Add1
logo
ட்ரம்ப்பே வந்தாலும் சரி பயமே கிடையாது! நமக்கு பிரதமர் மோடி இருக்காரு: ராஜேந்திர பாலாஜி || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || தூத்துக்குடி மாநகராட்சி புதிய அலுவலக வளாகத்தில் குளிர்சாதன பெட்டியை ஆணையர் துவக்கி வைத்தார் || அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவல் நிலையத்தில் புகார் || பாஜகவி்ன் கொள்கைகள் ஏற்புடையதாக இல்லை: மகளிரணி செயலாளர் ஜமிலா விலகல்! || விழுப்புரத்தில் விஜயகாந்த் போராட்டம் - பரபரப்பு அறிக்கை || தீபாவளி வெடியின் தாக்கம் நெல்லையில் ஒலி காற்று மாசு அதிகரிப்பு || பா.ஜ.கவிற்கு பினராய் விஜயன் பதில் || மாநகர பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் மறியல் || டாஸ்மாக் ஊழியரிடம் பைக் பறிப்பு || நிதி நிறுவனத்தில் 3.34 லட்சம் மோசடி: மேலாளர் கைது || டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெங்கைய நாயுடு அனுமதி || டெங்கு காய்ச்சலுக்கு யாரும் பலியாகவில்லை: முதல்வர் நாராயணசாமி ||
முக்கிய செய்திகள்
ட்ரம்ப்பே வந்தாலும் சரி பயமே கிடையாது! நமக்கு பிரதமர் மோடி இருக்காரு: ராஜேந்திர பாலாஜி
 ................................................................
இன்றைய (20.10.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
மெர்சல் திரைப்படத்திலிருந்து ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகள் நீக்கம்..!!
 ................................................................
நிலவேம்புக் குடிநீர் பக்கவிளைவுகள் கொண்டதா? - சித்த மருத்துவரின் விளக்கம்!
 ................................................................
நான் டாக்டர் இல்லை! டாக்டர்கள் கூறிய கருத்தையே நான் தெரிவித்தேன்! அமைச்சர் சீனிவாசன் திடீர் பல்டி!!!
 ................................................................
பால் நிறுவனங்கள் குறித்து ராஜேந்திர பாலாஜி பேச விதிக்கப்பட்ட தடை தொடரும் - ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல்: தடுக்காமல் அரசு தூங்கக் கூடாது!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
8 பேரைக்கொன்ற பொறையாறு பணிமனை விபத்து: பினாமி அரசு விலக வேண்டும்! - ராமதாஸ் கண்டனம்
 ................................................................
திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி: சிஐடி காலனி வருத்தம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (18:19 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (19:2 IST)


நீங்க பேசியது தப்பில்லை: 
திமுக எம்எல்ஏக்களிடம் கைக்குலுக்கி 
பேசிய T.T.V. ஆதரவு M.L.A. 




ஜி.எஸ்.டி வரி விதிப்பு ஜூலை 1 ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் ஜி.எஸ்.டி மசோதாவை ஒத்திவைக்க வேண்டும் என்றும், ஜி.எஸ்.டி மசோதாவை செலக்ட் குழுவிற்கு அனுப்பி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் திமுக கேட்டுக்கொண்டது. ஆனால் திமுக எதிர்ப்பை மீறி தமிழக சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து எதிர்ப்பை மீறி ஜி.எஸ்.டி மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். 

வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்,  சட்டப்பேரவையில் வணிகவரித்துறை தொழில் அமைப்புகள், வியாபாரிகளிடம் அரசு கருத்து கேட்கவில்லை. ஜிஎஸ்டியில் உள்ள குறைகளை பேரவையில் திமுக எடுத்து கூறியது. மேலும் குதிரை பேரத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்றார். 

இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் முடிந்து அனைவரும் புறப்பட்டனர். அப்போது டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கத்தமிழ்ச்செல்வன், திமுக எம்எல்ஏக்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு உள்ளிட்டவர்களை சந்தித்து கைக் கொடுத்து, நீங்க பேசியது தவறில்லையே என்று கூறினார். இதனை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். 

காலையில் தங்கத்தமிழ்ச்செல்வன் எழுந்து, சுகாதாரத்துறை தொடர்பாக நானும் ஒரு கேள்வி கேட்க உள்ளேன். என்னை அனுமதிக்க வேண்டும் என்றார். அதற்கு சபாநாயகர் பேச அனுமதியில்லை என்றார். அப்போது சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் சென்று மற்றவர்களைப்போல என்னை பேச அனுமதிப்பதில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தார். அவர் வெளிநடப்பு செய்ததை பார்த்து அதிமுக உறுப்பினர்கள் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்தனர். அதே நேரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். 

அதேநேரத்தில் சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களிடமும், இந்த செய்தி உடனடியாக மீடியாக்களில் வெளியானதும் தமிழகம் முழுவதும் அதிமுகவினரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாலை நாளிதழ்களில் முக்கிய செய்திகளாக வெளி வந்தது. மாலையில் திமுக எம்எல்ஏக்களை நேரில் சந்தித்து தனக்காக மேஜை தட்டியதற்காகவும், நீங்கள் பேசியது தப்பில்லை என்றும் கைக்குலுக்கி பேசியது அதிமுகவினரிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன். கடந்த சில தினங்களுக்கா டிடிவி தினகரனுக்கு ஆதரவாக எம்எல்ஏக்களை திரட்டி வருகிறார். கடந்த வாரம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கட்சியில் தினகரனுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றும், கட்சி அலுவலகத்தில் அவர் சுதந்திரமாக வந்து செல்ல எந்த இடையூறும் செய்யக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வே.ராஜவேல்
படங்கள்: அசோக்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : selvarajan Date :6/22/2017 1:30:29 PM
தங்கத்தமிழ்ச்செல்வன் செய்தது நியாயம்தான்.
Name : rama subramanian Country : India Date :6/20/2017 10:06:46 AM
தங்க தமிழ்செல்வன் கொண்ட கொள்கையில் உறுதியா இருக்கார் .பாராட்டவேண்டிய விஷயம்
Name : Tamilrosa Date :6/19/2017 6:41:51 PM
ஆட்டம் ஆரம்பம்.
Name : Tamilrosa Date :6/19/2017 6:41:34 PM
ஆட்டம் ஆரம்பம்.