Add1
logo
கடல்நீர் உட்புகுவதை தடுக்க கொள்ளிடம் ஆற்றில் தடுப்பனை கட்டவேண்டும்- விவசாயிகள் வலியுறுத்தல் || கடலூர் மணல் குவாரிக்கு எதிர்ப்பு- கொள்ளிடம் ஆற்றுக்குள் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் || ராமேஸ்வரம் - கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் காணவில்லை || தொடர்ந்து 7 அரைசதங்கள் விலாசி மிதாலி ராஜ் சாதனை! || சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம்: இயக்குநர் வ.கௌதமன் பேட்டி || 50 ஆயிரம் விவசாயிகளை திரட்டி கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட திட்டம் || ஜெ. துணிவு எங்களுக்கு கிடையாது: வேறுவழியின்றி பாஜகவை ஆதரிக்கிறோம் -திண்டுக்கல் சீனிவாசன் || ஜிஎஸ்டியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன் || அமெரிக்காவில் நரேந்திர மோடி || ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான 70 கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் || நாகா்கோவில்: ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் குடியிருப்பு திறப்பு || பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை || பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி பழனிசாமி அரசு திசைதிருப்பும் தந்திரம்: ஸ்டாலின் கண்டனம ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மே 2017 (9:51 IST)
மாற்றம் செய்த நாள் :20, மே 2017 (9:51 IST)


மலேசிய தடுப்பு முகாம்களில் நிகழும் அகதிகள் மரணம்

மலேசிய அகதிகள் தடுப்பு முகாம்களில் 2015 முதல் இதுவரை 24 அகதிகள் மரணமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் மையம் உறுதி செய்துள்ளது. இதில் 22அகதிகள் மியான்மரைச் சேர்ந்தவர்கள்.

தடுப்பு முகாம்களில் நிலவிவரும் கடுமையான இட நெருக்கடியினால் சுகாதார சீர்கேடுகள் முதல் அடிப்படை தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் வரை அகதிகளுக்கு வழங்குவதால் பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளன. மலேசியாவின் தேசிய மனித உரிமை ஆணையகம் இதனை சித்ரவதை சூழல்களோடு ஒப்பிடுகிறது.

“உணவு அளிக்கப்படும்போது சிறு கப்பில் தண்ணீர் கொடுப்பார்கள், மற்ற நேரத்தில் தண்ணீர் வேண்டுமென்றால் கழிவறையில் வரும் தண்ணீரை தான் நாங்கள் குடிக்க வேண்டும். யாரை இறந்து போனால் தான் பாதுகாவலர்கள் வருவார்கள். நாங்கள் புகார் கொடுத்தாலோ மருத்துவமனைக்கு போக வேண்டும் என்றாலோ நாங்கள் தாக்கப்படுவோம்”என தி கார்டியனுக்கு அளித்துள்ள பேட்டியில் 18 வயதான ரோஹிங்கியா அகதி மெளயுரா பேகம் தெரிவித்துள்ளார்.

தன்னுடைன் அடைக்கப்பட்டிருந்த இலங்கை அகதி ஒருவர் அதிகாரிகளின் தாக்குதலால் கொல்லப்பட்டதாகவும், ஆனால் அதை நோயினால் ஏற்பட்ட மரணம் என தங்களுக்கு சொல்லப்பட்டதாக புக்கிட்(Bukit) சிறையிலிருந்த மற்றொரு மியான்மர் அகதி குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதம் மலேசிய நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் கொடுத்துள்ள தகவலின்படி, 2014-2016 காலக்கட்டத்தில் குடியேற்ற தடுப்பில் இருந்து 161 பேர் பல்வேறு நோயின் காரணமாக இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அகதிகள் என உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் இதில் பெரும்பாலானோர் மியான்மரைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. மலேசியாவின் அகதிகள் எண்ணிக்கையில் 90%மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள். அத்துடன் இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதிகளும் வேறு  ஆப்கானிஸ்தான், சிரியா சேர்ந்த அகதிகளும் குறிப்பிடத்தக்க அளவில் இங்கு உள்ளனர்.

மலேசியாவில் அகதி அந்தஸ்து பெறும் வரை தடுப்பு முகாம்களிலேயே இவர்கள் சிறைவைக்கப்படுகின்றனர். சமீபத்திய கணக்குள்படி, மலேசியாவில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த 150,662 பேர் அகதி அந்தஸ்து பெற்றவர்களாக வசித்து வருகின்றனர். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :