Add1
logo
மத்திய அரசு மாநில அரசு காலில் மண்டியிட்டு கிடக்கிறது- நெடுவாசலில் நூதன போராட்டம் || உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின் பேட்டி || சேற்றில் சிக்கி 12 வயது சிறுவன் பலி! || ஜூலை 17ல் தொடங்குகிறது பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் || சுயம்பீஸ்வரர் ஆலயத்தில் விலை உயர்ந்த மரகத லிங்கம் சிலை திருட்டு! (படம்) || இந்தியில் கடவுச்சீட்டு வழங்கினால், தமிழிலும் வழங்க வேண்டும்: ராமதாஸ் || கையடக்க செயற்கைகோள் உருவாக்கிய ரிபாத் ஷாரூக் ரூ.10 லட்சம் பரிசு || உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிகள் 6 மாத காலத்துக்கு நீட்டிப்பு! || மாநிலப்பாட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ் || நாகா்கோவிலில் ஊா்காவல் படையினர் விளையாட்டு போட்டிகள் தொடக்கம்! (படங்கள்) || தம்பிதுரை சுயநலத்திற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்: முருகுமாறன் எம்.எல்.ஏ., பேட்டி || தம்பிதுரையின் பேட்டிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது: அதிமுக எம்.பிகள் பேட்டி || உருண்டு, புரண்டு மனு அளிக்கும் போராட்டம்: தீபா ஆதரவாளர்கள் கைது! (படங்கள்) ||
சிறப்பு கட்டுரை
எங்கள் சொந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தியாவில் உருவாக்குவோம்!
 ................................................................
மெல்பர்னில் மொய்விருந்து
 ................................................................
அழகென்பது பெண்களுக்கு மட்டும்தானா?
 ................................................................
தந்தையர் தினத்தின் அன்னை: ஒரு பெருமைமிக்க மரபு சொல்லும் கதை..!
 ................................................................
பாஜக அரசின் தோலை உரிப்பதுதான் எங்கள் பணி: வேல்முருகன் பிரத்யேக பேட்டி
 ................................................................
காலா - இவரா... அவரா...?
 ................................................................
சமூக வ(தந்தி)லைதளங்கள்..!
 ................................................................
வீட்டை விட்டு வெளியே வரும் வாய்ப்பே போய்விடும்: வேதனையில் மாற்றுத்திறனாளிகள்
 ................................................................
இணையதளத்தில் தி.மு.க. புதிய வியூகம்! -பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி
 ................................................................
இனி நாய் வளர்க்கிறது அவ்வளவு ஈஸியில்ல..!
 ................................................................
இந்தியாவில் குற்றம்...இங்கிலாந்தில் சொர்க்கம் - விஜய் மல்லையாவின் சீனியர்கள் !!!
 ................................................................
சந்திரபாபு, அசோகனை பழி வாங்கினாரா எம்.ஜி.ஆர்.
 ................................................................
பிளாஸ்டிக்கால் செய்யப்படும் உணவுகளா? வதந்திகளில் மூழ்கும் சமூகம்!
 ................................................................
ரஜினி மாஸ் எடுபடுமா? -நக்கீரன் சர்வே...!
 ................................................................
துப்பாக்கி கலாச்சாரம் அதிகரிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 16, ஜூன் 2017 (12:23 IST)
மாற்றம் செய்த நாள் :16, ஜூன் 2017 (14:46 IST)லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கும், அவர்களைச் சார்ந்த குடும்பங்களுக்கும் பெரிய சுமையையும், பாதிப்பையும் உண்டாக்கியிருக்கிறது ஜிஎஸ்டி வரிவிதிப்பு. இந்தவரிவிதிப்பை மறுபரிசீலனை செய்து மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும். இல்லையேல் வீட்டை விட்டு வெளியே வருவதற்கான வாய்ப்பே போய்விடும் என வேதனையோடு தெரிவிக்கிறார்கள் மாற்றுத்திறனாளிகள்.

இதுகுறித்து நம்மிடம் விரிவாக பேசிய தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் பா.ஜான்சிராணி, 

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அத்தியாவசயமான உபகரணங்கள் அனைத்தும் இதுவரை அனைத்து வரிகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. கடந்த 18.05.2017 அன்று கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக் கூடிய உதவி உபகரணங்களக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு கடந்த 2016ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஊனமுற்றோர் உரிமைகள் புதிய சட்டத்தை மீறி இந்த வரி விதிப்பை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக அச்சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இப்படிப்பட்ட உதவி உபகரணங்கள் இலவசமாகவோ அல்லது இயன்றளவு மிகக்குறைந்த விலையிலோ தரப்பட வேண்டுமென்று அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த உபகரணங்களின் விலை பலமடங்கு உயரும் வகையில் கடுமையான இந்த வரிவிதிப்பை மோடி அரசு மேற்கொண்டுள்ளது. இந்த அநியாய விரி விதிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 15.06.2017 அன்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது. சென்னையில் பாரிமுனை தலைமை தபால் நிலையம் அருகே போராட்டம் நடைபெற்றது.  ஏராளமான மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.பார்வையற்றோர் பயன்படுத்தக் கூடிய பொருட்கள், உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்களுக்கான வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இவை சேவை அடிப்படையிலேயோ, கருணை அடிப்படையிலேயோ, உரிமை அடிப்படையிலேயோ எந்த விதத்திலும் மத்திய அரசு செய்திருக்கக்கூடிய இந்த செயலை நியாயப்படுத்திட முடியாது. இன்றும் என்.ஜி.ஓ. போன்ற அமைப்புகள் செயற்கை கை, கால் போன்றவைகளை இலவசமாக கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசுக்கு இந்த கடைமை கிடையாதா. சமீபத்தில் மத்திய அரசு இயற்றின சட்டத்தை ஏன் மதிக்கவில்லை. மாற்றுத்திறனாளிகளை அனைத்து வகையிலும் முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை அந்த சட்டத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் போட்ட சட்டத்தை அவர்களே மதிக்காமல் இப்படி வரிவிதித்தால் எப்படி. 

நான் ஒரு மாற்றுத்திறனாளி. நான் ஒரு செயற்கை கால் பொருத்த வேண்டும் என்றால், அந்த கம்பெனிக்கே நேரில் சென்று வாங்கினாலே 40 ஆயிரம் ரூபாய் ஆகும். இலவசமாக கிடைக்க வேண்டுமென்றால் நான் பல இடங்களில் அலைய வேண்டும். இது ஒருபுறம் இருக்க. மாற்றுத்திறனாளிகளுக்கான முக்கியமான உபகரணங்கள் இனி இலவசமாக கிடைக்க வாய்ப்பில்லை இல்லை. இந்த வரி விதித்தால் அவர்களாலேயும் இலவசமாக கொடுக்க முடியாத சிரமம் ஏற்படும். மாற்றுத்திறனாளிகளைப் பற்றி கவலைப்படாத மத்திய அரசாங்கமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. இந்திய மக்கள் தொகையில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை சொல்லியிருக்கிறது. லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளும், அவர்களைச் சார்ந்த குடும்பங்களும் எவ்வளவு பெரிய சுமையையும், பாதிப்பையும் உண்டாக்கும் இந்த வரிவிதிப்பு என்பதை மத்திய அரசு உணர வேண்டும். இந்த வரிவிதியை மறுபரிசீலனை செய்து மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும்.மத்திய அரசுதான் இந்த வரியை போட்டுள்ளது. மாநில அரசு இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மாநில அரசு எதையும் கண்டுக்கொள்ளவில்லை. அவர்களுக்குள் இருக்கும் போட்டா போட்டியில் யார் எப்படி போனால் என்ன என்று நினைக்கிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போன்ற அறிவிப்புகளை மாநில அரசு எதிர்த்து போராட முன்வரவில்லை. ஆகவே மாநில அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் மீது உண்மையான அக்கறை இருக்கும் என்று சொன்னால் மத்திய அரசை வலியுறுத்தி இந்த வரியை ரத்து செய்ய சொல்லி கேட்க வேண்டும். 

பெண் மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலும் இலவசமாக கிடைக்கக் கூடிய ஊன்றுகோல் போன்ற உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதனால்தான் பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்கு சென்று வருகின்றனர். இனிமேல் இலவசமாக இந்த உபகரணங்கள் கிடைக்காமல் போனால் பெண் மாற்றுத்திறனாளிகள் வீட்டை விட்டு வெளியே வரவாய்ப்பே போய்விடும். படுமோசமாக பாதிக்கப்படுவார்கள் என்றார் வேதனையோடு. 

-வே.ராஜவேல்
படங்கள்: அசோக்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :