Add1
logo
மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்) || ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்! || பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி || பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு –சீமான் || முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி! || ஆர்.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் நாகராஜன் பிரச்சாரம் (படங்கள்) || காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை: கி.வீரமணி இரங்கல் || திருச்செந்தூர் கோவில் விபத்தில் உயிரிழந்தவருக்கு 5 லட்சம் நிவாரணம் - எடப்பாடி அறிவிப்பு! || வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி || ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு! || திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு || தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல் ||
தமிழகம்
மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு –சீமான்
 ................................................................
முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி!
 ................................................................
ஆர்.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் நாகராஜன் பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை: கி.வீரமணி இரங்கல்
 ................................................................
திருச்செந்தூர் கோவில் விபத்தில் உயிரிழந்தவருக்கு 5 லட்சம் நிவாரணம் - எடப்பாடி அறிவிப்பு!
 ................................................................
வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி
 ................................................................
காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்!
 ................................................................
ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு!
 ................................................................
முதல் முறையாக மாவட்ட ஆட்சியரை சொந்த கிராமத்தில் பார்த்த மக்கள்
 ................................................................
ஆளுநரின் ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
 ................................................................
திருச்சியில் ஹெல்மெட் சோதனையில் ரூ.36 லட்சம் வசூல்!
 ................................................................
புற்றீசல் போல் வந்து குவியும் வட மாநிலத்தவர்களை கண்காணிக்க வேண்டும்: வேல்முருகன்
 ................................................................
வேலூர் மத்திய சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்! (படம்)
 ................................................................
3 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலையை கடத்த முயற்சி!
 ................................................................
ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்!
 ................................................................
கடலூர் மாவட்டத்தில் ஆளுநர் ஆய்வுக்கு கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு!
 ................................................................
போராட்டத்தை நசுக்க நினைத்தால் அது எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்: வைகோ
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நித்தியானந்தாவுக்கு இடைக்கால தடை
 ................................................................
விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக செந்தில்பாலாஜிக்கு உத்தரவு
 ................................................................
நடிகை ராணி பத்மினி கொலை வழக்கு; காவலாளி லட்சுமி நரசிம்மனை விடுதலை செய்ய உத்தரவு
 ................................................................
மேளம் அடித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் மதுசூதனன் (படங்கள்)
 ................................................................
ஆர்.கே.நகருக்கு புதிய இணையதளம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (22:40 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (22:40 IST)


ரவுடி காரில் கடத்திக் கொலை
தி.மு.க. பிரமுகர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு

தூத்துக்குடி செயிண்ட் பீட்டர் கோவில் தெருவைச் சேர்ந்த சகாய ராஜாவின் மகன் சச்சின். பெற்றோரை இழந்த சச்சின் தனது பெரியம்மா கேத்லின் பராமரிப்பில் உள்ளவன். வெட்டியாய்த்திரிந்த இவன் பல குற்றங்களில் ஈடுபட்டவன். இவன் மீது சிப்காட், மத்திய பாகம், மற்றும் வட பாகம் காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட சில வழக்குகள் பதிவாகி நிலுவையில் உள்ளன. ரவுடி என்றும் காவல் நிலையக் குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளவன் என்கிறது காவல்துறை தரப்புகள்.



இதனிடையே நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி ஜோதி நகர் பகுதியில் சரமாரியான கத்திக் குத்து மற்றும் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு அலங்கோலமாகக் கிடந்த சச்சினின் உடலை மீட்ட வடபாகம் காவல் ஆய்வாளர் பார்த்திபன் கொலை தொடர்பாக விசாரணை நடத்தினார். அது தொடர்பாக 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுவது. சின்னக்கடை தெருவைச் சேர்ந்த பில்லா ஜெகன் தி.மு.க. பிரமுகர் முன்னாள் இளைஞரணி து.செ. நடிகர் விஜய் மன்றத் தலைவராகவும் உள்ளார். இவரது மகள் நெல்லையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருபவர். தினம் தோறும் அவள் பேருந்தில் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் இவர் கல்லூரிக்குச் செல்லும் போதும், வரும் போதும் பின் தொடர்ந்து செல்லும் சச்சின், அவளைக் கேலியும் கிண்டலும் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். டார்ச்சர் செய்திருக்கிறார். அவனது டார்ச்சர் காரணமாக அந்தப் பெண் மிரண்டு போனதுடன் பீதியில் உறைந்திருக்கிறார். 

ஒரு கட்டத்தில் அவனைக் கண்டித்திருக்கிறாள். சர்ச் ஒன்றில் ஒருவன், ஆசிரியைப் படுகொலை செய்தது போல் உன் தந்தையை வெட்டிக் கொலை செய்து விட்டுக் கூட உன்னைத் தூக்கிக் கொண்டு போய் விடுவேன் என்றும் சச்சின் மிரட்டியிருக்கிறானாம். இதனால் அதிர்ச்சியாகிப் போன அவள் நடந்தவைகளைத் தன் தந்தை ஜெகனிடம் சொல்லிக் கதறியிருக்கிறாள்.

இதையடுத்த கடந்த இரு தினங்களுக்கு முன்பு மட்டக் கடை ஏரியாவில் நின்று கொண்டிருந்த சச்சினை அழைத்த ஜெகன், அவனைக் கண்டித்திருக்கிறார். இதில் வாக்குவாதம் ஏற்படவே ஜெகனை சச்சின் மிரட்டியிருக்கிறான். ஜெகனைக் கத்தியால் குத்த முயன்றிருக்கிறான். அப்போது அந்தப் பகுதியில் கூட்டம் கூட, சச்சின் அங்கிருந்து தப்பி ஒடியிருக்கிறார். இது தொடர்பாக ஜெகன் கொடுத்த புகாரின் மீது வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையும் நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு வடபாகம் காவல் நிலைய லிமிட்டிற்குட்பட்ட 2ம் கேட் பகுதியின் முத்தமாள் காலனியின் 8ம் தெருவில் சச்சின் நடந்து சென்று கொண்டிருந்த போது காரில் வந்த ஜெகனின் தம்பிகளான சுமன், சிம்சன், திருச்சிற்றம்பலம், பாலா கார்த்திக் உள்ளிட்ட 8 பேரும் சச்சினை அடித்து உதைத்திருக்கிறார்கள். பின்னர் அவனைக் காரில் கடத்திக் கொண்டு ஜோதி நகர் விலக்கு அருகே சாலையில் வைத்துக் கத்தியால் குத்தியுள்ளனராம். 

பின்னர் அப்பகுதியில் போட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளது தெரிய வந்தது. உயிர் பிரிந்து சடலமாகச் சச்சின் கிடந்த இடம் சிப்காட் போலீஸ் எல்லைக்கு உட்பட்டதால், சச்சின் தொடர்பான வழக்குகள் வடபாகம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

வடபாகம் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் பார்த்திபன் இது தொடர்பாக விசாரணை நடத்தி ஜெகன் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தவர் நேற்றிரவு ஜெகன் அவருடைய தம்பி சிம்சன், திருச்சிற்றம்பலம், பாலா கார்த்திக் சின்னத்துரை உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்தார். ஜெகனின் மற்றொரு தம்பியான சுமனைப் போலீசார் தேடி வருகின்றனர் என்கிறார்கள் விசாரணை தரப்பினர்.

இது குறித்து தனிப்பிரிவு இன்ஸ்பெக்டரான சேவியரிடம் நாம் பேசிய போது, சச்சின் மீது வழக்குகள் உள்ளன. அவர் கல்லூரி சென்ற பெண்னை தொடர்ந்து கிண்டலடித்து இம்சை செய்தது தொடர்பாக நடந்த கொலையில் ஜெகன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. அதன் பின் முறைப்படி அவர்களனைவரும் ரிமாண்ட் செய்யப்படுவார்கள் என்றார். இந்தக் கொலையால் தூத்துக்குடி பரபரப்பாகியுள்ளது.
 
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :