Add1
logo
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார் || சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல் || ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ் || புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி || நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா! || ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல் || கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி || நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது || தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்! || ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் ||
சிறப்பு செய்திகள்
நா.முத்துக்குமாருக்கு செல்வராகவன், எனக்கு அல்ஃபோன்ஸ் புத்திரன்!
 ................................................................
பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு அநீதி!
 ................................................................
டிரம்ப் பற்ற வைக்கும் நெருப்பு...
 ................................................................
குஜராத் தேர்தலில் முஸ்லிம்கள் புறக்கணிப்பா?
 ................................................................
கன்னியாகுமரி மீனவர்களின் பிரச்சனை என்ன...
 ................................................................
பாக்கியம் ராமசாமி மறைவு!
 ................................................................
இன்றைய அரசியல் அவியல்..!
 ................................................................
வணிகர்களின் பாதுகாப்பு வீரர்கள் உருவாக்கிய பிரம்மதேயம்
 ................................................................
கொடி நாளின் கதை!
 ................................................................
தினகரன் கற்பனை குதிரையில் பறக்கிறார்
 ................................................................
ஆர்.கே.நகரில் விஷாலை சாய்த்த விதிமுறைகள்!
 ................................................................
அம்பேத்கர் மீது நிஜமாகவே பாஜகவுக்கு அக்கறையா?
 ................................................................
4 ஆண்டுகளில் மூன்று மக்களவை தேர்தல்கள்!
 ................................................................
பசியாறும் அனைவரும் முனியாண்டிகளே! -ஓட்டலுக்கும் பாட்டு வந்தாச்சு!
 ................................................................
சைதை காந்தி!!!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூன் 2017 (17:16 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூன் 2017 (17:16 IST)


சமூக வ(தந்தி)லைதளங்கள்..!

2014-ஆம் ஆண்டு ஹாங்காங்கில் ஒரு புரட்சி வெடிக்கிறது. அரசு தேர்தல் முறையில் கொண்டுவந்த மாற்றத்தை எதிர்த்து அங்குள்ள மாணவர்கள் கையில் ஒரு குடையுடன் ஒன்றுகூடுகின்றனர். அந்த நாடு ஏற்கனவே எல்லாவிதமான சமூக வலைதளங்களையும் துண்டித்திருந்தது. மீதம் இருந்தது வெபியோ என்ற டுவிட்டரின் வலைதளம். மட்டுமே. போராட்டக்காரர்களை ஒருங்கிணைப்பதாகக் கூறி அதற்கும் தடை விதித்து ஒட்டுமொத்த இணைய இணைப்பையே துண்டித்தது அந்த நாட்டு அரசு. ஆனால், Fire Chat என்ற Bluetoothல் இயங்கும் செயலியைக் கொண்டு போராட்டக்காரர்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர். போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. குடைப்புரட்சி என்று வரலாற்றில் பெயர்பெற்றது.இதேபோல 2011-ல் லிபியாவில் கடாபிக்கு எதிராக மக்கள் கையில் எடுத்த ஆயுதம் பேஸ்புக். அந்த நாடு தடை செய்த போதும் proxy இணைப்புகளை வைத்து புரட்சி நடந்தது. ஆட்சி கலைக்கப்பட்டு போராட்டம் வெற்றி பெற்றது.

தன் நாட்டில் தன் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல், காய்கறிக் கடை நடத்திய துனிசியா நாட்டு இளைஞர் அரசின் சுரண்டலால் 2010-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு எதிராக தொடங்கிய சமூக வலைதளப்புரட்சி அந்த நாட்டு அதிபரையே தலைமறைவு வாழ்க்கை நடத்தச் செய்தது!

அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்ட போது, பெண்கள் கார் ஓட்டுவது போன்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் உலவ விட்டு போராடினர். இதுபோன்று சிரியப் புரட்சி, எகிப்து புரட்சி, பஹ்ரைன் புரட்சி, வால்ஸ்டரீட் புரட்சி என எத்தனையோ புரட்சிகளின் ஆயுதமாகப் பயன்பட்டது. கடவுள் போல் கண்களுக்கு தெரியாத இணைய இணைப்பும் சமூக வலைதளங்களும் தான். ஏன் சமீபத்திய மெரினாப் புரட்சி கூட வாட்ஸப்போ பேஸ்புக்கோ இன்றி வெற்றியடைந்திருக்காது. 

இப்படி சமூக வலைதளங்கள் என்பவை தொழில்நுட்பம் நமக்குக் கொடுத்த மிகவும் வலிமையான ஒரு ஆயுதம். நமது அரசியலமைப்புச் சட்டமும் சமூக வலைதளங்களில் நமக்கான கருத்துரிமையை எதிர்க்கவோ தடுக்கவோ இல்லை. இருந்தும் இத்தகைய வலிமையான ஆயுதத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்?

ரூபெல்லாவுக்கு எதிராக வதந்திகளைப் பரப்பி, குழந்தைகளின் ஆரோக்கியத்தில் விளையாடினோம். நடிகர் நடிகைகளின் அந்தரங்கங்களை அம்பலமாக்கி வைரலாக்கினோம். ஒரு பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை பரப்பி அந்தப் பெண்ணின் மரணத்திற்கு இந்தச் சமூகமே காரணமானது. 

A1பால் A2 பால் என்று புரியாத தகவல்களைக் கூறி மக்களைக் குழப்பினோம். இப்போது பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி என்று வதந்திகளைப் பரப்பி நாம் காலம்காலமாக உண்டு வந்த அரிசியை சந்தேகிக்கிறோம். அறிவியல் துறையில் உள்ள நண்பர் ஒருவர் பிளாஸ்டிகின் விலையையும், அதனைப் பயன்படுத்தும் முறையில் உள்ள சிக்கல்களையும் அதற்கான செலவையும் கூறி நடைமுறையில் பிளாஸ்டிக் அரிசிக்கு சாத்தியமே இல்லை என்று புரிய வைத்தார். காட்சி ஊடகங்களிலும் அதனைப் பற்றிய புரிதல் பின்புதான் விளக்கப்பட்டது. அதற்கு முன்பே அரசிற்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கும் அதிகாரிகளே இந்த குழப்பத்தில் சிக்கி பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிப்பது எப்படி என்று செயல் விளக்க காணொளி வெளியிட்டதெல்லாம் பார்த்தால் நம் பின்தங்கிய நிலை வெட்கப்படவே செய்கிறது. அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக ஏகப்பட்ட வதந்தி வீடியோக்களும் வாட்ஸப்பிலும் பேஸ்புகிலும் வந்த வண்ணமே உள்ளன. நமக்குக் கிடைத்த மகத்தான ஆயுதத்தை இதுபோன்ற வதந்திகளையும் புரளிகளையும் கூறி மழுங்க வைத்துக் கொண்டிருக்கிறோம்.
கண்ணை மூடிக்கொண்டு கண்டதையெல்லாம் பகிர்ந்து நாமும் முட்டாளாகி மற்றவர்களையும் முட்டாள்களாக்குகிறோம்.இனியாவது நமக்கு வரும் தகவல்கள் உண்மைதானா? என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பகிர்வோம். அறிவியலும் மூட நம்பிக்கையும் எதிரெதிர் துருவங்கள் அதனை இணைக்கும் பாலமாக நாம் ஒருபோதும் இருந்துவிடக் கூடாது.

- பா.கார்த்திக்கண்ணன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : mani Country : United States Date :6/21/2017 5:44:48 AM
most social media under western intelligence control
Name : Bala Country : Indonesia Date :6/20/2017 5:54:43 AM
ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் ...உண்மை பேசுபவனை விட பொய் பேசுபவன் தான் மதிக்க படுகிறான் ...வாழ்க ஜனநாயகம் ...
Name : Mohamed Adnan Date :6/18/2017 12:05:08 PM
வாழ்த்துக்கள்! அருமையான கட்டுரை
Name : Anbu Country : Indonesia Date :6/18/2017 9:38:47 AM
நல்லதோர் பதிவு நண்பா