Add1
logo
மத்திய அரசு மாநில அரசு காலில் மண்டியிட்டு கிடக்கிறது- நெடுவாசலில் நூதன போராட்டம் || உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின் பேட்டி || சேற்றில் சிக்கி 12 வயது சிறுவன் பலி! || ஜூலை 17ல் தொடங்குகிறது பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் || சுயம்பீஸ்வரர் ஆலயத்தில் விலை உயர்ந்த மரகத லிங்கம் சிலை திருட்டு! (படம்) || இந்தியில் கடவுச்சீட்டு வழங்கினால், தமிழிலும் வழங்க வேண்டும்: ராமதாஸ் || கையடக்க செயற்கைகோள் உருவாக்கிய ரிபாத் ஷாரூக் ரூ.10 லட்சம் பரிசு || உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிகள் 6 மாத காலத்துக்கு நீட்டிப்பு! || மாநிலப்பாட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ் || நாகா்கோவிலில் ஊா்காவல் படையினர் விளையாட்டு போட்டிகள் தொடக்கம்! (படங்கள்) || தம்பிதுரை சுயநலத்திற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்: முருகுமாறன் எம்.எல்.ஏ., பேட்டி || தம்பிதுரையின் பேட்டிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது: அதிமுக எம்.பிகள் பேட்டி || உருண்டு, புரண்டு மனு அளிக்கும் போராட்டம்: தீபா ஆதரவாளர்கள் கைது! (படங்கள்) ||
தமிழகம்
மத்திய அரசு மாநில அரசு காலில் மண்டியிட்டு கிடக்கிறது- நெடுவாசலில் நூதன போராட்டம்
 ................................................................
சேற்றில் சிக்கி 12 வயது சிறுவன் பலி!
 ................................................................
சுயம்பீஸ்வரர் ஆலயத்தில் விலை உயர்ந்த மரகத லிங்கம் சிலை திருட்டு! (படம்)
 ................................................................
இந்தியில் கடவுச்சீட்டு வழங்கினால், தமிழிலும் வழங்க வேண்டும்: ராமதாஸ்
 ................................................................
கையடக்க செயற்கைகோள் உருவாக்கிய ரிபாத் ஷாரூக் ரூ.10 லட்சம் பரிசு
 ................................................................
உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிகள் 6 மாத காலத்துக்கு நீட்டிப்பு!
 ................................................................
மாநிலப்பாட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்
 ................................................................
உருண்டு, புரண்டு மனு அளிக்கும் போராட்டம்: தீபா ஆதரவாளர்கள் கைது! (படங்கள்)
 ................................................................
அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!
 ................................................................
கடலூர் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி 10 கிராம மக்கள் போராட்டம்!
 ................................................................
கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தை உடனே செயல்படுத்துக: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
பிரேத பரிசோதனை செய்ய பணம் கேட்ட மருத்துவரை கண்டித்து சாலை மறியல்
 ................................................................
செயற்கைக்கோளில் புதுமை படைத்த முகமது ரிஃபோத் ஷாரூவுக்கு வேல்முருகன் பாராட்டு!
 ................................................................
நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன: வைகோ
 ................................................................
முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் பொறுப்பாளருக்கு அரிவாள் வெட்டு!
 ................................................................
திருப்பதி அருகே செம்மரம் கடத்தல்: தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது!
 ................................................................
இன்றைய ராசி பலன்
 ................................................................
“புண்ணாக்கு கடை வைக்கிறோம்” என கூறி மதுக்கடை அமைத்த அதிகாரிகளை கண்டித்து பெண்கள் போராட்டம்!
 ................................................................
சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு
 ................................................................
நகைக்கடையில் கொள்ளை; 32-வயது இளைஞர் 33-வது முறையாக சிறை
 ................................................................
வீடுகளில் “டாஸ்மாக்” சரக்கு விற்பனை செய்த பத்து பேர் கைது
 ................................................................
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 34 பேருக்கு ரூ.10,085 அபராதம்!
 ................................................................
கொளத்தூர் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை
 ................................................................
பேரறிவாளன், சாந்தன் உள்பட 7 பேருக்கு பரோல் வழங்கவேண்டும் - சீமான்
 ................................................................
வக்கீல் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (20:12 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (20:12 IST)

பள்ளி மாணவியை காதலித்த சட்ட கல்லூரி மாணவர் - 
ஜோடியாக விஷம் குடித்து மரணம் !

திருச்சி பொன்மலை ‘ஜி’ கார்னர் அருகே மாட்டிறைச்சி கூடம் அமைந்துள்ளது. இதன் பின்புறம் இன்று காலை வாலிபர் ஒருவரும், அவருக்கு அருகிலேயே இளம்பெண் ஒருவரும் மயங்கி நிலையில் கிடந்தனர்.

அந்த வழியாக சென்றவர்கள் அருகில் சென்று பார்த்த போது அவர்கள் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தனர். எனவே அவர்கள் வி‌ஷம் குடித்திருக்கலாம்  என்பதை அறிந்து  உடனடியாக இதுகுறித்து திருச்சி கண்டோன்மெண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பால்ராஜ், சப்-இன்ஸ் பெக்டர் பிரைட் மனோகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அந்த வாலிபர் இறந்து கிடந்தார். ஆனால் பெண்ணுக்கு உயிர் இருந்தது.

உடனே அந்த பெண்ணை மீட்ட போலீசார் ஆம்புலன்சு வேன் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கினர். அதில் பரபரப்பு தகவல் கிடைத்தது.

இறந்து கிடந்த வாலிபர் பெயர் பிரகாஷ் (வயது 21) என்றும், ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள அம்பேத்கார் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் என்றும் தெரியவந்தது. பிரகாஷ் திருச்சி சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். அப்போது ஈரோட்டை சேர்ந்த மாணவி அக்‌ஷயாவை காதலித்து வந்துள்ளார்.

மாணவி அக்‌ஷயா ஈரோட்டில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அருந்ததியர் வகுப்பை சேர்ந்த பிரகாஷ் காதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. இதை திருச்சி சட்டக்கல்லூரியில் தன்னுடன் படிக்கும் மாணவர்களிடம் பிரகாஷ் கூறியுள்ளார்.

அதற்கு நண்பர்கள் உனது காதலிக்கு வயது குறைவு என்பதாலும், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் காதலை கைவிட்டுவிடும்படி கூறியுள்ளனர்.

ஆனால் பிரகாஷ் தனது காதலை கைவிட முடியாமல் தவித்துள்ளார். இதை தனது காதலி அக்‌ஷயாவிடமும் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாகவே இருவரும் குழப்பத்தில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில்தான் நேற்று இருவரும் ஈரோட்டில் இருந்து ரெயிலில் திருச்சிக்கு வந்துள்ளனர். இரவில் இருவரும் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அப்போது அதிக வி‌ஷம் குடித்ததால் பிரகாஷ் உயிர் இழந்துள்ளார்.
 
ஆனால் மாணவி அக்‌ஷயா வாந்தி எடுத்ததால் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 மாணவி தொடர்ந்து மயங்கி நிலையில் உள்ளதால் போலீசாரால் மற்ற வி‌ஷயங்களை திரட்ட முடியவில்லை. மாணவியின் பெற்றோருக்கும், பிரகாஷின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் திருச்சிக்கு விரைந்துள்ளனர்.

இதற்கிடையே மாணவர் பிரகாஷ் தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. பிரகாஷின் சட்டை பையில் ஈரோட்டில் இருந்து வந்ததற்கான ஒரே ஒரு ரெயில் டிக்கெட்டு மட்டுமே இருந்தது. அவர்கள் மயங்கி கிடந்த இடத்தில் வி‌ஷ பாட்டில் ஒன்றும் கிடந்தது.  எனவே அவர்களாக வி‌ஷம் குடித்தார்களா அல்லது யாராவது அவர்களுக்கு கட்டாயமாக வாயில் வி‌ஷத்தை ஊற்றினார்களா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

- ஜெ.டி.ஆர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :