Add1
logo
11 லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது || மாநில தேர்தல் ஆணையர் கோவையில் ஆலோசனை || சகாயம் கமிஷன் அறிக்கையை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் - நல்லகண்ணு || பிளஸ்2 மாணவர் குத்திக்கொலை || சென்னை மற்றும் புறநகர்களில் பலத்த மழை || திருப்பதியில் பக்தர்களிடம் பணம் கேட்டு புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை || நீதி விசாரணை கண்துடைப்பு நாடகம்:மு.க.ஸ்டாலின் || இளம்பெண் துப்பாக்கியால் சுட்டுக்கொலை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை || வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது || பெருவில் ஊதிய உயர்வை வலியுறுத்தி ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் இடையே மோதல் || சர்வதேச குள்ள விளையாட்டு வீரர்கள் போட்டியில் இந்திய அணி 37 பதக்கங்கள் வென்று சாதனை || கலைவாணர் அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கிராம உதவியாளர்கள் போராட்டம் || நடிகர் அல்வா வாசு காலமானார் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (12:13 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (12:14 IST)


சாம்பியன்ஸ் ட்ராஃபியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்!

வரும் ஜூன்1-ஆம் தேதி இங்கிலாந்தில் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடங்கவிருக்கிறது. மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் இந்த கிரிக்கெட் தொடரில் கலந்துகொள்ளும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் இளம் வீரர்கள் மற்றும் தோனி, யுவராஜ், அஸ்வின் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம்பெற்றிருந்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.



இந்திய அணியில் கவுதம் காம்பீர், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட முன்னணி வீரர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மணீஷ் பாண்டே அணியில் இடம்பிடித்திருந்தார். இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆடிவரும் மணீஷ் பாண்டேவுக்கு பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் ட்ராஃபியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு பறிபோனது. தற்போது அந்த இடத்தை தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நிரப்பியுள்ளார்.

தேர்வாளர்கள் மத்தியில் தினேஷ் கார்த்திக் பெயர் வரக்காரணம் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அவரது அபரிமிதமான ஆட்டங்கள் தான் என குறிப்பிடப்படுகிறது. 2016-2017 ஆண்டிற்கான ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் தினேஷ் கார்த்திக் மொத்தம் 704 ரன்கள் மற்றும் 54.15 சராசரி ரன்கள் அடித்திருப்பது, விஜய் ஹசாரே மற்றும் தியோதர் கோப்பை ஆட்டங்களில் தமிழக அணி வெற்றிக்கோப்பை பெற முக்கியக் காரணமாக இருந்தது மற்றும் ஐபிஎல்-ல் குஜராத் லயன்ஸ் அணிக்காக 139.38 ஸ்ட்ரைக் ரேட்டுடன், அவர் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டங்கள் என எல்லாம் அவரை சாம்பியன்ஸ் ட்ராஃபி கோப்பிக்கு அழைத்துச்சென்றுள்ளன.

கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த சம்பியன்ஸ் ட்ராஃபி போட்டிகளில் இந்திய அணி வென்றதும், அந்த அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 2104-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இந்த ஆண்டில் சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கான இந்திய அணிப்பட்டியலில் தமிழக வீரர் ஒருவர் இடம் பெற்றிருப்பது தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.   

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : ராஜா Date :5/20/2017 10:32:49 PM
அது 2104 இல்ல சார்வால்2014