Add1
logo
வங்கி பணியிடங்களுக்கான நிரப்புதலில் உள்ளூர் மொழி கட்டாயம் என்ற நடைமுறையை உறுதி செய்க: ஜீ.ரா || காக்கிக்குள் ஈரம்! || பசுக்கள் நல கண்காட்சியில் வளர்ச்சி பற்றி மோடி! || அரசு மருத்துவரை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒட்டிய போஸ்டரை கிழித்த அரசு மருத்துவமனை ஊழியர்கள் || பா.ஜ.க. பிரமுகரின் கபட நாடகம் அம்பலம்! கி.வீரமணி || ஜெ.,சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை: தினகரன் பேட்டி || இவருக்கெல்லாம் பதில் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது: எடப்பாடி மீது தினகரன் தாக்கு || பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! || ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம் || நொய்யல் கழிவுகள்: சாயப்பட்டறைகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சரை நீக்குக! ராமதாஸ் வலியுறுத்தல் || வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு கழிவுகளால் தான் ஆற்றில் நுரை வருகிறது: அமைச்சர் கே.சி.கருப்பணன்! || ரூ.50 லட்சம் பணத்தை வேறு ஒருவர் கணக்கில் வரவு வைத்த மெர்கண்டைல் வங்கி மேலாளர் கைது..! || அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? விசாரணை தேவை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை! ||
சிறப்பு செய்திகள்
வாழையடி வாழையாக வம்சாவளி அரசியல் !!!
 ................................................................
மாநில கட்சிகளே இருக்காது: வானதி சீனிவாசன்
 ................................................................
வெமுலா தற்கொலைக்கு பழிதீர்த்த பல்கலை.!
 ................................................................
அமேசானில் 'ஷாப்பிங்' செய்த கிளி !
 ................................................................
சென்னையை மிரட்டிய 'எம்டன்' !!!
 ................................................................
‘கேஷ்’-சுக்கே திரும்பிய கேஷ்லெஸ் கிராமம்!
 ................................................................
முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் முத்துலெட்சுமி ரெட்டி!
 ................................................................
'டிரைவர்' இல்லாத 'டிராக்டர்'!!!
 ................................................................
பஞ்சமி நிலங்களுக்காக போராடிய ஆங்கிலேயர்!
 ................................................................
யூ-ட்யூபை கலக்கும் ஸ்ருதிஹாசன் குறும்படம் !!!
 ................................................................
நேரு துவங்கினார்... மோடி திறந்தார்...
 ................................................................
அரசாங்க குளறுபடியும் ரேசன் அட்டை காமெடிகளும்!
 ................................................................
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம்!
 ................................................................
இன்றும் ட்ரெண்டில் பெரியார் !!!
 ................................................................
இதய நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி...
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 10, ஜூலை 2017 (12:29 IST)
மாற்றம் செய்த நாள் :10, ஜூலை 2017 (12:29 IST)


காட்சிகளின் வழியாக கலைக்கு உயிர் தந்தவர் பாலச்சந்தர்!

திரைப்படங்களில் பாலுணர்வைக்கூட கலையாக வெளிப்படித்தியவர் இயக்குனர் கே.பாலச்சந்தர் என கவிஞர் வைரமுத்து சிலையை திறந்துவைத்து பேசினார். திருவாரூர் மாவட்டம் நல்லமாங்குடி என்கிற கிராமமே இயக்குனர் பாலச்சந்தர் பிறந்த ஊர். அங்கு பாலச்சந்தருக்கு சிலை திறக்கவேண்டும் என ஆறு மாதங்களுக்கு முன்பு முடிவு செய்தார் கவிஞர் வைரமுத்து. அதன்படி ஜீலை 9-ஆம் தேதி மாலை 6 மணிக்கு திறக்க முடிவு செய்திருந்தார். சிலையை சுவாமிமலையைச் சேர்ந்த சிற்பி செந்திலிடம் செய்யச் சொல்லியிருந்தார். 9-ஆம்தேதி மாலை சரியாக 6 மணிக்கு பாலச்சந்தரின் சிலையை அவரது மனைவி ராஜம் திறந்துவைத்தார். அவரோடு கவிஞர் வைரமுத்து, இயக்குனர்கள் மணிரத்தினம், பிரமிட் நடராஜன், வசந்த் உள்ளிட்ட பாலச்சந்தரின் குடும்பத்தினர் இருந்தனர்.

சிலைதிறக்கப்பட்ட பிறகு முதலில் பேசிய இயக்குனர் வசந்த் சாய் ‘பாலச்சந்தரைப் பற்றி அவர் பிறந்த ஊரான நன்னிலத்தில் பேசுவது கொல்லன் தெருவில் ஊசி விற்பது போல் இருக்கும். அவரோடு 32 ஆண்டுகள் இருந்துள்ளேன். 18 படங்களில் பணியாற்றியுள்ளேன். அவரது படங்கள் பெண்களின் பிரச்சனைகளை பேசியவை. பெண்களின் உரிமைக்காக ஒரு வழக்கறிஞரைப்போல் திரைத்துறை மூலம் வாதாடினார்’ என பேசிமுடித்தார்.

அடுத்து பேசிய பிரமிட் நடராஜன் பேசுகையில், சினிமாவில் வாய்ப்பு தேடி அலையாமல் சினிமா உலகம் தன்னைத் தேடிவரவேண்டும் என்ற கொள்கையோடு வாழ்ந்த கலைஞர் பாலச்சந்தர். அவர் இயக்கிய படங்கள் எம்.ஜி.ஆர் படம், சிவாஜி படம் என்று நடிகர்களின் படங்களாக இல்லாமல், பாலச்சந்தரின் படமாக இருக்கவேண்டும் என்று செயல்பட்டவர். இந்த நிலம் இருக்கும் நன்னிலம் இருக்கும் வரை அவர் புகழ் இருக்கும் ’ என்றார் அவர்.

இயக்குனர் மனிரத்தினம் பேசுகையில், ‘சினிமா என்பது நடிகர்கள் மட்டுமே ஆட்சி செய்யும் இடம் என்பதை மாற்றி அது இயக்குனர்கள் போன்ற திரைக்கு பின்னால் பணியாற்றும் இடம் என்பதை நிரூபித்துக் காட்டிவர் பாலச்சந்தர். அவர் படமான இருகோடுகள்தான் என் வாழ்க்கையை மாற்றிப்போட்ட படம். சிறுவயதில் அவரது ரசிகனாக இருந்த நான் பின்னாளில் அவர் அருகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம். பாலச்சந்தர் என்கிற பள்ளியில் வெளியில் இருந்து படித்தேன். அவரது கவிதாலயா தயாரிப்பில் எனது ரோஜா படம் வெளியாகும் முன்பு அந்த படத்தை அவருக்கு போட்டுக்காட்டினேன். அதை அப்போது பார்த்துவிட்டு பாராட்டியே சென்றார். இதனால் நான் பாஸ்மார்க் வாங்கிவிட்டேனா என்று அப்போது எனக்கு தெரியாது. படம் வெளியாகி சில ஆண்டுகள் கழித்து இயக்குனர் பாரதிராஜாவிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது, படத்தை நான் போட்டுக்காட்டிய அன்று இரவே அதுகுறித்து தன்னிடம் பாலச்சந்தர் அரை மணிநேரத்திற்கு மேலாக புகழ்ந்து பேசியதாக பாரதிராஜா என்னிடம் சொன்னார். அவரிடம் எனக்கான பிணைப்பு என்று மறக்கமுடியாதவை. அவருடன் கோவையில் நடந்த விழாவிற்கு சென்றுவிட்டு கிளம்பியபோது என் தோளின் மீது கைவைத்து விடைகொடுத்து அனுப்பினார். அந்த கை இன்றும் என் தோளில் இருப்பதாகவே உணருகின்றேன்’ என்றார்.இறுதியாக பேசிய கவிஞர் வைரமுத்து பேசுகையில், ‘இயக்குனர் சிகரம் பாலச்சந்தருக்கு வெண்கல சிலைதான் வைரமுத்துவால எடுக்கமுடிந்தது. பாலச்சந்தர் என்கிற பெருமகனுக்கு அந்தக் கலையின் முன்னோடிக்கு தன் நெஞ்சில் மூச்சு உள்ளவரை திரையை சுமந்திருந்த பெருமகனுக்கு நான் மட்டும் புவி அரசனாக இருந்திருந்தால் 80 கிலோ தங்கத்தில் சிலை எடுத்திருப்பேன். சிலையை ராஜம் பலச்சந்தர் திறந்துவைத்து அவர் ஒரு ரோஜா மாலையை எடுத்துவீசினார். அதைப்பார்த்து நெகிழ்ந்து என் கண்கள் பணித்தன, என் நெஞ்சம் நெகிழ்ந்தது. இந்த வீட்டு மருமகளாக வந்தவர். கே.பாலச்சந்தருக்கு மனைவியாகி, இந்த வீட்டு வளாகத்தில் கணவரின் சிலைக்கு மாலை அனிவித்திருக்கிறார். 86 ஆண்டுகளுக்கு முன்பு இதே எதிரில், இதே தெருவில், குவா, குவா என்று குரல் கேட்டது. தலைமேல் இருக்கும் நட்சத்திரம் அறிந்திருக்காது. தமிழ் சினிமாவுக்கு மாற்று சினிமா தரவந்த கலைஞர் என்று. உறவினர்களுக்கே தெரியாது தாதா சாகேப் பால்கே விருது பெறப்போகும் பிள்ளை என்று, தமிழ்க்கலை உலகிற்கு ரஜினி, கமல் போன்ற கலைஞர்களைத் தரப்போகும் என்று.

காற்று அறிந்திருக்காது இந்த இடத்தில் கலையாக உருவானவர் சிலையாக வரப்போகிறார் என்று. நீங்களும் நானும் கொடுத்துவைத்தவர்கள் ஊரே கூடியிருந்து விழாவை கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. பாலச்சந்தர் தனிமனிதன் அல்ல; ஒரு நிறுவனம். அந்த நிறுவனம் மூலம் தமிழ் திறையுலகம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் ஏராளம். ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்த ஒருவர், தன்னுடைய  வாழ்க்கையை சாதாரண கிராமத்தில் துவங்கிய ஒருவர் ஜனாதிபதியிடம் சென்று தாதா சாகேப் பால்கே விருது வாங்கி வாங்கியிருக்கிறார் என்றால், இங்குள்ள இளைஞர்கள் தம்பிகள், தங்கைகள் உங்களுக்குள்ளும் இந்த ஆற்றல் இருக்கிறது என்பதை இந்த சிலை மெளனமாக ஊக்குவிக்கிறது. 

தமிழ் கலைஉலகமும் இளைய சமுதாயமும் கற்றுக்கொள்ளவேண்டும். தமிழ்நாட்டுக்கு இவர் ஒரு பாடம், தமிழர்களுக்கு இது ஒரு உற்சாக சின்னம், இது ஒரு குறியீடு . இந்த குறியீட்டின் மூலமாக தமிழ்க்கலை மீளவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். திறைத்துறையில் வெற்றிபெறுவது என்பது முள்ளின் மீது நடந்து தேன் எடுப்பது போன்றது. பாலச்சந்தர் திரையுலகத்திற்கு வந்த போது நிறுவனங்கள் தான் இருந்தன. அந்த நிறுவனங்களையெல்லாம் தாண்டி ஒருவர் சென்றுவிட முடியாது. ஜெமினி, ஏ.வி.எம்.பிரசாத், சத்யா ஸ்டுடியோ இப்படிப்பட்ட நிறுவனங்கள் தான் இருந்தன. தயாரிப்பாளர்கள், நடிகர்களின் ஆதிக்கம் இருந்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் என்று தமிழ்நாட்டில் நடிகர்களின் ஆதிக்கம் இருந்தது. ஸ்ரீதர், கேஎஸ் கோபாலகிருஷ்ணன், ஐவிநாகராஜன், பீம்சிங் பா, நீலகண்டன் போன்ற இயக்குனர்களின் ஆதிக்கம் இருந்தது. தயாரிப்பு என்னும் கோட்டையை உடைத்து, நிறுவனம் என்ற எல்லையை தாண்டி, நடிகர்கள் என்னும் பெரும் சுவரை தாண்டி நட்சத்திர ஆதிக்கத்தை எல்லாம் தாண்டி ஒருவர் புகழ்கொடி நாட்டினார் என்றால் அது சாதனையின் சிகரம் என்று கரவொலி எழுப்பி கொண்டாட வேண்டும். 

சினிமாவில் மூட நம்பிக்கையை உடைக்கவேண்டும் என்றவகையில் திரைப்படங்களை தயாரித்தார். நீர்க்குமிழி என்று படத்தின் பெயர் வைப்பதற்கு கலைஞனுக்கு ஒரு துணிச்சல் வேண்டும். பாலச்சந்திரன் படங்களில் காட்சிப்படிவங்கள் அதிகம் இருக்கும் சினிமாவை சினிமா போல் எடுத்தார். சினிமா துவங்கிய காலத்தில் மெளன படமாக இருந்தது. அதன் கதாநாயகன் சார்லி சாப்லின் மெளன யுகத்தின் புரட்சியாளன் சினிமா பேசுகிறது என்று அழுதார். அய்யோ கலையே போய்விட்டது என்றும், சினிமா என்பது பேசும் இயந்திரமல்ல சினிமா என்பது இசையல்ல, சினிமாவே போய்விட்டதாக அழுதார் சாப்ளின். அந்த அழுகையை உடைத்தெரிந்தவர்களில் முக்கியமானவர்களில் இந்தியாவில், தமிழகத்தில் பாலசந்தரும் ஒருவர். காட்சிகள் வார்த்தைகளையும், லட்சியங்களையும், கவிதைகளையும் திரட்டிக்காட்டும் ஊடகம் தான் சினிமா சொற்களில் சொல்லமுடியாத ஒருவிஷயத்தை பாலச்சந்தர் காட்சிகளில் சொல்லியிருப்பார். அவரது படங்களில் தோல்விபடங்களே இல்லை. புரிந்துகொள்ளாத படங்கள் மட்டுமே உண்டு. பால் உணர்வுகளை கூட தன் படங்களில் நாகரிகமாக கலையாக வெளிப்படித்தியவர். 

பாலச்சந்தர் பிறந்த ஊருக்காக என்ன செய்தார் என்ற கேள்விகள் எழுவதாக தெரிகிறது. அவரை உங்கள் சட்டமன்ற, வார்டு உறுப்பினராக மாற்ற நினைக்காதீர்கள். அவர் மகா கலைஞர். இந்த ஊருக்கு மட்டுமல்ல மொத்த பிரபஞ்சத்திற்கே கலை செய்தவர். அவரின் கலையால் நூற்றுக்கணக்கான கலை வாரிசுகள் வருவார்கள். கலைஞர்கள் ஊருக்கு பெய்யும் மழை போன்றவர்கள். தயவு செய்து உங்கள் வீட்டு குடிநீர் குழாய்களில் எதிர்பார்க்காதீர்கள். பல விழாக்களில் பங்கேற்கும் போது ஏற்படாத நிறைவு சில விழாக்களில் கலந்து கொள்ளும் போது ஏற்படும் அந்த வகையில் இந்த விழா என் நெஞ்சம் நிறைந்த விழா’ என்றார். 

- க.செல்வகுமார்   

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : selvarajan Date :7/13/2017 10:11:29 PM
அரங்கேற்றம் படத்தின் மூலம் தன் ஜாதியை இழிவு படுத்தியவர். தமிழ் காலாச்சார சீரழிவு முயற்சியில் கமலஹாசனைபோல் இவருக்கும் பங்குண்டு.