Add1
logo
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார் || சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல் || ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ் || புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி || நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா! || ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல் || கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி || நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது || தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்! || ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் ||
தமிழகம்
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார்
 ................................................................
சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல்
 ................................................................
ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல்
 ................................................................
கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு
 ................................................................
அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி
 ................................................................
நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம்
 ................................................................
சேற்றில் சிக்கிய லாரியில் ரேசன் அரிசி!
 ................................................................
வாய்காலில் கார் கவிழ்ந்து விபத்து - 3 மணி நேர போராட்டத்திற்கு பின் கார் மீட்பு - 3 பேர் பலி
 ................................................................
7 மணி நேரம் ஆம்புலன்ஸ் தராமல் இழுத்தடிப்பு- மாணவி பரிதாப உயிரிழப்பு
 ................................................................
கொடூரன் தஷ்வந்த் புழல் சிறையில் அடைப்பு!
 ................................................................
குமரி மாவட்டத்தைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்திடுக! திருமாவளவன்
 ................................................................
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை!
 ................................................................
மதுசூதனனை ஆதரித்து 2000 இளைஞர்களுடன் பிரச்சாரம்!
 ................................................................
ஆர்.கே.நகரில் தீவிர வாகன சோதனை!
 ................................................................
ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடிக்கு மக்கள் எதிர்ப்பு!
 ................................................................
ஆர்.கே.நகரில் 20,000 பேர் எங்கள் கட்சி உறுப்பினர்கள் - தொப்பி சின்ன வேட்பாளர் எம்.ரமேஷ் அதிரடி!
 ................................................................
'செட்டாப் பாக்ஸ்' வழங்க வசூல்: அதிகாரிகள் பெயரில் அடாவடித்தனம்!
 ................................................................
திருமாவளவன் தலைக்கு 1 கோடி பரிசு அறிவித்தவர் கைது!
 ................................................................
27% ஒதுக்கீட்டை நிறைவேற்றாததது சமூகநீதிக்கு எதிரான துரோகம்! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
உடுமலை அருகே நீருக்குள் மூழ்கிய கார்! - மூவர் பரிதாபமாக உயிரிழப்பு
 ................................................................
சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் சைக்கிளத்தான்!
 ................................................................
இன்னும் முழுமையடையாத 27% ஒதுக்கீடு: சமூகநீதியை காக்க சிறப்புத் திட்டம் தேவை! - ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
ராம்ஜி நகர் திருடர்களின் புது டெக்னிக்! - அதிர்ச்சியில் திருச்சி போலிஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (15:51 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (15:51 IST)

திருவண்ணாமலை மாவட்டத்தில் அருங்காட்சியகம் உடனடியாக அமைத்திட வேண்டும் -எ.வ.வேலு கோரிக்கை
 
திருவண்ணாமலை மாவட்டத்தில் உடனடியாக அருங்காட்சியகம் அமைத்திட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்.

கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முற்பட்ட அடையாளத்துடன் விளங்கும், திருவண்ணாமலையானது நான்கு யுகங்களைக் கடந்து இன்றும் பயன்பாட்டுக்குரிய வாழ்வியல் பெருமையையுடையது. காலந்தோறும் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பே வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு, நாகரீகம் என்ற பன்முகத்தன்மையினை அடைகின்றன. இயற்கையோடு இயைந்திருந்த மனித வாழ்வியல் காலந்தோறும் பல்வேறுப் பரிணாமங்களை அடைந்தப் பதிவுகளை ஆவணப்படுத்த முதன்மைக் கருவியாக அமைந்தது மொழியாகும். தொல்பழங்காலம், கற்காலம், புதிய காலம், வரலாற்று காலம் என மனித நாகரிக வளர்ச்சிக்கேற்ப காலங்கள் ஆய்வாளர்களால் வகைப்படுத்தப்பட்டன. உலகில் தோன்றிய இனங்களுள் தமிழினம் தொன்மையானதுடன் முதன்மையானதும் என்ற சிறப்புக்குரியதாகும். அத்தொன்மையான தமிழினத்தின் பதிவுகளைக் காலந்தோறும் அறிஞர் பெருமக்கள் பதிவுகளாக பதிந்துள்ளனர்.

உலக அளவில் வரலாற்றுத் தொன்மையான பதிவுகளை எல்லாம் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் விதமாக அருங்காட்சியகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அந்தவகையில் திருவண்ணாமலை மாவட்டமானது தொல்பழங்காலம் முதல் தற்காலம் வரையிலான பல வரலாற்றுத் தொன்மங்களைத் தனக்குள்ளே கொண்டிலங்குகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தின் தென்எல்லையில் தென்பெண்ணையாறு ஓடும் பகுதிகள் அனைத்தும் தொன்மையானப் பதிவுகளைக் கொண்டவையாகும். தென்பெண்னையாற்றினை ஒட்டி சின்னியம்பேட்டை சிற்பக்குளம், போந்தை என்ற பெயரையுடைய பழமையான ஊர், தா.மோட்டூர் தாய்தெய்வ சிற்பம், வீரணம்-முதுமக்கள் தாழி, பெருங்குளத்தூர் - முதுமக்கள் தாழி, தொண்டைமானுர்-வாலியர் வீடு, எடத்தனூரில் நாய்க்கான நடுகல், தண்டராம்பட்டு, சாத்தனூர், இராதாபுரம்,சே.கூடலூர், சிறுப்பாக்கம், கோளாப்பாடி, திருவண்ணாமலை, கோசாலை, ஆடையூர், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, படைவீடு, வந்தவாசி, செய்யார், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டு காணப்படும் வீரர்களுக்கான நடுகற்கள், பல்லவர்கள் காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரையிலான வரலாற்றுப் பதிவுகள் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் சிற்பங்களாக, ஓவியங்களாக, கற்றளிகளாக, குளங்களாக காணப்படுகின்றன.  பௌத்த, சமண, சைவ, வைணவ, இசுலாமிய, கிருத்துவச் சமயங்களைச் சார்ந்த ஆலயம், அரண்மனைக் கட்டுமானப் பணிகள் இம்மாவட்டம் முழுவதும் பரவலாக காணப்படுகின்றன. ஜவ்வாதுமலையும் அதனை ஒட்டியும் உள்ள பல பகுதிகள் படைவீடு (படவேடு) முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப் பகுதிகளைக் கொண்டிலங்குகின்றன. இவ்வரலாற்றுத் தொன்மையான அடையாளங்களில் சில இடங்கனை மட்டும் இந்திய, தமிழக தொல்லியல் துறைகளால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பல தொன்மையான அடையாளங்கள் குறிப்பாக உலக அளவில் அதிகமான நடுகற்களைக் கொண்ட பகுதியாக உள்ள திருவண்ணாமலை மாவட்ட நடுகல் சிற்பங்கள் கவனிப்பின்றி, பாதுகாப்பின்றி அழிக்கப்பட்டு வருகின்றன. 

மாதந்தோறும் திருவண்ணாமலைக்கு கிரிவலம் வருவதற்காக பல இலட்சம் மக்கள் ஒன்று கூடும் இப்பகுதியில் 2009-2010 ஆம் ஆண்டில் தலைவர் கலைஞர் ஆட்சியில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த திரு.இராஜேந்திரன் அவர்களின் பெருமுயற்சியால் இம்மாவட்டம் முழுவதும் உள்ள வரலாற்று அடையாளங்கள் சேகரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இத்தொன்மையான அடையாளங்களை பாதுகாத்திடவும் அவ்வடையாளங்களின் வரலாற்றுச் சிறப்புகளை எதிர்வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ளும்வகையில்  இத்திருவண்ணாமலை மாவட்டத் தலைநகரில் ஒரு அருங்காட்சியம் அமைத்திட வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :