Add1
logo
ரஜினியை முன்னிறுத்தி பா.ஜ.க குறுக்கு வழி தேடுகிறது : வேல்முருகன் || நான் ஆட்சிக்கு வரமுடியாது என்பது எனக்கு நல்லாவே தெரியும்: திருமாவளவன் || திமுக வர்த்தக அணி ஆலோசனை கூட்டம் - 23 தீர்மானங்கள் நிறைவேற்றம் ( படங்கள் || நீதிமன்ற கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டிகள் மாயம் || டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி ( படங்கள் || எந்த மாநில அரசையும் கலைக்க பாஜக தயாராக இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி || பெரிய விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியாது –செல்லூர் ராஜு || பொதுமக்கள் முற்றுகை: டாஸ்மாக் கடையை மாற்றுவதாக போலீசார் வாக்குறுதி || மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் || தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்: பாரதிராஜா || தம்பிதுரை தலைமையில் ஆலோசனை : அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு || எம்.ஜி.ஆரை மறந்த அதிமுக அம்மா அணியினர் || தொண்டர் அணி நிர்வாகிகளுடன் வாசன் ஆலோசனை ||
சிறப்பு கட்டுரை
ஸ்மார்ட் க்ளாஸ்... மாணவர்கள் கையில் டேப்லட்... ஆஹா... அரசுப் பள்ளியா இது..?
.............................................
சட்ட மாணவியின் ‘நறுக்’ தண்டனை: படத்தில் நடந்தது நிஜத்தில்!
.............................................
ரேன்சம்வேரா... உலகப்போரா??? வெளியே வந்த அமெரிக்க வைரஸ் பூதம்!
.............................................
ஒருத்தி! இன்னொருத்தி! வேறொருத்தி! பாலு மகேந்திரா ஒரு படிப்பினை!
.............................................
மே 21 இராஜிவ்காந்தி படுகொலை நாள்!
.............................................
தோண்டியெடுக்கப்பட்ட தமிழனின் பெருமை..!
.............................................
கழுகைப் பார்! உன்னை மாற்று! உருமாறு! -மாணவர்களுக்கான பொன்ராஜ் உரை!
.............................................
சென்னையில் உச்சகட்ட வெயில்! வெதர்மேன் விடும் அலர்ட்
.............................................
கச்சிதமாகப் பொருந்திய ‘கள்ளபார்ட்’ வேடம்! நடிக்கும் போதே உயிரை விட்ட நடராஜன்!
.............................................
முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம்! என்ன சொல்கிறது எஸ்மா?
.............................................
இளைப்பாறும் இரும்பு மனம்! கொடைக்கானலில் இரோம் ஷர்மிளா!!
.............................................
ஐடி லே ஆஃப்.. உறங்கும் அரசு.. உறைந்து கிடக்கும் ஊழியர்கள்!
.............................................
ரஜினியின் அரசியல் நெருப்பு?
.............................................
முக்கியமான மூன்று குற்றச்சாட்டுகள்... ரசிகர் கோர்ட்டில் ரஜினியின் வாக்குமூலம் !!!
.............................................
அதிமுக அரசின் பிடிவாதமே மக்களைப் போராளிகளாக்கி இருக்கிறது: கே.பாலு சிறப்பு பேட்டி
.............................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, மே 2017 (13:29 IST)
மாற்றம் செய்த நாள் :18, மே 2017 (16:7 IST)


சென்னையில் உச்சகட்ட வெயில்!
வெதர்மேன் விடும் அலர்ட்

சென்னையின் வெயில் இன்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 42 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ள இந்த வெப்பம் தான், 2017-ஆம் ஆண்டில் பதிவாகிய வெப்பநிலையில் அதிகபட்சம் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கமானது அதிகமாக காணப்பட்ட நிலையில், தற்போது மேலும் இது அதிகரித்து வருகிறது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், இதுகுறித்து சமூகவலைதளங்களில் வானிலை அறிக்கைகள் வெளியிடும் பிரதீப் ஜான்சனிடம் (Tamilnadu Weatherman) பேசியபோது, 



“இந்த ஆண்டில் வெயிலின் தாக்கமானது அதிகமாகவே காணப்படுகிறது. சென்னையைப் பொறுத்தமட்டில் கடந்த திங்கள் கிழமை 41.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்த நிலையில், இன்று காலையிலேயே வெப்பநிலை 42 டிகிரியை எட்டியுள்ளது. இது மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. இதேபோல் 2014-ஆம் ஆண்டு 42.8 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. 2003-ஆம் ஆண்டு 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்ததுதான் சென்னையைப் பொருத்தமட்டில் அதிகமான வெப்பநிலை. இந்த வாரம் முழுக்க இதே நிலை தொடரும் வாய்ப்புள்ளது. சென்னை நகரப்பகுதிகளில் பதிவாகியுள்ள வெப்பநிலையை விட, சென்னை விமான நிலையம், பூந்தமல்லி, அம்பத்தூர் போன்ற பகுதிகளில் வெயிலின் தாக்கமானது இன்னும் அதிகமாக இருக்கும்.

இதற்குக் காரணம் என்னவென்றால், தரைக்காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதே ஆகும். இந்த ஈரப்பதம் குறைவான நிலையானது கடந்த நான்கு நாட்களாக சிறிது அதிகமாகக் காணப்படுகிறது. இந்தத் தரைக்காற்றின் வேகமானது அதிகமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் கூடுதலாக உணரப்படுகிறது. மேலும், ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி வரும் தரைக்காற்றின் தாக்கமே இதற்கு முக்கியக் காரணமாகும்.



சென்னையில் மழைபெய்வதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை. தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. பொதுமக்கள் வெளியில் செல்லும்போது குடை எடுத்துச் செல்லலாம். கூடுமானவரை வெளியில் செல்வதைத் தவிர்க்கலாம்

கடல்காற்று வீசுவது அதிகமாகும் போது வெயிலின் தாக்கமானது, மதியம் 12.30 மணியளவில் சென்னை நகரத்திலும், மதியம் 2 மணிக்கு மேலாக விமான நிலையம் மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட சில பகுதிகளில் குறையும் வாய்ப்புள்ளது” என்றார்.

கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கமானது அதிகமாக உள்ள நிலையில் பொதுமக்கள் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மழை பெய்தால் வெள்ளம், வெயில் அடித்தால் உச்சம் என சென்னை தன் இயற்கை சமநிலையை இழந்து வருகிறது. 

- ச.ப.மதிவாணன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :