Add1
logo
திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் திடீர் தர்ணா போராட்டம் || இரயில் பெட்டியில் தீ விபத்து || ஆன்லைன் மணல் விற்பனை சேவை தொடக்கம் || கூடங்குளம் 2-வது அணு உலையில் மின்உற்பத்தி செயல்பட தொடங்கியது || சென்னையில் 5 பாலங்கள் கட்டப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி || சென்னை லயோலா கல்லூரி அருகே காரில் தீ விபத்து || ரேஷன் சர்க்கரையை பாக்கெட்டில் வழங்க முடிவு || டிஜிபி லோக்நாத் பெஹேரா மீண்டும் நியமனம் || இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், விரைவில் ஓய்வு பெற முடிவு || சட்ட மன்ற வைரவிழா மற்றும் கலைஞரின் 94 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் || புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு குழு தேவை: ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தல் || கடலூரில் கிராமப்புற பேருந்து கோரி போக்குவரத்து பணிமனை முற்றுகை || பாலியல் துன்புறுத்தல் கிராமநிர்வாக அலுவலர் பணியிடைநீக்கம் - கோட்டாச்சியர் நடவடிக்கை ||
முக்கிய செய்திகள்
ஆயர் இல்லம் முற்றுகை - உயிருக்கு பயந்து ஓடி ஒளியும் பிஷப்; திருச்சியில் பதட்டம்
 ................................................................
குட்கா விசாரணை முறைப்படி நடக்க வேண்டும் : கதிராமங்கலத்தில் வாசன்
 ................................................................
அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
 ................................................................
குட்கா உரிமையாளரிடம் அமைச்சர் லஞ்சம் வாங்கியதாக புகார்: சட்டப்பேரவையில் திமுக வெளிநடப்பு
 ................................................................
டி.என்.பி.எஸ்.சி. தொகுதி-1 தேர்வில் ஊழல்: ராமதாஸ் திடுக்கிடும் தகவல்
 ................................................................
தனியார் பால் அனைத்திலும் கலப்படம் என நான் கூறவில்லை: ராஜேந்திர பாலாஜி பேட்டி
 ................................................................
உங்க பவரை காட்டுங்க...! சசியிடம் சொன்ன தினகரன்!
 ................................................................
எம்.பி. கோ.அரிக்கு கொலை மிரட்டல்: காவல் நிலையத்தில் புகார்!
 ................................................................
ரகசிய அறிக்கை: கோட்டை ஏரியாவில் பதைபதைப்பு
 ................................................................
நிம்மதியா இருக்க விடுங்க! கெஞ்சிய எடப்பாடி!
 ................................................................
செய்யது பீடி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!
 ................................................................
வருமான வரித்துறையினர் சுதந்திரமாக செயல்பட வேண்டும் - திருநாவுக்கரசர்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (22:49 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (22:53 IST)


கட்சி ஒரு குடும்பத்தின் பிடியில் - தர்மயுத்தம் தொடரும்:
ஒ.பி.எஸ். முழக்கம்

நெல்லை, குமரி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய அ.தி.மு.க.வின் (புரட்சித் தலைவி அம்மா அணி) ஒ.பி.எஸ்.அணியின் முதல் செயல் வீரர்கள் கூட்டம் நெல்லையில் உள்ள பெல் மைதானத்தில் ஜூன்-18 அன்று மாலையில் நடந்தது.மைதானத்தில் ஆயிரக்கணக்கில் திரண்ட செயல் வீரர்களின் கூட்டத்தின் தலைமை மனோஜ்பாண்டியன். முன்னாள் அமைச்சர்களான கே.பி.முனிசாமி நத்தம் விஸ்நாதன் ராஜகண்ணப்பன். எம்.எல்.ஏ.க்களான சரவணன், ஆறுகுட்டி வனரோஜா மனோகரன், மற்றும் மதுசூதனன், எம்.பி.மைத்ரேயன், மாஜி, சபா பி.எச்.பாண்டியன், செம்மலை பாண்டியராஜன், பொன்னையன், ஏ.கே.சீனிவாசன் சண்முகநாதன், ஜெயபால், எம்.பி.க்கள் சுந்தரம், சத்தியபாமா, உள்ளிட்ட ஒ.பி.எஸ். அணியின் முன்னணித் தலைவர்கள் அனைவருடன் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார்.
 
கூட்டத்தில் பேசிய மனோஜ் பாண்டியன் அம்மா எனக்குப் பதவி கொடுத்தார்கள் ராஜ்ய சபா எம்.பி.பதவியையும் தந்தார்கள் என் குடும்பத்தாரோடு நான் அம்மாவின் வீட்டில் உணவருந்தியவன். எனக்கு அங்கீகாரம் கொடுத்தவர். அப்படிப்பட்டவரின் மரணத்திற்கு யார் காரணமாக இருந்தலும் விடமாட்டோம் சிறைக்குச் செல்வார்கள் என்றார்.
 
முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் பேச்சில்.
 
இந்த இயக்கத்திற்காக 1972லிருந்து உழைத்தவர்கள் நாங்கள். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு பிழைக்க வந்த கூட்டம் இப்போது ஆட்சியைக் கைப்பற்றத்துடிக்கிறார்கள். 14 ஆண்டுகள் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் தினகரன். அவர் எம்.எல்.ஏ. முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். இந்த இயக்கத்தை வழி நடத்துகிற திறமை ஒ.பி.எஸ்.சுக்குத்தான் உண்டு. சர்க்கரை மூட்டை வியாபாரியான எடப்பாடி பழனிசாமி அரசு இடுப்பொடிந்த அரசு. இந்த அரசு ஒடாது என்றார் காட்டமான தொனியில்.
 
பின்னர் பேசிய பி.எச்.பாண்டியன்.
 
இன்று ஒருவர் நான் பொதுச் செயலாளர் என்று சொல்கிறார். அவரது காண்டாக்ட் நம்பர் 7293 இது செல் நம்பர் இல்லை. அவரது சிறை எண். இன்னொருவர் மீது 4 வழக்குகள். ஒரு வழக்கிற்கு 4 ஆண்டுகள் வைத்துக் கொண்டாலும் 16 ஆண்கள் அவர் வெளியே வரமுடியாது. அவர் தான் துணை பொதுச்செயலாளர் என்கிறார்.
நாங்கள் என்ன இளிச்சவாயன்களா?. இதற்காகவா தென்பாண்டி மண்டலத்தில் நாங்கள் இருக்கின்றோம். அவர் மீதான வழக்கில் இந்தியப் பிரஜை சிங்கப்பூர் பிரஜை என்று மாற்றி மாற்றிக் கூறியிருக்கிறார். அந்த அளவுக்குப் பொய் சொல்கிறார். என்றார் ஆவேசமான தொனியில்
 
நிறைவாகப் போசி ஒ.பி.எஸ்.
 
1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வைத் தொடங்கிய போது அதை மக்கள் இயக்கமாக அமைத்தார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இந்த இயக்கத்தை தொண்டர்களின் இயக்கமாக வளர்த்தனர். எந்த ஒரு குடும்பத்தின் கையிலும், சிக்கி விடக் கூடாது என்று அவர்கள் நினைத்தர்கள். ஆனால் இப்ப நிலைமை மாறி விட்டது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா யாரையெல்லாம் கட்சியிலிருந்து நீக்க வைத்தாரோ அவர்கள் பிடியில் தற்போது கட்சி சிக்கியுள்ளது. அவர்களிடமிருந்து கட்சியை மீட்க வேண்டும். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மமுடிச்சுகள் அவிழும் வரை எங்களின் தர்மயுத்தம் தொடரும் என்றார். கூட்டத்தில் பங்கேற்ற ஒ.பி.எஸ்.சிற்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
 
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :