Add1
logo
ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு! || திருட்டுதனமாக மணல் ஏற்றிய 13 லாரிகள் சிறைபிடிப்பு! (படம்) || ஜி.எஸ்.டி. கருத்தரங்கம் - நிர்மலா சீதாராமன் விளக்கம்! ( படங்கள் || மதுரைக் குசும்பு! நம்பர் பிளேட்டிலிருந்து வால் போஸ்டர் வரை.. || காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 96 ரவுடிகள் கைது! || ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான 70 கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக்கூட்டம் (படங்கள்) || “கூலிப் பேச்சாளர் வைகைச்செல்வன்..” -போட்டுத் தாக்கும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி! || நடிகர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் கொள்கைகளை கேட்ட பின்னர் தான் கருத்து சொல்ல முடியும்:கவுதமி || ஜூலை 17- ல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடக்கம் || மூக்கம்பட்டி ஜல்லிகட்டு ( படங்கள் || ஏரியில் குப்பைகளை அகற்றி தூர்வாரும் பணி || கல்வி மந்திரி அறிவிப்பு கண் துடைப்பா? கொந்தளிப்பில் பகுதி நேர ஆசிரியர்கள்! || கடல்நீர் உட்புகுவதை தடுக்க கொள்ளிடம் ஆற்றில் தடுப்பனை கட்டவேண்டும்- விவசாயிகள் வலியுறுத்தல் ||
முக்கிய செய்திகள்
“கூலிப் பேச்சாளர் வைகைச்செல்வன்..” -போட்டுத் தாக்கும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி!
 ................................................................
நடிகர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் கொள்கைகளை கேட்ட பின்னர் தான் கருத்து சொல்ல முடியும்:கவுதமி
 ................................................................
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை
 ................................................................
பாஜகவை ஆதரிப்பதை தவிர அதிமுகவுக்கு வேறுவழியில்லை: பொன்னார் விளக்கம்
 ................................................................
எச்.ராஜா வேண்டவே வேண்டாம்! முட்டுக்கட்டை போட்ட ஆடிட்டர்!
 ................................................................
சறுக்கலை ஏற்படுத்தும் என நம்புகிறார் ரஜினி!
 ................................................................
தமிழக சிறை வேண்டாம்! மறுத்த சசிகலா!
 ................................................................
டெல்லி - எடப்பாடிக்கிடையே ஏற்படுத்திக்கொண்ட டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (10:16 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (16:23 IST)


போர் வரும்போது பார்ப்போம்: ரசிகர்களை
 உற்சாகப்படுத்திய ரஜினி



சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தொடர்ந்து 5 வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்தார்.  கடைசி நாளான இன்று நிகழ்ச்சியில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட ரசிகர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

முன்னதாக ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினிகாந்த்,

எதிர்ப்பு இருந்தால்தான் வளர முடியும். ஒரு செடியை நட வேண்டும் என்றால் குழி தோண்ட வேண்டும். குழி தோண்டிவிட்டு மண், உரத்தை கலந்துவிட்டு விதையை போட்டு மூடிவிடுகிறோம். மூடிவிட்டு விடமாட்டோம். நல்லா அமுக்குகிறோம். ஏன் என்றால் அந்த செடி நன்றாக வளர வேண்டும் என்பதற்காக. அதேபோல நம்ம மேல விழும் அம்புகள், திட்டுகள் எல்லாம் உரம், மண் மாதிரி. செடி அப்படித்தான் நல்லா வெளியே வரும். அவங்க (விமர்சிப்பவர்கள்) நமக்கு நல்லதுதான் பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று சொன்னால் சிலபேருக்கு புரிய மாட்டேங்குது. 

ஒரு தடவை புத்தர் தனது சீடர்களுடன் ஒரு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது ஒரு 7, 8 பேர் வழிமறித்து அவர்களை திட்டுகிறார்கள். எவ்வளவு திட்டினாலும் புத்தர் அமைதியாக நிற்கிறார். சீடர்கள் எதுவும் பேசவில்லை. ஏனென்றால் குருவான புத்தரே அமைதியாக இருப்பதால் சீடர்களும் எதுவும் பேசவில்லை. அந்த 7, 8 பேரும் கண்டபடி திட்டிவிட்டு போனபிறகு, என்ன குரு அவ்வள திட்டினார்களே எதுவுமே பேசாம இருக்கீங்களேன்னு சீடர்கள் கேட்டார்கள். அவர்கள் திட்டி கொட்டிட்டு போய்டாங்க. ஆனா நான் அதை எடுத்துக்கவில்லையே. அவர்களே எடுத்துக்கிட்டு போய்டாங்க என்றார்.

முந்தைய காலத்தில் ராஜாக்களிடம் படை பலம் இருக்கும். லட்சக்கணக்கில் இருக்காது. 5 ஆயிரம், 10 ஆயிரம் என எவ்வளவு சமாளிக்க முடியுமோ அவ்வளவு இருக்கும். ஆனால் போர் என்று வரும்போது, எல்லா ஆண் மக்களும் சேர்ந்து வந்து போரிடுவார்கள். அதுவரைக்கும் அந்த ஆண் மகன்கள் அவரவர் கடைமையை செய்துக்கொண்டே இருப்பார்கள். அப்போது அவர்கள் உழைத்து வாழ்ந்ததால் உடல்கள் வலிமையாக இருக்கும். ஜல்லிக்கட்டு, கம்பு சண்டை, கபடி, குஸ்தி ஆகிய விளையாட்டுகள் வைத்ததே அவர்கள் வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அவரவர் அவர்களுடைய வேலையை செய்துகொண்டிருப்பார்கள். போர் என்று வரும்போது எல்லோரும் இறங்கி மண்ணுக்காக, மானத்துக்காக போராடுவார்கள். அந்த மாதிரி எனக்கும் கடைமை, தொழில், வேலை இருக்கு. உங்களுக்கும் கடைமை, தொழில், வேலை இருக்கு. அதுபோல நீங்கள் ஊருக்கு போங்க, உங்க கடைமையை செய்யுங்கள், தொழிலை செய்யுங்கள், வேலையை செய்யுங்கள். போர் வரும்போது பார்ப்போம். ஆண்டவன் இருக்கான். நன்றி. இவ்வாறு பேசினார்.

படங்கள் - எஸ்.பி.சுந்தர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : karikalan1 Date :5/20/2017 12:49:58 PM
சூப்பர் ஸ்டார் அவர்கள் , தமிழகத்தில் நிலவும் நிர்வாக சீர்கேடு மற்றும் லஞ்ச ஊழல் அரசு மாற வேண்டும் என்று தான் கூறியுள்ளார். அதனை மாற்றி நல்ல நிர்வாகத்தை ரஜினி ஒருவரால் மட்டுமே கொடுக்க முடியும்.
Name : karikalan1 Date :5/19/2017 7:56:58 PM
இல்லாத ஒரு போரை உருவாக்கிக்கொண்டு....அது வரும்போது பாப்போம் என்றால்.....இது எப்பிடி இருக்கு.... இவர் மட்டும் கோடி கோடியா சம்பாதித்து கொள்வாராம்....மத்தவங்க பணம் பண்ண மட்டும் விடமாடடாராம் ....ஹவ் இஸ் இட்