Add1
logo
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு || தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ ||
தமிழகம்
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு
 ................................................................
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம்
 ................................................................
பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல்
 ................................................................
மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம்
 ................................................................
அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது
 ................................................................
முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
 ................................................................
தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ
 ................................................................
பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தி இருப்பது சரியானது தான்: பொன்.ராதாகிருஷ்ணன்
 ................................................................
திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்: திருநாவுக்கரசர் அறிவிப்பு
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெறக் கோரி ஆர்ப்பாட்டம்! திருமாவளவன்
 ................................................................
பிரபல ரவுடி ஸ்ரீதரின் மனைவி கைது!
 ................................................................
பிச்சைக்காரர்கள் கூட 1 ரூபாய் வாங்க மாட்டார்கள்... பேருந்து கட்டண உயர்வுக்கு செல்லூர் ராஜூ பதில்
 ................................................................
தர்மபுரியில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு
 ................................................................
பி.எச். பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் காலாமானார்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள இயலாது! மஜக கண்டனம்!
 ................................................................
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை
 ................................................................
மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம்
 ................................................................
திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (12:25 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (14:8 IST)



முதலிடத்துக்கு முன்னேறியது எப்படி?  - விருதுநகர் மாவட்ட கல்வித்துறை பெருமிதம்!


10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.55 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது விருதுநகர் மாவட்டம். கடந்த ஆண்டு 97.81 சதவீத தேர்ச்சி பெற்று 3-ஆம் இடத்தில் இருந்த இந்த மாவட்டம், இந்த ஆண்டு 98.55 சதவீத தேர்ச்சி பெற்று முதல் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

2001-லிருந்து 2011-ஆம் ஆண்டு வரையிலும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் விருதுநகர் மாவட்டமே முதலிடத்தில் இருந்து வந்தது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் முதல் இடத்துக்கு வந்திருக்கிறது. இதனால், விருதுநகர் மாவட்ட கல்வித்துறையினரும், பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.



இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மனோகரன், “இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் – கற்றலில் பின் தங்கியிருந்த மாணவர்களைக் கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்தி, சிறப்பு வகுப்புக்கள் மற்றும் விடுமுறை நாட்களில் உண்டு உறைவிட வகுப்புக்கள் நடத்தியதால் இது சாத்தியமாகி இருக்கிறது. இது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.” என்றார்.

விருதுநகர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 28574 மாணவ மாணவியர்களில் 28160 பேர் தேர்ச்சி .இந்த மாவட்டத்தில் மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 340 ஆகும். 229 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருக்கின்றன. இதில் 104 அரசு பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

ராஜபாளையம் ரமண வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகளான பத்மப்ரியா, உதய தர்ஷிணி, அனுஷா ஆகிய மூன்று மாணவியரும் 500-க்கு தலா 498 மதிப்பெண்கள் பெற்று         அசத்தியிருக்கின்றனர்.  இதே பள்ளியில் பயிலும் பூர்ணிமா, குரு தர்ஷிணி ஆகிய இரு மாணவியரும் 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர். அருப்புக்கோட்டை SBK பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி காவ்யா  500 க்கு 497 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.  சிவகாசி கார்னேசன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியான டெல்சி 500-க்கு 498 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார். மிகவும் பின் தங்கிய ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த டெல்சி, இந்த அளவுக்கு மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவரது பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.  



- சி.என்.இராமகிருஷ்ணன்.    
    

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :