிட்டோம். இதுகுறித்த முறையான விழிப்புணர்வு பற்றி விரிவாக பேச நடிகரும், ஊட்டச்சத்து ஆலோசகருமான ஆரி உடன் நடத்திய கலந்துரையாடல்,உணவு பற்றிய விழிப்புணர்வு தற்போதைய சூழலில் எந்த அளவிற்கு அவசியமாக இருக்கிறது?

இன்றைய சூழலில் உணவு சார்ந்த பிரச்சனைகள் நம் கையை மீறி போய்விட்டன. உணவு சார்ந்த விழிப்புணர்வு இல்லையென்றால், அடுத்த தலைமுறை என்ற ஒன்று இல்லாமல் போய்விடும். கிட்டத்தட்ட 2கோடியே 50லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. வருடத்திற்கு 7லட்சம் பேர் புற்றுநோயாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர். இதில் ஆண்டொன்றுக்கு 2,500 பேர் உயிரிழக்கின்றனர் என இன்னொரு புள்ளிவிவரம் சொல்கிறது. இந்தத் தலைமுறையில் தான் தாத்தாவும் அப்பாவும், தங்கள் பேரனும் மகனும் சாவதை நேரில் பார்க்கும் அவலம் நிகழ்கிறது. எல்லோருக்கும் இறப்பு நிச்சயம். ஆனால், நாம் மரணிக்கும் தேதி நம்மால் முடிவு செய்யப்படவேண்டும். அதை பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டு அதை மீட்டெடுக்க போராடிக்கொண்டிருக்கிறோம். 

நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் வேகமான வாழ்க்கைக்கு மாறிவிட்டார்கள். அவர்களின் உணவுப்பழக்கங்களில் என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டுவர முடியும்?

வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்து பனங்கற்கண்டு, பனக்கருப்பட்டி, பனவெல்லம், தேன் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். பட்டை தீட்டப்பட்ட அரிசியைத் தவிர்த்து சிவப்பு அரிசி, நெல்குத்தல் அரிசி, குதிரைவாலி போன்றவற்றை பயன்படுத்தலாம். தீய சக்திகளைக் கவரும் கல் உப்பு பயன்படுத்துங்கள். கோதுமைத்தூசியான மைதாவை ஒழித்துக்கட்டுங்கள். மைதாதான் பல நோய்களை உருவாக்கும் முக்கிய காரணி. கேரளாவில் முழுமையாக தடைசெய்யப்பட்டுவிட்டது. தமிழகத்தில் சின்ன எதிர்ப்புக்குரல் கூட எழுப்பப்படவில்லை. ஏனென்றால், இது அத்தனைப்பெரிய வியாபார சந்தை. செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வகைகளை உபயோகியுங்கள். தானிய வகைகளுக்கு உணவுமுறையை மாற்றுங்கள். அவற்றின் உற்பத்தியில் எந்த உரவகைகளும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தாத நிலையில், ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்கிறோம் என்ற நம்பிக்கை எப்போதும் இருக்கும். குழந்தைகளுக்கு இந்த உணவுமுறையை பழக்குங்கள். உங்கள் வீட்டு சமையலறையில் இருந்தே புரட்சியைத் தொடங்குங்கள்.

இன்று இந்தியாவில் விவசாயிகள் இருக்கும் நிலையில், நீங்கள் சொல்லும் உணவுப்பழக்கங்கள் சாத்தியமா?

சாத்தியம் இல்லையெனில் விவசாய வாழ்க்கைமுறையே இல்லாமல் போயிருக்கும். ‘விவசாயம் வியாபாரமல்ல; வாழ்க்கைமுறை’ என நம்மாழ்வார் சொன்னதை இங்கு பொருத்திக் கொள்ளலாம். நம் விவசாய பாரம்பரியம் இயற்கை முறையைச் சார்ந்தது. நம் பாரம்பரியத்தில் பூச்சிக்கொல்லி என்ற ஒன்று கிடையவே கிடையாது. பூச்சிவிரட்டிகள் தான் இருந்தன. தற்போது இருக்கும் பூச்சிக்கொல்லிகள் நம் உடலுக்குள் சென்று நம்மை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லக்கூடியவை. நாம் சாப்பிடும் அனைத்து உணவுப்பொருட்களிலும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஒரு நாட்டின் மக்களை அடிமைப்படுத்த வேளாண் யுத்தம் தொடங்கினால் போதும். தற்போது அந்த யுத்தம் தொடங்கிவிட்டது.

பிளாஸ்டிக் உபயோகம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. அதன் ஆபத்துகள் என்னென்ன?

பிளாஸ்டிக் மிகவும் கவர்ச்சிகரமான பொருள். அது பலவடிவங்களில் தற்போது கிடைக்கிறது. எந்த உணவகங்களுக்குச் சென்றாலும் பிளாஸ்டிக் கவர்களில் தான் உணவு கொடுக்கப்படுகிறது. தேநீர்க் கடைகளிலும் இதேதான். 40 மைக்ரான்களுக்கு மேல் உள்ள உணவு தர பிளாஸ்டிக்கைத் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அளவு உள்ளது. உணவு சூடாகும்போது பிளாஸ்டிக்கின் வேதிப்பொருட்கள் அதில் இடம்பெயருகின்றன. இதனால் நம் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும். ஆனால், இதை முறைப்படுத்த இந்தியாவில் ஒழுங்குமுறை ஆணையம் என்ற ஒன்றே கிடையாது. 

குழந்தைகளின் பிறந்தநாள் கேக்குகளில் செயற்கை வண்ணங்கள் இருப்பதாகவும், அவை தீங்கு விளைவிக்கக் கூடியவை என்றும் சொல்லப்படுவது உண்மையா?

அது உண்மை.. மருத்துவர் ஒருவரிடம் கேட்கும் போது இதுகுறித்த மேலும் சில தகவல்களை அறிந்தேன். அரசு சில வண்ணங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால், அதற்கு மேலும் பல வண்ணங்களை வியாபாரிகள் பயன்படுத்துகின்றனர். அரசு அனுமதித்துள்ள வண்ணங்களே நமக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவைதான். நம் எல்லோருக்கும் ஒருவித கவர்ச்சி தேவைப்படுகிறது. அதை சரியாக புரிந்து கொண்டவர்கள் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் தெரிந்தும் தெரியாமலும் பலிகெடாக்கள் ஆக்கப்படுகிறோம். 

உங்கள் திருமணத்தில் பாரம்பரிய உணவுகளை விருந்தாக கொடுத்திருந்தீர்கள். அது எந்தளவுக்கு வெற்றியடைந்தது?

உங்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களில் தானியம் சார்ந்த உணவுவகைகளை விருந்தினர்களுக்கு செய்துகொடுங்கள். இதையே என் திருமணத்திலும் செய்ய முயற்சித்தேன். வந்த பலரும் இதைப் பெரிதும் பாராட்டிச் சென்றனர். வெளியில் எங்கு சென்றாலும் கிடைக்கும் உணவுகளைத் தவிர்த்து இதுமாதிரியான உணவுகளைப் பார்ப்பதே புத்துணர்ச்சியாக இருப்பதாக கூறினார்கள். இது மிகப்பெரிய வெற்றியடைந்தது. நீங்களும் இதை முயற்சி செய்து பார்க்கலாம். இதற்கான வாய்ப்புகள் நம்மிடம் ஏராளம் இருக்கின்றன. 

மாற்றத்தை உங்களிடமிருந்து தொடங்குங்கள். விவசாயத்தைப் பாதுகாக்க தானியங்களை அதிகம் பயன்படுத்துங்கள். இதன்மூலம் தானாக உற்பத்தி பெருகும். வியாபாரம் அதிகரிக்கும். இதுவொரு கூட்டுமுயற்சியாக இருக்கும். மாற்றம் என்பது எங்கோ, யாரோ ஒருவரால் நிகழ்த்தப்படுவதில்லை. உங்களிடமிருந்தே அந்த மாற்றத்தை உருவாக்க முடியும். மாறுவோம்.. மாற்றுவோம்.. புதிய சிந்தனைக்கு வழியெடுப்போம்.. நம் பாரம்பரிய உணவுகளையும், விதைகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க நாம் போராடுவோம்.. வெல்வோம்..

- பெலிக்ஸ் இன்பஒளி
தொகுப்பு- ச.ப.மதிவாணன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Justin Jayakumar A Country : United States Date :7/13/2017 1:32:01 PM
நல்ல பதிவு. தொடரட்டும் வாழ்த்துக்கள்.