Add1
logo
நீட் தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் மீது மத்திய-மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை - ஜி.கே.வாசன் || பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம் || தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு || ஷாப்பிங் மாலில் சசிகலாவை பார்த்தேன்: கர்நாடக காங்கிரஸ் முத்துமாணிக்கம் || தூக்கில் தொங்கிய பட்டதாரி இளைஞன்: காதலியின் முறை மாமன் காரணம் கொதிக்கும் உறவினர்கள் || சின்னசேலத்தில் டிராக்டர் மீது ரயில் மோதிய விபத்து: 300 பேர் உயிர் தப்பினர் || ஜெகன் மீது வழக்குப்பதிய தேர்தல் ஆணையம் உத்தரவு || கோவா, டெல்லி, ஆந்திர மாநில சட்டசபை இடைத்தேர்தல்கள்: வாக்குப்பதிவின் சதவீதங்கள் || அமெரிக்கா தேசிய பூங்காவில் பாண்டா கரடியின் பிறந்தநாள் உற்சாகம் || உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடர்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சிந்து || காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினகரன் கொடும்பாவி எரிப்பு (படங்கள்) || பாஜக நெருக்கடி; பாண்டி to பெங்களூரு செல்லும் தினகரன் எம்.எல்.ஏ.க்கள்! || திவாகரன் தலைமையில் எஸ்.காமராஜ் வீட்டில் திடீர் ஆலோசனை! ||
தமிழகம்
நீட் தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் மீது மத்திய-மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை - ஜி.கே.வாசன்
 ................................................................
பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம்
 ................................................................
தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு
 ................................................................
தூக்கில் தொங்கிய பட்டதாரி இளைஞன்: காதலியின் முறை மாமன் காரணம் கொதிக்கும் உறவினர்கள்
 ................................................................
சின்னசேலத்தில் டிராக்டர் மீது ரயில் மோதிய விபத்து: 300 பேர் உயிர் தப்பினர்
 ................................................................
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினகரன் கொடும்பாவி எரிப்பு (படங்கள்)
 ................................................................
மயிலாப்பூரில் தினகரன் உருவபொம்மை எரிப்பு
 ................................................................
விநாயகர் சதுர்த்தி விழா; விதிகளை வகுக்க ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
அமைச்சர்கள் சென்னை வர அவசர உத்தரவு!
 ................................................................
திவாகரனுக்கு சொந்தமான பேருந்து கண்ணாடி உடைப்பு!
 ................................................................
திமுக போராட்டத்துக்கு திவாகரன் ஆதரவு
 ................................................................
தினகரன் - காமராஜ் ஆதரவாளர்கள் மோதல் தடுத்து நிறுத்தம்
 ................................................................
திருவாரூரில் தினகரன் உருவபொம்மை எரிப்பு
 ................................................................
மாநில அரசு இனியும் தலையாட்டிப் பொம்மைதானா?: கி.வீரமணி
 ................................................................
தமிழக மாணவர்களுக்கு, தமிழக அரசு அநீதி விளைவித்துள்ளது:விஜயகாந்த்
 ................................................................
திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளர் மாற்றம் - டிடிவி அறிவிப்பு!
 ................................................................
சென்னையில் மின்சார பஸ் சோதனை ஓட்டம் (படங்கள்)
 ................................................................
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முற்றுகை
 ................................................................
போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் - தினகரன் உருவபொம்மை எரிப்பு!
 ................................................................
டி.டி.வி. தினகரனுடன் நடிகர் விஷால் சந்திப்பு
 ................................................................
எடப்பாடி அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னருக்கு கடிதம்
 ................................................................
வங்கிகள் 3562 சிறப்பு அதிகாரி வேலைக்கான விண்ணப்பிக்கும் நேரம் இது!
 ................................................................
முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும்; எஸ்.டி.பி.ஐ
 ................................................................
நீட் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை; தமிழக மாணவர்கள் தலையில் பேரிடி; பழ.நெடுமாறன் கண்டனம்
 ................................................................
புதுச்சேரி அருகே டி.டி.வி.தினகரன் உருவ பொம்மை எரிக்க முயற்சி!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (19:1 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (19:1 IST)



மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே! 
மத்திய அரசுக்கு கி.வெங்கட்ராமன் வேண்டுகோள்

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்  கி. வெங்கட்ராமன் அறிக்கை! 

’’இந்திய அரசு மரபீனி மாற்றக் கடுகுப் பயிருக்கு இசைவு அளித்துள்ளது. இதுவரை இந்தியாவில் மரபீனி மாற்ற உணவுப் பயிருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மோடி அரசு முதல் முறையாக மரபீனி மாற்ற உணவுப் பயிரான கடுகுக்கு இசைவு அளித்துள்ளது. இது அடுத்தடுத்து மரபீனி மாற்ற உணவுப் பயிர்களை அனுமதிப்பதற்கான தொடக்க நடவடிக்கையாகும்!   இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மரபீனி பொறியியல் இசைவுக் குழு (Genetic Engineering Approval Committee - GEAC) கடந்த 11.05.2017 நாளிட்ட அறிவிப்பின் மூலம், இந்த அனுமதியை வழங்கியிருக்கிறது.   “தாரா கலப்பினக் கடுகு” (Dhara Mustard Hybrid – DMH11) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மரபீனி மாற்றக்கடுகு, தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் தீபக் பென்டால் குழுவினரின் தயாரிப்பு ஆகும்.   மரபீனி மாற்றக் கடுகு மற்றும் மரபீனி மாற்ற உணவுப் பயிர்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் அமர்த்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு கடந்த 2013ஆம் ஆண்டு, மிக விரிவான ஆய்வறிக்கையை அளித்தது.  

 மரபீனி மாற்றப்பட்ட கடுகுக்கு எதிராக இந்தத் தொழில்நுட்ப வல்லுநர் குழு எழுப்பிய எந்த வினாவுக்கும் விடையளிக்காமலேயே மரபீனி பொறியியல் இசைவுக்குழு இந்த மரபீனி மாற்றக் கடுகுக்கு வணிக வகைப் பயன்பாட்டுக்கு இசைவு அளித்துள்ளது.   ஆய்வு வயல்களிலேயே அனுமதிக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்ட இந்த DMH11 மரபீனி மாற்றக் கடுகு விதைகள், இனி சந்தைக்கு வர இருக்கின்றன. இந்த மரபீனி மாற்றக் கடுகு, சுற்றியுள்ள பிற பயிர்களுக்கும் மண்ணுக்கும் நிலத்தடி நீருக்கும் கேடு விளைவிப்பதோடு மட்டுமின்றி, இதை உண்னும் மனிதர்களுக்குக் கொடிய நரம்பியல் நோய்களை உருவாக்கும் ஆபத்தும் உள்ளது.   இந்த மரபீனி மாற்றக் கடுகு வகையினம் களைக்கொல்லி தாங்கும் (Herbicide tolerant variety) வகையினமாகும். இந்தக் கடுகு விதைகள் முறையாக முளைப்பதற்கு குளுஃபோசினேட் (Glufosinate – C 5 H 12 NO 4 P) என்ற உயர் கலைக்கொல்லியைப் போட வேண்டும். 

  இந்த குளுஃபோசினேட் களைக்கொல்லி, தாரா கலப்பினக் கடுகைத் தவிர சுற்றியுள்ள பிற தாவரங்களை களையாகக் கருதிக் கொன்றுவிடும்.   தாரா கலப்பினக் கடுகு இப்போது பயன்பாட்டிலுள்ள கடுகைவிட நோய் தாங்குத்திறன்  குறைவானது. இதனால் ஆண்டுக்கு ஆண்டு குளுஃபோசினேட் களைக்கொல்லியின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்பதை புகழ்பெற்ற வேளாண் அறிஞர் பென் புரூக் (Ben Brook) அமெரிக்காவில் மேற்கொண்ட விரிவான தனது ஆய்வில் வெளிப்படுத்தியிருக்கிறார். 

  “அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மரபீனி மாற்றப்பட்ட பயிர்களுக்கு களைக் கொல்லியின் பயன்பாடு” என்ற தனது ஆய்வறிக்கையை 2012ஆம் ஆண்டு பென் புரூக் வெளியிட்டார். கடுகு மட்டுமின்றி, சோயா உள்ளிட்ட களைக் கொல்லி எதிர்ப்பு வகையின மரபீனி மாற்றப் பயிர்களை புதிதாக ஆய்வு செய்து, அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.   அதேபோல், இந்த மரபீனி மாற்றக் கடுகு போன்ற மரபீனி மாற்றப் பயிரினங்களில் குளுஃபோசினேட் பயன்பாடு அதிகரிப்பது “தரைக்கு வந்த சுனாமி” என்று ஹார்க்கர் மற்றும்  ஆய்வுக் குழுவினர் 2012ஆம் ஆண்டு தங்களது ஆய்வறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளனர். (Weed Science – 2012 - 60(2), Page 143, 144).   இப்போது வேளாண்மைப் பணிகளுக்கு நிலவும் ஆள்பற்றாக்குறையைக் காரணம் காட்டி, ஆட்களை வைத்துக் களையெடுப்பு செய்யாமல் இருக்க தாரா கலப்பினக் கடுகு பயன்படும் என இதற்கு ஞாயம் சொல்லப்படுகிறது.   ஆனால், களையெடுப்பு ஆள் கூலியைவிட இந்த மரபீனி மாற்றக் கடுகு விதை விலையும், அதற்கு இடப்படும் குளுஃபோசினேட் களைக்கொல்லியின் விலையும் மிகப்பெரும் சாகுபடிச் செலவை உருவாக்கும்.   குளுஃபோசினேட் பயன்பாடு மண்ணின் வளத்தைக் கெடுப்பதோடு, நிலத்தடி நீரையும் நஞ்சாக்குகிறது.   

குளுஃபோசினேட் பயன்பாட்டின் காரணமாக அந்தக் கடுகு வயல் இருக்கும் பகுதி முழுவதிலும் தேனீக்கள் மற்றும் பட்டாம் பூச்சுகளின் இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. தேனீ, பட்டாம் பூச்சுகள் குறைவதால் இந்த வயலைச் சுற்றியுள்ள பிற வயல்களில் பிற பயிர்களின் மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்பட்டு, மற்ற உழவர்கள் பாதிக்கப்படுவார்கள்.   குளுஃபோசினேட்டை சுண்டெலியின் மீது செலுத்தி சோதித்த போது, அதன் நரம்பு மண்டலம் குறிப்பாக மூளை வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டு, இனம் கண்டறிய முடியாத நரம்பியல் நோய்கள் ஏற்பட்டதை ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த ஆய்வுகளை மேற்கோள் காட்டி, தொழில்நுட்ப வல்லுநர் குழு 2013இல் அளித்த அறிக்கை இந்த மரபீனி மாற்றக் கடுகுகளுக்கு கொடிய நரம்பியல் நோய்கள் வருவதற்கு வாய்ப்புண்டு என எச்சரித்தது.   இவை எது பற்றியும் கவலைப்படாமல் மரபீனி பொறியியல் ஏற்பிசைவுக் குழு, தாரா கலப்பினக் கடுகுக்கு இசைவு அளித்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது!  

 இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் கரே இந்த அனுமதி அறிக்கையில் கையெழுத்திட்டால்தான், அது ஆணையாக வெளிவரும்.   இதற்கு முன்னர், மரபீனி பொறியியல் ஏற்பிசைவுக் குழு பி.ட்டி. கத்தரிக்கு அனுமதி வழங்கிய பின்னாலும் அன்றைய சுற்றுச்சூழல் அமைச்சர் செயராம் இரமேஷ் நாடு முழுவதும் ஏற்பட்ட எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, பி.ட்டி. கத்தரிக்கு அனுமதி வழங்க மறுத்தார்.   இதை முன்னெடுத்துக்காட்டாகக் கொண்டு, தற்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் கவே தாரா மரபீனி மாற்றக் கடுகுக்கு அனுமதி அளிக்க மறுக்க வேண்டும்.   ஏனெனில் இந்த அனுமதியை வைத்துக் கொண்டு, அரிசி - கோதுமை உள்ளிட்ட மரபீனி மாற்ற உணவுப் பயிர்கள் சந்தைப் பயன்பாட்டுக்கு வரிசையில் வந்து நிற்கும் ஆபத்து உள்ளது.   எனவே, இந்திய அரசு மரபீனி மாற்றக் கடுகுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். ’’ 

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : தமிழன் Country : Australia Date :5/19/2017 9:26:53 PM
நாகரிகமடைந்த நாடுகளின், மரபு சம்பந்தப்பட்ட படிப்பில் உயர்கல்வி கற்றவர்கள், மரபணுமாற்றப்பட்ட செடி,கொடி மற்ற உணவுக்கான உயிரினங்களை புகுத்துவதை எதிர்க்கிறார்கள்.. கொள்ளைலாபத்தை அடிக்கும் நோக்கமுள்ளவர்கள் ," மக்கள் உடல்நலன் எக்கேடுகெட்டால் நமக்கென்ன, நமக்குள்ள கமிஷன் ஓழுங்காகக் கிடைத்தால் போதும் " என்ற எண்ணம் உடையவர்கள் , இவைகளை தந்திரமாகப் புகுத்துகிறார்கள்.