Add1
logo
மத்திய அரசு மாநில அரசு காலில் மண்டியிட்டு கிடக்கிறது- நெடுவாசலில் நூதன போராட்டம் || உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின் பேட்டி || சேற்றில் சிக்கி 12 வயது சிறுவன் பலி! || ஜூலை 17ல் தொடங்குகிறது பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் || சுயம்பீஸ்வரர் ஆலயத்தில் விலை உயர்ந்த மரகத லிங்கம் சிலை திருட்டு! (படம்) || இந்தியில் கடவுச்சீட்டு வழங்கினால், தமிழிலும் வழங்க வேண்டும்: ராமதாஸ் || கையடக்க செயற்கைகோள் உருவாக்கிய ரிபாத் ஷாரூக் ரூ.10 லட்சம் பரிசு || உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிகள் 6 மாத காலத்துக்கு நீட்டிப்பு! || மாநிலப்பாட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ் || நாகா்கோவிலில் ஊா்காவல் படையினர் விளையாட்டு போட்டிகள் தொடக்கம்! (படங்கள்) || தம்பிதுரை சுயநலத்திற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்: முருகுமாறன் எம்.எல்.ஏ., பேட்டி || தம்பிதுரையின் பேட்டிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது: அதிமுக எம்.பிகள் பேட்டி || உருண்டு, புரண்டு மனு அளிக்கும் போராட்டம்: தீபா ஆதரவாளர்கள் கைது! (படங்கள்) ||
தமிழகம்
மத்திய அரசு மாநில அரசு காலில் மண்டியிட்டு கிடக்கிறது- நெடுவாசலில் நூதன போராட்டம்
 ................................................................
சேற்றில் சிக்கி 12 வயது சிறுவன் பலி!
 ................................................................
சுயம்பீஸ்வரர் ஆலயத்தில் விலை உயர்ந்த மரகத லிங்கம் சிலை திருட்டு! (படம்)
 ................................................................
இந்தியில் கடவுச்சீட்டு வழங்கினால், தமிழிலும் வழங்க வேண்டும்: ராமதாஸ்
 ................................................................
கையடக்க செயற்கைகோள் உருவாக்கிய ரிபாத் ஷாரூக் ரூ.10 லட்சம் பரிசு
 ................................................................
உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிகள் 6 மாத காலத்துக்கு நீட்டிப்பு!
 ................................................................
மாநிலப்பாட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்
 ................................................................
உருண்டு, புரண்டு மனு அளிக்கும் போராட்டம்: தீபா ஆதரவாளர்கள் கைது! (படங்கள்)
 ................................................................
அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!
 ................................................................
கடலூர் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி 10 கிராம மக்கள் போராட்டம்!
 ................................................................
கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தை உடனே செயல்படுத்துக: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
பிரேத பரிசோதனை செய்ய பணம் கேட்ட மருத்துவரை கண்டித்து சாலை மறியல்
 ................................................................
செயற்கைக்கோளில் புதுமை படைத்த முகமது ரிஃபோத் ஷாரூவுக்கு வேல்முருகன் பாராட்டு!
 ................................................................
நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன: வைகோ
 ................................................................
முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் பொறுப்பாளருக்கு அரிவாள் வெட்டு!
 ................................................................
திருப்பதி அருகே செம்மரம் கடத்தல்: தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது!
 ................................................................
இன்றைய ராசி பலன்
 ................................................................
“புண்ணாக்கு கடை வைக்கிறோம்” என கூறி மதுக்கடை அமைத்த அதிகாரிகளை கண்டித்து பெண்கள் போராட்டம்!
 ................................................................
சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு
 ................................................................
நகைக்கடையில் கொள்ளை; 32-வயது இளைஞர் 33-வது முறையாக சிறை
 ................................................................
வீடுகளில் “டாஸ்மாக்” சரக்கு விற்பனை செய்த பத்து பேர் கைது
 ................................................................
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 34 பேருக்கு ரூ.10,085 அபராதம்!
 ................................................................
கொளத்தூர் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை
 ................................................................
பேரறிவாளன், சாந்தன் உள்பட 7 பேருக்கு பரோல் வழங்கவேண்டும் - சீமான்
 ................................................................
வக்கீல் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (20:48 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (20:48 IST)



ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன் 
தொழிலதிபர்களுடன் கலந்து பேசியிருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் 


வணிகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, தமிழக சட்டப்பேரவையில் இன்று (19-06-2017) ஜி.எஸ்.டி., சட்ட மசோதாவை அதிமுக அரசு நிறைவேற்றியதை கண்டித்தும், ஜி.எஸ்.டி. சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், சட்டமன்றத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
 
இதுகுறித்து, மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:
 
ஸ்டாலின்: ஜி.எஸ்.டி., மசோதாவை அறிமுகப்படுத்திய நேரத்தில், அதற்கு நாங்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும், அதுகுறித்து இன்று விவாதம் நடைபெற்றபோது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள், இதில் இருக்கக்கூடிய பிரச்னைகளை, சங்கடங்களை, எந்தெந்த பொருளுக்கு வரி அதிகமாக இருக்கிறது, எதையெல்லாம் குறைக்க வேண்டும் என்பதை எல்லாம் தெளிவாக எடுத்துச் சொன்னார்.
 
அதுமட்டுமல்ல, வாட் வரி விதிக்கப்பட்ட நேரத்தில், அப்போது திமுக ஆட்சி நடைபெற்று, முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் சம்பந்தப்பட்ட வணிகப் பெருமக்கள், தொழிலதிபர்கள் அத்தனை பேரையும் அழைத்து, கூட்டம் நடத்தி, அவர்களுடன் கலந்து பேசி, அவர்களுடைய கருத்துகளை எல்லாம் கேட்டு, அதன் பிறகுதான் அதனை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். ஆகவே, நியாயமாக ஜி.எஸ்.டி. சட்டமுன் வடிவை இன்று இந்த அவையில் நிறைவேற்றுவதற்கு முன்னால், இதனால் பாதிக்கப்படக்கூடிய வணிகர்கள், தொழிலதிபர்கள், அதற்கான அமைப்புகளை எல்லாம் அழைத்து, பேசியிருக்க வேண்டும். அந்த முறையை இந்த அரசு கையாளவில்லை.
 
அதன் பிறகு கடைசியாக, இதை செலக்ட் கமிட்டிக்கு அனுப்பி, அதன் பிறகு இந்த சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் வைக்கலாம் என்ற கருத்தையும் நான் திமுக சார்பில் தெரிவித்தேன். அதையும் இந்த அரசு ஏற்காத காரணத்தால், இந்த சட்டத்தை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றிய நேரத்தில், அதனைக் கண்டித்து, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். 
 
செய்தியாளர்: குதிரை பேரம் நடத்தப்பட்டு இருப்பதாக சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்திரவிட்டு இருப்பதை முதல்கட்ட வெற்றியாக கருதுகிறீர்களா?
 
ஸ்டாலின்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இப்போது இல்லை. குதிரை பேரத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு நான் சட்டமன்றத்திலும் போராடுகிறேன். மக்கள் மன்றத்திலும் போராடிக் கொண்டிருக்கிறேன். இப்போது நீதிமன்றத்துக்கும் சென்று போராடுகிறேன். எங்காவது நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.






 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :