Add1
logo
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு || தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ ||
முக்கிய செய்திகள்
புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்!
 ................................................................
பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து
 ................................................................
வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்!
 ................................................................
இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி
 ................................................................
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி
 ................................................................
எம்.எல்.ஏக்கள் ஊதியத்தை உயர்த்தியபோது நிதிச்சுமை இல்லையா? - தமிழிசை கேள்வி
 ................................................................
பட்டாசுத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் பேசிய விஜயகாந்த்! - மேடை மீது கல்வீச்சு
 ................................................................
ஜெயலலிதா உயிரிழந்த விஷயம் முன்கூட்டியே தெரியும்! - ராஜேந்திரபாலாஜி
 ................................................................
அரசுப்பள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்றிய நக்கீரன்!
 ................................................................
சென்னையில் ஓடஓட விரட்டி இளைஞர் படுகொலை! - பதர வைக்கும் சிசிடிவி காட்சிகள்
 ................................................................
வீடு தேடி மது விற்பனை: எங்கே போகிறது தமிழக அரசு? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (9:28 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (14:30 IST)


நான் பச்சைத் தமிழன்: ரசிகர்கள் முன்பு ரஜினி பேச்சு



சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தொடர்ந்து 5 வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்தார்.  கடைசி நாளான இன்று நிகழ்ச்சியில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட ரசிகர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

முன்னதாக ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினிகாந்த்,

நான் எது பேசினாலும் சர்ச்சை ஆகிறது அல்லது விவாதம் ஆகிறது. தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால் சர்ச்சை ஆகிறது. வாதங்கள், எதிர்ப்பு எல்லாம் இருக்கலாம். எதிர்ப்பு இல்லாமல் உலகமே முடியாது. அதுவும் அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். வாதம், எதிர்வாதம் இருக்கலாம், ஆனால் சில சமூக வலைதளங்களில் சில பேர் திட்டி எழுதுவது வருத்தம் அளிக்கிறது.

முதலில் ஒன்றே ஒன்று தெளிவுப்படுத்திக்கொள்ளணும். ரஜினிகாந்த் தமிழனா என்ற கேள்வி வருகிறது. எனக்கு 67 வயதாகிறது. 23 ஆண்டுகள்தான் நான் கர்நாடகத்தில் இருந்தேன். மிச்சம் 44 ஆண்டுகள் தமிழ் மக்களிடம் இருக்கிறேன். உங்க கூடவே வளர்ந்தேன். கர்நாடகத்தில் இருந்து ஒரு மராட்டியனாக வந்தால்கூட, என்னை நீங்கள் ஆதரித்து அன்பு, பெயர், பணம் எல்லாவற்றையும் அள்ளிக்கொடுத்து என்னை நீங்கள்தான் தமிழனாகவே ஆக்கிவிட்டீர்கள். எனவே, நான் ஒரு பச்சைத் தமிழன். எனது மூதாதையர்கள், எங்க அப்பா கிருஷ்ணகிரியில் பிறந்தவர்கள் என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். 

என்னை இங்கிருந்து போ என்று தூக்கிப்போட்டால் நான் இமயமலையில் போய் விழுவேனே தவிர வேறு எந்த மாநிலத்திலும் விழமாட்டேன். தமிழ் மக்கள், நல்ல மக்கள். இருந்தால் தமிழ் மக்கள் பூமியில் இருக்க வேண்டும். இல்லையென்றால் சித்தர்கள் இருக்கிற இடத்தில் இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

படம் - எஸ்.பி.சுந்தர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(8)
Name : karikalan1 Country : United Kingdom Date :5/20/2017 9:32:36 PM
சினிமாவில் யாரோ வசனம் எழுதி...யாரோ இயக்கி....யாரோ சண்டைபோட்டு ...படம் எடுத்து ஓடியதும் ...ஏதோ இவர்தான் எல்லாம் செய்தமாதிரி நினைத்து கொண்டு ....விசில் அடிப்பதை நிறுத்தவும்.....இவர் வெறும் டூப்புதான் ....ஒரிஜினல்கள் நம் கண்களுக்கு தெரியாமல் திரைமறைவில் உள்ளார்கள்.....இவரை நம்பி தமிழினம் வாக்களித்தால் அதோ கதிதான்....
Name : guru Country : Canada Date :5/20/2017 4:07:12 PM
Much shadow about nothing.
Name : murugesu Date :5/20/2017 1:03:50 PM
ரஜினி அரசியலுக்கு வருவது நிச்சயம். வெற்றி பெறுவது சத்தியம். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
Name : selvarajan Date :5/19/2017 5:51:58 PM
அதென்ன பச்சைத்தமிழன்? அப்படியென்றால் நீலத்தமிழன், வெள்ளைத்தமிழன், சிகப்புத்தமிழன் என்றெல்லாம் உண்டா? தமிழ் நாட்டில் இத்தனை வருடங்கள் வாழ்ந்து, சம்பாதித்து, வருமானவரி கட்டிய அடையாளமே போதுமே. ஆனால் ஆர்வக்கோளாறினால் அறியாமையில் உழலும் இவருடைய ரசிகர்களின் பேச்சைக்கேட்டு இவர் அரசியலில் நுழைந்தால் மானமிழந்து மதிகெட்டு எல்லோர்க்கும் கள்ளனாய் தீயனாய் நல்லவர்க்கும் பொல்லாதவனாகிவிடுவார். இது இவருக்கு தேவையா?
Name : murugesu Date :5/19/2017 3:07:24 PM
நீங்கள் தமிழ் மண்ணில் வாழுங்கள் , பொருள் சேருங்கள் மகிழ்ச்சி ,ஆனால் தமிழ் நாட்டிடை ஆள நினைக்காதீர்கள் இதே 18 2009 இல் ஈழத்தில் எம் இனம் லடசகணக்காக கொன்றொழிக்கப்பட்ட்டபோது ஓர் தமிழன் ஆட்ட்ச்சி பொறுப்பில் இருந்திருந்தால் மத்திய அரசை எதிர்த்து தமிழ் நாடடையே ஸ்தம்பிக்க வைத்து போரை நிறுத்த வைத்திருப்பான் ஆகவே தான் தமிழ் நாடடை தமிழனே ஆளவேண்டும்
Name : Superusa Date :5/19/2017 11:25:31 AM
தலைவர் ரஜினி அவர்களின் அரசியல் வெற்றி பயணம் துவங்கி விட்டது. தமிழகம் தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென்றால் தலைவர் ரஜினி அவர்கள் தமிழக அரியணை எற வேண்டும்.
Name : Superusa Country : United States Date :5/19/2017 10:07:53 AM
நீ பச்சை பொய். பச்சை துரோகி. திருமா, அன்புமணி பற்றி பேச நீ யார்? சொன்னேனே! தேவரும் கௌண்டரும் கொண்ட அதிமுக மடக்க வியூகம் அமைக்க படுகிறது. பிற சாதிக்காரர்கள் கேவலப்படுத்தும் வேலை தொடங்குகிறது. கொஞ்ச ஒட்டு வாங்கினால் போதும். மிச்ச ஓட்டை பிஜேபி போட்டுக்கொள்ளும். Ops டெல்லி பயணம் , பிறகு தினகரன் மன்னிக்க படுவார்கள்.
Name : pathman Country : Canada Date :5/19/2017 9:49:21 AM
நீங்கள் தமிழனா இல்லையா என்பது தேவை இல்லாத பிரச்சனை.தமிழ் நாட்டு மருமகன்.இந்த குறுகிய மனப்பான்மை உள்ளவர்கள் சொல்வது போல் நீங்கள் மார்டியனாக இருந்தாலும் பிரச்சனை இல்லை.இந்திய குடிமகன்,தமிழகம் உங்கள் வாழ்விடம்.அது போதும் தேர்தலில் நிற்க.சோனியாவை பிரதமராக்க துடிப்பவர்கள் உங்களை,குஸ்புவை எதிர்ப்பது ஏன்? பயம்.ஆனால் விசில் அடிக்கும் கூடத்தை நம்பி கால் வைப்பதை பற்றி யோசித்து கால் வைக்கவும்.