Add1
logo
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் || பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வாரா பிரதமர் மோடி? || கமுதி பேரையூர் கண்மாய்க்குள் அழிந்து போன சிவன் கோவிலைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு || ரூ.5 லட்சம் மோசடி; கணவன்-மனைவிக்கு மூன்றாண்டு சிறை || தினகரனுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு? || மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ்.: தனியார் கல்லூரி முதல்வர் பணி நீக்கம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் இருபெரும் மாநாடுகள் || நீட் தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் மீது மத்திய-மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை - ஜி.கே.வாசன் || பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம் || தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு || ஷாப்பிங் மாலில் சசிகலாவை பார்த்தேன்: கர்நாடக காங்கிரஸ் முத்துமாணிக்கம் || தூக்கில் தொங்கிய பட்டதாரி இளைஞன்: காதலியின் முறை மாமன் காரணம் கொதிக்கும் உறவினர்கள் ||
தமிழகம்
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
 ................................................................
கமுதி பேரையூர் கண்மாய்க்குள் அழிந்து போன சிவன் கோவிலைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
 ................................................................
ரூ.5 லட்சம் மோசடி; கணவன்-மனைவிக்கு மூன்றாண்டு சிறை
 ................................................................
மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ்.: தனியார் கல்லூரி முதல்வர் பணி நீக்கம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் இருபெரும் மாநாடுகள்
 ................................................................
நீட் தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் மீது மத்திய-மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை - ஜி.கே.வாசன்
 ................................................................
பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம்
 ................................................................
தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு
 ................................................................
தூக்கில் தொங்கிய பட்டதாரி இளைஞன்: காதலியின் முறை மாமன் காரணம் கொதிக்கும் உறவினர்கள்
 ................................................................
சின்னசேலத்தில் டிராக்டர் மீது ரயில் மோதிய விபத்து: 300 பேர் உயிர் தப்பினர்
 ................................................................
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினகரன் கொடும்பாவி எரிப்பு (படங்கள்)
 ................................................................
மயிலாப்பூரில் தினகரன் உருவபொம்மை எரிப்பு
 ................................................................
விநாயகர் சதுர்த்தி விழா; விதிகளை வகுக்க ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
அமைச்சர்கள் சென்னை வர அவசர உத்தரவு!
 ................................................................
திவாகரனுக்கு சொந்தமான பேருந்து கண்ணாடி உடைப்பு!
 ................................................................
திமுக போராட்டத்துக்கு திவாகரன் ஆதரவு
 ................................................................
தினகரன் - காமராஜ் ஆதரவாளர்கள் மோதல் தடுத்து நிறுத்தம்
 ................................................................
திருவாரூரில் தினகரன் உருவபொம்மை எரிப்பு
 ................................................................
மாநில அரசு இனியும் தலையாட்டிப் பொம்மைதானா?: கி.வீரமணி
 ................................................................
தமிழக மாணவர்களுக்கு, தமிழக அரசு அநீதி விளைவித்துள்ளது:விஜயகாந்த்
 ................................................................
திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளர் மாற்றம் - டிடிவி அறிவிப்பு!
 ................................................................
சென்னையில் மின்சார பஸ் சோதனை ஓட்டம் (படங்கள்)
 ................................................................
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முற்றுகை
 ................................................................
போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் - தினகரன் உருவபொம்மை எரிப்பு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (20:10 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (20:10 IST)

திருச்சியில் புதிய தமிழகம் பிரமுகர் படுகொலை !

திருச்சி தில்லை நகர் புதுமாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அண்ணாத்துரை (வயது 55). புதிய தமிழகம் கட்சி பிரமுகரான இவர் எடத்தெரு உப்புப்பாறையில் பந்தல்குமார் என்பவரிடம் வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை வழக்கம் போல வீட்டில் இருந்து உப்புப்பாறைக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வரகனேரி முஸ்லிம் மேட்டுத்தெருவில் அவர் சென்ற போது திடீரென ஒரு ஆட்டோ வந்தது.

ஆட்டோவில் இருந்து 4 பேர் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இறங்கினர். அவர்களை பார்த்ததும் அண்ணாத்துரை அதிர்ச்சியடைந்தார். அவரது சட்டையை பிடித்து இழுத்த 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் அவரை வெட்டினர்.

இன்று சம்பவம் நடந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ரத்த வெள்ளத்தில் துடி துடித்த அண்ணாத்துரை அதே இடத்தில் பிணமானார். அண்ணாத்துரையை வெட்டி சாய்த்த 4 பேரும் அவர் இறந்ததை உறுதி செய்த பின்னர் சாவகாசமாக மீண்டும் ஆட்டோவில் ஏறி அங்கிருந்து சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து அறிந்ததும் காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், உதவி கமி‌ஷனர் சீனிவாச பெருமாள் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். கொலையுண்ட அண்ணாத்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல் கட்ட விசாரணை நடத்தினர். அப்போது அண்ணாத்துரையை வெட்டிக் கொலை செய்தது அவரது மகனை கொலை செய்த நபர்கள்தான் என தெரியவந்தது. கடந்த 2016-ம் ஆண்டு அண்ணா துரையின் ஒரே மகனான பிரபாகரன் என்பவரை ஒரு கும்பல் கொலை செய்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் ஒரே ஒரு சாட்சியாக அண்ணாத்துரை உள்ளார். இந்த வாரம் அந்த வழக்கு விசாரணை நடைபெற உள்ள நிலையில் இன்று அண்ணா துரை கொலை செய்யப்பட்டுள்ளார்.

அண்ணாத்துரையை கொலை செய்துவிட்டு ஆட்டோவில் தப்பிச்சென்ற கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

கொலையுண்ட அண்ணாதுரையின் உடலுக்கு புதிய தமிழகம் கட்சி மாவட்ட  நிர்வாகிகள் அய்யப்பன், சங்கர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

- ஜெ.டி.ஆர்.

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :