Add1
logo
நீட் தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் மீது மத்திய-மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை - ஜி.கே.வாசன் || பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம் || தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு || ஷாப்பிங் மாலில் சசிகலாவை பார்த்தேன்: கர்நாடக காங்கிரஸ் முத்துமாணிக்கம் || தூக்கில் தொங்கிய பட்டதாரி இளைஞன்: காதலியின் முறை மாமன் காரணம் கொதிக்கும் உறவினர்கள் || சின்னசேலத்தில் டிராக்டர் மீது ரயில் மோதிய விபத்து: 300 பேர் உயிர் தப்பினர் || ஜெகன் மீது வழக்குப்பதிய தேர்தல் ஆணையம் உத்தரவு || கோவா, டெல்லி, ஆந்திர மாநில சட்டசபை இடைத்தேர்தல்கள்: வாக்குப்பதிவின் சதவீதங்கள் || அமெரிக்கா தேசிய பூங்காவில் பாண்டா கரடியின் பிறந்தநாள் உற்சாகம் || உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடர்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சிந்து || காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினகரன் கொடும்பாவி எரிப்பு (படங்கள்) || பாஜக நெருக்கடி; பாண்டி to பெங்களூரு செல்லும் தினகரன் எம்.எல்.ஏ.க்கள்! || திவாகரன் தலைமையில் எஸ்.காமராஜ் வீட்டில் திடீர் ஆலோசனை! ||
தமிழகம்
நீட் தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் மீது மத்திய-மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை - ஜி.கே.வாசன்
 ................................................................
பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம்
 ................................................................
தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு
 ................................................................
தூக்கில் தொங்கிய பட்டதாரி இளைஞன்: காதலியின் முறை மாமன் காரணம் கொதிக்கும் உறவினர்கள்
 ................................................................
சின்னசேலத்தில் டிராக்டர் மீது ரயில் மோதிய விபத்து: 300 பேர் உயிர் தப்பினர்
 ................................................................
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினகரன் கொடும்பாவி எரிப்பு (படங்கள்)
 ................................................................
மயிலாப்பூரில் தினகரன் உருவபொம்மை எரிப்பு
 ................................................................
விநாயகர் சதுர்த்தி விழா; விதிகளை வகுக்க ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
அமைச்சர்கள் சென்னை வர அவசர உத்தரவு!
 ................................................................
திவாகரனுக்கு சொந்தமான பேருந்து கண்ணாடி உடைப்பு!
 ................................................................
திமுக போராட்டத்துக்கு திவாகரன் ஆதரவு
 ................................................................
தினகரன் - காமராஜ் ஆதரவாளர்கள் மோதல் தடுத்து நிறுத்தம்
 ................................................................
திருவாரூரில் தினகரன் உருவபொம்மை எரிப்பு
 ................................................................
மாநில அரசு இனியும் தலையாட்டிப் பொம்மைதானா?: கி.வீரமணி
 ................................................................
தமிழக மாணவர்களுக்கு, தமிழக அரசு அநீதி விளைவித்துள்ளது:விஜயகாந்த்
 ................................................................
திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளர் மாற்றம் - டிடிவி அறிவிப்பு!
 ................................................................
சென்னையில் மின்சார பஸ் சோதனை ஓட்டம் (படங்கள்)
 ................................................................
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முற்றுகை
 ................................................................
போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் - தினகரன் உருவபொம்மை எரிப்பு!
 ................................................................
டி.டி.வி. தினகரனுடன் நடிகர் விஷால் சந்திப்பு
 ................................................................
எடப்பாடி அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னருக்கு கடிதம்
 ................................................................
வங்கிகள் 3562 சிறப்பு அதிகாரி வேலைக்கான விண்ணப்பிக்கும் நேரம் இது!
 ................................................................
முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும்; எஸ்.டி.பி.ஐ
 ................................................................
நீட் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை; தமிழக மாணவர்கள் தலையில் பேரிடி; பழ.நெடுமாறன் கண்டனம்
 ................................................................
புதுச்சேரி அருகே டி.டி.வி.தினகரன் உருவ பொம்மை எரிக்க முயற்சி!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (10:34 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (10:34 IST)


27ஆம் தேதி மேட்டூர் அணையை தூர் வாரும் பணி தொடக்கம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சேலம் மாவட்டத்தில் நிலவிவரும் கடுமையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது என்பது குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று, காணொலி காட்சி மூலம் மாவட்ட  ஆட்சியர் சம்பத்துடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

மேலும், மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக வழங்கப்பட்டுள்ள வறட்சி நிவாரண தொகை குறித்து கேட்டறிந்ததுடன் அப்பணியை துரிதப்படுத்த துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் வறட்சியிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். 
தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிக்கான நடவடிக்கைகள் குறித்தும், அவற்றை துரிதமாக மேற்கொள்ள கூடுதலாக தமிழக அரசால் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பற்றியும், சேலம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு ஆட்சியர் சம்பத்துக்கு அவர் ஆலோசனைகளை வழங்கினார்.

ஏறி, குளம் போன்ற நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்காக, அரசு அனுமதி பெற்று இலவசமாக எடுத்து பயன்படுத்திட தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் வண்டல் மண் எடுப்பதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளின் விபரம், மதிப்பீடு செய்யப்பட்டுள்ள வண்டல் மண்ணின் அளவு, பயன்பெற்றுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை போன்றவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இத்திட்டம் குறித்து விவசாய பிரதிநிதிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலம் போதிய விழிப்புணர்வு மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார். இந்த காணொலி காட்சி ஆய்வில் மேட்டூர் சப்–கலெக்டர் மேகநாதரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாநகராட்சி ஆணையாளர் கே.ஆர்.செல்வராஜ் மற்றும் அரசின் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காணொலி காட்சி மூலம் நடந்த ஆய்வு கூட்டத்தின் இருதியில் பேசிய மாவட்ட ஆட்சியர் சம்பத், “பொக்லைன் எந்திரம் மூலம் மேட்டூர் அணையை தூர்வாரும் பணியினை உடனடியாக தொடங்க முதலவர் உத்தரவிட்டார். ஆனால், குறுகிய காலத்திற்குள் அனைத்து ஏற்பாடுகளும் செய்வது கடினம் என கூறப்பட்டதால், வருகிற 27–ந் தேதி (சனிக்கிழமை) ஏற்காடு கோடைவிழா–மலர்க்கண்காட்சி தொடக்க நிகழ்ச்சிக்கு சேலம் வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அன்று காலையில் மேட்டூர் அணையை தூர்வாரும் பணியை தொடங்கி வைக்கிறார்.

அதற்கு முன்னதாகவே, தலைமைச் செயலகத்தில் இருந்து வரும் அரசு செயலாளர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேட்டூர் அணைக்கு நேரில் சென்று வண்டம் மண் எடுக்கும் இடங்கள் குறித்து ஆய்வு செய்வதுடன், அணையினை தூர்வாரும் பணிக்கான முன்னேற்பாடுகளை செய்ய உள்ளனர்.
மேலும், அணையிலிருந்து வண்டல் மண்ணை அள்ளுவதற்கு தகுந்த இடங்களை அடையாளம் காண, துறை அலுவலர்களுக்கு கலெக்டர் சம்பத் உத்தரவிட்டார். அது தொடர்பாக தனியாக ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

சிவசுப்பிரமணியன்
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :