Add1
logo
மத்திய அரசு மாநில அரசு காலில் மண்டியிட்டு கிடக்கிறது- நெடுவாசலில் நூதன போராட்டம் || உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின் பேட்டி || சேற்றில் சிக்கி 12 வயது சிறுவன் பலி! || ஜூலை 17ல் தொடங்குகிறது பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் || சுயம்பீஸ்வரர் ஆலயத்தில் விலை உயர்ந்த மரகத லிங்கம் சிலை திருட்டு! (படம்) || இந்தியில் கடவுச்சீட்டு வழங்கினால், தமிழிலும் வழங்க வேண்டும்: ராமதாஸ் || கையடக்க செயற்கைகோள் உருவாக்கிய ரிபாத் ஷாரூக் ரூ.10 லட்சம் பரிசு || உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிகள் 6 மாத காலத்துக்கு நீட்டிப்பு! || மாநிலப்பாட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ் || நாகா்கோவிலில் ஊா்காவல் படையினர் விளையாட்டு போட்டிகள் தொடக்கம்! (படங்கள்) || தம்பிதுரை சுயநலத்திற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்: முருகுமாறன் எம்.எல்.ஏ., பேட்டி || தம்பிதுரையின் பேட்டிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது: அதிமுக எம்.பிகள் பேட்டி || உருண்டு, புரண்டு மனு அளிக்கும் போராட்டம்: தீபா ஆதரவாளர்கள் கைது! (படங்கள்) ||
சிறப்பு கட்டுரை
எங்கள் சொந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தியாவில் உருவாக்குவோம்!
 ................................................................
மெல்பர்னில் மொய்விருந்து
 ................................................................
அழகென்பது பெண்களுக்கு மட்டும்தானா?
 ................................................................
தந்தையர் தினத்தின் அன்னை: ஒரு பெருமைமிக்க மரபு சொல்லும் கதை..!
 ................................................................
பாஜக அரசின் தோலை உரிப்பதுதான் எங்கள் பணி: வேல்முருகன் பிரத்யேக பேட்டி
 ................................................................
காலா - இவரா... அவரா...?
 ................................................................
சமூக வ(தந்தி)லைதளங்கள்..!
 ................................................................
வீட்டை விட்டு வெளியே வரும் வாய்ப்பே போய்விடும்: வேதனையில் மாற்றுத்திறனாளிகள்
 ................................................................
இணையதளத்தில் தி.மு.க. புதிய வியூகம்! -பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி
 ................................................................
இனி நாய் வளர்க்கிறது அவ்வளவு ஈஸியில்ல..!
 ................................................................
இந்தியாவில் குற்றம்...இங்கிலாந்தில் சொர்க்கம் - விஜய் மல்லையாவின் சீனியர்கள் !!!
 ................................................................
சந்திரபாபு, அசோகனை பழி வாங்கினாரா எம்.ஜி.ஆர்.
 ................................................................
பிளாஸ்டிக்கால் செய்யப்படும் உணவுகளா? வதந்திகளில் மூழ்கும் சமூகம்!
 ................................................................
ரஜினி மாஸ் எடுபடுமா? -நக்கீரன் சர்வே...!
 ................................................................
துப்பாக்கி கலாச்சாரம் அதிகரிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, ஜூன் 2017 (18:14 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (16:16 IST)
தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்கால தலைமுறையின் வாழ்வையே மோடி அரசின் காலடியில் வைத்துள்ளது தமிழக அரசு. மத்திய பாஜக அரசின் தோலை உரிப்பதுதான் எங்கள் கூட்டமைப்பின் பணி என கூறியுள்ள தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி வேல்முருகன், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய சட்ட ரீதியாக போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளார். 


 
மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து நம்மிடம் பேசிய அவர், 

தமிழீழ மண்ணில் ஒன்றரை லட்சம் ஈழ உறவுகள் படுகொலையானதற்கு நினைவேந்தல் நிகழ்ச்சி என்பது தொடர்ந்து தமிழின உணர்வாளர்களால் 2009ல் இருந்து சென்னை மெரீனாவில் நடத்தி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் நானும் அந்த நிகழ்வில் பங்கேற்று கலந்து கொண்டு வருகிறேன். 

அந்த அடிப்படையில் கடந்த 21ஆம் தேதி நானும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பங்கெடுத்துக்கொண்டேன். மறுநாள் சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் இதேபோல் மெழுகுவர்த்தி ஏந்தி முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொள்ள இருந்ததால் சென்னை மெரீனாவில் நடந்த நிகழ்வில் பங்கேற்றுவிட்டு அன்று மாலை சரியாக 7 மணிக்கு தொடர்வண்டியில் பயணிக்க  சென்றுவிட்டேன்.

அதன் பிறகு காவல்துறை கைது செய்த தமிழின உணர்வாளர்களிடமும், நிகழ்வில் பங்கேற்ற மாணவ மாணவிகளிடமும் மிக மோசமாக நடந்து கொண்டுள்ளார்கள். அவர்களை சட்டையைப் பிடித்து இழுத்தும், குண்டுகட்டாக தூக்கிச் சென்று காவல் வண்டிகளில் அடைத்து சட்டத்தை மீறிவிட்டார்கள் என்று அவர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள்.

திருமுருகன் காந்தி மீது போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதே போன்று தமிழர் விடியல் கட்சியின் இளமாறன், டைசன், அருண் குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.திருமுருகன் காந்தி ஒருங்கிணைத்து நடத்திய நினைவேந்தல் 
நிகழ்ச்சியில் பங்கேற்ற வேல்முருகன் உள்பட தமிழன உணர்வாளர்கள்

தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் செய்யும் மத்திய அரசை கண்டித்து எங்கள் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். போராட்டங்களின்போது பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதையெல்லாம் வைத்து மத்திய அரசின் தூண்டுதலின் பேரில்தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தமிழின உணர்வு, தமிழின எழுச்சி, இனப்படுகொலைக்கான நீதி கேட்பது போன்றவைகள் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு, எங்களைப் போன்றவர்கள், பெ.மணியரசன், கு.ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி, காந்தி மக்கள் இயக்கம் போன்ற முற்போக்கு சக்திகளை கொண்டவர்களை ஒடுக்க வேண்டும், நசுக்க வேண்டும் என்பதற்கான பரிசோதனையாக இந்த 4 பேரை கைது செய்து அவர்கள் மீது குண்டர் சட்டம் போட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசியல் ரீதியாக பாஜக கால் பதித்து பெரும் அரசியல் லாபத்தை அடைய முடியாது. தமிழர்களுக்கு மத்திய அரசு செய்த துரோகங்கள், காவேரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, கூடன்குளம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், மீனவர் படுகொலை, படகுகள் பறிமுதல் என ஒட்டுமொத்தமாக மத்திய அரசு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்து வருகிறது. மத்திய அரசின் தோலை உரிப்பது தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இயக்கங்களும், கட்சிகளும், அவற்றின் தலைவர்களும்தான். இதில் மே 17 போன்ற இயக்கங்கள் தங்கள் பணிகளை கடந்த 2009ல் இருந்து சிறப்பாக செய்து வருகின்றனர்.

எங்களைப் போன்றவர்களை கைது செய்தால் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால், எங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் இதுபோன்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்களை கைது செய்து, சித்ரவதைக்கு உள்ளாக்கி முடக்குகின்றனர். அப்போதுதான் மத்திய அரசுக்கு எதிரான நெடுவாசல் போன்ற வீரியமான போராட்டங்களை நடத்த வரமாட்டார்கள் என்பதற்காக உள் அரசியல் செய்கிறார்கள். அதற்காக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை சரியான முறையில் மத்திய அரசு பயன்படுத்திக்கொள்கிறது.திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை
கண்டித்து 17.06.2017 அன்று நடந்த  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 
இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம்

எடப்பாடி அரசு வலிமையற்றவர்களாக, ஊழல் செய்தவர்களாக, பல்வேறு வழக்கு, வம்புதும்புகளில் சிக்கிக்கொண்டிருப்பதால் மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்கிறது. இவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்கும், இவர்கள் மேலிருக்கும் வழக்கில் இருந்து வெளிவருவதற்கும் மத்திய அரசின் காலடியில் விழுந்து கிடக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தை நாடுவது குறித்து கூட்டமைப்பு சார்பில் கலந்து பேசியுள்ளோம். மே 17 இயக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குண்டாஸ் ஆய்வு போர்டுலேயும் நான் மற்றும் சில தோழர்கள் சென்று எங்கள் சார்பில் உள்ள நியாயங்களையும், இது அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் நீதியரசர்கள் முன்பு எடுத்து வைக்க உள்ளோம்.

ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது இதே நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறோம். ஊர்வலமாக போய் உரையாற்றியிருக்கிறோம். அப்போதெல்லாம் ஜெயலலிதா அரசு எங்களை தடை செய்யவில்லை. கைது செய்யவில்லை. சிறையில் அடைக்கவில்லை. ரவுடிகள், கேடிகள், பிக்பாக்கெட்டுள் மீது போடக் கூடிய குண்டர் சட்டத்தை போடவில்லை.ஜெயலலிதாவின் மனசாட்சிக்கும், கொள்கைக்கும் விரோதமாக, ஜெயலலிதாவுடைய சட்டமன்ற தீர்மானங்களுக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசு மாபெரும் துரோகம் இழைத்துள்ளது. திருமுருகன் காந்திக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை. தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள், மாணவர்கள் உள்பட ஒட்டுமொத்த மக்களுக்கும் துரோகம் இழைத்துள்ளார்கள். தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்கால தலைமுறையின் வாழ்வையே மோடி அரசின் காலடியில் வைத்துள்ளது தமிழக அரசு.

மிகப்பெரிய கட்சியாக இருக்கக் கூடிய அதிமுகவை, அக்கட்சியைச் சேர்ந்த துணை சபாநாயகரை, ஒரு மத்திய அமைச்சர் தனது வீட்டுக்கு வரவழைத்து ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் என்றால் எந்த அளவுக்கு ஒரு முதுகெலும்பு இல்லாத ஒரு அரசாக, தமிழர்களுடைய உரிமைகளை காவு கொடுக்கின்ற அரசாக எடப்பாடி பழனிச்சாமி அரசு இருக்கிறது என்பதை மக்கள் பார்க்க வேண்டும்.

இந்தியை திணிப்பது, உணவு விஷயத்தில் தலையிடுவது உள்பட பல்வேறு விசயங்களில் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த மத்திய அரசு முயல்கிறது. விரைவில் மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை  என்றார் உறுதியாக. 

வே.ராஜவேல்
படங்கள்: ஸ்டாலின், செண்பகபாண்டியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : Anbuselvan Country : Canada Date :6/23/2017 10:40:35 AM
Velmurugan sir you become CM means i think tamilnadu will be good. So you try to catch all MLA seats sir....
Name : logu nathan Date :6/20/2017 8:41:14 PM
தமிழ் நாட்டில் பி ஜெ பி சுட்டு விரலைக்கூட பாதிக்க முடியாது அடுத்து தி .மு .க தான் ஆட்சி க்கு வரும் ....
Name : Kannan Country : India Date :6/20/2017 1:43:24 PM
அடுத்த குண்டாஸுக்கு ஆள் தயார். காவல் துறை நண்பர்கள் இத்தகைய பிரிவினைவாதிகளுக்கு தகுந்த பாடம் கற்பிப்பர் என்பதில் நமக்கு பலத்த நம்பிக்கை உள்ளது.
Name : kannan Date :6/19/2017 11:21:51 AM
உண்மை வேல்முருகன் கூறுவது.