Add1
logo
பா.ஜ.கவிற்கு பினராய் விஜயன் பதில் || மாநகர பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் மறியல் || டாஸ்மாக் ஊழியரிடம் பைக் பறிப்பு || நிதி நிறுவனத்தில் 3.34 லட்சம் மோசடி: மேலாளர் கைது || டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெங்கைய நாயுடு அனுமதி || டெங்கு காய்ச்சலுக்கு யாரும் பலியாகவில்லை: முதல்வர் நாராயணசாமி || முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் அண்ணன் காலமானார் || தான் ராஜினாமா செய்த தகவல் பொய்யானது: திருநாவுக்கரசர் || ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உட்பட 30 பேர் பலி || அமெரிக்காவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் வீரர்களின் கார்கள் மோதிக்கொண்ட விபத்தால் பரபரப்பு || பிலிப்பைன்ஸ் அருகில் கப்பலில் மாயமான உசிலம்பட்டி இளைஞர் வீடு திரும்ப மாணவர்கள் கூட்டுப்பிரார்த்தனை || சமூதாயத்தில் நடைபெறுவதை மெர்சல் படத்தில் பிரதிபலித்துள்ளனர்: வைகோ || மெர்சல் படத்திற்கு மீண்டும் மறு தணிக்கை வேண்டாம்: கமல் ||
தமிழகம்
மாநகர பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் மறியல்
 ................................................................
டாஸ்மாக் ஊழியரிடம் பைக் பறிப்பு
 ................................................................
நிதி நிறுவனத்தில் 3.34 லட்சம் மோசடி: மேலாளர் கைது
 ................................................................
தான் ராஜினாமா செய்த தகவல் பொய்யானது: திருநாவுக்கரசர்
 ................................................................
பிலிப்பைன்ஸ் அருகில் கப்பலில் மாயமான உசிலம்பட்டி இளைஞர் வீடு திரும்ப மாணவர்கள் கூட்டுப்பிரார்த்தனை
 ................................................................
சமூதாயத்தில் நடைபெறுவதை மெர்சல் படத்தில் பிரதிபலித்துள்ளனர்: வைகோ
 ................................................................
மெர்சல் படத்திற்கு மீண்டும் மறு தணிக்கை வேண்டாம்: கமல்
 ................................................................
மூளை சாவு அடைந்த பெண்ணின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம்!
 ................................................................
தமிழகத்தில் நவோதயா பள்ளி அமைவது குறித்து அமைச்சரவை முடிவெடுக்கும்: செங்கோட்டையன்
 ................................................................
டெங்கு பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை பரிசோதனை: விஜயபாஸ்கர்
 ................................................................
நாங்கள் முன்வைத்த கருத்துகள் தான் மெர்சல் படத்திலும் இடம் பெற்றிருக்கிறது: சீமான்..!
 ................................................................
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டிக்க அற்புதம்மாள் வேண்டுகோள்
 ................................................................
மெர்சல் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களுக்கு பாஜக மிரட்டல்: மா.கம்யூ., கண்டனம்!
 ................................................................
அலட்சியக்கொலைகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக- சிபிஎம் வலியுறுத்தல்!
 ................................................................
மெர்சல் குறித்த தமிழிசையின் கருத்துக்கு காயத்ரி ரகுராம் எதிர்ப்பு!
 ................................................................
மக்கள் எதிர்ப்பை மீறி திறக்க முயன்ற டாஸ்மாக் கடைக்கு நிரந்த பூட்டு! (படங்கள்)
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற திமுக கோரிக்கை (படம்)
 ................................................................
பொறையாறு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டையில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்!
 ................................................................
138-வது நாளை எட்டிய டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம்!
 ................................................................
டெங்கு பாதிப்புகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - திருமா வலியுறுத்தல்
 ................................................................
அரசின் மெத்தனப்போக்கே பொறையாறு விபத்திற்கு காரணம்! - வேல்முருகன் குற்றச்சாட்டு
 ................................................................
தவறான கருத்துகளைப் பரப்பினால் தேசபக்தர்கள் மெர்சலாகி விடுவார்கள்! - இல.கணேசன்
 ................................................................
நாடாளுமன்றத்தில் யாரும் பேச முன்வருவதில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
 ................................................................
பொறையார் பணிமனை மேற்கூரை இடிந்து போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் பலி!
 ................................................................
மான் வேட்டைக்கு சென்ற எட்டுபேர் கைது; நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (12:19 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (12:19 IST)

மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஒடுக்குமுறை மூலம் சாதிக்கத் துடிக்கும் தமிழக அரசு: ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாடு முழுவதும் புதிதாக திறக்கப்படும் மணல் குவாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள் மீது தமிழக அரசு ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஒடுக்குமுறை மூலம் சாதிக்கத் துடிக்கும் தமிழக அரசின் அணுகுமுறை கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, 
 
தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த 38 மணல் குவாரிகளில் பெரும்பாலானவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல் அனுமதி காலாவதியானதைத் தொடர்ந்து அவை சில வாரங்களுக்கு முன்பு மூடப்பட்டன.  இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் நிம்மதி அடைந்திருந்த நிலையில், மூடப்பட்ட மணல் குவாரிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக திறக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, ஏற்கனவே செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் தவிர புதிதாக 70 இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. மணல் தட்டுப்பாட்டைப் போக்க புதிய மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சரும் அறிவித்துள்ள நிலையில், புதிய மணல் குவாரிகள் அமைக்கப்படவுள்ள பகுதிகளில்  வாழும் பொதுமக்கள் அரசின் முடிவுக்கு எதிராக அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மக்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக பொதுமக்களை அச்சுறுத்தும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. உதாரணமாக நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த ஒருவந்தூரில் காவிரி ஆற்றில் மணல் எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிராக அப்பகுதி மக்களும், உழவர்களும் மணல் குவாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தை ஒடுக்க நினைத்த அரசு, போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தாகக் கூறி வழக்குப் பதிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்றும், அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தால் அனைவரையும் கைது செய்து எதிர்காலமே இல்லாமல் ஆக்கிவிடுவோம் என  காவல்துறையினர் மூலம் மிரட்டல் விடுத்து வருகிறது. ஆனாலும், அதற்கு பணியாத பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி வைக்கும் போராட்டம், கால்நடைகளையும், குடும்ப அட்டைகளையும் அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் ஆகியவற்றை நடத்த தீர்மானித்துள்ளனர்.
 
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டிருப்பதை எதிர்த்தும் தொடர்போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, கரூர் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மணல் குவாரிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவ்வாறு போராட்டம் நடத்தும் மக்களை தனிப்பட்ட முறையில் அச்சுறுத்துவது, பொய்வழக்குப் பதிவு செய்வது உட்பட பலவழிகளில் அடக்குமுறைகளை எடப்பாடி  பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு ஏவி வருகிறது. இது மனித உரிமை மீறிய செயலாகும்.
 
மணல் குவாரிகள் விஷயத்தில் தமிழக அரசின் சொல் ஒன்றாகவும், செயல் ஒன்றாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் இப்போதுள்ள மணல் குவாரிகள் அனைத்தும் அடுத்த 3 ஆண்டுகளில் மூடப்படும் என்றும், அதன்பின் தமிழகத்தில் உள்ள ஆறுகளில் மணல் எடுக்க தடை விதிக்கப்படும் என்றும் சில வாரங்களுக்கு முன் மதுரையில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.  அடுத்த 3 ஆண்டுகளில் ஆறுகளில் மணல் எடுக்கத் தடை விதிக்கப்படும் என்றால் இப்போதுள்ள  மணல் குவாரிகள் படிப்படியாக மூடப்பட வேண்டும். ஆனால், புதிது புதிதாக மணல் குவாரிகளை திறப்பது இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் செயலாகவே அமையும். மணல் குவாரிகள் உள்ள இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைதல், கடல்நீர் உட்புகுதல் உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், புதிய குவாரிகளைத் திறந்து தமிழகத்தை பாலைவனமாக்கிவிடக் கூடாது.
 
பணத்தை வாரி இறைத்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ள பினாமி அரசு, மணல் குவாரிகள், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்தும் மக்களை அடக்குமுறை மூலம் முடக்கி விடலாம் என நினைக்கிறது. இந்திய வரலாற்றில் மக்கள் போராட்டத்தை ஒடுக்க முயன்ற சர்வாதிகாரிகள் தான் மண்ணை கவ்வியிருக்கிறார்களே தவிர, மக்கள் போராட்டம் ஒருபோதும் வீழ்ந்ததில்லை. இவ்வரலாற்றை உணர்ந்து தமிழகம் முழுவதும் புதிதாக திறக்கப்பட்ட மணல் குவாரிகளை மூட வேண்டும்; மக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை அரசு திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :