Add1
logo
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார் || சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல் || ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ் || புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி || நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா! || ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல் || கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி || நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது || தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்! || ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் ||
தமிழகம்
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார்
 ................................................................
சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல்
 ................................................................
ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல்
 ................................................................
கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு
 ................................................................
அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி
 ................................................................
நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம்
 ................................................................
சேற்றில் சிக்கிய லாரியில் ரேசன் அரிசி!
 ................................................................
வாய்காலில் கார் கவிழ்ந்து விபத்து - 3 மணி நேர போராட்டத்திற்கு பின் கார் மீட்பு - 3 பேர் பலி
 ................................................................
7 மணி நேரம் ஆம்புலன்ஸ் தராமல் இழுத்தடிப்பு- மாணவி பரிதாப உயிரிழப்பு
 ................................................................
கொடூரன் தஷ்வந்த் புழல் சிறையில் அடைப்பு!
 ................................................................
குமரி மாவட்டத்தைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்திடுக! திருமாவளவன்
 ................................................................
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை!
 ................................................................
மதுசூதனனை ஆதரித்து 2000 இளைஞர்களுடன் பிரச்சாரம்!
 ................................................................
ஆர்.கே.நகரில் தீவிர வாகன சோதனை!
 ................................................................
ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடிக்கு மக்கள் எதிர்ப்பு!
 ................................................................
ஆர்.கே.நகரில் 20,000 பேர் எங்கள் கட்சி உறுப்பினர்கள் - தொப்பி சின்ன வேட்பாளர் எம்.ரமேஷ் அதிரடி!
 ................................................................
'செட்டாப் பாக்ஸ்' வழங்க வசூல்: அதிகாரிகள் பெயரில் அடாவடித்தனம்!
 ................................................................
திருமாவளவன் தலைக்கு 1 கோடி பரிசு அறிவித்தவர் கைது!
 ................................................................
27% ஒதுக்கீட்டை நிறைவேற்றாததது சமூகநீதிக்கு எதிரான துரோகம்! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
உடுமலை அருகே நீருக்குள் மூழ்கிய கார்! - மூவர் பரிதாபமாக உயிரிழப்பு
 ................................................................
சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் சைக்கிளத்தான்!
 ................................................................
இன்னும் முழுமையடையாத 27% ஒதுக்கீடு: சமூகநீதியை காக்க சிறப்புத் திட்டம் தேவை! - ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
ராம்ஜி நகர் திருடர்களின் புது டெக்னிக்! - அதிர்ச்சியில் திருச்சி போலிஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (16:27 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (16:27 IST)

ஊடகச் செய்திகளை வைத்து சட்டசபையில் விவாதிக்க முடியாது: சபாநாயகர் தனபால்

கூவத்தூரில் பண பேரம் நடந்ததாக சரவணன் எம்.எல்.ஏ. பேசியதாக கூறப்படும் வீடியோவை சபாநாயகரிடம் மு.க.ஸ்டாலின் சார்பில் அளிக்கப்பட்டது. 

இதுபற்றி திங்கள்கிழமை சட்டசபையில் சபாநாயகர் தனபால் கூறியதாவது:-

கடந்த வெள்ளிக்கிழமை, 16 ஆம் தேதி “இதோ என் கையில் ஆதாரம் இருக்கிறது” என்று எதிர்க்கட்சித் தலைவர் நேரமில்லா நேரத்தில் அந்த பிரச்சனையை மீண்டும் எழுப்பினார்கள். அதை என்னிடம் கொடுக்கவும் முற்பட்டார்கள். மரபின்படி, விவாதிக்க இருக்கும் குற்றச்சாட்டு குறித்த ஆதாரத்தை பேரவைத் தலைவரிடம் முன்னரே அளித்து, அனுமதி பெற்ற பின்னர்தான் உறுப்பினர்கள் பிரச்சனையை எழுப்ப முடியும் என்கிற காரணத்தால், அவையில் ஆதாரத்தைத் தரக் கூடாது, என்னுடைய அறைக்கு வந்து தாருங்கள், அது என்ன என்று பார்த்து உங்களுக்கு உண்டான பதிலை அளிக்கிறேன் என்றேன்.

புதிதாக ஆதாரம் ஏதோ தருகிறார்கள், அதைப் பரிசீலித்து முடிவெடுக்கலாம் என்று நினைத்து, மரபின்படி, என்னுடைய அறைக்கு வந்து தாருங்கள் நான் பரிசீலிக்கிறேன் என்று அப்போது சொல்லியிருந்தேன். எதிர்க்கட்சித் தலைவர் சார்பாக உறுப்பினர் பிச்சாண்டி என்னுடைய அறைக்கு வந்து ஆதாரமாக ஒரு குறுந்தகட்டை அளித்தார். என்னிடத்திலே கொடுக்கப்பட்ட குறுந்தகட்டை நான் போட்டுப் பார்த்தேன்.

குறுந்தகட்டை போட்டுப் பார்த்தபோதுதான், அதுவும் ஓர் ஊடகச் செய்தியின் நகல் என்று தெரிய வந்தது. ஓர் ஆங்கிலத் தொலைக்காட்சியில் வந்த ஓர் ஒளிபரப்பினைப் பதிவு செய்து ஆதாரமாகக் கொடுத்துள்ளார்கள். மொத்தத்தில் ஊடகச் செய்திதான் எதிர்க்கட்சித் தலைவர் கொடுத்த ஆதாரம்.

ஊடகச் செய்தியை ஆதாரமாக வைத்து விவாதம் நடைபெறக் கூடாது என்பதற்கு ஏற்கெனவே நான் தீர்ப்புரை வழங்கிவிட்டேன். இந்தச் சட்டமன்றப் பேரவையில் பல்வேறு பேரவைத் தலைவர்கள் ஊடகச் செய்தியை ஆதாரமாக வைத்து குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல என்று தீர்ப்புரைத்துள்ளதைச் சுட்டிக்காட்டினேன்.

தொலைக்காட்சியிலோ அல்லது பத்திரிகையிலோ ஒரு செய்தி வந்துள்ளது அல்லது ஒரு குற்றச்சாட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதை மாத்திரம் வைத்துக் கொண்டு அது இங்கே விவாதிக்கப்படுமானால், அது சரியாக இருக்காது. மேலும், பத்திரிகையிலே வந்திருந்தாலும் நிரூபிக்கத்தக்க ஆதாரம் இல்லாத வரையில் அது சம்பந்தமாக அவையில் பேசப்பட்டு, அது பதிவு செய்யப்பட்டால் அது சரியாக இருக்காது என்றே கருதுகிறேன்.

பத்திரிகைகளிலே பல வி‌ஷயங்கள் வருகின்றன, ஒவ்வொரு உறுப்பினரும் அதுபற்றிப் பேச வேண்டும், இங்கே அவையிலே விவாதிக்க வேண்டுமென்று கொண்டு வந்தால் சரியாக அமையுமா என்பதை உறுப்பினர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். குறுந்தகட்டில் பேட்டி அளித்ததாகக் கூறப்படும் உறுப்பினர்களே தாங்கள் அவ்வாறு பேசவில்லை என்பதும் பத்திரிகைச் செய்தியாக வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் ஆதாரம் என எதிர்க்கட்சித் தலைவர் கொடுத்த குறுந்தகட்டில் உள்ள செய்தி, ஓர் ஆங்கில தொலைக்காட்சியில் வந்த ஓர் ஒளிபரப்பின் பிரதி என்பதாலும், அதனை அடிப்படையாகக் கொண்டு, இங்கே பேரவையில் உறுப்பினர்கள் விவாதிக்க சட்டமன்ற விதிகளின்படி அனுமதி தருவதற்கு வழிவகை இல்லாமையாலும், மரபுகளின்படி அதனை ஆதாரமாக ஏற்க முடியாத நிலை உள்ளதாலும், ஏற்கெனவே நான் அளித்த தீர்ப்பை உறுதி செய்து, எதிர்க்கட்சித் தலைவர் ஆதாரமாக அளித்த குறுந்தகட்டு செய்தியை ஆதாரமாகக் கொண்டு அந்தப் பிரச்சனையை இங்கே விவாதிக்க இயலாது எனத் தீர்ப்பளிக்கிறேன்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :