Add1
logo
இரயில் பெட்டியில் தீ விபத்து || ஆன்லைன் மணல் விற்பனை சேவை தொடக்கம் || கூடங்குளம் 2-வது அணு உலையில் மின்உற்பத்தி செயல்பட தொடங்கியது || சென்னையில் 5 பாலங்கள் கட்டப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி || சென்னை லயோலா கல்லூரி அருகே காரில் தீ விபத்து || ரேஷன் சர்க்கரையை பாக்கெட்டில் வழங்க முடிவு || டிஜிபி லோக்நாத் பெஹேரா மீண்டும் நியமனம் || இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், விரைவில் ஓய்வு பெற முடிவு || சட்ட மன்ற வைரவிழா மற்றும் கலைஞரின் 94 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் || புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு குழு தேவை: ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தல் || கடலூரில் கிராமப்புற பேருந்து கோரி போக்குவரத்து பணிமனை முற்றுகை || பாலியல் துன்புறுத்தல் கிராமநிர்வாக அலுவலர் பணியிடைநீக்கம் - கோட்டாச்சியர் நடவடிக்கை || ஜெ., நடைமுறைப்படுத்திய திட்டம் முடங்கும் அபாயம்: ஊழியர்கள் தர்ணா ||
முக்கிய செய்திகள்
ஆயர் இல்லம் முற்றுகை - உயிருக்கு பயந்து ஓடி ஒளியும் பிஷப்; திருச்சியில் பதட்டம்
 ................................................................
குட்கா விசாரணை முறைப்படி நடக்க வேண்டும் : கதிராமங்கலத்தில் வாசன்
 ................................................................
அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
 ................................................................
குட்கா உரிமையாளரிடம் அமைச்சர் லஞ்சம் வாங்கியதாக புகார்: சட்டப்பேரவையில் திமுக வெளிநடப்பு
 ................................................................
டி.என்.பி.எஸ்.சி. தொகுதி-1 தேர்வில் ஊழல்: ராமதாஸ் திடுக்கிடும் தகவல்
 ................................................................
தனியார் பால் அனைத்திலும் கலப்படம் என நான் கூறவில்லை: ராஜேந்திர பாலாஜி பேட்டி
 ................................................................
உங்க பவரை காட்டுங்க...! சசியிடம் சொன்ன தினகரன்!
 ................................................................
எம்.பி. கோ.அரிக்கு கொலை மிரட்டல்: காவல் நிலையத்தில் புகார்!
 ................................................................
ரகசிய அறிக்கை: கோட்டை ஏரியாவில் பதைபதைப்பு
 ................................................................
நிம்மதியா இருக்க விடுங்க! கெஞ்சிய எடப்பாடி!
 ................................................................
செய்யது பீடி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!
 ................................................................
வருமான வரித்துறையினர் சுதந்திரமாக செயல்பட வேண்டும் - திருநாவுக்கரசர்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (12:33 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (12:39 IST)


இது தான் காங்கிரஸ்!

எல்லாம்  சரியாகிவிடும் என புது நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியில் எப்போதும் போல முட்டல் மோதல்களுக்கு குறைவேயில்லை. 

ஒன்பது மாதங்களுக்கு முன்பு, மாநில தலைவர் பதவியிலிருந்து இளங்கோவனை நீக்கிவிட்டு புதிய தலைவராக திருநாவுக்கரசரை நியமித்தார் ராகுல். அப்போதிலிருந்தே மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை மாற்றியமைப்பதற்கான ஒப்புதலை பெற்ற திருநாவுக்கரசர், புதிய மாவட்ட தலைவர்களின் பட்டியலை ராகுலுக்கு அனுப்பிவைத்தார். கடந்த 6 மாதங்களாக பட்டியலை கிடப்பில் போட்டிருந்த ராகுல், சமீபத்தில் அதற்கு ஒப்புதல் தர, 61 மாவட்ட தலைவர்கள் இருந்த காங்கிரஸ் கட்சியில் தற்போது 72 மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.சென்னை வடக்கு திரவியம், சென்னை கிழக்கு சிவராஜசேகரன், திருவள்ளூர் மத்தி மகேந்திரன், காஞ்சி வடக்கு ரூபி மனோகரன், காஞ்சி மேற்கு மதியழகன் உட்பட புதிதாக உருவாக்கப்பட்ட 11 மாவட்டங்களிலும் தனது ஆதரவாளர்களையே தலைவர்களாக நியமித்திருக்கிறார் திருநாவுக்கரசர். தவிர, மத்திய சென்னை ரங்கபாஷ்யம், காஞ்சி வடக்கு சிவராமன், திருச்சி ஜெரோம் உள்ளிட்ட இளங்கோவனின் தீவிர ஆதரவாளர்கள் பலரையும் தூக்கி எறிந்து விட்டார் திருநாவுக்கரசர். 

மாவட்டத்திலிருந்து நீக்கப்பட்ட ரங்கபாஷ்யத்திடம் நாம் விசாரித்தபோது, ""உழைப்பவர்களுக்குப் பதவி கொடுத்து அவர்களை அங்கீகரிக்க வேண்டும்ங்கிறதுதான் காங்கிரஸின் அடிப்படை. ஆனா, திருநாவுக்கரசரின் இப்போதைய நியமனங்கள் அதற்கு எதிராக இருக்கிறது. மத்திய சென்னையின் மாவட்ட தலைவராக நான் பதவியில் இருந்த  மூன்றரை வருடத்தில், மூன்று பெரிய பொதுக்கூட்டங்கள், 17 ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மறியல் போராட்டத்தை நடத்தியிருக்கிறேன். ஒவ்வொரு தொகுதியிலும் உழைக்கும் தொண்டர்களை வைத்து பூத் கமிட்டி அமைத்தவன் நான். கட்சிக்காக பாடுபட்ட, என்னைப் போன்றவர்களை திருநாவுக்கரசர் வந்ததற்குப் பிறகு பயன்படுத்திக்கொள்ளவே இல்லை. கடந்த 9 மாதங்களாக சும்மாவே இருந்தோம். உழைப்புக்கு மரியாதை கொடுக்க அவர் விரும்பவில்லை என தெரிந்ததால், சும்மா இருப்பதை விட, நாமளே  ராஜினாமா செய்துவிடலாம் என நினைத்த நிலையில்தான் மாற்றப்பட்டுள்ளோம். 

கட்சிக்கு உழைக்காதவர்கள், கட்சிப்பணி தெரியாதவர்கள், மாநில தலைமையை காக்கா பிடித்தவர்களுக்குத்தான் பதவிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. புதிய தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் அவரோடு எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க.விலும் பா.ஜ.க.விலும் இருந்தவர்கள்தான். மேலும் பல பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் உண்டு. இதையெல்லாம் ஆராயவில்லை. புதிய நியமனங்களின் பின்னணியில் பண விளையாட்டுக்கள் நிறைய நடந்திருக்கின்றன. விரைவில் அதன் ரகசியங்களை வெளியிடுவோம்''’என்கிறார் அதிரடியாக. இதேபோன்ற கருத்துகள்தான் கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள் பலரிடமும் எதிரொலிக்கிறது. 

-இரா.இளையசெல்வன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Vinodh Country : Germany Date :6/19/2017 2:40:17 PM
திருநாவுக்கரசரை நியமிக்க கூடாது என்று கடிதம் எழுதினர். திருநாவுக்கரசர் தலைவராக நியமிக்கப்பட்டார். திருநாவுக்கரசர் பற்றி ஊடகங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பினர். அவர் மாற்றப்படுவார் என்று ரங்கபாஷ்யம் சொன்னார். ஷ்டாலின் ராகுல் காந்தியிடம் பேசியதாக ரங்கா பாஷ்யம் ஊடகங்களில் சொன்னார். ஆனால், ராகுல் காந்தி ஊடகங்களில் பேசினால், நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்து விட்டு சென்றார். அதோடு, மட்டுமல்லாமல் திருநாவுக்கரசர் கொடுத்த மாவட்ட செயலாளர்கள் பட்டியலையும் அங்கீகரித்தார். எனவே, இப்போதைக்கு அவரை ஒன்றும் செய்ய முடியாது. ஊடகங்களில் பேசுபவர்கள், கட்சியை விட்டு நீக்கப் படுவார்கள் என்றே நினைக்கிறேன்.