Add1
logo
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் || பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வாரா பிரதமர் மோடி? || கமுதி பேரையூர் கண்மாய்க்குள் அழிந்து போன சிவன் கோவிலைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு || ரூ.5 லட்சம் மோசடி; கணவன்-மனைவிக்கு மூன்றாண்டு சிறை || தினகரனுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு? || மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ்.: தனியார் கல்லூரி முதல்வர் பணி நீக்கம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் இருபெரும் மாநாடுகள் || நீட் தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் மீது மத்திய-மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை - ஜி.கே.வாசன் || பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம் || தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு || ஷாப்பிங் மாலில் சசிகலாவை பார்த்தேன்: கர்நாடக காங்கிரஸ் முத்துமாணிக்கம் || தூக்கில் தொங்கிய பட்டதாரி இளைஞன்: காதலியின் முறை மாமன் காரணம் கொதிக்கும் உறவினர்கள் ||
முக்கிய செய்திகள்
தினகரனுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு?
 ................................................................
பாஜக நெருக்கடி; பாண்டி to பெங்களூரு செல்லும் தினகரன் எம்.எல்.ஏ.க்கள்!
 ................................................................
திவாகரன் தலைமையில் எஸ்.காமராஜ் வீட்டில் திடீர் ஆலோசனை!
 ................................................................
எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்காக தயாராகும் சொகுசு விடுதி!
 ................................................................
மன்னார்குடியில் பதட்டம் நீடிப்பு - போலீசார் பெருமளவில் குவிப்பு!
 ................................................................
தினகரன் நடவடிக்கை செல்லாது என்றால் கோர்ட்டுக்கு போக தயாரா?
 ................................................................
சிபிஎஸ்இ - மாநில பாடத்திட்டத்தை இணைத்து கேள்வி தயாரித்திருக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
 ................................................................
அ.தி.மு.க. இல்லை... அமித்ஷா தி.மு.க. - தனியரசு பேட்டி!
 ................................................................
ரயில்வே அமைச்சர் ராஜினாமா?
 ................................................................
சபாநாயகர் தனபாலை முதல்வராக்குவோம் என திவாகரன் உறுதி!
 ................................................................
30 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக தங்கதமிழச்செல்வன் கூறுகிறார்!
 ................................................................
மருத்துவ சேர்க்கையில் மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டது: உயர்நீதிமன்றம்
 ................................................................
பாம்பின் நிழலில் தவளைகளாக ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். - தமீம் கருத்து
 ................................................................
கட்சி பொறுப்பிலிருந்து ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா நீக்கம்; டிடிவி தினகரன் அறிவிப்பு!
 ................................................................
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியிடு!
 ................................................................
தமிழ்நாட்டில் ஊழல் அரசு தொடர ஆளுனர் துணை போகக் கூடாது: ராமதாஸ்
 ................................................................
தினகரனுக்கு 37 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமி அரசு பதவி விலக வேண்டும்: திவாகரன் பேட்டி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (18:56 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (19:1 IST)


2019 - தேர்தல் வெற்றிக்காக தலித்துகளைக் குறிவைக்கும் 
முயற்சியில் பாஜக! திருமாவளவன்


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை:

’’குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தலித் சமூகத்தைச் சார்ந்த ராம்நாத் கோவிந்த் அவர்களை பாசக அறிவித்துள்ளது. இது தலித் மக்களின் மீதான கரிசனம் என்று எடுத்துக்கொள்ள இயலாது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு முயற்சியே ஆகும். தலித் மற்றும் பழங்குடியினரின் மதமாற்றத்தைத் தடுக்கவும், பாரதிய சனதாவுக்கு எதிரான தலித் மக்களின் எதிர்ப்பு நிலையை நீர்த்துப்போகச் செய்யவும்தான் தலித்துகளைக் குறிவைத்து பாரதிய சனதா செயல்பட்டு வருகிறது.  அதற்குச் சான்றாகவே இந்தத் தேர்வு என நம்புகிறோம். 

‘பாசக தனது வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் தலித் வேட்பாளர் ஒருவரை அறிவிக்கவேண்டும்’ என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், பாசக வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்காகக் காத்திருந்தது, இப்போது எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடியாக மாறியுள்ளது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் எதிர்க்கட்சிகளின்  பொதுவேட்பாளராக தலித் ஒருவரை அறிவித்திட வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தலித் மற்றும் பழங்குடியின வாக்கு வங்கியைக் குறிவைத்து பாசக காய்நகர்த்தி வந்தது. அதைச் சரியான விதத்தில் காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்கொள்ளாததால் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. குடியரசுத் தலைவர் தேர்தலிலும் தலித் வேட்பாளரைத்தான் பாசக நிறுத்தப்போகிறது என்கிற தகவல், கடந்த சில மாதங்களாகவே பரவி வந்தது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் விழிப்போடு இருந்து வேட்பாளரை அறிவிப்பதில் பாசகவை முந்திக்கொண்டிருக்கவேண்டும். 

குடியரசுத் தலைவராக தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவரை காங்கிரசு கட்சிதான் முதன் முதலில் கொண்டுவந்தது. காங்கிரசால் முன் மொழியப்பட்டிருந்தாலும் கே.ஆர்.நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்தபோது, ஒரு அம்பேத்கரியவாதியாகவே செயல்பட்டார். அப்போது, ஆட்சியில் இருந்த பாசகவின் வகுப்புவாதச் செயல்திட்டங்களை அவர் துணிவோடு தடுத்து நிறுத்தினார். இப்போது, பாசகவால் முன்மொழியப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் , கே.ஆர்.நாராயணன் அவர்களைப்போல ஒரு அம்பேத்கரியவாதி அல்ல. அவர் முழுக்கமுழுக்க பாசகவின் கெள்கைகளை உயர்த்திப்பிடிப்பவர். எனவே, அவரை ஒரு பாசக மற்றும் ஆர்எஸ்எஸின் வேட்பாளராகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது. 

பாசக நிறுத்தியிருக்கும் தலித் வேட்பாளரை எதிர்த்து தலித் அல்லாத ஒருவரை வேட்பாளராக எதிர்க்கட்சிகள் நிறுத்தினால், ‘அவர்கள் தலித் விரோதிகள்’ என்ற விமர்சனத்துக்கு ஆளாகநேரிடும். பாசக அதைத்தான் எதிர்பார்க்கிறது. எனவே, பாசகவின் தந்திரத்தை எதிர்கொள்ள காங்கிரசு, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தலித் ஒருவரை வேட்பாளராக அறிவிக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். 

2019 தேர்தலிலும் வெற்றிபெறவேண்டும் என்கிற நோக்கத்தோடுதான் பாசக தலித் ஆதரவு தோற்றத்தை முன்வைத்து வருகிறது. அதைச் சரியாகப் புரிந்துகொண்டு அதனை முறியடிக்கும் வகையில் தலித் மக்களுக்கு ஆதரவான உத்திகளை வகுப்பதில் காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அக்கறை காட்டவேண்டும். அதில்தான் எதிர்க்கட்சிகளின் வெற்றி அடங்கியிருக்கிறது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறோம். ’’

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Bala Country : India Date :6/19/2017 9:50:21 PM
தமிழ் இடிக்குதே! பா ஜ க என்பது பா ச க என்றால் ஆர் எஸ் எஸ் என்பது ஆர் எச் எச் என்றுதானே இருக்க வேண்டும்!