Add1
logo
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வாரா பிரதமர் மோடி? || கமுதி பேரையூர் கண்மாய்க்குள் அழிந்து போன சிவன் கோவிலைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு || ரூ.5 லட்சம் மோசடி; கணவன்-மனைவிக்கு மூன்றாண்டு சிறை || தினகரனுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு? || மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ்.: தனியார் கல்லூரி முதல்வர் பணி நீக்கம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் இருபெரும் மாநாடுகள் || நீட் தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் மீது மத்திய-மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை - ஜி.கே.வாசன் || பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம் || தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு || ஷாப்பிங் மாலில் சசிகலாவை பார்த்தேன்: கர்நாடக காங்கிரஸ் முத்துமாணிக்கம் || தூக்கில் தொங்கிய பட்டதாரி இளைஞன்: காதலியின் முறை மாமன் காரணம் கொதிக்கும் உறவினர்கள் || சின்னசேலத்தில் டிராக்டர் மீது ரயில் மோதிய விபத்து: 300 பேர் உயிர் தப்பினர் ||
சிறப்பு செய்திகள்
நீதிமன்றத்தின் நெடிய வாசலில் முத்தலாக்..!
 ................................................................
வந்தாச்சு ஆண்ட்ராய்டு ஓரியோ..!
 ................................................................
காட்டிக்கொடுக்கும் அரசியல்!
 ................................................................
சென்னை டி.நகர் உஸ்மான் சாலையின் கதை!
 ................................................................
ஒரு ஜி.பியின் உண்மை மதிப்பு???
 ................................................................
உலகின் முதல் குடியாட்சித் தலைவர்கள்!
 ................................................................
'டன்கிர்க்' பேசிய உண்மைகள்!!!
 ................................................................
இந்தியப் பிரிவினை வலிகள்... ஒரு ஃப்ளாஷ்பேக்!
 ................................................................
தமிழ்ச் சங்கம் டூ காவிச் சங்கம் - பகுதி 2
 ................................................................
அன்புத் தம்பியின் அந்திம நாட்கள்!!
 ................................................................
மர்ம மாத்திரை! சோதனை எலிகளான பெண்கள்..!
 ................................................................
கண்முன்னே இறந்த குழந்தைகள்: கடைசி வரை போராடிய மருத்துவர்!
 ................................................................
ஏம்மா, இதெல்லாம் ஒரு வேலையாமா...???
 ................................................................
பெண் ஓர் உடமை என்பது போல ஓர் மனப்போக்கு தான் இருந்து வருகிறது - நிர்மலா பெரியசாமி..!
 ................................................................
அணுகுண்டு சொம்புடன் அமெரிக்க நாட்டாமை ட்ரம்ப்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (12:30 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (16:57 IST)
இந்த தந்தையர் தினத்தில் பெட்சி ராட்டி இரண்டு மடல்களை எழுதியிருக்கிறார். ஒன்று அவரது தந்தைக்கு. மற்றொன்று மறைந்த அவரது கொள்ளுப்பாட்டி சொனோரா ஸ்மார்ட் டாட்-க்கு. இந்த இரண்டாவது மடலானது நூற்றாண்டு குடும்பப் பாரம்பரியமிக்கது. தந்தையர் தினத்தின் அன்னைக்கு பெருமை சேர்ப்பதற்காக தலைமுறை தலைமுறையாய் எழுதப்படுவது. ஒரு பெண்ணுக்கு தந்தையர் தின வாழ்த்துமடலா? பெட்சி ராட்டி தன் கொள்ளுப்பாட்டி பற்றி சொல்கிறார் கேளுங்கள்..நேற்றைய தினமான ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் உலகின் பல நாடுகளில் 107-ஆவது தந்தையர் தினமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நாளை 1910-ஆம் ஆண்டு விடுமுறையாக்குவதற்காக பாடுபட்டவர் சொனோரா டாட் தான். 1909-ஆம் ஆண்டு தேவாலயத்தில் அமர்ந்து ‘அன்னையர் தினம்- வேறெதைப் பற்றிய பிரசங்கம்?’ என்ற பிரசங்கப்பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தபோதுதான் இந்த பாரம்பரியமிக்க தினத்தைத் தொடங்க முடிவு செய்தார் சொனோரா டாட். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டில் சொனோரா டாட் அமர்ந்திருந்தபோது, அவரது கொள்ளுப்பாடி முன்னர் சொன்ன நிகழ்வை அவருக்கு நினைவுப்படுத்தினார். அது அவரது மனதை பின்தொடரத் தொடங்கியது. அப்போது அவர் அன்னையருக்கான தினம் இருக்கும்போது, ஏன் தந்தையர் தினம் கொண்டாடப்படுவதில்லை என்ற ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருந்தார்.

சொனோரோ டாட் மற்றும் அவரது இளைய சகோதரர்கள் ஐந்துபேரும், 1898-ஆம் ஆண்டு அவரது தாயின் மரணத்திற்குப் பிறகு தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவர்கள். சொனோரா டாட்டின் தந்தை வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் உள்நாட்டுப் போருக்குப் பின் விவசாயம் செய்யத் தொடங்கியிருந்தார். அவர் தாயாகவும், தந்தையாகவும் மட்டும் இல்லாமல் தலைமைப்பண்புள்ளவராகவும், அன்பு செலுத்துபவராகவும் இருந்தார். அதற்காக அவர் புகழப்பட வேண்டுமென சொனோரா எண்ணினார். இதற்காக உள்ளூர் கிறிஸ்தவ மதகுருமார்களுடன் இணைந்து ஓய்வின்றி உழைத்த டாட், ஒய்.டபுள்யூ.சி.ஏ உடன் இணைந்து ஸ்போகேன் பகுதியில் 1910-ஆம் ஆண்டு முதன்முதலாக தந்தையர் தினத்தை அனைவரையும் கொண்டாடச் செய்ததாக சொல்லும் பெட்சி ராட்டி, இதுகுறித்து மோண்டோனோ பகுதியில் வெளிவந்த தி ரிவர் பிரஸ் என்ற பத்திரிகை செய்தியைக் காட்டுகிறார்.

அடுத்த ஆண்டு முதல் தந்தையர் தினமானது நாடு முழுவதும் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும், அது அத்தனை சுலபமானதாக இல்லை சொனோரா டாட்டுக்கு. இதற்கு ஆதரவுதிரட்ட சொனொரோ டாட் 62 ஆண்டுகள் சில்லரை வணிகர்கள் முதல் நாட்டு அதிபர் வரை அனைவரிடத்திலும் பரப்புரை நிகழ்த்த வேண்டியிருந்தது. ஒருவழியாக 1972-ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சன் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையை, தந்தையர்களை கவுரவிக்கும் வகையில் அரசு விடுமுறையாக அறிவித்தார். தனது கனவு நனவாவதைக் காணக் காத்திருந்த சொனோரா டாட், அது நிறைவேறிய 6 வருடங்களில் 1978-ஆம் ஆண்டு தனது 96-ஆவது வயதில் உயிர்நீத்தார்.

வலிமையும் உற்சாகமுமான..

தந்தையர் தினத்தின் தாய் என அழைக்கப்படும் அந்த மறுமலர்ச்சிப்பெண் ஓவியர், கவிஞர் மற்றும் தொழிலதிர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். அவர் தனது கணவரோடு இணைந்து இறுதிச்சடங்கு வீட்டினை நடத்திவந்தார். அவர்கள் இருவரும் தங்களது ஒரே மகனான, எதிர்காலத்தில் தந்தையாகப் போகும் ‘ஜாக்’கை ஆளாக்கிக் கொண்டிருந்தனர். “நான் அந்த துரோக ஆன்மாவின் பெருமைகளைக் கையாளுவதில் பெருமைப்படுகிறேன்” எனக்கூறுகிறார் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு நிறுவனத்தில் விளம்பர இயக்குனராகப் பணிபுரியும் பெட்சி ராட்டி.

சொனோரா டாட்டின் கொள்ளுப்பேத்தியான பெட்சி ராட்டி தனது கொள்ளுப்பாட்டியின் சில மரபுப்பண்புகளைப் பெற்றிருக்கிறார். இவர் வாசிங்டனில் வளர்ந்தவர். பென் மாநிலப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப்பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். ஐரோப்பாவிற்குச் சென்று வியன்னாவில் உள்ள வெப்ஸ்டர் பல்கலைக் கழகத்தில் சர்வதேச வணிகப் பாடத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.30 வருடங்களுக்கு முன் லாஸ் ஏஞ்சல்ஸிற்குச் சென்ற அவர், அங்கு விளம்பரத்துறையில் பணியில் சேர்ந்து, நகரின் மேற்குப்பகுதியில் உள்ள கைவினைஞர் பாணியிலான ஒரு வீட்டில் தனது இரண்டு நாய்களுடன் குடியேறினார். தனது குடும்பத்தில் ஒரே குழந்தையான தன் தாயின் ஒரே குழந்தையான ராட்டி, 24 வருட மணவாழ்க்கைக்குப் பிறகு விதவையானார். அவருக்குக் குழந்தைகளே இல்லை. இது ‘தந்தையர் தினத்தை உருவாக்கியவரின் கொள்ளுப்பேத்தி’ என்ற பட்டத்தை மட்டுமல்லாமல், சொனோரா டாட் வம்சாவளியின் கடைசி ஆள் என்ற பெயரையும் பெற்றுத் தந்திருக்கிறது.

அவருக்கு தன் சந்ததியைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இருந்தபோதிலும், இதுகுறித்து பொதுவெளிகளில் வெளிப்படையாக பேசியதில்லை. மைஹெரிடேஜ்.காம் என்ற இணையதளம் வழியாக மக்களின் குடும்ப வரலாறுகளைக் கண்டறிந்து வெளியிடும் நிறுவனத்தை, ராட்டி பின்தொடர்ந்து வந்தார். அவரிடம் அந்த நிறுவனம் உங்கள் குடும்பத்தின் வரலாறு தெரியுமா? என கேட்டிருந்தது.  அதைத் தொடர்ந்து மைஹெரிடேஜ் இணையதளம் ஸ்மார்ட் டாட் குறித்த ஆவணங்களைத் தோண்டியெடுத்து தகவல் தெரிவித்திருந்தது. அதில், ராட்டி அவரது தாயாருடன் ஃபுளோரிடாவில் சிறுபிராயத்தில் இருந்தது குறிப்பிட்டிருந்தது(இதுவரைக்கும் வெளிவராத தகவல்). குடும்பத்தின் பாரம்பரிய பொருட்களில் சில அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என அவர்கள் நினைத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்பின் வெளிஉலகத்தில் தன் குடும்பப் பாரம்பரியத்தைப் பற்றிப் பேசும் ராட்டி “நான் என் சிறுவயதில், என் கொள்ளுப்பாட்டி டாட்டினை ஆழமாக நேசித்தேன். ஒவ்வொரு வருடமும் அவரைச் சந்திப்பேன்; எனக்காக அவர்தரும் கவிதைகளைக் கண்டு வியந்ததுண்டு. அதில் முக்கியமானது இந்த உலகிற்கு நான் அறிமுகமானதுபோது டாட் எனக்காக எழுதியது” என மனம் திறக்கிறார். அந்தக் கவிதையை பத்திரமாக இன்னமும் தன் வீட்டில் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.ராட்டி இப்போதும் ஒரு குழந்தையைப் போல, தந்தையர் தினம் வழங்கப்பட்டதை எண்ணி, அந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவதோடு, ஒரு சிறப்பு மடலை தன் கொள்ளுப்பாட்டிக்காக எழுதுகிறார்; தன் முன்னோர்கள் செய்து வந்ததைப் போல. ஒரு முதிர்ந்த பெண்ணாக இருந்தும் தந்தையர் தினத்திற்குப் பின்னான பெருமைமிக்க வரலாற்றைப் பற்றி, தன் தாயே சொல்லட்டும் என காத்திருந்தார். ஆனால், அவரும் இறந்துபோய்விட்டார்.

தற்போது அந்த தீபத்தை நான் பெருமையாக கையிலேந்துகிறேன் என புன்னகைத்தபடியே சொல்லும் ராட்டி, நான்தான் என் சந்ததியின் கடைசி ஆள் என்கிறார். மேலும், இதுதான் அந்த பெருமைமிக்க மரபு  என்கிறார் உருக்கமாக!

நன்றி : தி இந்து ஆங்கிலம்
தமிழில் : ச.ப.மதிவாணன்
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :